Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் காங்கிரசுக்கு வெளியே போக கெடு விதித்தார் மகிந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கடந்த ஆண்டு இலங்கை வந்திருந்த நவநீதம் பிள்ளை அம்மையாரிடம் இலங்கையில், பௌத்த பேரினவாதிகள், அரச ஆசிர்வாதத்துடன் அழித்த, தாக்கிய பள்ளி வாசல்கள், கிருஸ்தவ தேவாலயங்கள், சிங்கள குடி அமர்த்தளுக்காக  துரத்தி அடிக்கப் பட்ட முஸ்லிம் மக்கள் உட்பட்ட விடயங்கள் அடங்கிய 50 பக்க ஆவணம் ஒன்றை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் இரகசியமாக கை அளித்திருந்தனர்.
 
இந்த ஆவணம், புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் கையில் சிக்கி விட்டதாகவும், அந்த ஆவணத்துடன் மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் பிரச்சாரத்தினை மேற்கொண்டு, அரசு பெரும் செலவில், கடும் முயற்சி செய்து, தமக்கு சார்பாக வாக்களிக்க ஏற்பாடு செய்திருந்த நாடுகளை, தமது நிலைப் பாடினை மறு பரிசீலனை செய்ய வைத்து விட்டன என்ற தகவலால் அரசு பெரும் கோபம் அடைந்து உள்ளது.
 
இலங்கையில் உள்ள அரசியல் நிலையால், முஸ்லிம் காங்கிரஸ், புலம் பெயர் அமைப்புகளுடன், இரகசியமாக இயங்குகிறதா அல்லது இது நவநீதம் பிள்ளை அம்மையாரின் மூலமாக புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் கையில் சிக்கியதா என்று கோபத்தில் இந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஹக்கீமிடம், கடுமையான வார்த்தை பிரயோகம் செய்த ஜனாதிபதி, முதுகில் குத்தாமல், வெளியே போக விரும்பின் உடனே போகலாம் என கூறியதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டு உள்ளது.
 
உங்கள் கட்சியில், உங்களுக்கு தெரியாமல் பெயரை கெடுக்க சிலர் தான்தோன்றித் தனமாக ஏதாவது செய்வது போல, எனக்குத் தெரியாமல் யாரோ, நம்ம கட்சியிலும் செய்து போட்டார்கள் போல இருக்குது என்று சமாளிக்க முயன்ற ஹக்கீமின் முயற்சி பலன் இல்லாது போனது. 
 
சுவாரசியங்களுக்கு இலங்கை அரசியலில் வரும் நாட்களில் குறை இருக்கப் போவதில்லை. 
 
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீமுக்கு இது தேவையா?? :D

கக்கீம் மீது இருக்கும் வெறுப்பை காட்ட சிங்கள ஊடகங்கள் இப்படி எழுதுகின்ற்ன. கக்கீமுக்காக மிக அருமையான சிங்களவன் கூட இலங்கையின் முழு பள்ளிவாசல்களையும் இடித்து அழிக்க தயாராக உள்ளார்கள்.  ஆனால் காக்கீம் கூட்டமைப்புக்கு இறுக்கியதை விட கடுமையாக இறுக்கியிருக்கிறார் மகிந்தாவுக்கு ஆப்பு. கக்கீமை தனக்கு தேவையில்லையாயினும் மகிந்தாவால் அவரை வெளியே போடமுடியாது. போட்டாலும் கக்கீம்  அவ்வளவு இலகுவில் போகவும் மாட்டார்.

இந்த ஆவணம், புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் கையில் சிக்கி விட்டதாகவும், அந்த ஆவணத்துடன் மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் பிரச்சாரத்தினை மேற்கொண்டு, அரசு பெரும் செலவில், கடும் முயற்சி செய்து, தமக்கு சார்பாக வாக்களிக்க ஏற்பாடு செய்திருந்த நாடுகளை, தமது நிலைப் பாடினை மறு பரிசீலனை செய்ய வைத்து விட்டன என்ற தகவலால் அரசு பெரும் கோபம் அடைந்து உள்ளது. புலம் பெயர் அமைப்புகளுக்கு பாராட்டுக்கள்.. தொடரட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.