Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிச்சைக்காரர்களின் கால்களில் ஏற்பட்ட காயம் போன்றே த.தே.கூ.வின் அரசியல்: டிலான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எம்.டி.லூசியஸ்
பிச்சைக்காரர்கள் தனது காலில் ஏற்பட்ட காயத்தை ஆற்றிக்கொள்ளாமல் அதனை வைத்து dilan-perera-TNA.jpgபிச்சையெடுப்பதை போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காது அரசியல் பிழைப்பு நடாத்துகின்றது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார்.
 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 
 
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் தொடர்பில் அன்றும் இன்றும் என்றும் ஒரே நிலைப்பாடுதான். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. 13 ஆவது திருத்தம் தொடர்பில் சிறந்தவொரு முடிவை எடுப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு சிறந்தவொரு இடமாகும். ஆனால்  பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுத்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெறுவதாக இல்லை. காரணம் அவ்வாறு அரசியல் தீர்வொன்றை பெற்றுவிட்டால்  தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும். 
 
 13 பிளஸ் அல்லது மைனஸ் என எதுவாக இருந்தாலும் இது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தான் பேசி தீர்க்க வேண்டும். அதனை விடுத்து வெளியிலிருந்து கொண்டு விமர்சனம் செய்யக்கூடாது. தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் விரும்புவது இல்லை. அவ்வாறு பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும்.
 
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலங்களில் இப்பிரச்சினைகளை வைத்தே தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதோடு விமர்சனங்களையும் முன்வைப்பர். பின்னர் தேர்தலில் வெற்றிபெற்று ஐந்து வருடங்களுக்கு வெளிநாடுகளில் சுற்றிதிரிந்து குறைகூறி வந்து மீண்டும் தேர்தலுக்கு ஆயத்தமாவார்கள். இதுவே இவர்களுடைய அரசியல். பிரச்சினைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு அரசியல் செய்வதால் தான் அவர்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருவது இல்லை என்றார்.
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஊழலில் 12 இடம் பின் தள்ளி போனது அரசின் சாதனை தானே. அடுத்த வருடம் மேலும் பின் தள்ளுவீர்கள் போல உள்ளது.

இனப்பிரச்சனையை நேர்மையாக தீர்க்காமல் அதனை வைத்து லூசியாசு போன்றவர்கள் தான் அரசியல் விபச்சாரம்  நடத்துகிறார்கள்.சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிஐ நிறைவேற்றாமல் தங்களிடம் உள்ள மிக கொடிய வியாதியை வைத்து உலகில் பிச்சை எடுததவர்கள் இவர்கள் தான்.

உண்மையில் அவர் சொல்லும் கதையில் ஒரு பகுதியில் பொருள் இருக்கிறது.  சம்பந்தர் முயற்சிப்பது போல் பிரச்சனையை தீர்ப்பது என்பது நடக்க போறதல்லாத விடையம்.  எனவே அதையே சொல்லிக்கொண்டு திரும்ப திரும்ப தேர்தலுக்கு போனால் பிச்சைகாரனின் புண் ஒரு உதாரணம்தான். சம்பந்தர் செய்வது போல் அவர் எத்தனை தரம் வேண்டுமாலும் செய்யலாம். ஆனால் தீர்வு வராது.

 

அரசின் நிலைப்பாடு, சம்பந்தர் அரசு சொல்வதை நிபந்தனை இல்லாமல் கேட்க வேண்டும் என்பதே. எனவே சம்பந்தருக்கு இப்போது பேச்சு வார்த்தை என்று கூறி காலத்தை கடத்துவதை விட வேறு வழி இல்லை.

 

ஆனால் அந்த உதாரணத்தில் இருக்கும் பிழையான பாகம்  சம்பந்தர் புண்ணை காட்டுகிறார் என்பதே. தேர்தல் சம்பந்தரால் கொண்டுவரப்பட்டதா? சம்பந்தர் கேட்டதற்கு உரிமைகளை கொடுக்க விரும்பாத அரசு அவர் கேட்டா தேர்தல் வைத்தது. எனவே நடந்த தேர்தலில் சம்பந்தரை புண்ணைக்காட்ட வைத்தவர்கள் சர்வதேசத்தவர்களே. அவர்கள் ஒரு தடவையில் பொன்சேக்காவின் தேர்தலில் படிக்க வில்லை. அதாவது அந்ந்தேர்தலில் பொன்சேக்கா வெல்லலாம்தானே என்று நினைத்தார்கள். இந்த தேர்தலில் சம்பந்தர் தோற்றால் என்று நினைத்தார்கள். அவர்கள் தங்கள் நினப்பதை மாத்தி ராஜபக்ஷா குடும்பத்தை சிங்கள மக்கள் கைவிட மாட்டர்கள் என்பதால் தமிழ் மக்களின் பிரதிநிதி சம்பந்தர் அங்கு பேச்சுவார்த்தைக்கு போக வேண்டியதில்லை என்றதை உணரவேண்டும். அதன் பின்னர் அடுத்த நடவடிக்கை அவர்களின் கையில் மட்டும்தான் இருக்கிறது. அப்படி அவர்கள் நடவடிக்கை ஒன்று எடுத்தால் சம்பந்தர் புண்ணை தமிழ் மக்களுக்கு காட்டவேண்டி வராது.

  • கருத்துக்கள உறவுகள்

எம்.டி.லூசியஸ்

பிச்சைக்காரர்கள் தனது காலில் ஏற்பட்ட காயத்தை ஆற்றிக்கொள்ளாமல் அதனை வைத்து dilan-perera-TNA.jpgபிச்சையெடுப்பதை போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காது அரசியல் பிழைப்பு நடாத்துகின்றது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார்.

 

சிறீலங்கா பிச்சைஎடுத்த, எடுக்கும் கதை ஊர் உலகம் அனைத்துக்கும் தெரியும். அந்தக் கூட்டத்தில் இருக்கும் அமைச்சர் டிலான் பெரெர ஒரு நாற்றம்பிடித்த, நன்றிகெட்ட  பிச்சைக்காரன்போல் தெரிகிறார். கதிர்காமர் என்ற ஒரு தமிழன் உலகநாடுகளுக்குச் சென்று 'புலிகள் பயங்கரவாதிகள்' என்று இரந்து வாங்கிப்போட்ட பிச்சையை மறந்துவிட்டார். அந்தப் பிச்சையை உண்டு கொழுத்ததால்தான் முள்ளிவாய்காலில் வாய்க்கால் வெட்டுவதற்கான பலமாவது வந்து கிடைத்தது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.