Jump to content

சாதனையாளன் கப்டன் காவலன்


Recommended Posts

பதியப்பட்டது

இரண்டாம் கட்ட ஈழப்போரில் ஆரம்ப ஆண்டுகள் அவை.26.11.1992.பலாலித் தளத்தின் வளலாய்ப் பகுதி முன்னணிக் காவலரண் வரிசையைத் தாக்கி அழித்து அதன் பின்னாலுள்ள சில மினி முகாம்களையும் அழிப் பதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்தன.

முன்னரங்கக் காவல்நிலைகள் தாக்கப்படும் அதே நேரத்தில் ஏற்கனவே ஊடுருவி நிலைகொண்டிருக்கும் அணிகள் தளத்தின் உட்புற இராணுவ மினி முகாம்களைத் தாக்கவேண்டு மென்பதே அன்றைய எமது திட்டம்.

பின்னணியில் அமைந்திருந்த மினி முகாம்களைத் தாக்கும் அணியாகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஒரு பிரிவு நியமிக்கப்பட்டது. அதற்காக இராணுவ நிலைகளை ஊடறுத்து ஏழு கிலோமீற்றர் தூரம் வரை அவர்கள் இரகசியமாக நகரவேண்டியிருந்தது.

கண்ணிவெடிகள், மிதிவெடிகள் நிறைந்த இராணுவ முன்னரங்க வேலி, நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள தொடர் காவலரண்கள், மின் ஒளி பாய்ச்சப்பட்ட இரவு நேரஅவதானிப்பு வலயம், சிறு ஒலியையும் தெளிவாகக் கேட்கக்கூடிய பேரமைதி. இவை எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து தொடர் கண்காணிப்பிலிருக்கும் வீதியொன்றைக் கடந்தே அந்த அணி தன் இலக்கை அடையவேண்டும்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது. யாருமே தாக்குதலுக்கான இறுதி இலக்கை நெருங்கவில்லை. அன்றைய இருட்பொழுதின் ஆழ்ந்த அமைதியைக் குலைத்தது ஒரு வெடியோசை. இராணுவ முன்னரங்கை ஊடுருவிப் பின்னணி நிலைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காவலன் என்ற போராளியின் கால்களில் ஒன்றை அங்கே வெடித்த மிதிவெடி சிதைத்துவிட்டது.

எல்லோருடைய விழிகளிலும் கலவரத்தின் சாயல் தென்பட்டது. அடுத்து நடக்கப் போவது என்ன? நிச்சயமாக அந்தச் சத்தத்தை எதிரி கேட்டிருப்பான். திகைப்பின் கதறல், வேதனையின் புலம்பல், பாயப்பட்டுவிட்ட ஒரு மனித உயிரின் இயல்பான அனுங்கல் எதிரிக்கு எம்வரவைச் சொல்லிவி;டும். அன்றைய முயற்சி அத்துடனேயெ, எம்மாற் சண்டை தொடங்கப்படாமலேயே முடிவடைந்துவிடும்.. அந்தப் பிரதேசத்தைச் சூழ்ந்திருந்த எமது முன்னணி வீரர்கள் பலரை நாம் இழக்க நேரிடும். இலக்குகள் எவையும் வெற்றி கொள்ளப்படாமலேயே எமது திட்டம் எதிரியால் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். அவநம்பிக்கையுடன் எல்லோரது கவனமும் காவலன் பக்கம் திரும்பியது.

வேடிப்பின் அதிர்வுகள் அடங்கியபோது கலைந்த புகையினூடாக அவன் அசைவது தெரிந்தது. துண்டிக்கப்பட்டுச் சிதைந்திருந்த அவனது காலில் இருந்து குருதி கொப்பளித்துப் பாய்ந்தது. சத்தமில்லை. மெல்லக் கையசைத்து அருகிலிருந்த தோழனை அழைத்தான்.

மச்சான் நான் சத்தம் போட மாட்டன். நீங்கள் தொடர்ந்து முன்னேறுங்கோ. பயம் படர்ந்திருந்த தோழர்களின் முகத்தில் வியப்பும் பரவியது. அந்த வார்த்தைகள் எவ்வளவு அற்புதமானவை. அவனது அந்த வார்த்தைகள் தான் அன்றைய எம் வெற்றியைச் சாத்தியமாக்கின என்று சொன்னால் யாரால்தான் அதை மறுத்துவிடமுடியும்?

முற்றும்.

  • 11 months later...
Posted

உண்மைச் சம்பவம்... எத்தனை விதமாக போராளிகளின் தியாகங்கள் செய்தார்கள். செய்கின்றார்கள்.....

இந்தபோரின்போது எனது பள்ளி நண்பன் ஒருவனும் வீரமரணம் அடைந்தான். :unsure:

Posted

நண்றி கரன்மாக் ...!

இந்த சண்டைக்கான வேவில் ஈடு பட்ட அணித்தலைவனான "கப்ரன் கந்தையா"வையும் ( பூநகரி தாக்குதலுக்கு பின்னான வேவு நடவடிக்கையில் பூநகரியில் வீரச்சாவடைந்தார்) நினைவு கூர வேண்டும்... பலாலி தளத்தின் உள் அமைப்புகளை கடலாலும் தரையாலும் வேவு பார்த்து விரல் நுணியில் வைத்திருந்த வீரன்...

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எத்தனை, எத்தனை தியாகங்கள் செய்திருக்கிறார்கள் போராளிகள். ஆனால் சிட்னியில் சில கேடு கெட்ட ஜென்மங்கள் இவர்களின் தியாகங்களை நினைத்துப் பார்ப்பதில்லை.

மாவீரர் நிகழ்வுகளுக்கு செல்வதில்லை. கேட்டால் நேரமில்லை என்கிறார்கள். ஆனால் சிவாஜி படத்துக்கு திரையரங்கில் பார்க்க நேரமிருக்கிறது. இந்தியா சுதந்திர தினத்துக்கு செல்ல நேர மிருக்கிறது. தென்னிந்தியா நடிகர், நடிகைகள் ஆடும் நிகழ்வுகளுக்கு செல்ல நேரமிருக்கிறது. சன் தொலைக்காட்சியில் விழுந்து விழுந்து நாடகங்கள் பார்க்க நேரமிருக்கிறது. இலங்கை அணி சிட்னியில் விலையாடும் போது சிங்களதேசத்தைக்குறிக்கும் ஆடைகள் அணிந்து சிங்கக் கொடி பிடிக்க நேரமிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.