Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் படையினரின் பின்னணியில் 'ஆவா' குறுப்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

 யாழ்.குடாநாட்டு இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்கின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் செயல் திட்டங்களில்  ஒன்றாக தற்போது ஆவா குறூப் என்ற ரவுடிக் கும்பல் ஒன்று குடாநாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக சங்கதி24 இன் குடாநாட்டுச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களில் இந்த ரவுடிக் கும்பலே ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆவா குறூப் என்று கூறப்படுகின்ற மேற்படி குழுவினர் 10 தொடக்கம் 20 வரையான மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் என்ற அடிப்படையில் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களுடன் வீதிகளில் வலம் வருகின்றனர். வீதிகளில் நிற்கின்ற அப்பாவி இளைஞர்களை கண்மூடித்தனமாக வெட்டிச் சரித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர்.

அண்மையில் உடுவில் மற்றும் வசாவிளான் போன்ற இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இந்தக் குழுவினரே ஈடுபட்டுள்ளதாக எமது சங்கதி24 செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறிலங்கா படைப் புலனாய்வாளர்களுக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாகவும் படைப்புலனாய்வாளர்களே இவர்களைக் களமிறக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. சில வேளைகளில் படைப்புலனாய்வாளர்களும் இந்தக் குழுவினருடன் வலம் வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

 

http://www.sankathi24.com/news/37282/64//d,fullart.aspx

 

 

'இணுவிலை சேர்ந்த 21 வயதுடைய குமரேசரட்ணம் விநோதன் குழுவின் தலைவராக செயற்பட்டார்'

 

 

inuvil_CI.jpg


யாழ்ப்பாணத்தில் பாரிய வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குறூப்பை சேர்ந்த 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.


நேற்றும் நேற்று முன்தினமுமே இவர்கள் 13 பேரும் கோப்பாய்  மற்றும் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி, மானிப்பாய், சுன்னாகம், கோப்பாய், ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டவர்களே இதனுடன் தொடர்புடையவர்களாவர்.  


இது தொடர்பில்  கோப்பாய் பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி  சிறிநிக சஞ்சீவ ஜெயக்கொடி தெரிவித்ததாவது,


தற்போது கைது செய்யப்பட்டவர்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள்  வெளிவந்திருந்தது. எனினும் முறைப்பாடுகள் எவையும் பொலிஸ் நிலையங்களில் கிடைக்கவில்லை.


எனினும் கோண்டாவில் பகுதியில் ஒரு வீட்டுக்கு சென்றவர்கள் கேற்ரையும் உடைத்து வீட்டில் உள்ள யன்னல் கண்ணாடிகளையும்  அடித்து நொருக்கியுள்ளதுடன்  வீட்டில் உள்ளவர்களுக்கும் அடித்துக் காயம் ஏற்படுத்தியதாகவே ஒரு முறைப்பாடு மட்டும் எமக்கு கிடைத்துள்ளது.


இருப்பினும் உரிய முறைப்பாட்டு காரருக்கு தெரியும் யார் செய்தார்கள்  என்று எனினும் அவர்கள் பயம்  காரணமாக இவர்கள் தான் வந்தார்கள் என்று முறைப்பாட்டில் தெரிவித்திருக்கவில்லை.


முறைப்பாடு கிடைத்ததையடுத்து மிகவும் நுணுக்கமான முறையில் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டதனால் தான் பிரதான சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டார்.


அவருடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் போது மற்றைய 12 பேர் தொடர்பிலான தகவல்களும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.


ஆவா என்று கூறப்படுகின்ற இணுவிலை சேர்ந்த குமரேசரட்ணம் விநோதன் வயது 21 என்பவரே முதலாவது சந்தேகநபராவார். இவரே ஆவா குறூப்பின் தலைவர் ஆவார்.

இவர்களிடம் இருந்து 9 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சீற் பகுதிக்கு கீழ் இருந்து  2 கைக்குண்டு 12 வாள், 2 நக்கிள்ஸ் என்பனவும் மீட்பட்டன.   எனினும் இவர்கள் பகல் வேளையில் யாரையாவது வெட்ட செல்வதானால் சேட்டிற்குள் முதுகுப்பகுதியில் தான் வாள்களைக் கொண்டு செல்வார்களாம்.


எனவே இவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் தென்னிந்திய சினாப்பட பாணியிலேயே அமைந்துள்ளது.  இவர்கள் அனைவரும் 17 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இவர்களுடன் இரவு வேளைகளில் பெண் ஒருவரும் செல்வதாக தெரியவந்துள்ளது. அவரது தகவலும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது அவரையும் நாங்கள் மிகவிரைவில் கைது செய்வோம்.


எனினும் ஆவா என்ற குழுத்தலைவனுக்கு கீழ் 3 குழுக்கள் இயங்கி வருவதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.


இதேவேளை, தமது கால்களில் விழுந்து வணங்குமாறு ஒரு நபரை துன்புறுத்தியதாக தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் வீதியில் நிற்கும் போது தலைக்கவசம் கழட்டப்பட வேண்டும்என்றும் சாரம் அவிழ்த்து விடப்பட வேண்டும் என்ற கட்டளையும் பிறப்பித்துள்ளார் எனவும் விசாரணயில் அறியமுடிகின்றது.


மேலும் இவர்களது கைதினை அடுத்து சுன்னாகம், மானிப்பாய், அச்சுவேலி, கோப்பாயில் இருந்து பொதுமக்களுடைய அழைப்புக்கள் இன்று வரை நூற்றுக்கு அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளன.


அவர்கள் அனைவருமே எமக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இவர்களது கைதினையடுத்து மக்கள் சந்தோசம் அடைந்துள்ளனர்.


இதேவேளை 'நான் பிரதிப்பொலிஸ் மா அதிபர் றொகான் டயஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனெனில் இவர்களைப்பிடிப்பதற்கு என்னை ஊக்கப்படுத்தியதுடன் விசேடமாக வாகனங்களையும் பொலிஸாரினையும் மேலதிகமாக வழங்கியிருந்தார்.


மேலும் இவர்கள் தொடர்பில் புலனாய்வு மேற்கொள்ள 4 விசேட குழுக்களையும் வழங்கியிருந்தார். இவர்களைக் கைது செய்வதற்கு 3 குழுக்களாக 25 பொலிஸார் அமர்த்தப்பட்டனர்.


இதேவேளை, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்ற வேளை விசேடமாக பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இருந்தால் பாரிய குற்றங்களை ஒழித்துவிடலாம் என்றார். இதேவேளை, குறித்த குழுக்களிடம் இருந்து மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் உரிமையாளர்கள் என்று கூறப்படும் இருவர் இன்று காலை மட்டும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

உதயன்

 

 photo%284%29.JPG
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்


யாழ்.மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை, கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும்  'ஆவா' என்ற 9 பேர் அடங்கிய குழுவொன்றை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜயக்கொடி தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், 12 வாள்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள்  புகுந்துள்ள மேற்படி 'ஆவா' குழு, அவ்வீட்டிலிருந்தவர்களை வாளால் வெட்டியும், வீட்டு ஜன்னல்களையும் உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சம்பவ தினமே சுன்னாகம் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ்வாறான கொலை, கொள்ளைச் சம்பவங்களை  'ஆவா' எனப்படும் ஒரு குழுவே மேற்கொண்டு வருவதாகவும் அக்குழுவுக்கு இணுவில் பகுதியினைச் சேர்ந்த குமரேசன் வினோதன் (21) (ஆவா வினோத்) என்ற இளைஞனே தலைமை தாங்குவதாகவும் தெரியவந்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.

இந்த தகவலின் பிரகாரம், வட மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில் யாழ்ப்பாணம், மானிப்பாய், அச்சுவேலி, சுன்னாகம், சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 25பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் இணைந்து மேற்படி ஆவா குழுவைத் தேடி நேற்று (06) சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அக்குழுவின் தலைவர் உட்பட 9பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுத உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, யாழ். மாவட்டத்தில் பல கொள்ளை, கொலைகள், கப்பம் கோரல், வீடு புகுந்து ஆட்களை வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரியவந்ததாக பொலிஸ் அதிகாரி கூறினார்.

யாழ். மாவட்டத்தில் இவர்கள் பெருமளவான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த போதிலும் பொதுமக்கள் அச்சம் காரணமாக எந்தவொரு பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்யவில்லை என்று கூறிய பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயக்கொடி, இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறையிடுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், இந்தக் குழுவில் இன்னும் 7 அல்லது 8பேர் கொண்ட சந்தேகநபர்கள் இருக்கலாம் என்றுத் அவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
photo%202%281%29.JPG
photo%204%282%29.JPG
photo%205%282%29.JPG
photo%205%283%29.JPG

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/95926-2014-01-07-06-05-16.html

 

ஆவா' குழு பின்னணியில் இராணுவம்: சிவாஜிலிங்கம்

 

'யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 'ஆவா' குழுவின் பின்னணியில் இராணுவம் செயற்படுகின்றது என தாம் சந்தேகிப்பதாக' தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் இன்று (07) தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த 9பேர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே சிவாஜிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில்  ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பலர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், ஆவா குழுவினருக்கு கைக்குண்டுகள் எவ்வாறு கிடைத்தன என பல கேள்விகள் எழுகின்றன' என்று கூறினார்.

'சாதாரண மக்கள் கைக்குண்டு வைத்திருப்பது என்பது சாத்தியப்பாடானது அல்ல. அந்த வகையில், இந்த பாதாளக் குழுக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது என்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், இந்தக் கைக்குண்டுகள் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னும் எத்தனை குறுப்பு வருகிறதோ ?????

Edited by தமிழரசு

என்னும் எத்தனை குறுப்பு வருகிறதோ ?????

ஆவா குருப் செஞ்சேனை அரசியல் கட்சியாகி இணக்க அரசியல் செய்யும் காலம் வெகு தூரம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழை கலக்கிய "ஆவா" கொள்ளைக் குழுவில் இளம் பெண் ஒருவரும் தலைவியாகவுள்ளாராம்! 

 

Yavah-girl-jaffna-200.jpg

யாழ் மாவட்டத்தை கலங்கடித்த 'ஆவ' எனப்படும் குழுவின் பெண் தலைவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு யாழ்ப்பாணம் பொலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மேற்படி குழுவைச் சேர்ந்த தலைவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கலாக 16பேர் ஆயுதங்களுடன் யாழ் மாவட்ட பொலிஸ் பிரிவு பலவற்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து இப்பெண் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. இரவு வேளைகளில் குறித்த பெண் நடமாடுவதாகவும், கொக்குவில் பிறவுன் வீதியை சேர்ந்த ராஜகுமார் ஜெனிட்டா என்கிற (வயது 23) என்பவரே இவர் என அடையாளம் காட்டப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தேடியதையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100910&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.