Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண விவகாரமாக மாறிவிட்ட இனப்பிரச்சினை -அ.நிக்ஸன்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தை மையாகக் கொண்டுதான் பிரச்சினை ஆரம்பித்தது. காணி அபகரிப்பு சிங்கள குடியேற்றங்கள் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட போதுதான் தமிழத்தேசிய கோட்பாடு, தமிழர் தாயம் பற்றிய சிந்தனைகள் எழுந்தன.

இறுதிக் கட்ட போர் தொடர்பாகவும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் பேசப்படுகின்றது. ஆனால் கிழக்கு மாகாணம் என்பதும் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி என்ற பேச்சும் நலிவடைந்துள்ளன. தற்போது இனப்பிரச்சினை என்ற பேச்சு வடமாகாண பிரச்சினையாக மட்டும் மாறிவிட்டது. தமிழத்தேசிய கூட்டமைப்பு தமிழத்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில தமிழ் அமைப்புகளும் இனப்பிரச்சினை வடபகுதி பிரச்சினையாக மாறிவிட்டதை நினைத்து கவலைப்படுவதாகவும் இல்லை. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வடபகுதியில் தினமும் நடக்கின்றன. ஆனால் கிழக்கில் இல்லை. ஆனால் வடபகுதியில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் கிழக்கிலும் உண்டு.

இராணுவ எண்ணிக்கை

குறிபாக இரணுவ எண்ணிக்கை அதிகரிப்பு, புதிய புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றமை, புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றமை, காணி அபகரிப்பு சிங்கள குடியேற்றங்கள், காணமால்போதல் அச்சுறுத்தல் என்று அத்தனை பிரச்சினைகளும் கிழக்கில் தொடருகின்றன. கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் ஆட்சி நடத்துகின்றது. தமிழத்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருக்கின்றது. எதிர்க்கட்சியாக இருந்து கொண்டும் கிழக்கு மாகாணத்தில் பேசப்பட வேண்டிய விடயங்கள் பற்றி கூட்டமைப்பு எடுத்துச் சொல்லுவதாகவும் இல்லை. அல்லது வேறு கட்சிகள் கூட கிழக்கில் இடம்பெறும் பிரச்சினைகள் பற்றி பேசுவதாக இல்லை.

யாழ்ப்பாணத்துக்கு சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிற் கமரோன் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் கூட வடபகுதி பிரச்சினை என்று சொல்கிறார்கள். வடபகுதியில் ஜனநாயகம் இல்லை. அங்கு இராணுவம் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஆனால் கிழக்கு மாகாணம் பற்றி அவர்கள் பேசவில்லை. அரசாங்கத்தை பொறுத்தவரை கிழக்கு மாகாணத்தில் பிரச்சினை இல்லை. அங்கு மூன்று சமூகங்களும் வாழ்க்கின்றன என்ற கருத்தை இராஜதந்திர மட்டத்தில் உருவாக்கிவிட்டார்கள். கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை எல்லாம் விடுதலைப் புலிகளுக்குரியது. அது தமிழ் மக்களின் கோரிக்கை அல்ல என்று அரசாங்கமும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தமிழ் கட்சிகளும் கூறி வருகின்றன. கிழக்கு மக்கள் இணைப்பை விரும்பவில்லை எனவும் விளக்கம் கொடுக்கப்படுகின்றது.

இனப்பிரச்சினை வரலாறு

இனப்பிரச்சினை 1920ஆம் ஆண்டு தேசிய இயக்கத்தின் பிளவுடன் ஆரம்பித்தது 1921ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தமிழர் மகாசபை முதன் முதலில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தயாகம் என்ற கருத்தை கொடுத்தது. அன்றில் இருந்து இனப்பிரச்சினையின் அடிப்படை காரணங்களில் ஒன்றாக கிழக்கு மாகாணதில் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக பேசப்பட்டு வந்தன. 1948ஆம் ஆண்டு திருகோணமலையில் சிங்கள குடியேற்றங்கள் திட்டமிடப்பட்ட முறையில் தமிழ்பேசும் சமூகத்தின் இன விகிதாசாரத்தை குறைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னர் 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் கூட திருகோணமலை மாவிலாறு பிரதேசத்தில் இருந்துதான் மூண்டது. கிழக்கு மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங்களை மீட்கும் போர் தீவரமாக இடம்பெற்றபோது பெரும் மனித அவலங்களும் இடப்பெயர்வுகளும் அங்குதான் ஆரம்பித்தன. திருகோணமலையில் தனித் தமிழ் பிரதேசமாகவும் கிழக்கு மாகாணத்தின் முக்கிய மையமாகவும் விளங்கிய சம்பூர் பிரதேசம் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் முற்று முழுதாக இராணுவ மயப்பட்டது.

மட்டக்களப்பில் தமிழர்களின் வயல் நிலயங்கள், மாடு மேய்க்கும் வயல் வெளிகளில் பொலிஸ் பயிற்சி முகாம்களும் ஆடம்பர ஹேட்டேல்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவையெல்லாம் ஏன் பேசப்படுவதில்லை? வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்கும் பிரதேசங்கள் குறிப்பாக கிழக்கில் திருகோணமலைக்கும் வடக்கில் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டு அந்த இரண்டு மாவட்டங்களையும் இணைக்கும் பிரதேசங்களை தனியாக பிரித்து சிங்கள மாவட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

நில அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்படுவதை இல்லாமல் செய்தும் நோக்கில் இந்த வேலைத் திட்டம் இடம்பெறுகின்றது. நில ரீதியான தொடர்புகள் இரண்டு மாகாணங்களுக்கும் இருந்தமையினால்தான் தமிழத் தேசியம் பற்றிய சிந்தனை அன்று எழுந்தது. அந்த சிந்தனைக்கு எதிர்காலத்தில் இடமளிக்க முடியாத ஏற்பாடாகவே இரண்டு மாவட்டங்களுக்கும் இடையிலான புதிய மாவட்டம் உருவாக்கப்படுகின்றது.

கிழக்கில் புதிய மாவட்டம்

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர பிரதேசத்தில் அதிகமாக சிங்கள மக்கள் வாழ்வதால் அதனை பிரித்து தனியான மாவட்டமாக உருவாக்க திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. சேருநுவர 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் ழுமுமையாக சிங்கள பிரதேசமாக மாற்றப்பட்டது. அதேபோன்று திருகோணமலை பிரதேசத்துக்கு செல்லும் வழியில் உருவாக்கப்பட்டுள்ள அபயபுர சிங்கள குடியேற்றம் திருகோமணலை மாவட்டத்தின் புதிய சிங்கள குடியேற்றமாகும்.

இவை அனைத்தும் கிழக்கு மாகாணத்தின் பிரச்சினைகள். ஆக இனப்பிரச்சினை என்பது கிழக்கு மாகாணத்தை மையாகக் கொண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது. கல்வியில் தரப்படுத்தல் தமிழ் மாணவர்களை பாதித்தது என்பது முக்கியமான ஒன்று. ஆனால் காணி அபகரிப்பு சிங்கள குடியேற்றங்கள் என்பது கிழக்கில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போது தான் தமிழத்தேசிய கோட்பாடு, தமிழர் தாயம் பற்றிய சிந்தனைகள் எழுந்தன. ஆனால் இன்று தமிழத் தேசிய கோட்பாடு, தமிழர் தாயகம் எந்த இடத்தில் இருந்து பேசப்படுகின்றது?

வடமாகாண முதலமைச்சர்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸவரன் வடமாகாண பிரச்சினை பற்றியே பேசுகின்றார். அது அவரது கடமை. அவர் தமிழத் தேசிய கூட்டமைப்பின் பொது வேட்பாளராக இருந்து வெற்றிபெற்றவர். அவர் எந்த ஒரு தமிழக் கட்சியினதும் தலைவரும் அல்ல சாதாரண உறுப்பினரும் அல்லது அதனால் அவர் வடமாகாண பிரச்சினையை மட்டும் பேசுவதில் தவறு இல்லை. ஆனால் வடமாகாண பிரச்சினையை மட்டும் பேசும்பேசும்போது இனப் பிரச்சினையின் மேற்சொன்ன அடிப்படை விடுபடுகின்றது. யாழ்ப்பாணத்தக்கு சென்ற பிரித்தானிய பிரதமர் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை என்று பேசவில்லை. அவர் வடமாகாண பிரச்சினை என்றுதான் பிரித்தானிய பாராளுமன்றத்தில் கூறினார்.

வடபகுதி மக்களின் குரல்களை சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்ல சந்தர்ப்பம் கொடுத்தள்ளதாகவே டேவிற் கமரோன் கூறியிருந்தார். ஆகவே இலங்கை அரசாங்கம் அன்று விரும்பிய ஒன்று நடந்து விட்டது. அதாவது வடக்கு கிழக்கு மாகாணம் 2007ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற தீர்;ப்பினால் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் மூன்று சமூகங்களும் வாழுகின்ற ஒரு சமாதான பூமியாக காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் வடபகுதியில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் கிழக்கில் வாழும் மக்களுக்கு உண்டு. இது டேவிற் கமரோனுக்கு மாத்திரம் அல்ல கொழும்புக்கு வந்து செல்கின்ற அத்தனை சர்வதேச பிரதிநிதிகளுக்கும் கிழக்கில் பிரச்சினைகள் இல்லை என்றுதான் சொல்லப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை வடபகுதி பிரச்சினையாகவே காண்பிக்கப்படுகின்றது. இதற்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஜே.பி.வியும் கூட அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

பொறுப்புக் கூறுவது யார்?

தமிழர் தாயகம்- தமிழத்தேசியம் என்று சொல்லப்படுகின்ற இந்த அடிப்படை கருத்து விடுபடுவதற்கு யார் பொறுப்பு? இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு யார் கையில் உள்ளது? தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவர் திருகோணமலையை சேர்ந்தவர். அவருக்கு பிறகு அந்த மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதாற்கான வாய்ப்பு யாருக்கு உள்ளது என்று கூட தெரியாத நிலை? தமக்கு பின்னரான தலைமை யார் என்ற எந்த தயாரிப்பும் இல்லாத நிலையும் 60 ஆண்டுகால அரசியல் போராட்ட வரலாறுகளை மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் மட்டும் பேசுகின்ற நிலைமையும்தான் தழிழர் அரசியலில் தற்போது விஞ்சி நிற்கின்றன.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தயாகம் என்று கூறுவதானால் கிழக்கில் முஸ்லீம் மக்களின் ஆதரவு தேவை அதற்கான வேலைத் திட்டங்கள் நடக்கின்றதா? வடபகுதியில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றம் இன்னும் 10 ஆண்டுகளில் கிழக்கு மாகாணம் போன்ற ஒரு நிலையை உருவாக்கும் ஆபத்து உள்ளது? லன்டனுக்கு பயணம் செய்யப் போகும் முதலமைச்சர் விக்னேஸவரன் அங்கு வடமாகாண பிரச்சினையை மட்டும்தானே பேசப்போகின்றார்? ஆகவே எது தமிழர் தாயகம்? எங்கே தமிழத்தேசியம்?

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99730/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்த உடன்படிக்கையின் கீழ் பிரபாகரன் தமிழீழ எல்லைகளை தெளிவுற சர்வதேசத்திற்கு இனங்காட்டி இருந்தார். இப்ப சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. வடக்கு மாகாண எல்லைகளையே சரியா தீர்மானிக்க முடியாத நிலையில்.. தென் தமிழீழம் பற்றி கிஞ்சுதமும் அக்கறையின்றி செயற்பட்டு வருகிறது. இது தமிழ் மக்களைப் பொறுத்த வரை ஆரோக்கியமான ஒன்றல்ல. இந்த இடைவெளியை நிரப்புதல் இலகுவாக அமையப் போறதும் இல்லை.

 

சர்வதேசமும் இன்று வடக்கை மையப்படுத்தி தான் நகர்வுகளைச் செய்ய முனைகிறது. கிழக்கில் வாகரையில் நிகழ்ந்த இனப்படுகொலை பற்றி யாரும் அக்கறை செய்வதில்லை. சனல் 4 ம் கூட.

தமிழீழத்தை வடமாகாணப் பிரச்சனையாக அணுகுவது கூட ஒரு பம்மாத்துதான். கிழக்கில் இருந்தும் தன்னை கருத்தியல் ரீதியாக பின்னோக்கி வடக்கின் ஏனைய பகுதிகளையும் நுட்பமாகத் தவிரத்து தமிழீழம் என்பதை தங்கள் விருப்பப்படி நல்லுரடிக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் பேரினவாதத்தின் ஆத்மார்த்த கூட்டாளிகளான மையவாதிகள். முள்ளிவாய்காகல் அளிவு இறுதிபோரின் வன்னிப்பேரளிவு போன்ற காரணங்களை அடிப்படையாக வைத்து தேர்தலில் வென்றதும் அதே காரணங்களை வைத்து வன்னியை கடந்து உலகின் கவனத்தை நல்லூருக்குள் கொண்டுபோவதும் வெளிப்படையாக நடக்கும் விசயங்கள். உருக்குலைந்த வன்னிக்கு தண்ணிகாட்டுவது மகிந்தனும் கோத்தாவும் மட்டுமல்ல சம்மந்தனும் விக்கியுமதான். பிரதேசவாதிகளிடம் இதைதக்கடந்து எதையும் எதிர்பார்க்கவும் முடியாது. பேரினவாதத்தாலும் மையவாதத்தாலும் அழியவேண்டும் என்பது ஈழத்தமிழனின் தலையெழுத்து. தமிழர் பிரதேசத்தை சுருக்கி சுருக்கி கடசியில் நல்லூரில் சம்மந்தனும் மகிந்தனும் சட்டையைக் கழட்டிப்போட்டு கட்டிப்பிடிப்பார்கள்.

 தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவர் திருகோணமலையை சேர்ந்தவர். அவருக்கு பிறகு அந்த மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதாற்கான வாய்ப்பு யாருக்கு உள்ளது என்று கூட தெரியாத நி

நிக்ஸன் ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் ?தன்னுடைய நண்பர்கள் யாரையும் களமிறக்க வேவு பார்க்கின்றாரோ ?

திருகோணமலை மாவட்டத்தின் பிரதிநிதிகள் யார் என்பதை அந்த மக்கள் தீர்மானிப்பார்கள் .நாங்கள் ஏற்கனவே இது சம்பந்தமாக முடிவெடுத்து விட்டோம் .வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியல் பிரதிநிதி திருகோணமலைக்குத் தான் தரப்படவேண்டும் .எவ்வாறு கிழக்கு மாகாணசபை தேர்தலில் திருகோணமலையில் கல்விமானை களமிறக்கினோமோ அதேபோல் அந்தநேரத்தில் செயற்படுவோம் .

திருகோணமலை பறிபோனதட்கு சம்பந்தருக்கு முன்பான தமிழ் தலைமைகளும் ,புலிகளின் சில அணுகுமுறைகளும் தான் காரணம்

1983இல் திருகோணமலையில் ஏற்பட்ட வன்செயலில் திருகோணமலையில் ஒரு ஆசிரியரைத்தவிர வேறு எந்த ஆசிரியரும் நேரடியாக பாதிக்கப்படவில்லை ,ஆனால் தமிழர் ஆசிரியர் சங்கம் போலியாக பாதிக்கப்பட்டதாக காட்டி 15-20 ஆசிரியர்களை யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்தனர் .இது சம்பந்தமாக அப்பொழுது மகாசிவத்திடம் எனது எதிர்ப்பை வெளியிட்டதுடன் உங்களைப்போன்ற ஆட்களின் செயல் தான் திருகோணமலை பறிபோவதட்கும் காரணமாகும் என நேரடியாக சொன்னேன் .அவர் எனக்கு சொன்ன காரணம் அவர்கள் சொந்த இடம் போக ஆசைப்படுகின்றார்கள்( பாதுகாப்பில்லை என்பதை காட்டி) .1990களில் மகாசிவம் திருகோணமலையில்இருந்து தான் பணியாற்றினார்.

Edited by Gari

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்றால் உண்மைதான் ...

 

ஏதோ வட மாகாண தேர்தல் நடக்காதுதான் இதுவரை இருந்த பிரச்சனை என்கிற மாதிரி இந்தியா பேப்பர்காரரும் மற்ரவர்களும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ...

 

அண்மையில் சம்பத்தரின் பேச்சு -பாராளுமன்ற - சிங்கன் சிங்கிளாக குடுக்கிறார் ...இந்தியாவிக்கு வால் பிடிக்கிறது, புலியோட சேர்ந்தவர்களை தீண்ட தாகாதவர்களாக பார்க்கிறதுதான் எரிச்சல் தாரது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.