Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருப்பதியில் சிராந்தி மட்டும் வழிபாடு – மகிந்த ராஜபக்ச செல்லாதது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-upset.jpg

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் துணைவியான சிராந்தி ராஜபக்ச, நேற்றும் இன்றும் திருப்பதியில் வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில், தரிசனம் செய்வதற்காக சிராந்தி ராஜபக்ச நேற்று மாலை 4 மணிக்கு திருமலைக்கு சென்றிருந்தார். 

திருமலையில் ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் மாலை 5 மணியளவில்,திருமலையில் உள்ள ஆந்திர மாநில கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை மையமான லேப்பாக்சிக்கு சென்று இந்திய புடவைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினார். 

இதனால் அங்கு பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 

சிராந்தி ராஜபக்ச, பொருட்களைக் கொள்வனவு செய்து வெளியேறும் வரை, கடைக்குள் வேறு எவரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

siranthi-trupati.jpg

அதேவேளை, சிராந்தி ராஜபக்ச தங்கியுள்ள விருந்தினர் மாளிகைக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை திருமலையில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் சிராந்தி ராஜபக்ச தரிசனம் செய்த பின்னர், திருப்பதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். 

சிராந்தியுடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் என் 33 பேர் திருப்பதி வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆண்டு இதே தினத்தில், (பெப்ரவரி 9) சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், சிராந்தி ராஜபக்சவுடன் இணைந்து திருப்பதியில் தரிசனம் செய்திருந்தார். 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக, அவர் திருப்பதிக்கு சென்றிருந்தார் 

அப்போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருப்பதியிலும், ரேனிகுண்டா விமான நிலையம் செல்லும் வழியிலும், தமிழ்நாட்டிலும் பெருமளவிலான எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றன. 

இந்த ஆண்டும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள சூழலில், அதே நாளன்று சிராந்த ராஜபக்ச மட்டும் திருப்பதி சென்றுள்ளார். 

கடந்த ஆண்டைப் போன்று எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றால், அது தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தும் என்பதாலும், அது ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாட்டை இறுக்கமடையச் செய்யலாம் என்பதாலும், சிறிலங்கா அதிபர் தனது திருப்பதி பயணத்திட்டத்தை கைவிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

 

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140209109929

சக்கரவர்த்திக்கும் போய் லட்டு தின்ன ஆசை தான் ஆனால் தமிழ் ஆதரவு இயக்கங்களுக்கு பயந்து பம்மிவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.