Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் முக்கிய செய்தி நோர்வேக்கு அனுப்பி வைப்பு

Featured Replies

புலிகளின் முக்கிய செய்தி நோர்வேக்கு அனுப்பி வைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய செய்தி ஒன்று நோர்வே அனுசரணையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த செய்தியின் உள்ளடக்கத்தை நோர்வே அனுசரணையாளர்களே வெளிப்படுத்துவர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது இவ்வாறிருக்க சம்பூர் பகுதியை நோக்கி முன்னேறும் தமது நடவடிக்கை தொடர்வதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது

http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

சிறீலங்காவை எனியும் நம்பிட்டு..சர்வதேசமும் இருக்க முடியாது. நாமும் இருக்க முடியாது. காசுக்கு அழிவாயுதங்களை விக்கிறவன் வித்திட்டுத்தான் இருப்பான்..சிறீலங்கா எங்க ஆயுதம் வாங்குது என்றதை மட்டும் ஆராய்ச்சிட்டு இருக்காம..தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு..தங்களின் இன இருப்புக்காகப் போராட வேண்டிய வேளை வந்தாச்சு. புலிகள் சர்வதேசத்தை மதிக்க வேண்டியது கட்டாயம். அவர்களைச் சீண்டி தூண்டி சர்வதேச அவமதிப்பை உண்டு பண்ணவே எதிரி முனைகிறான். தமிழர் பிரதிநிதிகளான புலிகளின் நிதானமான செயற்பாடு..நிச்சயம் இத்தருணத்தில் மிக முக்கியம்..! :idea:

  • தொடங்கியவர்

சர்வதேசமோ.. தமிழரைக் கொன்றுகுவிக்க கங்கணம் கட்டிக்கொண்டுள்ள மகிந்த அரசோ... யாராயினும்... நம் போராட்டுத்திற்கோ..வெந்நிக்கோ தடைக்கல் அல்ல

இடையுூறு எல்லாம் எங்கள் உறவாயும்..எங்கள் ஊரிலும் பிறந்த..

ஒட்டுக்குழுப் பட்டாளங்கள்தான்..

எங்கள் உடல்குருதியில் சேர்ந்த நோய்க்கிருமி போல..

எப்பதான் திருந்துவார்களோ..

ஒட்டுக்குழுக்களை இயக்குபவன் இருக்கும் வரை அவை இயங்கும். இந்திய அமைதிப்படை தந்த பாடங்கள் அவை. இந்திய அமைதிப்படை காலத்திலும் இதுதான் கதை. உலகெங்கும் எதிரிகள் என்றும் இப்படியான பலவீனங்களை தங்களுக்கு பலமாக்கிக் கொள்வது சகஜம். எதிரியை விரட்டும் போது இவர்களும் தாங்களாகவே விரட்டப்படுவார்கள்..என்பது 90ம் ஆண்டு பங்குனித் திங்களில் புலிகள் இந்திய இராணுவத்தை இராஜதந்திர ரீதியில் வெற்றி கொண்டு யாழில் நுழைந்த போது நிகழ்ந்தது..! நாம் இப்போ உடனடியாகக் கவலைப்பட வேண்டியது அப்பாவி மக்களினதும் போராளிகளினதும் அநாவசிய இழப்புக்கள் பற்றித்தான். அதைத் தடுத்து நிறுத்துவதே எதிரியை மனோதிட ரீதியில் பலவீனமாக்கும். எமது பலம் என்பது ஒட்டுக்குழுக்கள் பற்றி கவலைப்படுவதிலும்..அவற்றின் செயற்பாடுகளை களத்தில் முடக்க போராளிகளுக்கு உதவுவது தான்..! ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகளை களமெங்கும் முடக்கும் நிலை என்பது ஒன்றும் கடினமான செயல் அல்ல..! தகவல்களைப் போராளிகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தாலே போதும்..! ஆனால் எதிரியை எதிர் கொள்வதுக்கு மக்கள் எல்லோரும் ஒன்றுபட்ட ஒரு பெரும் படை வேண்டும். அதன் இயங்கு தளங்கள் வேறுபடினும்..ஒரு மித்த செயற்பாடும்..இதய சுத்தியும்..தியாக மனப்பான்மையும்..சுயநலம் தகர்ந்த நிலையும் அவசியம்..! அதுதான் இப்போ தேவை எமது விடுதலைக்கு..!

புகலிடத்தில் ஒட்டுக்குழுக்கள் மாற்றுக் கருத்துக்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்களிடம் தமிழர் தேசிய போராட்டத்தின் தெளிவான நியாயங்கள் என்ன என்பது இருக்குமானால்...அவர்களின் கருத்துக்கள் எந்த வகையிலும் உங்களைப் பாதிக்காது. வேடிக்கையாக பார்த்திட்டு இருக்கலாம். ஆனால் அக்கருத்துக்களை எதிர்ப்பதும் விமர்சிப்பதும் தான் அவர்களுக்கு நீங்கள் உற்சாகமூட்ட உதவும். அவற்றை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டியதே அவசியம். :idea:

  • தொடங்கியவர்

உண்மைதான் குருவி...

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஒரே அனுப்பிகிறார்கள் பதிலை காணோமே நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றதே புலி சேனை ஓயது என்ற ஒரு சிறு என்ற நம்பிக்கை மட்டுமே உள்ளது!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களிடம் தமிழர் தேசிய போராட்டத்தின் தெளிவான நியாயங்கள் என்ன என்பது இருக்குமானால்...அவர்களின் கருத்துக்கள் எந்த வகையிலும் உங்களைப் பாதிக்காது.

ஆனா குருவிக்கு மட்டும் யாழில எழுதற கருத்துக்களாலை புலிகள் மேலை மதிப்பு குறைஞ்சிட்டு வருதாம்..

யுத்தநிறுத்த ஒப்பந்ததிலி௫ந்து விலகுவது குறித்து ஏது அனுப்பி இ௫ப்பினம் புலிகள்.

அனுசரணையாளர்கள் மற்றும் கண்காணிப்புகுழுவினர் சிறீலங்கா அரசாங்கம் வன்முறைகளை கட்டவிள்த்து விடும் பொழுது மொளனம் காத்து சர்ச்சைகளை தவிர்த்துக் கொள்ளலாம் தனது பாத்திரத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற ஏமாற்றுவித்தைக்கு உடனடியாக ஒரு முடிவு வேண்டும். இதற்கு தமிழர்கள் தான் தமது உயிரை விலையாக கொடுக்கிறார்கள்.

"அரசதரப்பு அரசுஅல்லாத தரப்பு" என்று காலத்துக் ஏற்றமாதிரி வசதி வரும் பொழுது பம்மாத்து விடும் நடவடிக்கைகளிற்கு ஒரு முடிவு கொண்டு வரப்பட வேண்டும். இது பற்றி தெளிவாக வாக்குறுதி அளிக்கப்பட வேண்டும் பகிரங்கமாக. இவர்களின் இந்த கூத்துகளிற்கும் அதனால் அவர்கள் இனவாத சிறீலங்கா அரசிடம் பெற்றுக் கொண்டிருக்கும் அனுபவ பாடங்களிற்கும் இன்று தமிழர்கள் தமது உயிர்களை நூற்றுக்கணக்கில் விலையாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டு வந்தது தமிழர் தரப்பு தான் பாதிக்கப்பட்டது அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகிறது என்று. ஆனால் இவர்களின் நடத்தைக்கும் படிப்பினைக்கும் விலையாக கொடுக்கப்படுவது தமிழர்களின் உயிர்கள் தான். இந்த நிலை தொடர முடியாது.

இலங்கையில் சமாதானத்தை உருவாக்க பங்கிளப்பதாக கூறிக் கொள்ளும் உதவி வழங்கும் நாடுகளிற்கான இணைத்தலமையினரும் தமது சொல்லிலும் செயலிலும் அதை காட்ட முயற்சிக்க வேண்டும். தான்தோன்றித்தனமாக "கூட்டமைப்பையும் தலமையும்" உருவாக்கி அவர்களின் சுயநலன்களிற்கு ஏற்றவகையில் அறிக்கைகள் விட்டு களத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. அவர்கள் ஏற்றுக் கொண்டது போல் பிரச்சனை இரு தரப்பிற்கும் இடையில், யுத்தநிறுத்தம் செய்யப்பட்டதும் சமாதனப் போச்சுக்கள் அனுசரணையாளர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டதும் இரு தரப்பிற்கிடையில். எனவே எவர்கள் இரு தரப்பையும் சமதரப்பாக மதித்து ஏற்றுக் கொண்டு சொல்லிலும் செயலிலும் நடப்பார்களோ அவர்களால் தான் ஆக்கபூர்வமாக அர்த்தமுள்ள வகையில் ஏதாவது பங்களிக்க முடியும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக் கொண்டு (அது கசாப்பாக இருந்தாலும் தவிர்க்க முடியாதது) செயற்படுபவர்கள் மாத்திரமே இலங்கைத் தீவில் ஒரு சமாதான போச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்விற்கு பங்களிப்பவர்களாக முடியும். அதுவரை அவர்கள் எத்தனை அறிக்கைகளாக இருந்தாலும் எவராக இருந்தாலும் சரி ஒரு பங்களிப்பையும் செய்ய முடியாது. அவ்வாறு செய்யலாம் என நினைப்பவர்கள் நிலமையை மேலும் சீர்குலைத்து அவலத்தை இலங்கைத்தீவில் உள்ள அனைவருக்கும் ஏற்படுத்த தான் முடியும். தமிழர்கள் அமெரிக்காவில் AK47, SAM ஏவுகணை வேண்ட வெளிக்கிட்டார்கள் என்ற பூச்சாண்டிகளை கண்டு பயந்து அடிபணிந்தோ ஏமாரவோ போவது இல்லை.

அதட்டலும் அடக்கு முறையும் தமிழர்களை வெற்றி கொள்ள பயன்படாது என்பது இலங்கைத்தீவு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்று வரை நடந்த நிகழ்வுகள் சாட்சி. இது சிங்களவர்களிற்கு மாத்திரமல்ல ஏனைய சர்வதேச சக்த்திகளிற்கும் பொருந்தும் என்றதை உணர்ந்து கொண்டால்தான் அவர்களின் பங்களிப்புகள் ஆரோக்கியமானதாக ஆக்கபூர்வமானதாக இருக்கும். அண்மையில் இன்னொரு அனுபவமாக ஜரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு தமிழர் தரப்பு கொடுத்த இராஜதந்திர பதிலையும் கவனத்தில் கொண்டு நடக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.