Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைபேசி ஊடக குறும்பட போட்டி ஈழ படைப்பாளியின் படமும் போட்டியில் உங்கள் வாக்கை அளித்து வெற்றிக்கு உதவுகள் உறவுகளே .

Featured Replies

பிரான்சில் BNP PARIBAS ஆதரவில் நடைபெற்றுவரும் கைத்தொலைபேசியால் எடுக்கப்படும் ஒரு நிமிட குறும்படப்போட்டியில், இயக்குனர் சதாபிரணவன் இயக்கிய GOD is DEAD சிறந்த படங்களுள் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கெடுப்பின் மூலம் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. எனவே எமது அனைத்துக்கலைஞர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலி ஊடாக உங்கள் வாக்கை பதிவுசெய்வதோடு, உங்கள் நண்பர்களையும் வாக்களிக்கவைக்குமாறு ஈழத்தமிழர் திரைப்படச் சங்கம் கேட்டுக்கொள்கிறது. அதேவேளை எமது சங்க உறுப்பினர்களின் இந்த வெற்றியானது எமது திரைப்படச் சங்கத்தை பெருமை கொள்ள வைக்கிறது. இவர்கள் அனைவருக்கும் ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. http://fr.mobilefilmfestival.com/video/god-is-dead740 GOD is DEAD fr.mobilefilmfestival.com La victime première de toute guerre est le Dieu. Dans une nation conquise, les prisonnières de guerre deviennent Dieu, en acceptant de se donner en sacrifice au satan. """எந்த ஒரு போரிலும் முதலில் கொல்லப்படுவது இறைவனே ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் அடிமைகள் ஆக்கப்படும் மக்கள் சாத்தானுக்கு தங்களை ஒப்புக்கொடுக்கும் இறைவன் ஆகிறார்கள்"" இந்த mobile short film பிடித்திருந்தால் வாக்குகள் சேகரிக்க உதவுகள் 10 times vote pannalaam per DAY TILL 06/02/2014 GOD is DEAD fr.mobilefilmfestival.com La victime première de toute guerre est le Dieu. Dans une nation conquise, les prisonnières de guerre deviennent Dieu, en acceptant de se donner en sacrifice au satan.

GOD is DEAD fr.mobilefilmfestival.com La victime première de toute guerre est le Dieu. Dans une nation conquise, les prisonnières de guerre deviennent Dieu, en acceptant de se donner en sacrifice au satan.

 

 

பதிவிற்கு நன்றி. வாக்களித்துள்ளேன்.

  • தொடங்கியவர்

நன்றி வரவுக்கு விரைவா சென்று வாக்குக்களை அளியுங்கள் . :)

வாக்களிக்கும் முறை.

 

1531990_706447672722935_1311663125_n.jpg

 

(facebook)

  • 2 weeks later...

இன்னும் சில நாட்களே உள்ளன. தினமும் 10 வாக்குகள் அளித்து இக்குறும்படத்தை வெற்றிபெற செய்யுங்கள்.

  • தொடங்கியவர்

'God is Dead'
குறும்படத்திற்கான வாக்குப்பதிவு இன்று முடிவுக்கு வந்துள்ளது.
"வாக்குப்பதிவு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்"

 

32634 VUES
27237 VOTES
  

 

1662337_10200286878533437_626960194_n.jp

Edited by அஞ்சரன்

எந்த குறும்படம் வெற்றி பெறுகிறது என பின்னர் பதிவிடுங்கள்.

 

நான் இந்த குறும்படம் பற்றிய செய்தி பார்த்ததிலிருந்து தினமும் 10 வாக்குகள் படி போட்டு வந்தேன்.

  • தொடங்கியவர்
 ஃபிரான்ஸில் நடைபெற்ற மொபைல் குறும்பட போட்டி முடிவுகள் - இன்று   

ஃபிரான்ஸில் நடைபெற்ற மொபைல்குறும்பட போட்டியின் முடிவுகள் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிவரை நடக்க இருக்கும் விஷேட நிகழ்வில் அறிவிக்கப்பட உள்ளது. 

போட்டி முடிவுகளை தெரிந்துகொள்ள உங்கள் யாழுடன்  இணைந்திருங்கள் -
1606939_220126688191440_1389628555_n.jpg

 

  • தொடங்கியவர்

Congratulations to சதா பிரணவன் and to the entire team ofஅவதாரம் மூவி for winning the Public Prize (3,000€) for the short movie 'God is Dead'

 

ஈழ தமிழன்  கைபேசி குறும்படம் முதல் பரிசினை வென்று உள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறிய தருகிறேம் .

இது ஒரு புதிய தொடக்கம் வாழ்த்துக்கள் அனைவருக்கும் ...வாக்குகள் அளித்த உறவுகளுக்கு நன்றிகள் .

1901740_10153821684015092_286214841_n.jp

  • தொடங்கியவர்

அவதாரம் குழுவினருக்கு வாழ்த்துக்கள். God Is Dead படத்துக்கு மக்கள் விருது கிடைத்துள்ளது. பரிசுத்தொகை 3000 யூரோக்கள் -   

மக்களின் தீர்ப்பின் முன்னால் நடுவர்களின் தீர்ப்பு சாதாரணமானதே --

1016263_398181450327029_404692488_n.jpg

 

God Is Dead படத்துக்கு “மக்கள் விருப்ப விருது” வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகிறோம்.

சதாவிற்கு வாழ்த்துக்கள்.

உங்கள் ஆதரவிற்கும், பதிவிற்கும் நன்றி அஞ்சரன்,துளசி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 

  • தொடங்கியவர்

ஏன் உங்களது படைப்புக்கள் ஒரே மாதிரியான கருத்துக்களை கொண்டிருகின்றன ?

(இரண்டு படைப்புக்கள் "மெர்சி ல பிரான்ஸ்,கோட் ஸ் டெத் )

நான் ஒரு அகதி

ஸ்ரீலங்காவின் போர் சுழல் என்னை இந்த பிரான்ஸ் நாட்டில் அகதி தஞ்சம் கோர வைத்தது

எனது மக்களின் துயரங்களையும் எனது மண்ணின் பிரிவின் வேதனைகளையும் 

பலதரப்பட்ட நாட்டவர்கள் , கலஞர்கள் சந்திக்கும் இடங்களில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கமும் இவ் வாறான முயற்சிகள் மூலம் எமது மக்களின் 

பிரச்சனைகளை உலகறிய செய்வதே காரணம் ஆகும் .

---சதாபிரணவன்----

 
1557446_721337797900589_864840291_n.jpg
 

 

Edited by அஞ்சரன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..!

Spoiler
கள்ள வோட்டுகள் போட்டவர்களுக்கும்.. :wub:

வாழ்த்துக்கள். :) வாக்களித்த அனைவருக்கும் நன்றி. :)

 

வாழ்த்துக்கள்..!

Spoiler
கள்ள வோட்டுகள் போட்டவர்களுக்கும்.. :wub:

 

நான் கள்ள வோட் போடவில்லை. ஒரு நாளுக்கு 10 வாக்குகள் படி போட முடியும் என்பது ஏற்கனவே உள்ள ஒன்று. அதன்படியே போட்டேன்.

 

கள்ள வாக்குகள் போடுவதென்றால் வெவ்வேறு முகநூலிலிருந்து போட்டிருக்க வேண்டும். அவ்வாறு யாரும் போட்டிருந்தால் அவர்களுக்கும் நன்றி. :rolleyes:

Edited by துளசி

பிரெஞ்சு திரைவாயிலில் வெற்றியீட்டிய ஈழத்துயர் சுமந்த குறும்படம் : சுதந்திரத்திற்காக போராடும் இனத்தில் கலையும் ஒர் ஆயுதமே !

ஈழவிடுதலையின் வெந்தணலை திரைமொழியின் ஊடாக பதிவு செய்த God Is Dead எனும் ஈழத்தவர் கைபேசிக் குறும்படமொன்று, பிரெஞ்சு சினிமாவின் வாயிலில் எட்டிவென்றுள்ளது.

பிரெஞ்சு சினிமா என்பது உலக சினிமாவின் வழித்தடத்தில் தனித்துவமாக விளங்கிவரும் நிலையில், பிரான்சின் பிரசித்தி Mobile Film Festival பெற்ற கைபேசி குறும்படங்களுக்கான போட்டியிலேயே இப்பதிவு வெற்றியீட்டியுள்ளது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட கைபேசிக் குறும்படங்கள் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் அதிகத்தடவை இணையப் பார்வையாளர்களால் (27,000 தடவை) பார்க்கப்பட்ட படம் என்ற தகுதி நிலையில் படம் வெற்றியீட்டியுள்ளது.

அவதாரம் நிறுவனம் தயாரித்திருந்த இக்குறும்படமானது சங்கர் தேவா அவர்களின் கதையினை சதாபிரணவன் அவர்கள் இயக்கியிருக்க டெசுபன் அவர்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

400க்கும் பிரெஞ்சு நட்சத்திர பிரபலங்களுக்கு மத்தியில் இவ்வெற்றிக்கான பட்டயத்தினைப் பெற்றிருந்த இயக்குனர் சதா பிரணவன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எனது மக்களின் துயரங்களையும், எனது மண்ணின் பிரிவின் வேதனைகளையும் வேற்றினக் கலைஞர்கள் சந்திக்கும் இடங்களில் வெளிக்கொண்டு வருவதற்கு இது வாய்ப்பாக அமைவதோடு இவ்வாறான முயற்சிகள் மூலம் எமது இனப்பிரச்சனைகளை உலகறிய செய்யமுடிகின்றது எனத் தெரிவித்தார்.

சுதந்திரத்திற்காக போராடும் இனத்தில் கலையும் ஒர் ஆயுதமே என்பதற்கு மீண்டும் ஒர்சான்றாக இக்குறும்படத்தின் வெற்றிஅமைந்துள்ளதென, நாடுகடந்த தமிழிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரான்சினை தளமாக கொண்டு இயங்குகின்ற ஈழத்தமிழர் திரைப்படச் சங்கமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

1932193_10202566736905373_977249319_n.jp

 

1654346_10202566736985375_1382527349_n.j

 

1920334_10202566736865372_1599722312_n.j

 

(facebook)

சதா கலையுலகில் மாயா போன்று பெரு வளர்ச்சி பெற்று சின்ட்லர்ஸ் லிஸ்ட் போன்று எம்மை பற்றி ஒரு ஃகொலிவூட் படம் எடுக்கவேண்டும்.

இவருக்குள் வெளிநாட்டவருக்கு எம் அவலங்களை கொண்டு செல்லும் கெட்டித்தனம் இருக்கிறது.

வளர்ந்து சாதிப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.