Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரித்திரக்கடலில் சத்திய மூர்த்தி ஓரு துளி – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஆதிலட்சுமி:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12.02.2014 சத்தியமூர்த்தியின் நினைவு நாள்:-

 

 

இன்று உடகவியலாளனும் கலை இலக்கியப் படைப்பாளியுமான பு.சத்திய மூர்த்தியின் 5-ஆம் ஆண்டு நினைவுநாள்...

அறிவு இப்படிச் சொன்னாலும் மனமோ அவன் இன்னமும் எங்கோ இருக்கிறான்...வந்துவிடுவான் என்று அடம்பிடிக்கிறது. இன்னும்தான் எங்களால் நம்ப முடியவில்லை அவனது சாவை.

வாழ்வு பற்றிய ஏராளம் கனவுகளேர்டு வாழ்ந்தவனை, காலம் வாழவிடாது அழைத்துச் சென்றுவிட்டது....

மன்னமபிட்டியில் பிறந்து... தீவகத்தில் வளர்ந்தவன்... பண்பான அன்பான பெற்றோரின் பிள்ளை... அமைதியும் சாந்தமும் அமையப்பெற்றவன்....

 ஆனால். அந்த சிரித்த முகத்தையும், அந்த இளகிய இதயத்தையும் நாங்கள் இழந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.. சத்தியமூர்த்தியின் 7 வயது நிரம்பிய பெண் குழந்தை சிந்து நம்புவது போலவே, அவன் ஒருநாள் வந்து விடுவான் என்று எங்கள் மனமும் நினைக்கிறது.

பன்முக திறமைகள் கொண்டவன் சத்தியமூர்த்தி.  கவிதை, சிறுகதை, கட்டுரைகள் என அவன் ஆளுமைப்பரப்பு விரிவானது. உலக நடப்புகளை அலசுவதில் அவனுக்கு அவனேதான் நிகரானவன்.. உலகம் முழுவதுமுள்ள ஊடக ஆர்வலர்களுக்கு சத்தியமூர்த்தி நன்கு பரிச்சயமானவன்... ஆழமான தனது அரசியல் அறிவை அனைவரிடமும் தனது குரலால் எடுத்துச் சென்றவன்...

இலக்கிய கூட்ட மேடைகளில் அவனுக்கு தனி மதிப்பு இருந்தது. விமர்சனத்துறையில் கூர்மையான கத்தியாக இருந்தான் எங்கள் சத்;தியமூர்த்தி. கருத்துகளில் மாறுபாடுகள் இருந்தாலும் கூட அவர்களிடம் கோபமாய் விவாதித்து பின் அன்பால் அவர்களை இளக்கி அரவணைக்கும் கலை கைவரப்பெற்றவன்.

சத்தியமூர்த்தியின் செயற்திறன்கள் வெறும் வார்த்தைகளுக்குள்ளே முடக்கிவிட முடியாதவை. எழுத்தாளனாக, பத்திரிகையாளனாக, இலக்கியவாதியாக, அரசியல் ஆய்வாளனாக இளம் வயதில் முத்திரை பதித்தவன். உத்தியோக உயர்வுகள் பெற்று எங்கோ வாழ வேண்டியவனை காலம் பேனா என்கிற கருவியை தூக்க வைத்தது.

தன் பேனா என்கின்ற கருவி மூலம் சமூக அநீதிகளுக்கு எதிராகவும், இன ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் போராடியவன். சாதாரணமான ஒரு இளைஞன் தன் வாழ்க்கையில் அடைய துடிக்கும் அத்தனை அபிலாiஷகளையும் புறக்கணித்து விட்டு தன் இனத்துக்காய் வாழ்ந்தவன்.

பற்றோடும், பணிவோடும் பண்போடும் எல்லோரையும் அரவணைத்து அன்பு காட்டிய வாழ்வுக்கு சொந்தமானவன் அவன்...அவனது வீட்டில், அவனது முற்றத்தில் இலக்கிய, ஊடக நண்பர்கள் ஒன்று சேர்ந்து உணவுண்ட நாட்கள் ஏராளம். ஊடக, இலக்கிய நண்பர்கள் இல்லாமல் அவனது வீட்டில் எந்த நிகழ்வும் நடந்ததில்லை. கல்யாணவீடோ, நினைவுநாளோ, பிறந்த நாளோ அங்கு கூடிவிடுவார்கள்.

எழு கலை இலக்கிய வட்டம் என்கின்ற இலக்கிய அமைப்பை நண்பர்களுடன்இணைந்து உருவாக்கி பல படைப்பாளிகளின் படைப்புகளை நூலாக வெளியிட்டவன். அதன் மூலம் இளம் படைப்பாளிகள் பலரை உலகறியச் செய்தவன்...அவர்களுக்க ஊக்கமளித்து உறுதுணையாக நின்று வளர்ச்சி காணவைத்தவன்....

தன் இனம் துயருற்று தவித்தபோது, அந்த துயரத்தையும், அவலத்தையும் வெளி உலகிற்கு எடுத்து விளக்கியவன்.

திருமணமாகி ஓரிரு வருடங்கள்தான். தன் அன்பு மகள் சிந்துவின் மீது உயிரையே வைத்திருந்தவன். தன் ஒரே மகள் சிந்து அறிவியற் துறையில் மிளிர வேண்டும் என்பதற்காக அவள் பிறந்த நாளில் இருந்து அறிவு செறிந்த நூல்களை வாங்கி பரிசாக அளித்தவன்.

தனது மகளை நேசித்தது போலவே எல்லாக்குழந்தைகளையும் நேசித்தவன்... குழந்தைக் விளையாடுவதை, சண்டையிடுவதை, உணவு உண்பதை எல்லாம் கலைஉணர்வோடு ரசித்தவன் சத்தியமூர்த்தி...

பனி பொழியும் முன்காலை பொழுதுகளில் தன் மகளை தோளில் சுமந்தபடி கை வீசம்மா கை வீசு என்று பாடுவான். கடுமையான  ஆஸ்துமா நோயின் பாதிப்பு இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது மிதி வண்டியில் அதிக தூரம் பயணம் செய்பவன்..

2008-இன் இறுதிக்கால பகுதியின் கோரம் நிறைந்த நாட்கள். எக்கணமும் உயிர் போகலாம் என்கின்ற நிலையிலும், அந்த ஆபத்துகள் நிறைந்த சூழலிலும், அங்கு நடப்பவற்றை உடனுக்குடன் வெளியுலகம் அறியச் செய்த அரும் பணியை ஆற்றியவன்.

எல்லா மக்களையும் போல இடம் பெயர்ந்து, இடம் பெயர்ந்து வாழ்ந்தவன். தன் அவலங்களை பெரிதுபடுத்தாமல் மக்கள்; படும் துன்பங்களுக்காகத் துடித்தவன். அந்த அவலங்கள் நிரம்பிய நாட்களில் ஒருபோதும் அவன் சோர்ந்து விடவில்லை. ஆனாலும் அவனுடைய உள்ளுணர்வு எதையோ அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

தனக்கு சாவு வந்துவிடும் என்பதை துணைவிக்கும், சில உற்ற நண்பர்களுக்கும் உணர்த்தி கொண்டிருந்தான். ஒருவேளை தனக்கு ஏதாவது நடந்தாலும் தன் செல்லமகளுடைய எதிர்காலம் ஒளியுடன் திகழவேண்டும் என அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான்.

12.02.2009 அதிகாலை சாவு அவனை போக்கு காட்டி அழைத்துக் கொண்டு சென்றதாகத்தான் சொல்ல வேண்டும். முன்னர் இடம்பெயர்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்து சில பொருட்களை எடுத்துவர சென்றவர்களுக்கு உதவும் மனப்பாங்குடன் அவர்களுடன்  சத்தியமூர்த்தியும் சென்றான். அங்கேதான் வெடித்து சிதறிய இரும்பு துகள் ஒன்று அவன் வயிற்று பகுதிக்குள் புகுந்தது.

 

சாவின் வலியோ, சலனமோ இன்றி அவன் அமைதியாகி போனான். வாக்கு மூலங்கள் எதுவுமின்றி நொடியில் அவன் சாவு நிகழ்ந்தது. நிகழக்கூடாத ஒரு நிகழ்வாகவே அந்த சாவு அமைந்தது.

இப்போது ஆண்டுகள் ஐந்து ஆகிவிட்டன. இளமை முடிவுறாமலேயே சாவை தழுவிய தம்பி சத்தியமூர்த்தியின் நினைவுகளில் மனம் மூழ்கி கொள்கிறது.

பன்முக திறமை கொண்ட அவனை காலம் கட்டாயமாக கவர்ந்திழுத்து சென்றுவிட்டது....அவன் பிரிவு காயமாக வலிக்க...அவனுடன் பழகிய நாட்களில் நனைகிறோம்....

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஆதிலட்சுமி:-

 

 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102946/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sathiyamurthi2_CI.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.