Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அடுத்தது என்ன?

Featured Replies

இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்ட செய்தி கேட்டு அடக்க முடியாத ஆத்திரமும் அதே நேரம் அதேயளவுக்கு வேதனையும் ஏற்பட்டது.

06-nedumaran-unveils-mullivaikkal-memoriமுள்ளிவாய்க்கால் என்ற பெயர் அந்த நினைவு முற்ற சுவரை இடித்தவர்களுக்கும் இடிக்க உத்தரவிட்டவர்களுக்கும் வெறும் எட்டெழுத்து சொல்மட்டமே.

ஆனால் நமக்கு அது ஒரு இனத்தின் வரலாறு. ஓரு இனத்தின் துயரம்;.இந்த நூற்றாண்டில்; நடந்த மிகப்பெரிய மனிதப்படுகொலையின் சான்று.எங்கள் சொந்தங்களை எங்கள் உறவுகளை இழந்த இடம்.அந்த வேதனையும் வலியும் அது ஏற்படுத்திய சோகமும் இந்த நடிப்பு சுதேசிகளால் துளியளவும் புரிந்து கொள்ளவோ உணரவோ முடியாது.

முள்ளிவாயக்கால் மண்ணிலே எங்கள் இனத்தையே கருவறுத்துவிட்டு ராஜபக்ஷ சொன்ன காரணங்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிக்க உத்தரவிட்டவர்கள் இன்று சொல்லிக்கொண்டிருக்கும் காரணங்களுக்கும் பெரிய வேறுபாடில்லை.

இந்தக் காரணங்களை இந்த நினைவு முற்றத்துக்கு அடிக்கல்நாட்டும் போது சொல்லியிருந்தல் அந்த கட்டிட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது எடுத்துச் செல்லி அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தால் அது நியாயமான செயற்பாடாக இருந்திருக்கும்.

அதை விடுத்து அந்த நினைவு முற்றம் உருவாகும் வரை பார்த்துக்கொண்டிருந்து விட்டு அதை திறக்கும் போது நெருக்கடி கொடுத்ததும் திறந்த பின் இடித்தழிக்கும் படி உத்தரவிட்டதும் ராஜபக்ஷ எமது மக்களை முள்ளிவாய்க்காலில் உயர் பாதுகாப்பு வலையம் என்று அறிவித்து அங்கு அவர்களை செல்லும்படி கூறிவிட்டு அங்கு அவர்கள் சென்றதும் அனைத்து நாசகார ஆயதங்களையும் பாவித்து அழித்தொழித்ததற்கும் எந்தவித வேறுபாட்டையும் என்னால் காண முடியவில்லை.

இங்கே நான் வாழும் பிரான்ஸ் நாட்டில் தமீழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனுக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.பாரிசின் புறநகர் பகுதியான லா கூர்நெவ் மாநகர சபைக்கு அண்மையில் இந்த சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம்.பிரான்சில் தடை செய்யப்பட்ட இயக்கம்.அந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு சிலை வைக்கக் கூடாது என்று சொல்லி சிறீலங்கா அரசாங்கம் அதை தடுப்பதற்கு எவ்வளவோ முயன்றது.ஆனால் அந்த சிலையை வைப்பதற்கு முடிவெடுத்த லா கூர்நெவ் நகரசபை நிர்வாகம் சிலை வைப்பது என்ற தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் சிறீலங்கா அரசால் எதுவும் செய்ய முடியவில்லை.

இன்றைக்கும் லா கூர்நெவ் நகரசபைக்கு அண்மையில் ஒரு அமைப்புக்கு சொந்தமான நிலத்தில் தமிழ்செல்வனின் சிலை கம்பீரமாக இருந்து கொண்டு இருக்கிறது.

அதே போல செவ்ரோன் என்ற நகரசபைக்குட்பட்ட பிரதேசத்திலும் முள்ளிவாயக்கால் நினைவுத் தூபி ஒன்று உள்ளது.

பிரான்ஸ் அரசாங்கம் இவ்வற்றை புல்டோசர்களின் உதவிகொண்டு இடித்துத் தள்ள முயலவில்லை. மாறாக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதிலுள்ள நியாயத்தன்மையை புரிந்து கொண்டு அவற்றை பெருந்தன்மையோடு அனுமதித்திருக்கிறது.

இத்தனைக்கும் பிரான்சில் ஈழத்தமிர்களான நாங்கள் 1 இலட்சம் பேரும் புதவை தமிழர்கள் 3 இலட்சம் பேருமாக 4 இலட்சம் தமிழர்கள்தான் இருக்கிறோம்.

ஆனால் ஆறரைக் கோடி தமிழர்கள் இருக்கும் தமிழ் நாட்டில்……

நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது. எவ்வளவு கிழ்த்தரமான சின்னத்தனமான எண்ணம்…

எனக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைத்த இடம் மற்றும் அதை அரசியலாக்கிய விதம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் விமர்சனம் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகிடையாது.

நாங்கள் நடந்ததை எண்ணி வருத்தப்படுவதை விட நடந்ததுக்காக அடுத்தவர் மீது குற்றம் சாட்டுவதை விட அடுத்து என்ன செய்வது என்பது பற்றி உணர்வு பூர்வமாக அல்லாமல் அறிவு பூர்வமாக சிந்திக்கவேண்டும்.

இங்கே ஐரோப்பாவிலே அனேகமாக எல்லா நாடுகளிலும் நகரத்துக்கு நகரம் கிராமத்துக்கு கிராமம் அந்த நாடுகளில் விடுதலைப்போரிலும் உலகப்போரிலும் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுத்தூபிகள் இருக்கின்றன.

ஒற்றை அடையாளமாக எளிமையான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் நினைவுத் தூபிகள் இன்று வரை அந்த நாடுகளின் வரலாற்றை சொல்லிக்கொண்டிருக்கின்றன.

தமிழ் உணர்வாளர்கள் ஏன் இதை கடைப்பிடிக்கக் கூடாது.

முள்ளிவாய்க்கால் நினைவுக்கல்

‘துரோகத்தால் வீழ்த்தப்பட்டோம்

வீழ்ந்தபின்னும் வஞ்சிக்கப்பட்டோம்’

என்ற குறிப்பை ஏன் அதில் பொறிக்க கூடாது.

சிந்தியுங்கள்

தயவு செய்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிக்க முற்படுமுன் உங்களுக்கு மனதில் கொஞ்சுமாவது மனதில் ஈரம் இருந்தால் இந்த பாடலை ஒரு முறை கேளுங்கள்

http://youtu.be/B-OAGO8YeqE

http://www.dailymotion.com/embed/video/xdbc9a

 

http://sivasinnapodi.wordpress.com/2013/11/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5-3/

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா

 

இது போன்ற  ஒரு முயற்சி

ஈழநாடு பாலச்சந்திரனாலும் 

இன்னொரு முயற்சி  பாதர் இமானுவல் அவர்களாலும் எடுக்கப்பட்டதே.........?

அவற்றிற்கு என்னாச்சு............?

நீங்கள்  அறியாததா??? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜயராகவன் தமிழன் shared காரை மைந்தன்'s photo.

1460191_10200467047752378_1987003987_n.j

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு; தஞ்சையில் இருந்துது திரு.செல்வ குமாரிடம் செகறித்த தகவல்;

1. அதி காலை 3 மணிக்கு கவலர்கள் குவிக்கப்பட்டனர்

2. அதி காலை 5 மணிக்கு இடிப்பு தொட்ங்கியது

3. தஞ்சையில் மின் இணப்பு துண்டிக்கப்பட்டு தொலைக்காட்சிகள் வழி செய்தி போகாம்ல் பார்த்திக்கொள்ளப்பட்டது

4. அலைபேசிவழியே செய்திகள் பரவ தமிழ்ர்கள் அங்கு குவிய தொடங்கினர்

5. உரிய அரசு ஒப்பந்தம் பெற்றே முற்றத்தின் முன் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு, புதிபித்லுக்கும் உரிய நேரத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வாய்மூலம் புதிபிப்பு உறுதி செய்த அரசு அலுவலகம், விரைவில் உரிய ஆவணத்தை அனுப்பிவைப்பதாக

கூறியுள்ளது. இந்நிலையில் தான் இந்த திட்டமிட்ட இடிப்பு

6. அருகிலெயே உள்ள பள்ளி மற்றும் பிற கட்டிட்ங்களை ஒன்றும் செய்யவில்லை, அனுமதியேடு கட்டிய்ள்ள எங்களுக்கு notice யும் கொட்க்கவில்லை, எனவே இடிப்பது சட்ட்த்தை மீறீய செயல் என்று திரு. பழ. நெடிமாறன் ஜயா அதிர்த்தும் இடிக்கப்பட்ட்து

7. தடுக்க முயன்ற 100 கணக்கன தமிழ்ர்களும் பழ. நெடிமாறன் ஜயாவும் கைதாகி உள்ளனர்.

8. காவல் துறை அங்கு கூடும் தமிழ்ர்களை தடியால் அடித்து களைக்கிறது

9. அரசு வேலிப்போட்டு முள்ளிவாய்க்கால் முற்றம் வாயிலை மூடியுள்ளது

10. காலை 11. மணிக்கு விரைந்த வந்த திரு. வைகோ 100 கனக்கன தெண்டர்களுடன் அரசின் நடவடிகையை தடுத்தும் கண்டித்தும் முற்றதுள் அமர்ந்துள்ளார்

11. திரு சீமானும் தன் 100 கனக்கன தெண்டர்களுடன் அங்கே விரைந்து கொண்டிறுக்கின்றார்

12. தமிழ்ர்கள் பொருமளவில் அங்கு விரைந்துக்கொண்டுள்ளனர்

இந்த திட்டமிட்ட இடிப்பு. தமிழ்ர் நெஞ்சில் கொஞ்சம் நெஞ்சம் இருந்த நம்பிக்கையின் தகர்பு

 

அவசர செய்தி...!!!

முள்ளிவாய்க்கால் முற்றத்தை முழுவதுமாக இடிக்க ஜெயலலிதா அரசு முடிவுசெய்துள்ளது.

முற்றத்தில் வைகோ, சீமான் உள்பட 700 பேரை காவல்துறை அடைத்துவைத்துள்ளது. அவர்கள் வெளியே சென்றால் மக்களை திரட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தால் அவர்கள் அனைவரையும் காவல்துறை கண்காணித்து வருகிறது.

தள்ளாத வயதிலும் தமிழர்களுக்கான கோவிலை அய்யா பழநெடுமாறன்

கட்டிகொடுத்ததோடு இல்லாமல் அதற்காக இன்று சிறையிலும்

இருக்கிறார்.

தமிழ் உணர்வாளர்களே போராட்டத்தை உடனடியாக

தொடருங்கள். அனைவருக்கும் பகிருங்கள்

 

 

 
"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என வாய் கூசாமல் வசனம் பேசுனேங்க... "ஈழ தாய்"னு பட்டம் கொடுத்தேங்க.... "அம்மாவுக்கு நன்றி நன்றி நன்றி"ன்னு நாக்கை தொங்க போட்டு நாலு சீட்டுக்காக தமிழகம் முழுதும் நாலு பிட்டுல போஸ்டர் ஒட்டுனேங்க......

பதிலுக்கு அந்த அம்மா முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்சு உங்களுக்கு அவுங்க பாணியில் நன்றி தெரிவிச்சுருக்காங்க......

மக்கள் போராட்டங்களை நம்பாமல் இது போன்ற பாசிச சக்திகளுக்கு பின்னால் ஓடி ஈழ விடுதலையை சாதிக்க துடிக்கும் "so called தமிழ் தேசியவாதிகளும்" சிவப்பு சாயம் வெளுத்து போன த.பாண்டியன் கும்பலும் இனியாவது திருந்துவார்களா...? இல்லை ஒன்றரை லட்சம் ஈழ தமிழர்களை சிங்கள பாசிச ராஜபக்சே கொன்று குவித்தது போல், அவர்களின் நினைவாக கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தை பாசிச ஜெயலலிதா முழுவதுமாக இடிக்கும் வரை அமைதியாக காத்து கொண்டு இருக்க போகிறார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோல்கானூர் அதியமான்

1455010_252730214881144_2084136539_n.jpg

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் குழந்தைகளும், பெண்களும், ஆண்களும் கண்ணீரோடும், அதிர்ச்சியோடும், கோபத்தோடும் சிற்பங்களைப் பார்த்து, “இப்படியெல்லாம் செஞ்சாங்களா?. ஏன் இது எதுவுமே நமக்கு தெரியல..” என்று பொறுமிச் சென்ற பொதுமக்களைப் பார்த்து முழுதாய் மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. “இத இடிக்கப் போறாங்களாங்க”ன்னு தனது கணவரிடம் பேசியவரிடம், ”இடிச்சா விட்டுருவோமா, அருவாளோட வந்துரவேண்டியதுதா” என்ற பேச்சுக்களை ஞாயிறு கேட்டு அடைந்த ஆச்சிரியங்கள் அகலுமுன்னர் அய்யோக்கியர்கள் கைவைத்ததை கேள்விப்பட்டு அதிர்ச்சியாயிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் முற்றம் நெடுஞ்சாலைக்கு இடைஞ்சல் என்றால், திருப்பெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலையில் இடையூறு செய்யும் ராஜீவ் நினைவிடத்தினை முதலில் இடி.

ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து முக்கால் கி.மீ தொலைவில் நகரின் மையப்பகுதியில் ஜெமினி பாலத்தருகே மாநகராட்சி நிலத்தினை ஆக்கிரமித்து கட்டிய தி-பார்க் ஹோட்டலின் கட்டிடத்தினை இடித்து காட்டு.

அயோக்கியர்களே, பண்ணுவதோ மூன்றாம்தர அயோக்கிய ஆட்சி. சுயமரியாதையை இழந்த மானங்கெட்ட மந்திரிகள் கூட்டம். (இதில் மீசைக்கொன்னும் குறைச்சல் இருக்காது). எத்தனைக்காலம் அயோக்கியத்தனமும், பொறுக்கித்தனமும் செய்வீங்க.

உங்களது அக்கிரமிக செயல்பாடுகளை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பொதுமக்களே தட்டிக்கேட்க தயாராகி விட்டார்கள். நாங்கள் வலிமை பெறுகிறோம்.முளையிலேயே கிள்ளியெறிய கருணாநிதி கும்பல் நினைக்கும். கட்டிமுடிச்ச பிறகு ஜெயலலிதா கும்பல் அடக்குமுறையை காட்டும். இரண்டும் ஒன்னுதான் எங்களுக்கு. உங்கள் இருவரையும் தூக்கி எறிவதுதான் எமது முக்கியப்பணி என்று அடிக்கடி எமக்கு சொல்கிறீர்கள்.

அன்பான தமிழர்களே, இயக்கங்களே, கட்சிகளே ஒன்றுபட்டு இந்த இரண்டு கொள்ளைக் கூட்ட கும்பல்களை விரட்டுவது வரலாற்றுக்கடமை.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் மீதான பாசத்தினை விட்டு வெளியே வாருங்கள். இவர்களுடனான கூட்டணியை விட்டு வெளியேறுங்கள். மக்களை நம்புங்கள். ஒன்றாய் தேர்தல் களம் காணுங்கள். இதற்கு மேலும் பொறுப்பதற்கில்லை. மேலுள்ள இந்தக் கட்சிகளை ஒழிக்க முன்வாருங்கள். இது முதல்பணி. இந்தியாவின் செறுக்கை நம் செருப்பால் அடித்து அம்பலப்படுத்துவோம். இது நமது முக்கியப்பணி.

-மே17 இயக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.