Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த நொடியில் என் மனதில் (31/12/13)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நொடியில் என் மனதில் (31/12/13) >>>>

 

1486724_1436839719865422_1810898590_n.jp

இனிய வாழ்த்துகளுக்கு அப்புறம், மன்னிக்க முடியா இரண்டு சமூக குற்றங்களும், புதிய 2014 ம் ஆண்டிற்கான என் இரண்டு எதிர்பார்ப்புகளும்....

ஒன்று, ஜனநாயக வரம்பில் நின்று ஒரு சிறு எதிர்ப்பைகூட காட்டாது, "முழுமையான சரணாகதி வணக்க அரசியல்" செய்து, அதையும் "இணக்க அரசியல்" என நியாயப்படுத்தி, தம் சொந்த வயிற்று பிழைப்புக்காக ஆளுவோரின் இனவாத இழுப்புக்கெல்லாம் இடம் கொடுத்து, இன்னமும் எஞ்சி மிஞ்சி இருக்கும் தமிழ் சமூக மிச்ச சொச்சங்களையும் விலை கூவி பேசி விற்பது;

இரண்டு, புலம் பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் இருந்தபடி வீர வசனம் பேசி, தாயகத்தின் உள்ளூர் தரைமட்ட யதார்த்தம் புரியாமல், அங்கிருந்தபடி தாயக மக்களையும், அரசியல் தலைமைகளையும் நோக்கி கட்டளை இட்டு, இன்னமும் எஞ்சி மிஞ்சி இருக்கும் தமிழ் சமூக மிச்ச சொச்சங்களையும் பேரழிவுக்குள் தள்ளிவிடுவது;

பாருங்கள், இந்த இரண்டு நேரெதிர் கோணங்கி தரப்பினருமே "இன்னமும் எஞ்சி மிஞ்சி இருக்கும் தமிழ் சமூக மிச்ச சொச்சங்களை" தான் குறி வைத்துள்ளார்கள். இது ஒரு விந்தையான ஒற்றுமை. ஆனால், உண்மை. இதில் விவாதத்திற்கு அத்துணை இடம் இல்லை. 

இரண்டு நேரெதிர் கோணங்களான இவைதான் இன்றைய மன்னிக்க முடியா தமிழ் சமூக குற்றங்கள்.

இந்த இரண்டுக்கும் இடையில்தான் நிஜமான நடுவழி பாதை இருக்கின்றது. ஆனால், கேட்பதற்கு இரண்டு கோணங்கி தரப்பினருமே தயார் இல்லை. இதுதான் இன்று தமிழின பயணத்தின் நிஜமான கோர முகம்.

என் எதிர்பார்ப்புகளும் இரண்டு;

ஒன்று (01), நடுவழி பாதைபற்றி கேட்பதற்கு, சிந்திப்பதற்கு, தயாராக இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் மிதக்கும் தமிழர்கள் அல்லது இரண்டு தரப்பினரிடையே மிதப்பவர்கள். நடுவழி நிஜ பாதையில் பயணிக்க தயார் நிலையில் நமது மக்கள் கூட்டத்தில் இந்த கணிசமானோர் தயார். அவர்கள் அனைவரும் தாயகத்திலும், வெளி நாடுகளிலும் ஒன்று சேர வேண்டும். 

இரண்டு (02), அதுபோல் இலங்கையை தாயகமாக கொண்ட தமிழர்கள் அனைவரும் பிரதேச, வரலாற்று மாறுபாடுகளுக்கு அப்பால் சென்று ஒரே இனகுழுமமாக ஒன்று சேர வேண்டும். இதன் அர்த்தம், வடக்கு, கிழக்கு, மலையக, மேற்கு, இந்திய வம்சாவளி என்ற வரலாற்று பின்னணிகளையும், பிறந்த மண் வாசனைகளையும் மறந்து கைவிட்டு விட வேண்டும் என்பது அல்ல. உண்மையில் இந்த பின்னணிகளில் தப்பும் கிடையாது. அவைதான் உலக வழக்கு. 

ஒரு பிரிவின் ஆக்கிரமிப்பில் இன்னொன்று தாழ் பணிவது என்று இல்லாமல், சமத்துவ கோட்பாட்டில், இந்த பன்மை தன்மைகள் உள்வாங்கப்பட்டு "இலங்கையில் தமிழர்கள்" என்ற இன அடையாளத்தை நாம் அனைவரும் ஒருசேர பெற வேண்டும். விஞ்ஞானபூர்வமாக ஒரு "இனமாக" வாழ தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை (ஜனத்தொகை) நமக்கு இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது இதை வலியுறுத்துவதற்கான முன்னணி காரணம்.

மேற்கண்ட இரண்டும் நடைபெறாவிட்டால் இலங்கையில் தமிழினம் மீண்டும் திருப்ப முடியா புள்ளியை (Point of no Return) தொட்டு விடும். வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும், மேற்கிலும் இதுதான் சுவர்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. 

இவைதான் இனிய வாழ்த்துகளுக்கு அப்புறம், புதிய 2014 ம் ஆண்டிற்கான எனது எதிர்பார்ப்புகள்.

 

fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எங்கள் வாக்கு - எங்கள் பலம் என்பது தலைநகர தமிழரின் புத்தாண்டு மந்திரமாக இருக்கட்டும்: மனோ
 
 
'எங்கள் வாக்கு - எங்கள் பலம்" என்பது எங்கள் புத்தாண்டு மந்திரமாகவும், அதிகபட்ச வாக்களிப்பு என்பது எங்கள் புத்தாண்டு இலக்காகவும் இருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
mano3.jpg
 
மனோ கணேசன் விடுத்துள்ள புத்தாண்டு செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
அதில் மேலும் குறிப்பட்டுள்ளதாவது,
 
பிறக்கும் புத்தாண்டு தலைநகர தமிழருக்கு புதிய கதவுககளை திறக்கின்றது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் எங்கள் இனத்தின் அரசியல் பலத்தை உறுதிப்படுத்தி காட்டும் வாய்ப்பு இன்னமும் சில தினங்களில் கலைக்கப்படவிருக்கும் மேல்மாகாணசபைக்கான தேர்தலின் போது எமக்கு கிடைக்கவிருக்கின்றது. 
 
இன்று எங்களுக்கு எஞ்சியுள்ள ஒரே ஆயுதம் வாக்குச்சீட்டு என்பதை நம்மில் ஒவ்வொருவரும் உணர்ந்து, வடமாகாணத்தில் தமிழ் மக்கள் வாக்களித்ததைப் போன்று, மத்திய மாகாணத்தில் தமிழ் மக்கள் வாக்களித்ததை போன்று, நமது ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணிச் சின்னத்துக்கு அணிதிரண்டு வாக்களித்து எங்கள் அரசியல் பலத்தை மேல்மாகாணத்தில் எடுத்துக்காட்ட உறுதி பூணுவோம்.
 
புதிய ஆண்டில் நமது மக்கள் ஏனைய சகோதர இனத்தவர்களுக்கு சமானமாக வாழ்ந்துகாட்ட தயாராக வேண்டும். அதற்கு உரிய அரசியல் அந்தஸ்த்தை நாம் பெற வேண்டும். எனவே தலைநகர மாகாணத்தில் எங்கள் இன வளர்ச்சியின், எழுச்சியின், உயர்ச்சியின் அடையாளமாக திகழும் ஏணியில் ஏறி நிற்பதற்கு கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட தமிழர்கள் தயாராக வேண்டும். பிறக்கும் புத்தாண்டில், ஏணி சின்னத்துக்கு வாக்களிக்க உறுதி பூணுங்கள் என தமிழ் மக்களிடம் நேரடியாக கோரிக்கை விடுக்கும் உரிமையை வரலாறு எனக்கு தந்துள்ளது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நிகழ்காலத்தில் நின்று, வரலாற்றை திரும்பி பார்த்து, எதிர்காலத்தை எதிர்கொண்டு கோருகிறேன்.
 
 

 

இ.தொ.கா. கொழும்பில் அமோக வெற்றி பெறுவது உறுதி- இராதா கிருஷ்ணன்

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமோக வெற்றி பெறுவது உறுதியென ratha-626x380_0.jpgஅண்மையில் இ.தொ.கா.வில் இணைந்து கொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் பெ.இராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

மிகப் பெரிய தொழிற் சங்க அமைப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான் பலருக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தது. ஆனால், அதனை இன்று பலர் மறந்து போயுள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற பலமான அமைப்பினது பிரதிநிதித்துவத்தின் அவசியத்தினை தலைநகர் வாழ் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அதனை கருத்திற் கொண்டே காங்கிரஸ் தலைநகரில் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. இந்த முடிவினை அநேகர் வரவேற்றள்ளனர்.

நான் இ.தொ.கா.வில் இணைந்து கொண்டதையடுத்து பலர் தொலைபேசி மூலமாக தொடர்பினை ஏற்படுத்தி வாழ்த்து தெரிவித்தனர். இன்னும் பலர் தாமாகவே நேரில் வந்து எம்மோடு கை கோர்த்துள்னர். எனவே, எமது வெற்றியின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் இ.தொ.கா.வில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலர் தலைநகரில் கணிசமான சேவையினை வழங்கினர். அதேபோன்று மீண்டும் இ.தொ.கா.வின் ஊடாக எமது பிரதிநிதிகளை பெற்றுக் கொண்டு முன்னோக்கிச் செல்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

 

http://virakesari.lk/?q=node/360065

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.