Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிஷா பிஸ்வாலை சந்திக்க மறுத்த மகிந்த – தோல்வியில் முடிந்த அமெரிக்கா தூதரகத்தின் முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR-speech12.jpg

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலை சந்திக்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நிஷா பிஸ்வால், சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கு, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. 

அமெரிக்கத் தூதரகம் சந்திப்புக்கான அனுமதியைப் பெறுவதற்கு திரும்பத் திரும்ப பலமுறை முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது தோல்வியில் முடிந்தது. 

நிஷா பிஸ்வாலை சிறிலங்கா அதிபர் சந்திக்காமைக்கு, கடந்தவாரம் அவர் இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்ததே காரணம் என்று, அதிபர் செயலக வட்டாரங்கள் கூறின. 

எனினும், கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள், திட்டமிட்டே இந்தச் சந்திப்புத் தவிர்க்கப்பட்டதாக நம்புகின்றன. 

பிஸ்வால் மூலம் அமெரிக்க அரசாங்கம் தம்மிடம் நேரடியாக கடுமையான செய்தி ஒன்றை பரிமாறிக் கொள்வதை தவிர்க்கவே சிறிலங்கா அதிபர், அவரைச் சந்திக்காமல் விட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அமெரிக்காவின் இறுக்கமான நிலைப்பாட்டை பிஸ்வால் கொழும்பில் தமது சந்திப்புகளின் போது வெளிப்படுத்தியிருந்தார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140206109915

எதோ என்னவோ, கெதியில ஒரு தீர்ப்பை வைத்து வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் சிறி லங்கன் ஜெனோசைட் சூத்திரதாரிகளை அமுக்கி நாடுகடத்தவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.