Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பலமான உறவு உள்ளது – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்டைநாடான சிறிலங்காவுடன் பலமானதும், பரஸ்பரம் நன்மை அளிக்கக் கூடியதுமான உறவைத் தொடர்வதே, இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை என்று இந்தியத் தூதுவர் ஜஸ்வந்த் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நேற்று நடந்த 65வது இந்திய குடியரசு தின நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவின் அமைதி, அபிவிருத்தி, நல்லிணக்கம், வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவுக்கு முக்கியமான பொறுப்புகள் உள்ளன.

எமது இருதரப்பு உறவுகள், கலாசார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, மத ரீதியாக, மொழி ரீதியாக வலுவாக கட்டப்பட்டுள்ளன.

இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டில் 4 பில்லியன் டொலரை எட்டியுள்ளது.

சிறிலங்காவின் மின்சாரத் தேவையை ஈடுசெய்ய சம்பூர் அனல் மின் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இருதரப்பு மீனவர்களின் எல்லை தாண்டும் பிரச்சினையை இருநாடுகளும், மனிதாபிமான நோக்கம் கருதி உணர்வுபூர்வமாக கையாள வேண்டும்.

ஆயுதப்போரின் முடிவு சிறிலங்காவில் உள்ள எல்லா மக்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணசபை உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கு கடந்த செப்ரெம்பரில் தேர்தலை நடத்தியதை இந்தியா வரவேற்கிறது.

இலங்கையில் அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு ஒன்றின் மூலம் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஒத்துழைப்பு அணுகுமுறையின் மூலமே உண்மையான நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வையும் ஏற்படுத்த முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர், இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, குடியரசு தின நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, கண்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகங்களிலும் நேற்று இந்தியாவின் குடியரசுதின நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

http://www.puthinappalakai.com/view.php?20140127109851

நீங்கள் மாட்டினது கணது சாம்பூரிலும் மட்ட வேண்டிக்கிடகு. 

 

சீனாவின் கை குறுகுறுத்த programmers நுரை சோலையை திருத்த சொல்லிக்கேட்க, பாதுகாப்பு அமைச்சின் மத்திய ஊடக தொடர்பாடல்  கணனியை உடைத்தார்கள். மேலும் திருத்த என்ற போர்வையில் றோவின் பொறியியலார் பார்த்தாலும் நுரைச்சோலை 19ம் நூற்றாணௌ இயந்திரங்கள்தானே என்று இறுமாப்புடன் ந்டந்தார்கள்.  இதனால் இலங்கையின் பக்கமாக அடித்த சோழகம் இப்போது இந்தியாவின் பக்கமாக வாடையாக மாறி அடிக்கிறது. இந்தியாவுக்கு சீனா இலங்கையில் வந்தாலும் அமெரிக்காவை தடுக்க வேண்டும் என்ற நிலை. 

 

உங்களுக்கு இடையில் ஒற்றுமை வந்தால் சீனா ஐ.நா.வில் கொஞ்சம் இழக்கிக்கொடுக்கலாம். நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.