Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பணப்­பு­ழக்­கம் அதி­க­ரித்­த­மையால் பண்­பாட்டு முறைகள் ஆட்டம் கண்­டுள்­ளன: - முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அர­சியல் பிரச்­சி­னை­களால் எமது மக்கள் பெரு­வா­ரி­யாக பிற­நா­டு­களில் தஞ்சம் புகுந்­துள்­ளனர். இதனால் இங்கு வசிக்­கின்­ற­வர்­க­ளிடம் திடீ­ரெனப் பணப்­பு­ழக்கம் அதி­க­ரித்­துள்­ளது. எமது மக்­க­ளிடம் புதிய கலா­சாரம் புகுந்­துள்­ளது. இதனால் எமது மக்­க­ளி­டையே இருந்து வந்த கடின உழைப்பு முறையும் சிக்­கன மற்றும் பண்­பாட்டு முறை­களும் ஆட்டம் கண்­டுள்­ளன என வடக்கு மாகாண சபையின் முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

 

தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தி­லுள்ள வரணி மத்­திய கல்­லூ­ரியின் அறு­ப­தா­வது ஆண்டு விழா பூர்த்தி நிகழ்வும் பரி­ச­ளிப்பு விழாவும் இக் கல்­லூரி மண்­ட­பத்தில் நேற்­றுக்­காலை 9 மணிக்கு நடை­பெற்­ற­பொ­ழுது நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு உரை­யாற்­று­கையில்,

அண்மைக் காலங்­களில் நீங்கள் பல சிர­மங்­களை எதிர்­நோக்கி வந்து தற்­போது ஓர­ளவு அமை­தி­யான சூழ்­நி­லையை எதிர்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. போர் அனர்த்­தங்கள், இடம்­பெ­யர்­வுகள் போன்­றன உங்­களைப் பல சிர­மங்­க­ளுக்கு முகம் கொடுக்­க­வைத்­தன. எனினும் உங்கள் கல்­லூரி முன்­னேறிச் செல்லும் அந்த உத்­வே­கத்தை இவற்றால் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை என்று கூறும் அதே நேரத்தில் முன்­கு­றிப்­பிட்ட நிகழ்­வு­களும், சூழலும் அத்­துடன் அவற்­றிற்கு முன்னர் இங்கு நடந்­தே­றிய சம்­ப­வங்­களும் உங்­க­ளி­டையே சில பல பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன என்­பதை நீங்கள் மறந்து விடக்­கூ­டாது.

வறுமை கூட எமக்கு வலி­தான மனப்­பாங்­கையும் வெற்­றி­யீட்ட வேண்டும் என்ற வைராக்­கி­யத்­தையும் தர­வல்­லன. எனது பிள்ளைப் பரா­யத்தில் பலர் மலே­ஷியா சென்று வந்­ததை நான­றிவேன். ஆனால் இரண்டாம் உலக மகா­யுத்தம் அவர்­களைப் பல விதங்­களில் பாதிப்­ப­டைய வைத்­தது. சிலர் மலே­ஷி­யாவில் தங்­கி­விட்­டார்கள். பலர் போரினால் பாதிக்­கப்­பட்டு எமது நாட்­டிற்குத் திரும்­பி­னார்கள். இதனால் பொரு­ளா­தார ரீதி­யாக மிகப்­பெ­ரிய மாற்­ற­மெ­துவும் எமது வட­மா­காண மக்­க­ளுக்கு ஏற்­ப­ட­வில்லை.

ஆனால் அண்­மைக்­கால அர­சியல் பிரச்­சி­னைகள் எமது மக்­க­ளி­டையே ஒரு புதிய கலா­சா­ரத்­தையே புகுத்­தி­யுள்­ளது. எம் மக்கள் பெரு­வா­ரி­யாகப் பிற நாடு­களில் தஞ்சம் புகுந்­தார்கள். ஆனால் அவர்­களின் உற­வி­னர்கள் பலர் இங்கு தொடர்ந்து தங்­கி­யி­ருந்­தார்கள். தங்­கி­யி­ருந்த அவர்­க­ளுக்கு வெளி­நாட்டுப் பணம் படிப்­ப­டி­யாக வரத் தொடங்­கி­யது. நான் இங்கு மாவட்ட நீதி­ப­தி­யாக 1980இலி­ருந்து 1981 முடிவு வரையில் இருந்த போதே இந்தப் புதிய கலா­சாரம் நடை­மு­றைக்கு வந்­தது.

இந்தத் திடீ­ரென ஏற்­பட்ட புதிய பணப்­பு­ழக்கம், எமது மக்­க­ளி­டையே இருந்து வந்த கடின உழைப்பு முறை, சிக்­கன முறை, பண்­பாட்டு முறை­க­ளை­யெல்லாம் ஆட்டம் காண வைத்­தது. இது காலக்­கி­ர­மத்தில் கல்­வி­யிலும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. முன்னர் எல்லாம் படித்­தா­லேயே முன்­னேற முடியும், படித்தால் அர­சாங்க உத்­தி­யோகம் பெற முடியும். அதனால் எம் மாணவ மாண­வியர் படிக்க வேண்டும். முன்­னேற வேண்டும் என்ற ஒரு வித உத்­வே­கத்­துடன், அவா­வுடன், வெறி­யுடன் படித்­தார்கள்.

இந் நிலையில் வெளி­நாட்டில் இருந்து வந்த அந்­நியச் செலா­வணி அதை­யெல்லாம் மழுங்­க­டைய வைத்­தது எந்தச் சிறிய வேலை பார்க்கும் ஒரு­வ­ரது உற­வி­னரின் அந்­நியச் செலா­வணிக் கொடை கூட இங்கு வந்­ததும் பல மடங்­காக மாறி விடு­கின்­றது. அதைக் கொண்டு செலவு செய்­வதால் இங்­குள்­ள­வர்­க­ளுக்குக் கல்­வியில் சிறக்க வேண்டும் என்ற எண்ணம் மறைந்து எப்­ப­டி­யா­வது வெளி­நாட்­டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்­ணமே மேலோங்கத் தொடங்­கி­யது.

படித்துப் பணம் உழைக்க வேண்டும், படித்துப் பல்­தொ­ழில்­க­ளிலும் ஈடு­பட வேண்டும், அர­சாங்க உத்­தி­யோ­கங்கள் எமக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்­ணங்கள் எல்லாம் மலை­யேறத் தொடங்­கி­விட்­டன. அது­மட்­டு­மல்ல வாழ்க்­கைத்­தரம் மாற்­ற­ம­டைந்­தது. எல்லோர் கைக­ளிலும் கைய­டக்கத் தொலை­பே­சிகள் புழக்­கத்­திற்கு வந்­தன. சைக்­கிள்கள் போய் மோட்டார் சைக்­கிள்­களும், மோட்டார் வண்­டி­களும் உள்­நாட்டில் அவற்றின் இடங்­களை நிரப்­பின. வீடு­களில் கண­னிகள், தொலைக்­காட்சிப் பெட்­டிகள், புதிய புதிய சுவிஸ் மணிக்­கூ­டுகள் என்று பாவனைப் பொருட்கள் அதி­க­ரிக்கத் தொடங்­கின. தமது தகு­திக்கு அதி­க­மாகச் சிந்­திக்கத் தொடங்கி பொரு­ளா­தாரத் தகு­தியை பல ஊதாரிச் செல­வு­க­ளுக்­காகத் தவணை அடிப்­ப­டையில் குளிர்ப்­பெட்­டிகள், தையல் மெஷின்கள், மோட்டார் சைக்­கிள்கள், போன்ற பல­தையும் வாங்கத் தலைப்­பட்­டனர். பணம் வரு­வது சற்றுத் தளர்ந்தால் தவணைப் பணம் கட்ட முடி­யாமல் போய்ப் பல பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­னார்கள் எம்மில் உள்­ளனர்.

இவை­யெல்லாம் கல்வி வளர்ச்­சிக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. வெளி­நா­டு­களில் எந்­த­ள­வுக்குத் தொலைக்­காட்சி, கணனி என்­பன அறிவு வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக இருந்­ததோ அந்த அள­வுக்கு அவை எம்­ம­வரின் கல்வி வளர்ச்­சிக்குத் தடை­யாக அமைந்­தன. படங்கள் பார்ப்­பது அதுவும் பாலியல், நகைச்­சுவை, வன்­முறை போன்ற கருக்­களைக் கொண்­ட­வற்றை விரும்பிப் பார்ப்­பது, கைய­டக்கத் தொலை­பே­சி­களில் காதல் பேச்சுப் பரி­மாற்­றங்­களில் ஈடு­ப­டு­வது என்று இளைஞர், யுவ­திகள் மனங்கள் கல்­வியின் பால் செல்­லாமல் வேறு புலன்­களைப் பூர்த்­திப்­ப­டுத்தும் திசை­களில் செல்ல இந்த புதிய பொரு­ளா­தார வளர்ச்சி இட­ம­ளித்­துள்­ளது.

இதனால் எமது பாரம்­ப­ரிய விழு­மி­யங்கள் பல காற்றில் விடப்­பட்டு வரு­கின்­றன. களி­யாட்­டங்­களில் மனம் போவதால் மாணவர் மத்­தியில் புகைத்தல், மது அருந்­துதல், போதைப் பொருள் பாவித்தல், பெண்­களை வருத்துஞ் சேஷ்­டை­களில் ஈடு­ப­டுதல், கோஷ்­டி­களில் சென்று சண்­டை­களில் ஈடு­படல், விருந்­து­ப­சா­ரங்­களில் பெண்­க­ளையும் இப்­பேர்ப்­பட்ட பழக்­கங்­க­ளுக்கு அடி­மை­யாக்கல் போன்­றவை உள்­ள­டக்­கப்­பட்டு எமது பாரம்­ப­ரியம் பிறழ்ந்து போவதைப் பார்க்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. மாலை நேரங்­களில் இளைஞர் கூட்டம் நாற்­சந்­தி­களில் கூடி மது அருந்­து­வதைப் பல இடங்­களில் பார்க்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

வச­தி­யாகப் பணம் வந்து கொண்­டி­ருப்­ப­தனால் காசினால் எதைத்தான் சாதிக்க முடி­யாது என்ற மனோ­நிலை இளைஞர் யுவ­தி­க­ளி­டையே பரவி வரு­வ­தையும் பார்க்கக் கூடி­ய­தாக உள்­ளது. விபத்­துக்கள் நடந்தால் பொலிஸார் கையில் பெருந் தொகைப் பணத்தைத் திணித்து தப்­பிக்கப் பார்க்­கின்­றார்கள். இதை எனக்கு பொலிஸார் சிலரே கூறிக் குறை­பட்டுக் கொண்­டார்கள்.

மேலும் குடும்­பங்­களில் பாச உணர்ச்­சி­க­ளுக்குப் பதில் பண உணர்ச்­சியே மேலோங்கி வரு­வதைக் காணக் கூடி­ய­தாக உள்­ளது. பாரம்­ப­ரி­ய­மாக வயது முதிர்ந்­தோர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்தும் எம் பண்பு எம் இளை­ஞர்­க­ளிடம் இருந்து விடை­பெற்றுச் செல்­வ­தா­கவே உணர்­கின்றேன் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=103227&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.