November 23, 201312 yr தமிழீழ விடுதலை முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதுகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் சுயநலம் கார்த்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார்கள். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடுத்தார்கள் தமிழரின் விடுதலை தமிழீழமென்று சாத்வீக வழியில் போர் தொடுத்தார்கள் காலிமுகத் திடலில் காடையர்கள் கூடி கட்டாரிகொண்டு என் கழுத்தறுக்கப் பார்த்தார் ஆதங்கங்கொண்ட இளைஞர்கள் சேர்ந்து ஆயுதவழியில் அரவணைத்தார்கள் உள்ளகப் போட்டியால் ஊறுகள் பெற்று உணர்வுகள் குன்றி நலிவுடன் நடந்தேன் விடுதலைப் புலிகளின் வீரச் செயலால் வீறுடன் எழுந்து உலகினில் மிளிர்ந்தேன். சிங்கள வெறியர்கள் சீற்றம்; கொண்டு - என்னைச் சீரழிக்கவே பெரும் திட்டங்கள் போட்டார் ஐதரசன் வதம்போல் என்நிலம்பிரித்து ஆணைகள் பிறப்பித்துச் சட்டங்கள் வைத்தார். பயங்கரவாத மெனப் பொய்ப்பெயர் சூட்டி பாரெங்கும் திரிந்து பரப்புரை செய்தனர் காந்தியின் பெயர் கூறும் கயவர்களை இணைத்து காவுகொள்ளவே பல சதிகள் புரிந்தனர். முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொன்று முற்றாய் என்னை அழிக்க எண்ணினர் இயேசுபாலனைத் தேடியவர்போல் எங்கும் திரிந்து ஏக்காளமிட்டனர் அன்னிய தேசத்துக்கு அகதியாய் வந்தால் அனைவரும் என்னை அணைப்பாரென நினைத்தேன். அன்பர்கள் என்றோர் வீடுகள் சென்றேன். அவமதிப்பாய் என்னைப் பேசினர் வியந்தேன் வீடுகள் தோறும் காசுகள் சேர்த்து விடுதலைதான் மூச்செனக் சொன்னோர் வீட்டுக்குச் சென்று என்பெயர் சொல்ல வீதியைக் காட்டி வெளியே என்றார் மேடையில் முழங்கி என்பெயர் சொல்லி மீட்டெடுப்பேன் எனச் சபதம் செய்தோர் வீட்டுக்குச் சென்று தன் சுகம் பார்த்து விடுதலை என்பது வீண் பேச்சென்றார். மாலைக்கும் மேடைக்கும் அலைந்தார் முன்பு மண்டியிட்டு நான் கெஞ்சிப் பார்த்தேன் ஆதரவிருந்தால் உன்பக்கம் வருவேன் அதுவரும்வரை காத்திரு என்றார் சொந்தங்கள் பந்தங்கள் என்றிணைந்து சொத்துடன் சுகமாய் வாழ்பவரிடையே என்பெயர் கூறி அவரில்லம் சென்றேன் எரிமலை போல் என்னை வைதார். சுpன்னத்திரையில் மூழ்கியவர் நடுவே சீற்றத்துடன் நான் சென்று அமர்ந்தேன் ஏனென்றுகூடக் கேட்கவுமில்லை என்னைப் பார்ப்பதில் அவர் கவனமுமில்லை இளைஞர்களை நாடி அவரிருப்பிடம் சென்றேன் எம் மொழியினைக்கூட அவர் அறிந்ததா இல்லை- பெற்றோரைக் கண்டு கேள்விகள் கேட்டேன் பெருமையாய் அதனைச் சொல்லியே மகிழ்ந்தார். காசைச் சேர்த்த கயவர்கள்pடம் சென்றேன் காரிருள் அறையில் அடைக்கப் பார்த்தார் ஏதேதோ சொன்னார் ஏமாற்றப் பாhத்தார் ஏதிலி நீ என ஏளனம் செய்தார். உள்ளத்தில் கள்ளம் கொண்டோர் உண்மை முகங்கள் தெரிந்ததினாலே பாமர மக்களும் பரிதாபப் பட்டார் பாரினில் நானும் களங்கப்பட்டேன் உலகினில் வாழும் இனங்களிடையே உணர்வு குறைந்த எம் மக்களைக் கண்டேன். போலியாய்ப் பேசி போலியாய் வாழ்ந்து புழுக்களாய் அவர்கள் நெளிவதைப்பார்த்தேன்;. பதவிப்போட்டிக்குள் பலி;க்கடாய் ஆனேன் பலரும் என்னைப் பரிகாசம் செய்தார் இறைச்சியைபு; பிய்க்கும்; நாய்கள்போலே என்னபை; பிய்பதால் வேதனை ஆனேன். உயிரைக் கொடுத்து என்னை வளர்த்தோர் உரிமைப் பேரில் எனக்காக இறந்தோர் இவர்களை எண்ணிப் பெருமைப்பட்டேன் இங்கு வந்ததால் அவமானப் பட்டேன். என்னிலை சொல்ல அன்னியனிடம் போனால் எத்தனைபேர்தான் வருவீர்கள் என்றான். சாலமோன் கதைபோல் என்நிலை இன்று சான்றோரே கொஞ்சம் சிந்தித்து பார்ப்பீர் எந்தன் வாழ்வு உங்கள் கையில் என்பதை நீங்கள் நினைதிட வேண்டும். எல்லோரும் இணைந்து என்பெயர் கூறி எனக்கொரு தேசம் எடுத்திட வேண்டும். 11.03.2012
November 23, 201312 yr கருத்துக்கள உறவுகள் என்னிலை சொல்ல அன்னியனிடம் போனால்எத்தனைபேர்தான் வருவீர்கள் என்றான்.சாலமோன் கதைபோல் என்நிலை இன்றுசான்றோரே கொஞ்சம் சிந்தித்து பார்ப்பீர் எந்தன் வாழ்வு உங்கள் கையில்என்பதை நீங்கள் நினைதிட வேண்டும்.எல்லோரும் இணைந்து என்பெயர் கூறிஎனக்கொரு தேசம் எடுத்திட வேண்டும். நன்றி ஐயா.....
November 23, 201312 yr கருத்துக்கள உறவுகள் உயிரைக் கொடுத்து என்னை வளர்த்தோர் உரிமைப் பேரில் எனக்காக இறந்தோர் இவர்களை எண்ணிப் பெருமைப்பட்டேன் இங்கு வந்ததால் அவமானப் பட்டேன். 11.03.2012 பலருடைய நிலமையை இந்த வரிகள் சுமக்கிறது நன்றிகள் செம்பகன்.
November 23, 201312 yr உயிரைக் கொடுத்து என்னை வளர்த்தோர் உரிமைப் பேரில் எனக்காக இறந்தோர் இவர்களை எண்ணிப் பெருமைப்பட்டேன்இங்கு வந்ததால் அவமானப் பட்டேன்.. நச் அருமையான வரிகள் வாழ்த்துகள் .
Archived
This topic is now archived and is closed to further replies.