Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண மீனவர் கூட்டமைப்பின் செயலரின் மகன் கடத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

131226170322_tamil_amuthan_304x171_tamil

வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் கந்தவனம் சூரியகுமாரனின் 22 வயது மகன் தமிழமுதன் அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது.

கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழமுதன், வழமைபோல, பருத்தித்துறை இன்பருட்டியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் இரவில் தங்குவற்காகச் சென்றபின்னர் காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்திச் சென்ற நான்குபேரில் ஒருவர் தமிழ் பேசியதாகவும், அவரே தன்னுடைய கைத்தொலைபேசியைக் கொடுத்து வீட்டிற்குக் குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்துமாறு கூறியிருந்ததாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் விவரித்தார்.புதன்கிழமை இரவு வழமைபோல சகோதரியின் வீட்டில் படுப்பதற்காக தனது மகன் சென்றதாகவும், மறுநாள் வியாழக்கிழமை ஆறேமுக்கால் மணியளவில் தனது கைத்தொலைபேசிக்குத் தனது மகன் அனுப்பியிருந்த குறுந்தகவல் ஒன்றில் தான் நான்கு பேர் கொண்ட குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் அனுப்பியிருந்ததாகவும் சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

இந்த குறுந்தகவலை ஆதாரமாகக் காட்டி பருத்தித்துறை காவல் நிலையத்தில் தான் முறைப்பாடு செய்திருப்பதாகவும், கடந்த 2009 ஆம் ஆண்டு தனது மற்றுமொரு மகன் காணாமல் போயிருப்பதாகவும் சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

தனது மகன் கடத்தப்படுவதற்கு முதல் நாள், புலனாய்வாளர்கள் தமது ஊரில் வந்து தனது மகனைப் பெயர் குறிப்பிட்டு தெரிவித்து அவர் எங்கு இருக்கின்றார், என்ன செய்கின்றார் என்பது பற்றி விசாரித்துச் சென்றதாக ஊர்வாசிகள் தெரிவித்திருப்பதனால், இந்தக் கடத்தலுக்கும் புலனாய்வாளர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பருத்தித்துறைப் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/12/131226_abductedfishermen.shtml

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சியில் இளைஞன் கடன்தொல்லையால் தலைமறைவாகி இருக்கலாம்!

 

 

 

 வடமராட்சி - இன்பருட்டிப் பகுதியில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞர், கடன் தொல்லையால் தலைமறைவாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக யாழ்.காவல் நிலையப் பெறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இச்சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் யாழ்.காவல் நிலையத்தில் நேற்றுக் காலை வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் இக்கடத்தல் சம்ப்வம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர்.

வடமராட்சி இன்பருட்டிப் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் அதிகாலை 23 வயதான சூ.தமிழமுதன் என்;ற இளைஞர் ஆயுதக் குழுவினால் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட்டுள்ளனரா? கடத்தப்பட்ட இளைஞர் தொடர்பான தகவல் எவையும் கிடைத்துள்ளதா? எனவும் செய்தியாளர்கள் கேட்டனர். இக்கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சமன்;சிகேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.காணமல் போயுள்ள இளைஞன் பல தடவைகள்; தந்தை மற்றும் உறவினரகளை கைத்தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டுள்ளார். ஆயுத முனையில் அவர் கடத்தப்பட்டதாக இருந்திருந்தால் அவர் இவ்வாறு சாதாரணமாக கைத்தொலைபேசி மூலமாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புக்கள் இருந்திருக்காது என சமன்சிகேரா தெரிவித்தார்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த விசாரணைகளில் குறித்த இளைஞருக்கு அவருடைய பிரதேசத்தில் பல கடன் சுமைகள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் கடன் சுமை காரணமாக தலைமறைவாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும் மேற்படிச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. விரைவில் உண்மை தெரியவரும் எனவும் யாழ்.காவல் நிலையப் பெறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்தார்.

 

http://www.sankathi24.com/news/36968/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் சூரியகுமாரனின் மகன் தமிழமுதன் கடத்தப்படவில்லை?
29 டிசம்பர் 2013





பொலிசாரால் மீட்பு:-


Soori_CI.jpg


அவுஸ்ரேலியாவில் தஞ்சம் பெறுவதற்கான நாடகம் என்கின்றார் அஜித் ரோகண:-

கடத்தப்பட்டதாக பொலிஸாரிடம் பொய் கூறி நாடகமாடிய ஒருவர் முல்லைத்தீவு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் கடந்த 26ம் திகதி கடத்தப்பட்டதாக அவரது தந்தை பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் கந்தவனம் சூரியகுமாரனின் 22 வயது மகன் தமிழமுதன் அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் பொலிஸாரிடம் தந்தை முறையிட்டார்.

இந்த முறைப்பாடு குறித்து விசாரணை செய்த பொலிஸார் குறித்த இளைஞரை முல்லைத்தீவு பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருந்து கண்டுபிடித்துள்ளனர் என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பஸ்ஸில் முல்லைத்தீவு சென்றதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெறவென இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் காண்பிக்கவே இவ்வாறு கடத்தப்பட்டதாக நாடகமாடியதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து தொடர்ச்சியாக விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தமிழமுதன் அல்லது அவரது தந்தை கந்தவனம் சூரியகுமாரன் தமது பக்க கருத்தை தந்தால் குளோபல் தமிழ்ச் செய்திகள் அதனை பிரசுரிக்கும்.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101000/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.