Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா தயார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
americaflag-seithy-20131208.jpg

ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் ராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை புறக்கணித்து விட்டு, தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்க மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமான சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்க இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பிறகு இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அண்மைய காலத்தில் உலகில் இடம்பெற்ற போர்களில் போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன. இவற்றில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறிய வேண்டும் என்ற பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் முரண்டுபிடிக்கும் தன்மை என்பதே அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழுவின் நிலைப்பாடாகும்.

உண்மையா அல்லது பொய்யா என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில்,இலங்கையின் போர் பற்றி கிடைத்துள்ள சாட்சியங்கள் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை கொண்ட சாட்சியங்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அரச ஆட்சியாளர்கள் குழுவொன்று இவ்வாறு முரண்டு பிடிக்கும் விதத்தில் நடந்து கொள்ளுமாயின் சர்வதேச சமூகம் அதனை அமைதியாக வேடிக்கை பார்க்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர வேறு விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டுக்கு முன்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் போர் குற்றச்சாட்டு தொடர்பில் பொறுப்புக் கூறும் தன்மையுடன் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை உள்நாட்டில் ஆரம்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98965&category=TamilNews&language=tamil

 

அமெரிக்காவின் பிஸ்னஸ் கெடப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை... வருசமா... சொல்லிக்கிட்டுகிருக்கிறாங்க, செய்து துலையேன் அமெரிக்கா.
கேட்டுக், கேட்டு... காது புளிச்சுப் போட்டுது.
 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.