Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பிரதேச அபிவிருத்திக்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் முட்டுகட்டை போடுவது ஏன்? -

Featured Replies

Haheem-150x150.jpgகல்முனை தமிழ் பிரதேசத்தில் உள்ள உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்துவதற்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் எதிர்ப்பு காட்டிவருவது தமிழ்- முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் சதி நடவடிக்கை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதால் முஸ்லீம்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள், அப்படி இருக்கும் போது முஸ்லீம் அரசியல்வாதிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என அவர் கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே உப பிரதேச செயலகமாக நீண்டகாலமாக தனித்தியங்கும் கல்முனை தமிழ் உபபிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி அதனூடாக அரச சேவையினை விரிவு படுத்தி மக்கள் துரிதமான சேவையைப் பெறவேண்டுமென்ற நோக்கத்திற்காகவே அப்பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டும் என தமிழ் மக்கள் கோருகின்றனர். தங்கள் பகுதியில் உள்ள பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டும் என கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை இல்லை என மாகாணசபை உறுப்பினர் நடராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கரையோர மாவட்டம் கேட்கின்றனர். எந்த தமிழ் கட்சிகளோ அல்லது தமிழ் மக்களோ இதுவிடயமாக எதுவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. முஸ்லீம்களின் விரும்பங்கள் கோரிக்கைகளில் தமிழ் மக்கள் தலையிட்டது கிடையாது. அப்படி இருக்கும் போது தமிழ் மக்களின் விடயங்களில் முஸ்லீம் அரசியல்வாதிகள் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 http://www.thinakkathir.com/?p=54963#sthash.kwsRiq0P.dpuf

கல்முனையில் தமிழ் பிரதேச சபையை உருவாக்கவும்: சுரேஷ்

கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் வேண்டாம் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கு தமிழ் பிரதேச சபையே உருவாக்கப்பட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதற்காக கடந்த 25 வருடங்களாக உப பிரதேச செயலகமாக செயற்படும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி அதற்கு பின்னர் அதனை பிரதேச சபையாக மாற்ற வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

எனினும்இ கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு தெரிவிக்கின்றமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சர்ச்சை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச வேண்டி ஏற்பாட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயம் இன்று நேற்று உருவானத்தல். இது தொடர்பில் 1990ஆம் ஆண்டு நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளேன். எனக்கு முன்னரும் பின்னரும் இந்த விடயம் குறித்து பலர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/93414-2013-12-16-09-49-50.html

மறைந்த அமைச்சர் அஷ்ரபின் காலப் பகுதியில் முஸ்லிம்களுக்காக நான்கு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டன. அப்படியான நிலையில் ஏன் தமிழர்களுக்காக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த முடியாது என அவர் கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம் பிரதேச செயலகங்களிற்குள் தமிழ் மக்கள் வாழ முடியுமென்றால் ஏன் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் கீழ் குறிப்பிட்ட தொகையான முஸ்லிம் மக்கள் வாழ முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனைப் பிரதேசத்தில் தமிழர்களுக்கென்று தனிப் பிரதேச சபை உருவாக்கப்பட்டால் அது முஸ்லீம் காங்கிரஸின் கோரிக்கையான அம்பாரை மாவட்டக் கரையோர தனி முஸ்லீம் மாகாண சபைக் கோரிக்கைக்கு இடைஞ்சலாகி விடுமென்பதாலேயே ரவூப் ஹக்கீம் போன்றோர் தமிழர் பிரதேச சபையை எதிர்க்கின்றனர்.  பொதுபலசேனா போன்ற இவ்விடயத்தில் தமிழர்களின் நிலைப் பாட்டை ஆதரிக்க்கூடிய சக்திகளிடம் முஸ்லீம் காங்கிரஸின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்தி தமிழர்கள் தங்கள் பிரதேச சபைக்கான ஆதரவை வலுப்படுத்த வேண்டும்.

 

மற்றும்படி முஸ்லீம் காங்கிரசுடன் இது தொடர்பாகக் கலந்துரையாட வேண்டிய அவசியம் எதுவுமில்லை.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து தீர்மானிக்கவில்லை: ஜோன்

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ் பிரதேச செயலகம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரிற்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ளமாட்டேன் என உறுதியளித்துள்ளார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/94006-2013-12-21-06-24-01.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.