Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரணம் என்பது ஒருமுறை தானா!

Featured Replies

 மரணம் என்பது ஒருமுறை தானா!


 

deathpenalty2012_2.jpg+1.jpg

 

 

வாழ்க்கையில் நிச்சயக்கப்பட்ட இரு தருணங்கள் ஒன்று பிறப்பு. மற்றொன்று இறப்பு. எப்பொழுது பிறப்பு என்று நிகழ்கிறதோ அப்பொழுதே இறப்பு என்ற ஒன்று நிகழப் போவது உறுதியாகிறது.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நமக்கு எவ்வளவு மரண போராட்டங்கள். எனது உயிர் எனது கடமைகளைச் செய்து முடிப்பதற்குள் போய்விடுமோ! ஏதோ ஒரு விதத்தில் காலன் நமது உயிரைப் பறித்து விடுவானோ! என்ற பயம் நமக்குள் வருவது இயல்பு தான்.

எனக்கொரு கேள்வி நாம் வாழ்க்கையில் ஒருமுறை தான் மரணத்தை தழுவுகிறோமா என்பதே!

ஒருவர் ஒரேடியாகவா மரணம் அடைகிறார்?

நாம் ஒரேயடியாக மரணம் அடைவதில்லை ஒவ்வொரு நாளும் மரணம் அடைகிறோம் என்று ரோசி ஃபிலிப் என்பவர் கூறுகிறார்.

நம் காதலை ஒருவர் புறக்கணிக்கும் போது நாம் கொஞ்சம் செத்து போவதில்லையா!

நம்மை ஒருவர் அலட்சியப்படுத்தும் போது நாம் சிறிது சிதைந்து விடுவதில்லையா!

நமக்கு நெருக்கமானவர் ஒருவர் இறக்கும் போது நமக்குள் ஒரு பகுதி அவரோடு இறந்து போவதில்லையா!

ஓர் இடத்தைவிட்டுப் பிரிகிற போதும், நட்பைவிட்டு நகருகிற போதும், நெருங்கியவர்கள் தளர்கிற போதும் ஏற்படும் இழப்பு என்னும் வெற்றிடம் ”இறப்பு” எனும் வகையைச் சார்ந்தது என்று திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் கூறுகிறார்.

ஒவ்வொரு பருவம் முடிகிற போதும் நாம் மரணம் அடைகிறோம் என்பதை நம் இலக்கியமான குண்டலகேசி அழகாக இயம்புகிறது

பாளையாம் பருவம் செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் பருவம் செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளுமிவ் வயதும் இன்னே
மேல்வரு மூப்புமாகி
நாளும் நாம் சாகின்றோமால்
நமக்கு நாம் அழாததென்னே


நிலைமை இப்படியிருக்க வாழ்க்கையிம் எதார்த்தத்தை உணராது அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்ப்பதிலேயே வாழ்க்கையின் பாதி காலத்தைத் தொலைத்து விடுகிறோம். மீதி பாதியை சேர்த்த செல்வத்தை எப்படி பாதுகாப்பது என்பதிலேயே போய்விடுகிறது.

தனது பிஞ்சு குழந்தைகளின் மழலைப் பேச்சு கேட்காமல், தனது மனைவியிடம் அன்பு பகிராமல், சேர்த்த செல்வத்தை வறுமையில் வாடும் சமுதாயத்திற்கு பகிராமல், போட்டி, பொறாமையோடு வாழ்க்கையை வியாபாரமாய் ஆக்கி விட்டு கடைசியில் எந்த சுகமும் அனுபவிக்காமல் இறந்து போவதில் என்ன பயன்! அதற்கு பிறந்த உடனையே இறந்திருக்கலாமே!

எனவே ஒவ்வொரு நாளும் இறக்கும் நாம், பேராசை தவிர்த்து இருப்பதை வைத்து நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ரசித்து நம்மோடே இருக்கும், வாழ்க்கையிம் இலக்கு நோக்கி பயணித்தாலும் பாதையெல்லாம் பரவி கிடக்கும் மகிழ்ச்சியை உணர்ந்து நமது குடும்பத்திற்கும் சுற்றத்தார்க்கும் பயனுள்ள வகையில் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்.

  நன்றி :  http://pandianpandi.blogspot.com/2013/11/blog-post_11.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன் தங்கள் பொருள் பதிந்த பதிவுகளை படித்து வருகிறேன்.

 

இந்த பாப நாசம் சிவனின் இந்தோள ராகத்தில் (Hindolam) அமைந்த பாடல், அதுவும் பாடகி நித்தியஸ்ரீ மகாதேவன் குரலில் பொருள் உணர்ந்து

இரவு உறக்கத்திற்கு போகு முன் ஒரு அமைதியான பின் இரவில் கேட்கும் போது  வாழவின் தத்துவம் ஒரு அளவு புரியும் எனக்கு இப்போ.

 

http://en.wikipedia.org/wiki/Nithyasree_Mahadevan

 

இதில் வரும் " அன்று செயல் அழிந்து அலம் வரும் பொழுது, சிவன் பெயர் நாவில் வாரதே"  என்பதன் பொருள்.  பின்வரும் You Tube Comment இல் உள்ளது.

 

அலமருதல் = அலைதல். அலம் = துன்பம். அலம் என்பதைவிட, அலமருதல் பொருத்தமாகிறது.
 
உடலைவிட்டு உயிர்பிரியும் தருணம், உடலில் இருப்பதற்காக உயிர் அலையும்(அலமரும்) அப்போது சிவன் நாமம் நினைவில் வராது.
அதனால் இன்றையிலிருந்து சிவன் நாமம் சொல்லி,சொல்லிப் பழகு மனமே!என்பது பொருள்.
அன்புடன், தங்கமணி.

 

 
"அன்று செயல் அழிந்து அலமரும்பொழுது சிவன்பெயர் நாவில் வாராதே!"
 
உடலை விட்டு உயிர் பிரியும் தரணம் தான் உடலின் அருமை உயிருக்கு தெரிய வருகிறது. அது தான் மனித வாழ்க்கை.
 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

"அஞ்சியவர்களுக்கு சத மரணம். அஞ்சாதவர்களுக்கு ஒரு மரணம்." ஜூலியஸ் சீசர் கூறியுள்ளார்.
ச‌த‌ ம‌ர‌ண‌ம் என்ப‌து, ஒரு ச‌த‌ம்(பெனிக்) நூறு சேர்ந்தால் தான்... ஒரு ஐரோவாக‌ முடியும்.
தின‌மும்... எமது வாழ்வில், பல் வேறு கோணங்களில் ம‌ர‌ண‌ம் அண்மித்துக் கொண்டே.. உள்ள‌து.
இணைப்பிற்க்கு, ந‌ன்றி கோம‌க‌ன்.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் நிகழ்ந்தால் மட்டுமே ஆன்மா உடலை விட்டு நீங்கி பிரபஞ்ச வெளியில் ஒளியின் வேகத்தையும் மீறி இன்னொரு உலகில் உருவான கருவுக்குள் புகுந்துகொள்ள முடியும்.. :D இதையே மறுபிறப்பு என்கிறோம்.. :unsure:

அதீதமான சரீர, நில, பொன், பொருள் ஆசைகளுடன் வாழ்பவர்கள் மரணத்தின்பின் மறு உலகுக்குச் செல்லமுடியாமல் பாழடைந்த பங்களாக்களிலும், பேஸ்மென்ட்களிலும் தங்கிவிடுகிறார்கள்.. :D இவர்களை ஆவிகள் என்போம்.. :blink::D

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் நிகழ்ந்தால் மட்டுமே ஆன்மா உடலை விட்டு நீங்கி பிரபஞ்ச வெளியில் ஒளியின் வேகத்தையும் மீறி இன்னொரு உலகில் உருவான கருவுக்குள் புகுந்துகொள்ள முடியும்.. :D இதையே மறுபிறப்பு என்கிறோம்.. :unsure:

அதீதமான சரீர, நில, பொன், பொருள் ஆசைகளுடன் வாழ்பவர்கள் மரணத்தின்பின் மறு உலகுக்குச் செல்லமுடியாமல் பாழடைந்த பங்களாக்களிலும், பேஸ்மென்ட்களிலும் தங்கிவிடுகிறார்கள்.. :D இவர்களை ஆவிகள் என்போம்.. :blink::D

 

கனம் கோட்டார் அவர்களே!

 

இவரது வாதம் சரியானதாக இருந்தால், யாழ்ப்பாணத்தில் மண், பெண், பொன் ஆசையில்லாதவர்கள் யாரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை!

 

அங்கு பாழடைந்த பங்களாக்களும், பேஸ்மெண்டுகளும் நானறிந்த வரையில் இல்லை! :D 

 

இவர்களது ஆவிகள் எங்கே தங்கியிருக்கின்றன என்று கனம் வழக்குனர் அவர்கள் விளக்கம் தருவாரா? :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

கனம் கோட்டார் அவர்களே!

 

இவரது வாதம் சரியானதாக இருந்தால், யாழ்ப்பாணத்தில் மண், பெண், பொன் ஆசையில்லாதவர்கள் யாரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை!

 

அங்கு பாழடைந்த பங்களாக்களும், பேஸ்மெண்டுகளும் நானறிந்த வரையில் இல்லை! :D

 

இவர்களது ஆவிகள் எங்கே தங்கியிருக்கின்றன என்று கனம் வழக்குனர் அவர்கள் விளக்கம் தருவாரா? :icon_idea:

கனம் கோர்ட்டார் அவர்களே.. :D யாழ்ப்பாணத்துக்கென்று புளியமரங்களும், முருங்கை மரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.. :icon_idea: தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கையூரன் அவர்களே,

 

நீங்கள் " நம்பிகெட்டவர் எவர் ஐயா" பாடலை ஒரு முறை கேட்டிர்களா?

 

நாங்கள் அதை கதைக்க நினைக்க நீங்கள் ஆவியில் இறங்கி விட்டிருந்தது போல தோணுது.

 

எங்களுக்கு எல்லாம் ஆவி என்றால் புட்டு அவிக்கிற ஆவிதான் தெரியும்.

 

இந்த பாடலில் வரும் சிவன்,  சம்பு கபாலியை அதாவது திருமயிலையின் இறைவன்,  கடல் கரையில் வீற்று இருபதாகத் தேவார திருபதிகங்களில் படித்த நினைவு.   ஆனால் அங்கு போய் பார்த்த போது அவர் உள் நாட்டில் அதுவும் தெப்பகுளம் வசதிகளுடன் வீற்றிருக்க கண்ட போது ஆச்சரியம் தோன்றியது.  ஏதோ அற்புத்தமாக இருக்கும் என்று மறந்து விட்டிருந்தேன்.  ஆனால் இந்த Wikipedia கட்டுரை சமிபத்தில் படித்த போது தான் புரிந்தது அவரும் எங்களை போல் ஒரு அகதி என்று.  அவரும் எங்கள் நல்லூர் கந்தன் மாதிரி போர்த்துக்கேயர் இடம் நல்ல அடி வாங்கி கடற் கரையை விட்டு கொடுத்து விட்டு உள் நாட்டிற்கு இடம் தேடி, அடைக்கலம் புகுந்து வீற்று இருக்கிறார்.

இப்போ இவரை நம்பி எப்படி கூப்பிடுவது?. அது தான் புரியாத ஒரு புதிர்.

 

http://en.wikipedia.org/wiki/Kapaleeshwarar_Temple

 

Kapaleeshwarar Temple

History

200px-Mylapore_Kapaleeshwarar_temple_fac
magnify-clip.png
Facade of the temple

 

The commonly held view is that the temple was built in the 7th century CE by the ruling Pallavas.[4] This view is based on references to the temple in the hymns of the Nayanmars (which, however, place it by a sea shore). Thirugnanasambandar's 6th song in Poompavaipathikam and Arunagirinathar's 697th song in Thirumylai Thirupugazh, make clear reference to the Kapaleeswarar temple being located on the seashore in Mylapore.[5] The scholarly view that accounts for the discrepancies is that the original temple was built on the shore at the location of the current Santhome Church but was destroyed by the Portuguese,[6] and the current temple (which is 1-1.5 km from the shore) was built by the Vijayanagar kings during the 16th century.[2] There are inscriptions dating back to 12th century inside the temple.[7] The temple's 120 ft gopuram[7] (gateway tower) was built during 1906 with stucco figures adorning it.[2][4] The temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu

 

தெப்பகுள வசதி உடன் இன்றைய தோற்றம். முன்பு பார்த்ததை விட இப்ப தண்ணிக்கும் தட்டுப்பாடு போல தெரிகிறது.

 

Kapaleeswarar1.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடல், உயிர், மனம் ( body, (life) soul, mind) இது மூன்றும் பொருந்தி அமைவது மனித வாழ்க்கை.  இந்த மனம் உள் மனம், வெளி மனம் என்று இரு வகைப்டடது.  காலையில் 4 மணிக்கு எழ கடிகார மணியை வைத்து விட்டு, மணி அடித்ததும் அதை அடித்து நிற்பாட்டி விட்டு மீண்டும் தூக்கத்திற்கு அழைப்பு விடுவது அந்த பிரமிக்க வைக்கும் ஆற்றல் படைத்த இந்த ஆழ் மனமே. மனச் சாட்சி என்பதும் இதன் பொருள் பட்டதே. இறை உணர்வு என்றும் அது வியாபகம் ஆக எல்லா உயிர்களிடமும் பரிவு காட்டிடும் உன்னத அறிவாக அது வளர்ச்சி பாதையில் செல்ல அடி எடுத்து வைக்கும்.

 

திருமந்திரம் விரிவுரை - ஜி.வரதராஜன்

 

கண்ணாக்கு மூக்கு செவிஞானக் கூட்டத்துள்  

பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு

உண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளி காட்டி

புண்ணாகி நம்மை பிழைப்பித்த வாறே.

 

பண் ஆக்குதல் - நாதத்தை உதிக்க செய்தல்

பழம்பொருள் - பரம் பொருள்

 

அண்ணாக்கும் சிரசின் உச்சியும் உள்ள பிரதேசத்தில் முகத்தின் பக்கம் நாளமில்லா சுரப்பி, Pituitary Gland என்னும் ஓர் உறுப்பும், பிடரி பக்கத்தில், Pineal Gland என்னும் நாளம் இல்லா சுரப்பியும் மனிதனின் தலையில் உள்ளன.

 

முன்னதில் தெளிவான உலக அறிவும், பின்னதில் கருத்தான அறிவும் பதிவு பெறுகின்றன. மனிதன் தன்னை பற்றியோ அல்லது கடவுளை பற்றியோ சிந்திப்பதில் வலிவடைந்து நாதத்தை எழுப்புகிறது.

 

இதில் இருந்து நாம் அறிவது என்னவென்றால், ஆரியம் எம்மை ஆட்கொண்டு எம் முன்னோர் வைத்திருக்கும் ஆன்மிக தந்தவம்களை சூறையாடி, திருடி அதை வட மொழியில் கண் மூக்கு வாய் வைத்து எழுதிவிட்டு எம் தலையில் கட்டி விட்ட அழுக்கு மூடைகளே கந்த புராணம் போன்ற புராண கட்டு கதைகள் என்று உணர்ந்து அவற்றை இனிமேலாவது ஒதுக்குவது சான்றோர்க்கு உள்ள மேலான பொறுப்பும் தகைமையும் கூட என்று போற்றுவோம். அன்பே சிவம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.