Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களை ஆயுதங்களினால் ஒடுக்க முயன்றவர்கள் தற்போது வேறு வடிவத்தில் செய்கின்றார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை ஆயுதங்களினால் ஒடுக்க முயன்றவர்கள் தற்போது வேறு வடிவத்தில் செய்கின்றார்கள் ஆயுதப் போராட்டம் முடிந்து இந்த நாட்டில் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையிலும்கூட இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகமான நிதி பாதுகாப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு, நகர அபிவிருத்தி, நிதிதிட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி ஆகிய நான்கு அமைச்சுக்களுக்கும் 47 வீதமான நிதியினை ஒதுக்கி, அரசாங்கம் தமது குடும்ப அரசியலுக்கு கிட்டத்தட்ட 50 வீதமான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர். கோவிந்தம்-கருணாகரம் அவர்கள் தெரிவித்துள்ளார். குருக்கள்மடம் கலைவாணி வாசகர் வட்டத்தினால் நேற்று சிறுவர் நூலகத் திறப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேதான் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில் மேலைத்தேய நாட்டுகளில் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளை மக்கள் பத்திரிகைகளின் வாயிலாத்தான் அறிந்து கொள்கின்றார்கள். ஆனால் எமது மக்கள் பத்திரிகைகளை காசு கொடுத்து வாங்கிப் படிப்பதில்லை இந்நிலையில் எமது பிரதேசத்தினைப் பெறுத்த வரையில் பத்திரிகைகளை வாங்க வேண்டுமாக இருந்தால் மிக நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது. இலங்கையிலேயே நமது மட்டக்களப்பு மாவட்டம்தான் வறுமையில் முன்னணியில் இருக்கின்றது. இம்மாவட்ட மக்கள், தினசரி பத்திரிகைகளை வாங்கிப் படிப்பது என்பது மிக மிக குறைவாகவே உள்ளது. ஆனாலும் இவ்வாறு நாளாந்தம் பத்திரிகையினை வாங்கிப் படிப்பதற்கு ஒவ்வொருவரும் நினைத்தால் அது முடியும். இந்த நாட்டிலே நம்வாழ்வில் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. எனவே நாளாந்த பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதன் மூலம் எமது அறிவினை மாத்திரமல்ல குடும்ப சூழலையும் வளர்க்கலாம். நூலகத்தனை நூல்கள் மற்றும் பத்திரிகைகளை சேமித்து வைக்கும் இடமாக மாற்ற வேண்டும். இவ்வாறு சேமிக்கும் நூலகத்தனை எமது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குருக்கள்மடம் கிராமம் கல்வியில் மாத்தரமல்ல, சமயத்திற்கு மாத்திரமல்ல, விளையாட்டுள்ளில் மாத்திரமல்ல, கலை இலக்கிய கலாசாரத்திலும் மாத்திரமல்ல தமிழினத்திற்காக ஒற்றுமையாக இருந்து அரசியலுக்கும் வித்திட்ட கிராமமாகும். இவ்வாறான எத்தனையோ பலகிராமங்கள் இன்றய நிலையில் இருக்கின்றன. ஆனாலும் 65 வருடத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தினால் பின்தள்ளப்பட்ட நிலையில் உள்ளன. இந்தப் போராட்டம் அகிம்சைப் போராட்டமாகவும், ஆயுதப் போராட்டமாகவும் பரிணாமங்கள் எடுத்து. இன்று நாங்கள் எவ்வாறான நிலையில் இருக்கின்றோம் என்பது தமிழ் மக்களாகிய உங்களுக்குத் நன்கு தெரியும். ஆனால் எல்லைப் புறங்களிலுள்ள மக்கள் இன்று பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது யானைகளினால். யானைகள் கடந்த யுத்தகாலத்தில் எமது மக்கள் குடியிருப்புக்களுக்கு வந்து தாக்கவில்லை உயிர்களை அழிக்கவில்லை ஆனால் பெரும்பான்மை இனத்தவர்கள் யானைகளை பயன்படுத்தி பாரிய வேலைகளை செய்து வந்துள்ளார்கள். அந்த பாரிய வேலைகளை செய்வதற்கு தற்போது இயந்திரங்கள் வந்துள்ளன. யானைகளுக்கு உரிய வேலைகள் இல்லாமல் போய்விட்டன. இவ்வாறான யானைகளை லொறிகளிலே ஏற்றிக் கொணர்ந்து நமது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இறக்கிவிட்டுச் செல்கின்றார்கள். கழுத்திலும், கால்களிலும் சங்கிலிகளோடுதான் இவ்வாறு யானைகள் நமது மக்கள் குடியிருப்புக்களை நோக்கி வந்து தாக்குதல்கள் நடாத்துகின்றன. இது ஒருபுறமிருக்க மட்டக்களப்பு வாவியில் கடந்த காலங்களில் முதலைகளில்லை மீனவர்கள் சுதந்திரமாக தமது மீன்ப் பிடித் தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் அண்மையில் பெரும்பான்மையினத் தினைச் சேர்ந்தவர்கள், ஆயுதப்படைகளின் உதவியுடன் லொறிகில் முதலைகளை ஏற்றிக் கொணர்ந்து சேனைக்குடியிருப்பில் அமைந்துள்ள கிட்டங்கி பாலத்தில் வைத்து ஆற்றினுள் முதலைகளை கொட்டிவிட்டுச் சென்றுள்ளதனை நம்மக்கள் கண்ணூடாகக் கண்டுள்ளார்கள். இதனால் மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் தாங்கங்களும் அதிகரித்துள்ளன. மீனவர்கள் சுதந்திரமாக தமது ஜீவனோபாயத்தினை மேற்கொள் முடியாதுள்ளார்கள். தமிழ் மக்களை ஆயுதங்களினால் ஒடுக்க முயன்றவர்கள் தற்போது அதனை வேறு வடிவத்தில் கொண்டு வருகின்றார்கள் ஆனால் அது இயலாத காரியம். என்பதனை அவர்கள் அறியவில்லை. எமது விடுதலைப் போராட்டம் இன்று மௌனீக்கப் பட்டிருந்தலும் எமக்கான நிரந்தரத் தீர்வு இன்னும் கிடைக்க வில்லை. எமக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் ஒற்றுமையாக நாம் அனைவரும் செயற்பட வேண்டும். இதற்கு உதாரணமாகத்தான் அண்மையில் நடைபெற்ற வடமாகாணசபைத் தேர்தல் எடுத்துக் காட்டியிருக்கின்றது. கிழக்கு மாகாண தமிழ் மக்கள் விட்ட தவறினை இன்று எமக்கு வடமாகாணம் எடுத்துக் கூறியிருக்கின்றது. எமது மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையும். மேற்குலக நாடுகளும் மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களும்தான் இன்றய நிலையில் குரல் கொடுக்கின்றார்கள். ஆயுதப் போராட்டம் முடிந்து இந்த நாட்டில் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஆயுதப் போராட்டம் முடிந்து இந்த நாட்டில் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள இந்நிலையிலும்கூட இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகமான நிதி பாதுகாப்புக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பாதுகாப்பு, நகர அபிவிருத்தி, நிதிதிட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி ஆகிய நான்கு அமைச்சுக்களுக்கும் 47 வீதமான நிதியினை ஒதுக்கி , இந்த அரசாங்கம் தமது குடும்ப அரசியலுக்கு கிட்டத்தட்ட 50 வீதமான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நாட்டில் உள்ளுராட்சி அமைச்சராக மத்திய அரசில் இருப்பவர் முஸ்லிம் பிரமுகர் ஒருவர், அந்த அமைச்சுக்கு செயலாளராக இருப்பவர் இன்னுமொரு முஸ்லிம், கிழக்கு மாகாணசபையிலே உள்ளுராட்சி அமைச்சராக இருக்கின்ற முதலமைச்சர் ஒரு முஸ்லிம், அவரது செயலாளரும் ஒரு முஸ்லிம். இந்த நிலையில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஒரு முஸ்லிம் சமூகம் சார்ந்தவரைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றார்கள். கிழக்கில் தமிழ் முஸ்லிம் எல்லைக் கிராமங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் சகோரதர்கள் கபளீகரம் செய்கின்றார்கள். இதன் உச்சக்கட்டம்தான் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்ப படுவதற்கு இந்த முஸ்லிம் அரசியல் வாத்திகள் எதிர்க்கின்றார்கள். இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து இலங்கைத் தமிழ் மக்களாகிய நாம் இன்றும் இரண்டாம் தரப்பிரஜைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்றய நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு எதிரியல்ல ஒன்றுக்கு மேற்பட்ட எதிரிகள் உள்ளனார்கள் இந்த எதிரிகளை எதிர்த்து நின்று வெற்றிபெற தமிழ் மக்கள் யாவரும் ஒன்றுமையுடன் செயற்பட்டு இலங்கை நாட்டில் முதல் பிரஜகளாக திகழ வேண்டும். வடக்கு மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு வட மாகாணசபையினைக் கைப்பற்றியது போல் கிழக்கு மக்களும் எதிர்காலத்தில் ஒற்றுமையுடன் திகழ்ந்து தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதனை நீருபித்து காட்டும் காலம் வெகுதூரமில்லை. தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வுக்கு தமிழ் தேசியக் கூட்டடைப்புடன் மாத்திரம்தான் இந்த அரசு பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காணவேண்டும் என அவர் தெரிவித்தார். http://www.sankathi24.com/news/36832/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.