Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா சமர் இன்று ஆரம்பம் :27 இல் பிரேரணை மீது வாக்கெடுப்பு

Featured Replies

ஜெனிவாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபை மனித உரி மைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை தலை­மையில் ஜெனிவா நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 28 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ள­துடன் இதன்­போது உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் சில நாடுகள் தொடர்பில் பிரே­ர­ணை­களும் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன.
un-human-rights-council_0.jpg
 
அந்­த­வ­கையில் இம்­முறை இலங்­கை­ககு எதி­ரா­க­வும்­அ­மெ­ரிக்­கா­வினால் பிரே­ரணை ஒன்று கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதற்­கான ஏற்­பா­டு­களில் அமெ­ரிக்க , பிரிட்டன் தரப்பும் அதனை எதிர்க்கும் இரா­ஜ­தந்­திர செயற்­பா­டு­களில் இலங்கை தரப்பும் மும்­ம­ர­மாக ஈடு­பட்­டுள்­ளன.
 
ஆரம்ப அமர்வில் ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர். அத்­துடன் மனித உரிமைப் பேர­வையின் தலை­வரும் ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தலை­வரும் முதல் நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்­ளனர்.
 
 
அத்­துடன் இலங்­கையின் சார்பில் இலங்கை தூதுக்­கு­ழுவின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள வெளிவி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் நாளை மறு­தினம் புதன்­கி­ழமை ஜெனிவா மனித உரிமை பேர­வையில் உரை­யாற்­ற­வுள்ளார்.
 
மேலும் முதல்நாள் அமர்வில் அமெ­ரிக்கா பிரி­டடன் மற்றும் கனடா ஆகிய நாடு­களின் பிர­தி­நி­தி­களும் உரை­யாற்­ற­வுள்ள நிலையில் அவர்கள் தமது உரையில் இலங்கை விவ­காரம் தொடர்பில் உரை­யாற்­ற­வுள்­ளனர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
 
மார்ச் மாதம் 25 ஆம் திகதி இலங்கை விவ­காரம் தொடர்பில் ஜெனி­வாவில் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை உரை­யாற்­ற­வுள்­ள­துடன் விசேட அறிக்கை ஒன்­றையும் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.
 
தற்­போது பீம்ஸ்டெக் மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக மியன்மார் சென்­றுள்ள இலங்கை தூதுக்­கு­ழுவின் தலைவர் அமைச்சர் பேரா­சி­ரியர் பீரிஸ் மியன்­மாரில் இருந்­த­வாறு நாளை செவ்­வாய்க்­கி­ழமை ஜெனி­வா பய­ண­மா­க­வுள்ளார்.
 
அத்­துடன் தூதுக்­கு­ழுவில் இடம்­பெ­று­கின்ற ஏனைய உறுப்­பி­னர்­க­ளான ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்கஇ சட்­டமா அதிபர் பாலித்த பெர்­னாண்டோ மற்:றும் ஜெனி­வாவில் உள்ள இலங்­கையின் வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க ஆகியோர் நேறறும் இன்றும் ஜெனிவா செல்­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யுள்­ளது. இது இவ்­வாறு இருக்க இலங்கை தூதுக்­கு­ழுவில் இடம்­பெற்­றுள்ள பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க எதிர்­வரும் எட்டாம் திகதி ஜெனிவா செல்­ல­வுள்ளார்.
 
மேலும் எதிர்­வரும் புதன்­கி­ழமை மனித உரிமை பேர­வையில் அமைச்சர் பீரிஸ் உரை­யாற்­று­வ­தற்கு முன்னர் அமைச்சர் தலை­மை­யி­லான இலங்கை தூதுக்­கு­ழு­வினர் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்­ளையை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
 
குறிப்­பாக இந்த சந்­திப்­பின்­போது இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை பொறி­முறை அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்ற நவ­நீதம் பிள்­ளையின் கோரிக்கை குறித்து கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்பில் இலங்கை தனது அதி­ருப்­தியை இந்த சந்­திப்­பின்­போது வெளியி­ட­வுள்­ளது.
அதே­போன்று இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ரணை தொடர்­பா­கவும் நவ­நீதம் பிள்­ளை­யுடன் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ள­துடன் இந்த விட­யத்தில் இலங்கை தனது எதிர்ப்­பையும் வெளியி­ட­வுள்­ளது.
 
இதே­வேளைஇ இலங்­கைக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­­ரணை கோரப்­பட மாட்­டாது என்றே தெரி­ய­வ­ரு­கின்­றது. இலங்­கையில் இடம்­பெற்­ற­­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜெனி­வாவில் சுயா­தீன விசா­ர­ணையை கோருவோம் என்று பிரிட்டன் அமைச்சர் பரனேஸ் வர்சி தெரி­வித்­தி­ருந்த கருத்தும் சர்­வ­தேச விசா­ரணை கோரப்­ப­ட­மாட்­டாது என்ற விட­யத்தை உறு­தி­ப்ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­துள்­ளது.
 
இது இவ்­வாறு இருக்க சர்­வ­தேச அரங்கில் முக்­கிய நாடு­க­ளாக கரு­தப்­படும் சீனாவும் ரஷ்­யாவும் இலங்­கை­க்கு எதி­ரான தீர்­மா­னத்தை எதிர்ப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­த­துடன் இலங்­கைக்கு முழு­மை­யான ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்­தன. இந்த ஆத­ரவு நிலைப்­பா­டு­களும் சர்­வ­தேச விசா­ர­ணயை தவிர்த்து சுயா­தீன விசா­ர­ணையை கோரு­வ­தற்­கான அடிப்­ப­டை­யாக அமைந்­தி­ருக்கும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
 
அதன்­படி ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்பில் இம்­முறை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையில் சர்­வ­தேச விசா­ரணை என்ற விடயம் இடம்­பெ­றாது என்றும் சுயா­தீன விசா­ரணை என்ற விட­யமே உள்­ள­டங்கும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
 
இதே­வேளை, இலங்கை அர­சாங்­கமும் யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையில் முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்த கால அவ­கா­சத்தை மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கோர­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையில் அர­சாங்கம் பாரி­ய­ளவு முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்­தி­வ­ரு­வ­தா­கவும் மேலும் முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்த கால அவ­காசம் தேவை என்றும் இலங்கை அர­சாங்க தரப்பில் கோரப்­ப­ட­வுள்­ளது.
 
எவ்­வா­றெ­னினும் மார்ச் மாதம் 22 ஆம் திக­தி­ய­ளவில் இலங்­கைக்கு எதி­ரான பிரே­ரணை மனித உரிமை பேர­வையில் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ள­து­டன் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு இடம்­பெறும் என்று எதிர்­பார்­க்கப்­ப­டு­கின்­றது.
 
இலங்­கைக்கு எதி­ராக மூன்­றா­வது தட­வை­யா­க அமெ­ரிக்கா ஜெனிவா மனித உரிமைப் பேர­வை பிரே­ர­ணையை கொண்­டு­வ­ர­வுள்­ளது. இதற்கு முன்னர் 2013 மற்றும் 2012ஆம் ஆண்­டு­களில் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணை­களும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.
 
அந்­த­வ­கையில் அமெ­ரிக்கா கொண்­டு­வ­ர­வுள்ள பிரே­ர­ணைக்கு உறுப்பு நாடு­களின் ஆத­ரவை பெறும் நோககில் பிரிட்­டனும் அமெ­ரிக்­காவும் பாரிய இரா­ஜ­தந்­திர முயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்­ளன. அதே­வேளை மறு­புறம் இலங்­கையும் உறுப்பு நாடு­க­ளிடம் இலங்­கைக்கு ஆத­ரவு கோரி படை­யெ­டுத்­துள்­ளது.
 
வெளிவி­வ­கார அமைச்சர் பீரிஸ் அண்­மையில் சீனா­வுக்கும் இந்­தி­யா­வுக்கும் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யங்­களை மேற்­கொண்­டி­ருந்­த­துடன் இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா கொண்­டு­வ­ர­வுள்ள பிரே­ர­ணையை தோற்­க­டிக்க ஆத­ரவு வழங்­கு­மாறு கோரி­யி­ருந்தார்.
 
எனினும் இலங்­கைக்கு ஆத­ரவு வழங்­கு­வது தொடர்பில் இந்­தியா எவ்­வி­த­மான உத்­த­ர­வா­தத்­தையும் வழங்­காத நிலையில் சீனா இலங்­கைக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது. அத்­துடன் ரஷ்­யாவின் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வொன்று அண்­மையில் இலங்­கை­ககு விஜயம் மேற்­கொண்­டி­ருந்­த­துடன் சர்­வ­தேச அரங்கில் இலங்­கைக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்­தது.
 
இந்­தி­யா­வா­னது கடந்த 2012 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்­டு­களில் இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்த பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.
அது­மட்­டு­மன்றி அர­சாங்­கத்தின் பல்­வேறு அமைச்­சர்­களும் மனித உரிமைப் பேர­வையின் பல்­வேறு உறுப்பு நாடு­க­ளுக்கும் விஜயம் செய்­த­துடன் ஆத­ரவு கோரும் பட­லத்­தையும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.
 
இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை கடந்­த­வாரம் வெளியிட்­டி­ருந்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை பொறி­முறை அவ­சியம் என்று கூறி­யி­ருந்தார். ஆனால்இ இலங்கை அர­சாங்கம் உட­ன­டி­யா­கவே நவ­நீதம் பிள்­ளையின் கோரிக்­கையை நிரா­க­ரித்­தி­ருந்­த­துடன் அவரின் அறிக்­கைக்கு கடும் விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்­தி­ருந்­தது.
 
இதே­வேளை மனித உரிமை பேர­வையின் முதல்நாள் அமர்வில் அமெ­ரிக்கா, பிரிட்டன் , கனடா, பிரான்ஸ், ஜப்பான், நோர்வே ஆகிய நாடு­களின் பிர­தி­நி­தி­களும் ரஷ்­யாவின் வௌிவி­வ­கார அமைச்சர் சேர்ஜி வி. லவ்ரவ், பிரான்ஸ் வெளிவி­வ­கார அமைச்சர் டோரன்ட் பேபியஸ், அமெ­ரிக்­காவின் அமைச்­ச­ரவை உறுப்­பினர் சமந்தா பவர், பிரிட்­டனின் இரா­ஜாங்க மற்றும் பொது­ந­ல­வாய அலு­வ­லக அமைச்சர் ஹியுகோ ஸ்வயர், கன­டாவின் வௌிவி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் லின்னி யெலிச் உள்­ளிட்டோர் முதல் நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்­ளனர்.
 
அமைப்­புக்­களை பொறுத்­த­வ­ரையில் பொது­ந­ல­வாய அமைப்பின் செய­லாளர் நாயகம் கமலேஷ் சர்­மாவும் அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தின் செய­லாளர் அன்டர்ஸ் ஜோன்­ஸனும் முதல் மூன்று நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்­ளனர்.
 
ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை கடந்த வருடம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார். அதன்­போது நாட்டின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து மதிப்­பீ­டு­களை அவர் மேற்­கொண்­டி­ருந்தார். மேலும் அர­சியல் கட்­சிகள் மற்றும் சிவில் அமைப்­புக்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­புக்­க­ளையும் சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார்.
 
ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான விசேட அறிக்­கை­யாளர் டாக்டர் சலோகா பெயானி இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
 
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 13 நாடுகள் வாக்களித்திருந்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
 
அதேபோன்று கடந்த 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்திருந்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன.
 
அந்தவகையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கின் றமையானது இலங்கையின் உள்ளக நல்லிணக்க செயற்பாடுகளை அது குழப்பிவிடும் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டுவருகின்றது.
 
இதேவேளை மியன்மாரில் இடம்பெறவுள்ள பீம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் கலந்து கொள்ளவுள்ளதுடன் அந்த மாநாட்டில் வைத்து இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று.... நல்ல நாளாக, ஈழத்தமிழர்களுக்கு.... அமைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சசர்வதேசத்தின், இலங்கைத்தமிழர்களின்மீதாக அதிகரிக்கும் கரிசனையை நீர்த்துப்போகச்செய்யவும், போர்க்குற்றவிசாரணை நடைபெறுமாகவிருந்தால் அதிலிருந்து தப்பிக்கவும், தமிழர்விரோததேசம் இந்தியா சில உள்குத்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

சசர்வதேசத்தின், இலங்கைத்தமிழர்களின்மீதாக அதிகரிக்கும் கரிசனையை நீர்த்துப்போகச்செய்யவும், போர்க்குற்றவிசாரணை நடைபெறுமாகவிருந்தால் அதிலிருந்து தப்பிக்கவும், தமிழர்விரோததேசம் இந்தியா சில உள்குத்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

பஞ்சாபி, தமிழர் விரோத முகலாய குடும்ப கொங்கிரஸ் என்பதே சரி.

90 கோடி இந்தியருக்கு சிலோன் எந்த பக்கம் என்றே தெரியாது.

இந்திய மக்களை சினிமா ஊடாக திசை திருப்பி வைத்திருக்கிறார்கள்.

மற்றும் இணையத்திலும் பல இரகசிய தடைகள் உண்டு. இந்திய அடிமைகளை குறை கூறி பிரயோசனம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.