Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.விற்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் மட்டுவில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(Athiran)
இலங்கைக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசுக்கு ஆதரவாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
navipillai.jpg
மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீதா பிரபாகரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
 
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்புப் பட்டிகளை அணிந்திருந்ததுடன், ஆங்கில, சிங்கள, தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
 
இதன் போது கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், 
 
நவநீதம்பிள்ளை போன்றவர்கள் தமது இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்காக எமது தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானங்களை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
 
'அமெரிக்கா, பிரித்தானியா  போன்ற நாடுகளின் சுயலாப நோக்கமே ஜெனிவாவில் எமது இலங்கை தேசத்திற்கு எதிரான தீர்மானமாகும்.
 
'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த தலைமைத்துவத்தின்கீழ் இன்று ஒரே நாடு ஒரே தேசம் என்ற குடையின் கீழ் மூன்று இனங்களும் சுதந்திர காற்றை சுவாசித்து வருகின்றன.
சமாதானத்துடனும், மகிழ்வுடனும் ஒற்றுமையுடனும் வாழும் இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் எமது இலங்கைத் தேசத்தின் இறைமைக்கும், ஒற்றுமைக்கும் பங்கம் ஏற்படுத்தும் வண்ணம் திட்டமிட்ட வகையில் தீர்மானங்களை  முன்வைத்திருக்கின்றன.
 
அந்நாடுகளின் ஏகாதிபத்திய சுயரூபத்தினை தமது இருப்புகளுக்காக சர்வதேச அரங்கில் திணிக்க முயல்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
 
கடந்த முப்பது வருடகாலமாக புலிப்பயங்கரவாதிகளின் ஏகாதிபத்தியத்திற்குள் இருந்த நாம் அதிலிருந்து விடுபட்டு இன்று சமாதான சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எமது அரசானது இந்நாட்டில் வாழும் மூவின மக்களுக்கும் சமஉரிமைகளை வழங்கியுள்ளது. நாங்கள் பிறந்ததிலிருந்து இந்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
இன்று எமது ஜனாதிபதி அவர்கள் இருண்ட யுகத்தில் இருந்த எம்மை ஒளிமயமான காலத்திற்கு கொண்டுவந்திருக்கின்றார்கள். அதனை நாங்கள் நன்கு உணர்கின்றோம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழர் என்ற வகையில் நான் அதனை விசேடமாக உணர்கின்றேன். 
 
எமது தேசத்தைச் சேர்ந்த தேசப்பற்றற்ற சில துரோகிகளும் எமது இலங்கை தேசத்திற்கு எதிரான திட்டமிட்ட இச்சதி வலையில் சிக்கியுள்ளனர். இவ்வாறானவர்கள் யதார்த்தத்தை உணரவேண்டும். எமது தேசத்திற்கு அபகீர்த்தியை உண்டாக்குவதற்கு ஒருபோதும் அவர்கள் இடமளிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்
 14 மார்ச் 2014
lg-share-en.gif
 

 

pro_CI.png

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிரகவும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை (14.03.14) காலை மட்டக்களப்பு, மகாத்மா காந்தி பூங்காவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  


மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.அருமைலிங்கம் உட்பட முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


இதன்போது, 'நவநீதம்பிள்ளையே உனது பக்க சார்பான நடவடிக்கையை உடன் நிறுத்து', 'அமெரிக்காவே உன் பிரித்தாளும் தந்திரத்திற்கு நாம் ஏமாறமாட்டோம்', 'இலங்கையின் இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்காதே', 'அமெரிக்க ஏகாதிபத்தியமே புலிப் பயங்களரவாதிகளின் தாளத்திற்கு ஆடாதே' போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தாங்கியிருந்தனர்.
  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104270/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

(Athiran)
இலங்கைக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசுக்கு ஆதரவாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
navipillai.jpg
 
'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த தலைமைத்துவத்தின்கீழ் இன்று ஒரே நாடு ஒரே தேசம் என்ற குடையின் கீழ் மூன்று இனங்களும் சுதந்திர காற்றை சுவாசித்து வருகின்றன.
 
 

 

 

அப்படியே pakபண்ணி shipபண்ணி விட்டால் நாமும் கொஞ்சம் உங்க புண்னி யத்த்தில் சுவாசிப்போமில்ல......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.