Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவம் நிலைகொண்டிருப்பதே முக்கிய பிரச்சினை; பெயானியிடம் சி.வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

index1(250).jpg

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

வடக்கு மக்களின் முக்கியமான பிரச்சினை இராணுவம் நிலைகொண்டிருப்பது என்பதுடன், இதனாலேயே ஏனைய பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதியிடம் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சலோகா பெயானி, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை  அவரது  வாசஸ்தலத்திலும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை யாழ். மாவட்டச் செயலகத்திலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்திலும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதியிடம் கூறியதாகவும் வடமாகாண முதலமைச்சர் கூறினார். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின்  சிறப்புப் பிரதிநிதி சலோகா பெயானியுடனான சந்திப்புக் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், 

'வலி. வடக்கில் 6,000 இற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றமை தொடர்பிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு, எவ்வளவு ஏக்கர் காணிகளை ஆக்கிரமித்து இராணுவம் பயன்படுத்தி வருகின்றது என்பது தொடர்பிலும்  எடுத்துக் கூறியிருந்தேன்.

இப்பொழுது நடைபெறுகின்ற விடயங்களைப் பார்த்தால் இன்னமும் 100 வருடங்களுக்கு இராணுவத்தினர் வடக்கில் தொடர்ந்திருப்பார்கள் போன்றே தெரிகின்றது. இதனுடைய உண்மையான அர்த்தம் என்னவெனில் தெற்கிலிருந்து மக்களைக் கொண்டு வந்து இராணுவத்துடன் சேர்த்து குடியமர்த்துவதாகும்.

கிழக்கில் இடம்பெற்றதைப் போல வடக்கிலும் இராணுவக் குடியேற்றங்கள் மேற்கொள்வதற்கு இராணுவம் முயற்சிக்கின்றது. இதனை எங்களால் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் சர்வதேசத்தின் கவனத்தில் கொண்டு வந்து அதற்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், இங்குள்ள மக்களின் வாழ்வாதார நிலைமைகள் பாதிப்படைந்துள்ள நிலையில், வறுமை நிலையைப் போக்க மக்கள் கடன்கள் வாங்கி தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர்.

வடமாகாணத்தில் தொழில் வாய்ப்புக்களை இராணுவம் ஆக்கிரமித்து தொழில் செய்து வருகின்றது. குறிப்பாக விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் உள்ளிட்ட தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மக்கள் வாழ்வாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என சிறப்புப் பிரதிநிதிக்கு எடுத்துக்கூறினேன்' என்றார். 

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/91762-2013-12-03-09-01-30.html

  • கருத்துக்கள உறவுகள்

வடபுலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட நிலப்பறிப்பு தொடர்கின்றது. தற்போது எமக்குள்ள முக்கிய பிரச்சினை இங்கு குவித்து வைக்கபட்டுள்ள படையினர் தான். அவர்கள் வெளியேற்றப்பட்டாலே இயல்பு வாழ்க்கை என்பது பற்றி யோசிக்கமுடியுமென தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான சலோகா பெயானி இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சென்றுள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள அவர் வடக்கிற்கு பயணம் செய்துள்ளதுடன் வட மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தினில் சந்தித்து உரையாடியிருந்தார்.

இச்சந்திப்பு தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் எவ்வாறெல்லாம் தமிழ் மக்களது காணிகள் சுவீகரிக்கப்படுகின்றது என்பதை தெளிவுபடுத்தியதுடன் ஏனைய பகுதிகள் பற்றி விரைவில் எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்த அவர் படையினருடன் இணைந்து சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கையே தொடர்வதாக சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

இங்கு இராணுவம் தங்கியிருக்க விரும்புபவர்கள் அவர்கள் எவ்வளவு காலம் இருப்பார்களென்பதை தெளிவுபடுத்த வேண்டுமென கோருவதாகவும் தெரிவித்த முதலமைச்சர் எனது கணிப்பின் படியும் இங்கு நடப்பவற்றை பார்த்தாலும் நூறு வருடங்கள் கடந்தாலும் இங்கிருந்து இராணுவம் வெளியேறுமென தாம் நம்பவில்லையென சந்திப்பில் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே தமிழ் மக்களது காணிகள் சுவீகரிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் தொழில்களை இழந்து அவலப்படுவது தொடர்பாகவும் தெரிவித்ததாக கூறிய அவர் இதனிடையே வலி.வடக்கில் கைவிடப்பட்டுள்ள சீமெந்து தொழிற்சாலை கற்குவாரி பகுதிகளில் மக்களை குடியமர்த்தி அதனை வருகை தந்துள்ள பிரதிநிதிகளிற்கு மீள்குடியேற்றமென காட்ட திட்டமிடப்பட்டுள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான திட்டமிடல் பற்றி ஏதும் தெரியாத நிலையில் கருத்து வெளியிட முடியாதெனவும் தெரிவித்தார்.

இதனிடையே ஆளுநர் மற்றும் அரச அதிபருடனான சந்திப்பின் போது மீள்குடியமர்வு தொடர்பாக அவர்கள் நடத்திய மடிக்கணனி பிரசங்கத்தினை அவர் முற்றாக நிராகரித்திருந்ததுடன் அது பற்றி அக்கறை செலுத்தவும் தவறியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் விசேட பிரதிநிதியான சலோகா பெயானி!!

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான சலோகா பெயானி இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வந்துள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர் வடக்கிற்கு பயணம் செய்துள்ளதுடன் வட மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரையும் மற்றும் அரச அதிபருள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளையும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மஹிந்த கத்துருசிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இலங்கை சென்றுள்ள சலோகா பெயானி யாழ். வலி வடக்கு கோணப்புலம் நலன்புரி நிலையத்துக்கு இன்று பிற்பகல் செல்லவுள்ளார். அங்கு செல்லும் அவர், நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியவுள்ளார்.

இதனிடையே நாளை புதன்கிழமையன்று இறுதிக்கட்ட மோதல் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்லும் அவர் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் மற்றும் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மார்க் ஆகியோருடனும் பேச்சு நடத்துவார் என அவ்வதிகாரி தெரிவித்தார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99815/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றுதான்

தற்போதைக்கு  இந்த தேர்தலால்  செய்யக்கூடியது

நன்றி

தொடரட்டும் தங்கள் பணி.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாதிரி செய்திகளை முதல்வரை பற்றி பிழையாக மட்டுமே நினைப்பவர்களும் வாசிக்க வேண்டும் .

 

முன்பு இந்தியாவில் நடந்த ஒரு விவாதத்தில் , கலந்து கொண்ட ஒரு தமிழ் பெண் நான் நினைக்கிறேன் ?மீனா கந்தசாமி , மற்ரவர்கள் பிழையாக முதல்வரை பற்றி சொல்லும் போது உரிய முறையில் பதில் சொல்ல தெரியாமல் இருந்தார் . -முதல்வர் மன்மோகன் சிங்கை இலங்கைக்கு அழைத்த விடயத்ததில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.