Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒளிப்பதிவுக் கருவியைத் திருடிய ஜனாதிபதியின் ஒளிப்படப்பிடிப்பாளர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24eab127d9476456ad88db9fb4ade7c5.jpg

ஜனாதிபதி மஹிந்தராஜபக்~வுடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ படப்பிடிப்பாளர், டுபாய் அனைத்துலக விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஒளிப்பதிவுக் கருவியைத் திருடிக் கொண்டு சென்ற போது, பாதுகாப்பு அதிகாரிகளிடம் வசமாக சிக்கியுள்ளார். 
 
கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 
 
அண்மையில், தென்னாபிரிக்கா, மற்றும் கென்யாவுக்கான பயணங்களை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்தராஜபக்~ கொழும்பு திரும்பிய போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
டுபாய் விமான நிலையத்தில், ஜனாதிபதி மஹிந்தராஜபக்~ ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, அவரது ஊடகக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒளிப்படப்பிடிப்பாளர் ஒருவர், 2325 டொலர் (3 இலட்சம் ரூபா) பெறுமதியான, கண்காணிப்பு காணொளிப்பதிவு கருவியை சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிறுவனம் ஒன்றில் இருந்து திருடியுள்ளார். 
 
அவர் அதனை தனது பையில் மறைத்துக் கொண்டு வேகமாக வெளியே செல்லமுயன்ற போது, அதனை கண்காணிப்பு காணொளிக் கருவி ஊடாக அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 
 
அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ஜனாதிபதி மஹிந்தராஜபக்~வின் குழுவில் இடம்பெற்றிருந்தவர் என்று விபரம் தெரிய வந்ததை அடுத்தே, குறிப்பிட்ட ஒளிப்படப்பிடிப்பாளரை டுபாய் அதிகாரிகள் எச்சரித்துவிட்டு விடுவித்தனர். 
 
கொழும்பு திரும்பியதும் குறிப்பிட்ட ஒளிப்படப்பிடிப்பாளர் தமது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=717652529622551286

கடந்த ஓகஸ்ட் மாதம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பெலாரஸ் சென்றிருந்த போது, அவருடன் சென்றிருந்த சிறிலங்காவின் ஊடகப் பணிப்பாளர் ஒருவர், அங்குள்ள விடுதியில் இருந்து போர்வை ஒன்றைத் திருடிக் கொண்டு வந்து விட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசன் எவ்வழியோ அவ்வழியே அவரின் பணியாளர்களும் 

 
அல்லது இப்படியும் சொல்லலாம் 
 
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் 

நாட்டில் பஞ்சமும் ஊழலும் தலை விரித்தாடுகிறது.

இந்த கள்ளரிடம் தான் தீர்வு கேட்கிறோம்.

இணக்க அரசியல்வாதிகள் பார்த்து நடந்து கொள்ளுங்கள். வேட்டியை களவாடிவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.