Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அதிகாரிகளால் உயிருக்கு அச்சறுத்தல்: அனந்தி சசிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிகாரிகளால் உயிருக்கு அச்சறுத்தல்: அனந்தி சசிதரன்
 
 

யாழ்ப்பாணம்: தமது உயிருக்கோ, பாதுகாப்புக்கோ உத்தரவாதம் இல்லை என்பதால் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று இலங்கை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

 

ananthi%20Elilan%201.jpg

கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இலங்கை அரசின் பொறுப்புமிக்க அதிகாரி ஒருவர், தன்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ள அனந்தி சசிதரன், தமது உயிருக்கோ பாதுகாப்புக்கோ உத்தரவாதம் இல்லை என்றும் கூறியுள்ளார். 

இந்நிலையில் தாம் எவ்வாறு அமைதியான மனோநிலையில் ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்பது சாத்தியமாகும் என்றும் அனந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஜெனீவா பிரயாணம்! - இன்னும் முடிவில்லையென்கிறார் அனந்தி!!

 

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தாம் பங்கேற்கபது தொடர்பினில் எந்தவொரு முடிவினையும் இது வரை தான் எடுத்திருக்கவில்லையென வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எமது இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.தான் ஜெனீவா செல்லப்போவதில்லையென கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை பற்றி கேள்வி எழுப்பிய வேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தாம் பங்கேற்கபது தொடர்பினில் எந்தவொரு முடிவினையும் இது வரை தான் எடுத்திருக்கவில்லையென்றே தெரிவித்ததாகவும் ஆனால் வழமை போன்றே அவ்வூடகம் திரிபு படுத்தி செய்திகளை வெளியிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135734

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.