Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மஹாநாயக்கரிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த உடுகம ரத்னபால ஸ்ரீ புத்ஹரகித மஹாநாயக்க தேரரிடம் நல்லை ஆதீன முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான பயணம் மேற்கொண்டிருந்த உடுகம ரத்னபால ஸ்ரீ புத்ஹரகித மஹாநாயக்க தேரர் நல்லூருக்கான பயணம் மேற்கொண்டு நல்லை ஆதீன முதல்வரை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த நல்லை ஆதீனம் முதல்வர், மஹாநாயக்க தேரரின் யாழ்.வருகை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டதுடன், நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும், உண்மையான சமாதானம் ஏற்படுத்த வலியுறுத்தவேண்டும், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் நிலங்களை விடுவிக்க வலியுறுத்த வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்ததுடன், தென்னிலங்கையில் முன்னெடுக்கப்படும் பசுவதைக்கு எதிரான நடவடிக்கு தமது முழுமையான ஆதவையும் தெரிவித்ததுடன், இலங்கையில் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற அசௌகரியங்கள் தொடர்பில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் வலியுறுத்தியிருக்கிறார்.

மதத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் - மஹாநாயக்க தேரர்

இரு இனங்களுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவருகின்ற பிணக்குகளைத் தீர்ப்பதற்கு பௌத்த - இந்து மதத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த உடுகம ரத்னபால ஸ்ரீ புத்ஹரகித மஹாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த மஹாநாயக்க தேர்தர் யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளுக்கான பயணங்களை மேற்கொண்டிருந்த போது நல்லூர் ஆதீன முதல்வரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப்பிரச்சினை உட்பட்ட விடயங்கள் தொடர்பில் நல்லை ஆதீன முதல்வர் மஹாநாயக்க தேரரிடம் எடுத்துரைத்தார். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த மஹாநாயக்க தேரர்,

ஆதீன முதல்வர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிடம் தான் தெரிவித்திருப்பதாகவும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தி நீண்டகாலமாக நிலவிவருகின்ற பிணக்குகளைத் தீர்ப்பதற்கு பௌத்த - இந்து மதத் தலைவர்கள் ஒன்றிணையவேண்டும் என்றும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் பல்வேறு விடங்களுக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
  

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103563/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
பிணக்குகளைத் தீர்ப்பதற்கு பௌத்த - இந்து மதத் தலைவர்கள் ஒன்றிணையவேண்டும் என்றும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் பல்வேறு விடங்களுக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
முஸ்லிம்,மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் என்ன மாதிரி தேரரே?.......

முஸ்லிம்,மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் என்ன மாதிரி தேரரே?.......

பொது பல சேனா அவர்களை கவனிக்கும்.;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.