Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கெட் மைதான கடன்களை அடைக்க 16 மில்லியன் டொலர் தேவை! – அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
aluthgamage-111213-150.jpg

2011 உலக கிண்ண போட்டிகளுக்காக மூன்று கிரிக்கெட் விளையாட்டு அரங்கங்களை அமைப்பதற்காக பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்தவதற்கு 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார். நீர்ப் பிரச்சினை காணப்படும் இந்த பகுதியில் நீர்ப்பாசன குளங்களை அபிவிருத்தி செய்யாமல் அரசாங்கம் விளையாட்டு மைதானங்களை அமைத்து பெருந்தொகை பணத்தை வீனடித்து விட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டினார்.

  

இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். சூரியவெவ விளையாட்டு மைதானத்தில் சர்வதேச போட்டிகளும் பாடசாலைப் போட்டிகள் மட்டுமே நடைபெறுவதால் இதிலிருந்து பெரிய வருமானத்தை எதிர்பார்க்க முடியாதெனவும் அவர் கூறினார். முதலீடுகளிலிருந்து விரைவாக வருமானத்தை எதிர்பார்க்க முடியாதெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98790&category=TamilNews&language=tamil

மெத்த படித்த மேல்மட்ட சிறி லண்கன்சின் களியாட்டத்திற்கு வட்டி கட்டுவது ஏழை தொழிலாளிகள் தான்.

மேல்மட்ட மேட்டுக்குடி சிறி லண்கன்ஸ் கனடாவில் இருந்து கொண்டு மென்டிஸ் அவதார் போட்டு பூரிப்பார்கள்.

விவசாயி இது Canadaவிலும் நடப்பது தானே..... Skydome ஐ 500 Million CAD க்கு கட்டி 65 Millக்கு Rogersக்கு தாரை வார்த்த மாதிரி யாரும் இந்த Groundsகளை ஆட்டைய போட போகினமோ தெரியாது...

அப்படியா? கனடா யாரிடம் $500 மில்லியன் கடன் வாங்கியது?

 இது மிக சிக்கலான கணக்கு. மத்திய அரசு, மாகாண அரசு, மாநகர அரசு, மக்கள் என்று தான் பணம் சேர்க்கப்பட்டது. தனிப்பட்டவர்கள் தங்கள் பிற்கால Billsயை நேரத்துக்கு கொடுத்தார்கள். 500 மில்லியனின் ஒரு பகுதிக் கணக்கு பிற்கால வருமானத்திலிருந்து வந்தது. அதாவது விளம்பரத்தொகைகள்.  ஒரு taxi க்காறன் பயணியிடம் காசு வாங்கி பெற்றல் போட்டு ஓடிய பயணத்தில்  பயணம் முடிய பயணி நிறைய காசு கொடுக்கப்போவதில்லை. SkyDome ன் நட்டங்களில் சில பகுதிகள் வருமானத்தை முன்கூட்டி பெற்றமையாகும். (அதாவது அது உண்மையான நட்டம் இல்லை)

 

இது பனி விழாமல் கட்ட வெளிக்கிட்ட முதல் கட்டிடம். விளையாட்டுகள் இப்போது Web, TVயில் பார்ப்பத்தால் கதிரைகள் விற்கும் பணத்தை பெற முடியாமை.  

 

1985 கால கட்டங்களில் வட அமெரிக்காவில் அதீத வளர்த்தி கண்ட நகரம் ரொரெண்டோ. இதை வைத்து திட்டமிடப்பட்டதுதான் SkyDome. தான்  ரொடெண்டோ. நான் எனது மொன்றியலின் நல்ல வேலையை விட்டு விட்டு ஆங்கில நகரத்தை தேடி 1989  வந்த போது டொரெண்டோ  1990 ல் சரித்திரம் காணாத வேலை இன்மையால் வாடியது. இந்த திட்டமிடலில் வந்த எதிர்பாராத தாக்கம் எனக்கும், ரொரெண்டோவுக்கும் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது. 

 

SkyDome ல் செல்வழித்த பணம் பெரும்பாலும் மாநகரத்தில் நின்றுவிட்டது.  எப்போதுமே அரசுகள் கொடுத்த 500 மில்லியனில் 1/3 பங்கு உடனே வரிப் பணமாக கொடுத்த அரசுகளுக்கு திரும்பவும் போய்விட்டது.  மேற்கு நாடு அரசுகள் நிறை பொருளாத்தார நிலையில் இருப்பன. அதில் தேக்கம் வந்தால் அதை சமாளிக்க அரசுகள் நட்டத்திற்கு பொது வேலைத்திட்டங்கள் போட்டு கட்டிடங்கள் கட்டுவதுண்டு. இது வறிய நாடுகளில் வேறுவிதமாக செய்யப்பட வேண்டும். ஏன் எனில் கட்டுமானங்களை வறிய மக்கள் உபயோகிப்பதில்லை என்பதால் அவை வருவாயும் இல்லாமல் போய்விடும். எனவே அங்கே உற்பத்தி முதலீடுகள் தான் ஆரம்பிக்கப் பட வேண்டும். 

 

 

இலங்கை 500 மில்லியன் கடன் வாங்கி மைதானம் கட்டினால் 250 மில்லியன் அரச குடும்ப பொக்கெட்டுக்குள் போகிறது. மைதானம் கட்ட முதல் 250 மில்லியனால் பெறுமான் பறந்து போகிறது. அடுத்த படியாக இது கறுப்பு பணமாக மாறுவத்தால் நாடு 250 மில்லிய்னை இழக்கிறது. பின்னர் மற்றைய 250 மில்லிய்னுக்கு சீனா மூலப்பொருள் ஆள் உதவி என்று கணக்கு காட்டிவிடுகிறது. அதாவது சீனா கொடுத்த 500 மில்லியனில் 250 மில்லியனீஅயும் உடனே திரும்பவும் மூலப்பொருளாக கூலியாக தனது நாட்டுக்கு எடுத்து சென்றுவிட்டது. ஆனால் இலனகை மக்கள் 500 மில்லியன் கடனில் இருப்பார்கள்.

 

இலங்கையில் போடப்படும் மைதானங்கள் விளையாடத்தாக விளையாட்டுக்கள், பொருத்தமான இடம் என்பவவை போன்ற திட்டமிடலில் கட்டப்படுபவை அல்ல. SkyDome மாகரத்தின் மத்தியில் மக்களால் அதிகம் பாவிக்கப்படும் இடம் தேடி கட்டப்பட்டது. இது கதிரைகளின் தேவையை அதிகரிக்க போட்ட திட்டம். அம்பாந்தோட்டை கிராமத்தில் போழுத்து போக்குக்கு விளையாட்டு பார்க்க [போக யாருக்கும் நேரம் இருக்காது. பணம் வேறுகதை. 

 

SkyDome நடந்த எதிர்பாராத திட்டமிடல் ஏமாற்றங்களை  திட்டமிட்டே அழிக்கும் இலங்கையின் திருகுதாளங்களுடன் ஒப்பிடுவது சரியாக  பத்தினியைப் பார்த்து விபச்சாரி நானும் படுக்கிறன், நீயும் தானே படுக்கிறாய் உன்னில் அப்படி என்ன சுத்தம் என்று கேட்பது போன்றது. இதை வேணுமென்றெ திரிக்கும் ஒப்பீடாகவே கொள்ளலாம்.

 SkyDome நடந்த எதிர்பாராத திட்டமிடல் ஏமாற்றங்களை  திட்டமிட்டே அழிக்கும் இலங்கையின் திருகுதாளங்களுடன் ஒப்பிடுவது சரியாக  பத்தினியைப் பார்த்து விபச்சாரி நானும் படுக்கிறன், நீயும் தானே படுக்கிறாய் உன்னில் அப்படி என்ன சுத்தம் என்று கேட்பது போன்றது. இதை வேணுமென்றெ திரிக்கும் ஒப்பீடாகவே கொள்ளலாம்.

 

என்னண்ணே Skydome என்றால் எதிர் பாராத இழப்பு, இலங்கை என்றால் திருகுதாளமா?

Ontario இல் ஒரு  3 - 4 வருடத்தில் எவ்வளவு பணத்தை வீணடித்தார்கள்..(Gas/power plant..E-health,,,etc) எல்லா நாட்டிலும் அரசில் இருப்பவர்கள் மக்களுக்கு நாமம் சாத்துவதில் வல்லவர்கள்

இலங்கையிலாவது tax கட்டாமல் ஏமாத்தலாம்...Canadaவில் அது முடியாது :lol:

Edited by naanthaan

என்னண்ணே Skydome என்றால் எதிர் பாராத இழப்பு, இலங்கை என்றால் திருகுதாளமா?

Ontario இல் ஒரு  3 - 4 வருடத்தில் எவ்வளவு பணத்தை வீணடித்தார்கள்..(Gas/power plant..E-health,,,etc) எல்லா நாட்டிலும் அரசில் இருப்பவர்கள் மக்களுக்கு நாமம் சாத்துவதில் வல்லவர்கள்

இலங்கையிலாவது tax கட்டாமல் ஏமாத்தலாம்...Canadaவில் அது முடியாது :lol:

இப்போதைக்கு SkyDome Case விள்ங்கிச்சா இல்லையா என்று சொல்லுங்க. அப்புறம் மற்ற இரண்டும் விள்ங்க வைப்பது ஈசி. 

 

SkyDomeமைப்பற்றி கொஞ்சம் வாசித்து  ஆதை முழுமையாக விளங்கிக்கொள்ள முயலுங்க.

 

புத்த பிக்குகள் வெளியிடும் தரவு மகிந்த ரிலிய்ன்களை தாண்டி விட்டாராம். மற்ற இரண்டுக்கும் போவதற்கு  காப்பர் எதை தாண்டினார் என்று யாரவது அறிக்கை விடும் வரை பொறுங்கள். 

 

SkyDome நடந்த எதிர்பாராத திட்டமிடல் ஏமாற்றங்களை  திட்டமிட்டே அழிக்கும் இலங்கையின் திருகுதாளங்களுடன் ஒப்பிடுவது சரியாக  பத்தினியைப் பார்த்து விபச்சாரி நானும் படுக்கிறன், நீயும் தானே படுக்கிறாய்,, உன்னில் அப்படி என்ன சுத்தம் என்று கேட்பது போன்றது. இதை வேணுமென்றே திரிக்கும் ஒப்பீடாகவே கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

SkyDome நடந்த எதிர்பாராத திட்டமிடல் ஏமாற்றங்களை திட்டமிட்டே அழிக்கும் இலங்கையின் திருகுதாளங்களுடன் ஒப்பிடுவது சரியாக பத்தினியைப் பார்த்து விபச்சாரி நானும் படுக்கிறன், நீயும் தானே படுக்கிறாய்,, உன்னில் அப்படி என்ன சுத்தம் என்று கேட்பது போன்றது. இதை வேணுமென்றே திரிக்கும் ஒப்பீடாகவே கொள்ளலாம்.

:lol: :lol: :lol: எங்கையிருந்தப்பா இந்த ஒப்பீட்டையெல்லாம் கண்டுபிடிக்கிறீங்கள்?? :lol:

அண்ணே நீங்கள் புத்த பிக்குவை எல்லாம் நம்புறீங்க... அண்ணே பத்தினி பக்கத்துக்கு வீட்டு காரனோட  படுத்தால் விபச்சாரி கேட்கலாம் தானே.....

 

எனக்கும் Skydome story தெரியும்.... Skydome ஐ Rogersக்கு தாரை வார்த்ததே இனி வரும் வருமானத்தில் city tax அடிக்கலாம் என்றும்... city ஆல் Skydome maintenanceக்கு ஆகும் செலவு மிச்சம் என்று தான்.....

ஆனால் Rogers இப்போ எவ்வளவு tax Skydome வருமானத்தில் இருந்து கட்டுது என்பது தான்...

Edited by naanthaan

அண்ணே நீங்கள் புத்த பிக்குவை எல்லாம் நம்புறீங்க...

எனக்கும் Skydome story தெரியும்.... Skydome ஐ Rogersக்கு தாரை வார்த்ததே இனி வரும் வருமானத்தில் city tax அடிக்கலாம் என்றும்... city ஆல் Skydome maintenanceக்கு ஆகும் செலவு மிச்சம் என்று தான்.....

ஆனால் Rogers இப்போ எவ்வளவு tax Skydome வருமானத்தில் இருந்து கட்டுது என்பது தான்...

நீங்கள் ஒருபக்கத்தை காப்பாற்ற  வேண்டும் என்றால் எப்போ புத்த பிக்குவை நம்பலாம், எப்போ நம்ப கூடாது என்று முடிவு பண்ண வேண்டிடயதை ஒதுக்கி வைத்துவிட்டு எழுதலாம்.

 

இடத்தை நேரத்தை அறிந்து புத்தபிக்குகளின் செயலை தரம் பிரிக்க முடியாத உங்களின் எழுத்துக்கு, நான் மூன்றாம் முறையும் இதையேதான் எழுத முடியும். இது பிரபல கிறிஸ் நொறிஸ் நொறிஸ் வகை விளக்கம். படுத்ததிற்காக விபசாரியை பத்தினிக்கு சமனாகும் உங்கள் பக்க விளக்கத்தின் நடத்தை.   

 

SkyDome நடந்த எதிர்பாராத திட்டமிடல் ஏமாற்றங்களை திட்டமிட்டே அழிக்கும் இலங்கையின் திருகுதாளங்களுடன் ஒப்பிடுவது சரியாக பத்தினியைப் பார்த்து விபச்சாரி நானும் படுக்கிறன், நீயும் தானே படுக்கிறாய்,, உன்னில் அப்படி என்ன சுத்தம் என்று கேட்பது போன்றது. இதை வேணுமென்றே திரிக்கும் ஒப்பீடாகவே கொள்ளலாம்.

 

 

எங்களுக்கு யாரையும் காப்பாற்ற வேண்டிய தேவை இல்லாத போது புத்து சரியாக சொன்னால் அவர் சொல்லும் சந்தர்ப்பத்தை பார்த்து அதை நம்புவோம்.

 

வரியப்பற்றி விளங்கி எழுதுங்கள். சும்மா வாயிலை வந்தை அல்லது கொழும்பிலை இருந்து வந்தை எல்லாம் எழுதாதீர்கள்.  இலாபம் வராத வியாபாரத்துக்கு வரி அறவிடுவதில்லை. SkyDome ல் இலாபம் வந்தால் 1/3 (இப்போது எது சரியான கனேடிய Corporate Tax வீதமோ அதை போட்டுக்கொள்ளுங்கள்) தான் வரி. அதாவது ரொடொண்டோ மாநகரம் SkyDome மை வைத்திருக்கும் போது 30 மில்லியனை இலாபமாக அது உழைக்குமாயின் Rogers Commutation Inc. அந்த 30 மில்லியனில் தான் 20 வதையும் வைத்துக்கொண்டு  10 மில்லியனைத்தான் வரியாக கட்டும். இதில் மிக சிறிய பகுதியைத்தான் மத்திய அரசும், மாகண அரசும் மாங்கர சபைக்குக் கொடுக்கும். இப்படி 30 மில்லிய்னைக்கொடுத்து 4,5 மில்லியனை மாநகரம் பெறுவது,  சீனா முதலீடுகளில் 50 %  கமிசன் அடிக்கும் அரச குடும்பம் பார்க்கும் கணக்கு போலவா உங்களுக்கு படுகிறது? விற்றதிற்கான சரியான காரணத்தை SkyDome பற்றி வாசித்து விளங்கிக்கொளுங்கள். 

நீங்கள் சொன்னது சரி... Skydome ஒரு பிரைவேட் கம்பனியிடம் தான் இருந்தது Rogers க்கு போகுமுன்...

Skydome ஒரு காலமும் Governmentகளிடம் இருக்கவில்லை...ஆனால் ஒன்ட்டாரியோ அரசு பணம் இழந்திருக்கு..

நான் இதை பற்றி நினைத்து வைத்திருந்தது பிழை

 

http://demause.net/skydome.html

 

 

Edited by naanthaan

உங்களுக்கு நடப்பது உண்மையாகத்தான் தெரியாதா? இலங்கையின் Deal களுக்குள் எந்த கம்பனி வரபோவதாக எதிர்வு கூறுகிறீர்கள். இதையா நுரை சோலை மின்சார உற்பத்தி நிலையத்தில் செய்தார்கள். சீனா இலங்கையின் அரசாங்க கணனிகளை கக் செய்வதாக செய்திகள் வந்தது. இலங்கையால் கடனை கட்ட முடியாமல் சீனா நுரை சோலையை எடுத்துகொள்ளபோவதாக வந்தது. இப்போ சீனா நுரைசோலை வேண்டாம் என்று காசு வேண்டும் என்று கேட்கிறதாக வந்தது. இதில் எந்த தனியார் கம்பனி வருகிறது? தனிய நுரை சோலையில் அரச குடும்பம் 50% அடித்திருக்கிறது? இதை எந்த தனியார் கம்பனி வாங்க போவதாக சொல்கிறீர்கள்?   

 

மிகின் எயாரை பற்றி சொஞ்சம் படியுங்கள். Lyco Phone Card கம்பனியின் ஸ்பானிஸ் பிள்ளைகம்பனி இலங்கையில் விட்ட விளையாட்டும், அதில் அரச காப்பரேசனுக்கு நடந்தையும் படியுங்கள். அதன் பின்னர் காப்பருக்கு Rogers Communication Inc. ல் எததனை வீதம் பங்கு உண்டு என்பதையும் தேடிப்பிடித்து படியுங்கள். 

 

முதலில் அரச குடும்ப கட்சிSLFP  யின் கொள்கை என்ன என்பதை தெரிந்து கொண்டு எழுதுங்கள். அதாவது SLFP தனியார் கம்பனிகளை 1960ல் இருந்து தேசிய மயமாக்கி வருகிறது.  இப்படி தேசியமயமாக்கிய 72 கம்பனிகளில் 20 நட்டத்தில் என்று பாரளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை அரசு மடக்குவதை பற்றித்தான் அந்த புத்த பிக்கு பிரஸ்தாபித்திருந்தார்.  இதில் எங்கே தேசிய உடமையை எதிர்க்கும் முதலாளித்துவ கனேடிய அரசின் கொள்கைகளுக்கு சமன் காண்கிறீர்கள்?

 

அதன் பின்னர் நீங்கள் திருப்பவும் SkyDomeல் நடந்தது தான் இலங்கையில் நடக்க போவதாக இன்னொரு தடவை பத்தினிக்கும் விபச்சரிக்குமிடையில் பேதமில்லை என்று காரண காரியங்களை மூடி வைத்து விவாதிக்காதீர்கள்.


http://www.yarl.com/forum3/index.php?showtopic=132317

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=133239

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைச்சர் மீது தான் அவருடைய மனைவி தன்னை கொலை செய்ய பார்ப்பதாக புகார் கொடுத்து இருக்கின்றார்.......:D

என்னண்ணே Skydome என்றால் எதிர் பாராத இழப்பு, இலங்கை என்றால் திருகுதாளமா?

Ontario இல் ஒரு 3 - 4 வருடத்தில் எவ்வளவு பணத்தை வீணடித்தார்கள்..(Gas/power plant..E-health,,,etc) எல்லா நாட்டிலும் அரசில் இருப்பவர்கள் மக்களுக்கு நாமம் சாத்துவதில் வல்லவர்கள்

இலங்கையிலாவது tax கட்டாமல் ஏமாத்தலாம்...Canadaவில் அது முடியாது :lol:

சிறி லங்காவில் வரி கட்டாமல் மட்டுமா ஏமாத்தலாம்?

146,000 தமிழரை கொன்றுவிட்டு தமிழரை காப்பாற்றிவிட்டோம் என்று ஏமாற்றலாம்?

22 ஊடகவியலாளரை போட்டு தள்ளிவிட்டு நாட்டில் சுதந்திரம் என்று ஏமாற்றலாம்?

பிரதமர் கெரோயின் கடத்திவிட்டு கடிதத்தை வாசிக்கவில்லை என்று ஏமாற்றலாம்?

கடல் கொள்ளை,ஆயுத கடத்தல், ஆட்கடத்தல் செய்துகொண்டு பாதுகாப்பு செயலாளர் என்று பதவி கொடுத்து ஏமாற்றலாம்?

கள்ளகாதலுக்கு சகோதரத்துவ படுகொலை செய்துவிட்டு "பதவி துறக்கவேண்டும்" அரசியல் செய்து ஏமாற்றலாம்?

ஏன்? கோகோகோலா குடித்துக்கொண்டு, ஐபட்டில் செஞ்சேனை புரட்சி செய்து கூட சிறி லங்காவில் ஏமாற்றலாம்.

பிச்சைக்கார,வறுமை சர்வதிகார நாட்டில் ஏமாளிகளுக்கா பஞ்சம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.