Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை அரவணைக்க வேண்டும் என்ற பார்வையுள்ள சிங்கள தலமைத்துவங்கள் தோன்ற அறவே வாய்ப்பில்லை:-

Featured Replies

யாழ்பல்கலைக்கழக முன்னாள் விரிவுலையாளர் மு.திருநாவுக்கரசு BBCக்கு வழங்கிய செவ்வி எழுத்துருவில் முழுமையாக:-

thiru_1_CI.jpg

 

நெல்சன் மண்டேலா ஆபிரிக்க விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அரங்கில் சரிவர ஒருங்கிணைத்திருந்தார் என்பது முதலாவது உலகப் பொது உண்மை.  உலகலாவிய கண்ணோட்டம், சர்வதேச பார்வை களநிலை யதார்த்தம், இந்த நான்கையும் ஒருசேர நேர்கோட்டில் இணைத்து அவர் ஆபிரிக்க தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

ஆபிரிக்க தேசிய விடுதலையை சர்வதேசக் கண்கொண்டு பார்க்க ஒருபோதும் அவர் தவறவில்லை. சர்வதேச போராட்ட ஒழுங்கில் அவர் அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார். முக்கியமாக மண்டேலா கைது செய்யப்பட்ட 1965 ஆம் ஆண்டின் பின்பு களநிலை யதார்த்தத்திற்கு ஏற்ப அவர் தன்னை புதுப்பித்துக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை எம்மிடம் இலட்சியம் முதன்மையாக இருந்தது. தியாகங்கள் இழப்புக்கள் அர்ப்பணிப்புக்கள் மிகப் பெரிதாகவே இருந்தன. ஆனால் சர்வதேசம் எம்மைப்பற்றி என்ன நினைக்கிறது என்பது பற்றி கவலைப்படாமல் இருந்தோம். ஆதலினால் உலக அரங்கிலும் உள்நாட்டிலும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். உள்நாட்டில் ஈழத் தமிழ் மக்களின் மத்தியில் அதிக தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் போராட்டத்தை முன்னெடுத்த அதே வேளையில் புவிசார் அரசியலுக்கும் சர்வதேச அரசியலுக்கும் பொருத்தமாக உலகம் எம்மைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதனை பார்க்கத் தவறினோம்.

இவை மட்டும் அல்ல நெல்சன் மண்டேலா மக்களை ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்றிருந்தார். உள்நாட்டில் மக்களை ஒருங்கிணைப்பதிலும் சர்வதேச ரீதியாக போராட்டத்திற்கான கௌரவத்தை பெறுவதிலும் ஒரே நேரத்தில் இரண்டையும் இணைத்து வைத்திருந்ததில் வெற்றி பெற்றிருந்தார்.

குறிப்பாக 1965ல் அவர் கைது செய்யப்பட்ட போது ஆயுதப் போராட்டத்தில் இருந்து அகிம்சைப் போராட்டத்திற்கு மாறிய போது ஆபிரிக்க தேசிய காங்கிரசில் இருந்த எதிர்ப்பை அவர் அழகாகவே சமாளித்திருந்தார். புதிய கள நிலைக்கு ஏற்ப கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியையும் கறுப்பின மக்களுக்கான நீதியையும் உலக அரங்கிற்கு சரியான முறையில் எடுத்துச் செல்வதற்கான சரியான பாதையை வகுத்துக்கொண்டார். அங்கே போராட்டக் குழுக்கள் இல்லாவிட்டாலும் பல்வேறு இனக் குழுக்கள் இருந்தன. அந்த இனக் குழுக்களை கோட்பாட்டு ரீதியில் இணைப்பதில் அவர் வெற்றி பெற்றிருந்தார். ஈழத் தமிழர்களைப் பொறுத்த அளவில் பல்வேறு இனக் குழுக்களையும் இணைப்பதில் யாரும் வெற்றி பெறவில்லை. 

இலங்கையின் போராட்டத்தை பொறுத்தவரை ஈழத்தில் காணப்பட்ட பல்வேறு  குழுக்களுக்கும் இடையில் ஜனநாயக உள்ளடக்கத்தை காணத் தவறியிருந்தன. தாம்  ஜனநாயகரீதியாக ஐக்கியப்பட வேண்டும் என்ற எண்ணத்தை பெற அனேகமாகவே எல்லோருமே தவறி விட்டார்கள்.  ஆனாலும் கூட எல்லோரிடமும் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் போராட்டங்களும் இருக்கவே செய்தன. ஜனநாயகத்திற்கான அடிமனக் கலாசாரம் இருக்கவில்லை. எல்லோருமே ஜனநாயகம் பற்றியும் விடுதலை பற்றியும் பேசினோம் ஆனாலும் கூட ஜனநாயக விழுமியங்களை பின்பற்றத் தவறிவிட்டோம்.

எனினும் இலங்கையில் போராடிய போராட்டக் குழுக்கள் ஆபிரிக்க தேசிய காங்கிரசை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டார்கள் என்றால் அந்தக் காலத்திலே அது மேலெழுந்ததனால் அது ஒரு பசனாக நாகரீகமாக இருந்தது. ஆனால் அந்த முன்னுதாரணத்தின்படி வாழ்ந்து காட்டுவதற்கு நாட் இன்னும் அதிகதூரம் பிரயானிக்க வேண்டியிருக்கிறது.

தென்னாபிரிக்க விடுதலையின் பின்பு மண்டேலா இணக்க அரசியலைப்பற்றி பேசினார். மண்டேலா பேசிய இணக்க அரசியல் என்பது வெற்றிபெற்றவர் பேசிய இணக்க அரசியல். கறுப்பின மக்கள் ஆதிக்கத்திற்கு வந்த பின் வெள்ளையின மக்கள் செய்த அநீதிகளை மன்னிப்போம் ஆனால் மறக்க முடியாது எனச் சொல்லியதோடு நாம் இணக்கமாக வாழ்வதற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் வழியைக் கண்டு பிடிப்போம் ஆனால் நடந்தவற்றை மறக்க முடியாது எனச் சொல்கிறார்.

ஆனால் இலங்கையில் ஒருபோதுமே ஈழத்தமிழர்கள் பற்றிய புரிந்துணர்வு கொண்ட எந்த சிங்களத் தலைவரும் தோன்றவில்லை. இனியும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. கிளார்க்கைப் பொறுத்தவரை கறுப்பின மக்கள், போராட்டத்தின் காரணமாக உலக அரங்கில் அவரகள்; பெற்ற முக்கியத்துவத்தை அவர் ஏற்றுக்கொண்டார். இலங்கையில் உள்ள சிங்கள மக்களின் அரசியலில் அப்படி ஒருவர் தோன்ற இடமே இல்லை. எனவே சிங்கள மக்கள் மத்தியில் இருந்து ஒரு இணக்க அரசியல் பற்றிய சிந்தனையோ தமிழர்களை அரவணைக்க வேண்டும் என்ற பார்வையுள்ள தலைவர்களோ தலமைத்துவங்களோ தோன்றுவதற்கான யதார்த்தம் அங்கு சிறிதளவிலும் காணப்படவில்லை.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நவீன வரலாற்றுத்துறையின் முன்னாள் விரிவுலையாளர் மு.திருநாவுக்கரசு BBCக்கு குரல் வடிவில் வழங்கிய செவ்வி குளோபல் தமிழ்ச் செய்திகளால் முழுமையாக தொகுக்கப்பட்டு எழுத்துருவில் தரப்படுகிறது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100427/language/ta-IN/article.aspx

 

வெளிநாட்டில் சுதியா இருக்கும் சிறி லங்கா காரர் தான் சிங்களம் அரவணைக்கும் என்று இன்னும் தம்மை ஏமாற்றுகிறார்கள்.

எனது ஆதங்கம் என்னவென்றால் "தமிழர்களை இனியும் சிங்களம்  அரவணைக்காது" என்ற உண்மைய உலகுக்கு உணரவைக்க இன்னும் எத்தனை தமிழர்கள் இழப்புக்களை சந்த்திக்க வேண்டும், என்பதே.

எனது ஆதங்கம் என்னவென்றால் "தமிழர்களை இனியும் சிங்களம் அரவணைக்காது" என்ற உண்மைய உலகுக்கு உணரவைக்க இன்னும் எத்தனை தமிழர்கள் இழப்புக்களை சந்த்திக்க வேண்டும், என்பதே.

இந்த அறிவாளிகள் போல் பேசும் சிறி லங்கா காரரும், இந்திய கொங்கிரஸ் கூட்டமும் வாயை மூடினாலே போதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.