Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்­தியா தமிழ் மக்­களின் நண்­ப­னல்ல எதிரி என்­பதே உண்­மை­: - சம்­பூர் காணிபறிப்பைப்பற்றி விளாசுகிறார் அனுரகுமார திஸாநாயக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Anura_Disa_150.jpg

இந்­தியா தமிழ் மக்­களின் நண்பன் அல்ல, எதிரி என்­பதை சம்­பூ­ரி­லி­ருந்து மக்­களை வெளி­யேற்றி அக்­கா­ணியை அப­க­ரித்ததன் மூலம் நிரூ­பித்­துள்­ளது என ஜே.வி.பி. யின் அர­சியல் சபை உறுப்­பி­னரும் ஜன­நா­யக தேசியக் கூட்­டணி எம்.பி.யுமான அனுர குமார திசா­நா­யக்க தெரி­வித்தார். ஷோகத்தைக் காட்டி சம்­பூரை பறித்­தது போன்று ஐ.நா. மாநாட்டை காட்டி இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை முழு­மை­யாக விழுங்கி “ஏப்பம்” விடும் “சீபா” உடன்­ப­டிக்­கையை செய்து கொள்­ளப்­போ­கின்­றது என்றும் அவர் தெரி­வித்தார்.

  

பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி.யின் அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றும்­போதே அநுர திஸா­நா­யக்க எம்.பி. இதனைத் தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்:

இலங்­கையின் வர­லாற்றில் தீர்க்­க­மான சந்­தர்ப்பங்­களில் இந்­தியா எமக்கு எதி­ரா­கவே நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. அதன் நோக்கம் எமது நாட்டை அர­சியல் பொரு­ளா­தார ரீதியில் ஆக்­கி­ர­மிப்புச் செய்­வ­தாகும். அனைத்து விதத்­திலும் இங்கு இது மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றது. யாழ்ப்­பா­ணத்­திற்­கான புகை­யி­ரதப் பாதை, மன்­னா­ருக்­காக ரயில் பாதை, அங்கு எண்ணெய் ஆய்வு, இலங்­கையின் தொலை­பே­சித்­துறை, கற்­பிட்­டியில் தீவுகள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

கிழக்கில் ஹோட்­டல்கள் அமைக்கும் திட்­டங்­க­ளென அனைத்துத் துறை­க­ளையும் ஆக்­கி­ர­மித்­து­விட்­டது. ஷோகம் மாநாட்டை காட்டி இலங்கை பாரி­ய­ளவில் மின் சக்­தியை பெறக்­கூ­டிய சம்பூர் அனல் மின் உற்­பத்தி நிலையம் அமைப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கை­யையும் செய்­து­கொண்­டது. இன்று ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாட்டைக் காட்டி இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை முழு­மை­யாக விழுங்கி தனது ஆதிக்­கத்தின் கீழ் கொண்டு வரு­வ­தற்­கான “சீபா” பரந்­து­பட்ட இந்­தியா- இலங்­கைக்கு இடை­யி­லான பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கையை செய்து கொள்­ளப்­போ­கி­றது.

இது கைச்­சாத்­தி­டப்­பட்டால் எமது பொரு­ளா­தாரம் இந்­திய மய­மா­கி­விடும் இன்றும் மோட்டார் சைக்கிள், பஸ்கள், உடைகள் மோட்டார் வாக­னங்கள் என எமது நாட்டை இந்­தியா ஆக்­கி­ர­மித்­துள்­ளது. இந்­தி­யாவில் மக்கள் வாழ்­வுக்கு வீடில்­லாமல் அன்­றாடக் கட­மை­களை நிறை­வேற்­ற­மு­டி­யாமல் மல­சல கூட வச­திகள் இல்­லாமல் பல கோடி மக்கள் வாழ்­கின்­றனர். ஆனால், வடக்கில் தமிழ் மக்­க­ளுக்கு எனக்­கூறிக் கொண்டு 50,000வீடு­க­ளையும் மல­சல கூடங்­க­ளையும் அமைக்­கின்­றது.

இது தமிழ் மக்கள் மீதுள்ள பாசத்தால் அமைக்­கப்­ப­ட­வில்லை. இங்கு அர­சியல், பொரு­ளா­தார ரீதியில் ஆக்­கி­ர­மிப்­ப­தற்­கா­கவே இதனைச் செய்­கின்­றனர்.தமிழ் மக்கள் இந்­தியா தமிழ் மக்­களின் நண்­ப­னல்ல எதிரி என்­பதே உண்­மை­யாகும். அப்­படி தமிழ் மக்கள் மீது அக்­க­றை­யி­ருந்­தி­ருக்­கு­மானால் சம்­பூ­ரி­லி­ருந்து தமிழ் மக்­களின் அக்­கா­ணி­களை பறித்­தி­ருக்­குமா? இதனை தமிழ் மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

மனித உரிமை

யுத்தம் முடிந்து 4 வரு­டங்கள் கழிந்து விட்ட நிலையில் அர­சாங்கம் தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்­க­வில்லை. அம் மக்­களின் மனித உரி­மை­களை பாது­காக்­க­வில்லை. மாறாக அம்­மக்­களை ஒரம் கட்டி அடக்கு முறைக்குள் வைத்­துள்­ளது. அம்­மக்­களின் நம்­பிக்­கையை பெறு­வ­தற்கு தவ­றி­விட்­டது. இதனால் அம்­மக்கள் தமிழ் இன­வாதச் சக்­தி­க­ளிடம் சிக்­கி­யுள்­ளனர். மீண்டும் பிரி­வி­னை­வாத எண்­ணங்­க­ளுக்கு அம்­மக்­களை அர­சாங்கம் தள்­ளி­யுள்­ளது.

அமெ­ரிக்கா

அமெ­ரிக்கா உட்­பட மேற்­கு­லக நாடுகள் தமது நோக்­கங்­களை அடை­வ­தற்கு பல்­வேறு நாடு­களின் பிரச்­சி­னை­களில் பலாத்­கா­ர­மாக தலை­யி­டு­கின்­றனர். இதனை நாம் எதிர்க்கின்றோம் அதேவேளை எமது நாட்டுக்குள் அமெரிக்காவின் தலையீட்டுக்கான கதவை ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கமே திறந்து வைத்துள்ளது.

எனவே, அமெரிக்காவிற்கு எதிராகவும் அதேவேளை இவ் அரசாங்கத்திற்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமா னதாகுமென்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=102610&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பல உண்மைகளைப் பேசியுள்ளார். ஆனால் சிங்களச் சனத்துக்கு விளங்குமா? :D

பல உண்மைகளைப் பேசியுள்ளார். ஆனால் சிங்களச் சனத்துக்கு விளங்குமா? :D

அவங்களுக்கு என்ன விளங்கியது விளங்கியதெல்லாம் பாணும் பருப்புன்தான்.    

சீனாவின் உறவுக் கதை முடிந்துவிட்டது போலிருக்கு. முட்டாள்த்தனமாக சீனா கணனிகளை முடக்கி, கடன்களுக்கெல்லாம் அதிக செலவான இன்ஸ்சூரன் செய்வித்துவிட்டு சில காரணங்களுக்காக நுரை சோலையை திருத்த மறுக்கிறது. சம்பிக்கவை சாட்டிய பவித்திரா இப்போது சீனாவை சாட்டுகிறா. இதில் ஒன்றை ஒன்று சீண்டி வளர்ந்துவிடும் அபாயம் இருக்கு.

Edited by மல்லையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.