Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இல் து பிரான்ஸ் மாவட்டத்தில் ஞாயிறு வரை பொதுப்போக்குவரத்தில் இலவச பயணம்!

Featured Replies

பிரான்ஸ் தலைநகரம் பாரிசையும் அதை உள்ளடக்கிய இல் து பிரான்ஸ் மாவட்டத்தில் காற்று மாசடைதல் அதி உச்சத்தை தொட்டிருப்பதால் வாகனப் போக்குவரத்தை குறைப்பதற்காக பொது போக்குவரத்து சேவையை இன்று வெள்ளிக்கிழமை காலையில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை கட்டணமற்ற சேவைகளாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மெற்ரோ எனப்படும் நிலக்கீழ் தொடரூந்துகள் பிராந்திய விரைவுத் தொடரூந்துகள் மற்றும் இல் து பிரான்ஸ் ((Ile de France )மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் ஏனைய SNCF தொடரூந்து சேவைகளும் டிராம் எனப்படும் நகர தொடர்வண்டிச்சேவைகளும் பேருந்து சேவைகளும் கட்டணமற்ற சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 5 மணியில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை இந்த இலவச போக்குவரத்து திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று இல் து பிரான்ஸ் மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.

அதி உச்ச சூழல் மாசுபாட்டால் பொது மக்களுக்கு எற்படக் கூடிய உடல் நல பாதிப்புக்களை கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் மக்கள் தமது சொந்த வாகனங்களில் செல்வதை தவிர்த்து பொதுப்போக்குவரத்து சேவையை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சூழல் மாசுபாட்டால் வருடாந்தம் சுவாசப்புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டு சுவாசப்புற்றுநோயினால் உலகில் 2இலட்சத்து 23ஆயிரம் பேர் இறந்தனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

 

http://www.jvpnews.com/srilanka/62653.html

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்

பிரான்சுக்கு வந்து 30 வருடங்களில் இந்தமுறைதான் இவ்வாறு தூசியின் அளவை  கண்டேன்.

கண்களுக்கே புலப்படும் வகையில் ஒரு சில  யார்களுக்கு மேல் எதுவும் தெரியாதவகையில் அதன் அடர்த்தியுள்ளது

சுவாசிக்கும் ஒவ்வொரு வினாடியும் நாசி  அதை உணர்கிறது

உலகம் முக்கியம் கொடுக்கவேண்டியவைகளில் முதன்மையானது இது என்பதை அனுபவத்தினூடாக உணர்கின்றேன்

  • தொடங்கியவர்

2014-03-13T122614Z_1859123583_PM1EA3D10L

 

The Eiffel tower and the Paris skyline through a small-particle haze, 13 March 2014.

 

Velib-et-Autolib-gratuits-a-Paris-contre

 

La pollution à Paris.

3049_smog_tour_eiffel.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.