Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க ஐ.நா நடவடிக்கை எடுக்கும் - பாலித கொஹணே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Palitha_CI.jpg

சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முனைப்புக்களை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை எடுக்கும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஆறாம் கமி;ட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சட்ட விவகாரக் கமிட்டியின் தலைவராக பாலித கொஹணே கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத இல்லாதொழிப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் சர்வதேச பிரகடனமொன்று வரையப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2001 செப்டம்பர் 11 தாக்குதல்களின் போது பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் நிலவி வந்த ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழிகளில் பயங்கரவாதம் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத  இல்லாதொழிப்பு தொடர்பில் உலக நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சில நாடுகள் கோரி வருவதாகவும் இது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு உத்தேச பிரகடனம் தயாரிக்கப்படும் எனவும் டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100793/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் போர் உச்சக்கட்டத்தில் நடந்துகொண்டு இருந்தபோது சிஎன்என்னுக்கு ஒரு செவ்வி வழங்கியது.. அதில் போரின்போது பொதுமக்கள் யாருமே கொல்லப்படவில்லை (zero casualty) என்று பொய் புளுகியது.. கொலைகள் சட்டரீதியில் நிரூபணம் ஆனால் இந்த ஆளின்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வழியுண்டு.. அதுபோல சிங்கப்பூரில் உள்ள பயங்கரவாத புரபசரும் தண்டனைக்கு உரியவர்..

இதில் கோகணம் ஐநா பதவியை வாங்கி கொஞ்சம் பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டுள்ளது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.