Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சல்மான் குர்ஷித்தின் கருத்துகளில் வேறு நிகழ்ச்சி நிரல் தெரிகிறது! - சந்தேகம் கிளம்புகிறது அரசாங்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சல்மான் குர்ஷித்தின் கருத்துகளில் வேறு நிகழ்ச்சி நிரல் தெரிகிறது! - சந்தேகம் கிளம்புகிறது அரசாங்கம். 
[Friday, 2014-02-14 07:52:35]
rambukwela-140214-150.jpg

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ள போதும் வேறு நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் எமக்கெதிராக தொடர்ந்தும் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு வருவதோடு குற்றச்சாட்டுகளும் அடுக்கப்படுகின்றன. நல்லிணக்கம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் ஏற்கக் கூடியதாக உள்ளபோதும் ஏனைய கருத்துக்கள் வேறு நிகழ்ச்சி நிரலினடிப்படையில் தெரிவித்ததாகவே சந்தேகம் எழுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

  

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஜெனீவா மாநாடு குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்த அமைச்சர்,நல்லிணக்க ஆணைக்குழுவின் 75 சதவீதமான பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை. இலங்கைக்கு ஆதரவாக பல நாடுகள் உள்ளன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது நாட்டினதும் மக்களி னதும் தேவையாகும். நாம் முழுமையான தெரிவுடனே இதனை முன்னெடுத்து வருகிறோம்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நல்லிணக்கத்துடன் தொடர்புபட்ட பல்வேறு பொருளாதார அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அங்கு செல்பவர்களுக்கு அதனை நேரில் காண முடியும். உலகில் எந்த ஒரு நாடும் மேற்கொண்டிராத அளவு குறுகிய காலத்தினுள் நல்லிணக்கத்துடன் தொடர்புள்ள பல விடயங்கள் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நல்லிணக்கம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்ட விடயத்தை நாமும் ஏற்கிறோம். யுத்தத்திற்கு 30 வருடம் பிடித்தது என்பதற்காக நல்லிணக்கத்திற்கும் 30 வருடங்கள் எடுக்க முடியாது என அவர் கூறியிருப்பது சரியே. ஆனால் அவர் குறிப்பிட்டுள்ள ஏனைய விடயங்கள் வேறு நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகவே இருக்கும் என்று கருதத் தோன்றுகிறது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை நாளாந்தம் முன்னெடுக்கப்படுகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சிறு மற்றும் மத்திய தர பரிந்துரைகள் அடங்கலான 75 வீத பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும் பிரேரணைகளுக்கும் தெளிவான காரணம் என்ன என்பது புதிராக உள்ளது. ஏதும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவ்வாறு இலங்கைக்கு எதிராக பிரேரணை வைக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது. எமது தரப்பில் நாம் எதனையும் மறைக்கவில்லை. வெளிப்படைத்தன்மையுடன் சகல விடயங்களையும் முன்வைத்துள்ளோம். எதிர்காலத்திலும் வெளிப்படையாக தகவல் பரிமாற தயாராகவுள்ளோம்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முன்னெடுக்கப்படுவது பற்றியும் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்தி வருகிறோம். இங்குள்ள உண்மை நிலைமையின் அடிப்படையில் சாதகமாக பேசக்கூடிய சூழல் காணப்பட்டாலும் தொடர்ந்தும் எதிரான நடவடிக்கைகளை சில தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். எமக்கு மறைப்பதற்கு எதுவும் கிடையாது. நம்பகரமான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. நல்லிணக்க ஆணைக்குழு அவ்வாறான விசாரணையை முன்னெடுத்தே பரிந்துரைகளை முன்வைத்தது.

சில பலம்வாய்ந்த நாடுகள் எமக்கு எதிராக இவ்வாறு பிரேரணை கொண்டு வந்தாலும் நாம் தனிமைப்படுத்தப்படவில்லை. சீனா போன்று பல நாடுகள் எமக்கு ஆதரவாக உள்ளன. தற்பொழுது கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள பிரேரணையும் முன்னர் கொண்டுவரப்பட்ட பிரேரணையை ஒத்ததாக இருக்கும். வேறு நிழ்ச்சி நிரல் படியே இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படுகிறது. நாம் நல்லிணக்கத்துக்காக என்ன முன்னெடுப்புகளை செய்தாலும் எதிர் மறையாகவே பேசப்படுகிறது. குற்றஞ்சுமத்தப்படுகிறது.

அவுஸ்திரேலிய பிரதமர் வடகிழக்கு பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை அவதானித்த பின் அதனை பாராட்டினார். இன்று அவுஸ்திரேலியா வேறு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எமக்கு எதிராக சில தரப்பினர் பிரசாரங்களை முடக்கியுள்ளனர். நாம் உண்மை நிலைமைகளை எடுத்துக்கூறி வருகிறோம். எமக்கு எதிராக பிரேரணை கொண்டு வரும் நாடுகளுடன் பேசி வருகிறோம். எமக்கு எதிராக ஜெனீவா செல்ல உள்ள இலங்கை தரப்புகளுடனும் பேச அழைப்பு விடுத்துள்ளோம்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103595&category=TamilNews&language=tamil

பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் 75% மானவை நிறைவேர்ரியாச்சா?

 

என்ன கணக்கையா இது?

 

கீழே இருக்கும் இந்த திரியில் 86வது பரிந்துரை இப்போது நடமுற படுத்தபடுகுதாம் அப்படிப்பார்த்தாலும் 21.5%ம் .தானே?

 

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136076 

Edited by Sooravali

பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் 75% மானவை நிறைவேர்ரியாச்சா?

என்ன கணக்கையா இது?

கீழே இருக்கும் இந்த திரியில் 86வது பரிந்துரை இப்போது நடமுற படுத்தபடுகுதாம் அப்படிப்பார்த்தாலும் 21.5%ம் .தானே?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136076

தெற்காசிய அரசியல்வாதியிடம் உண்மையை எதிர்பார்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

:)

  • கருத்துக்கள உறவுகள்
 
 
பயப்பதட்டத்தில
எல்லாத்துக்கும் சத்தம் போடுகிறார்கள்
சந்தேகிக்கிறார்கள்
 
ஒன்றை  மட்டும் சிங்களம்  நம்பலாம்
தமிழருக்கு அதரவாக  ஒரு போதும்  இந்தியா  செயற்படாது......... :(  :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.