Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் கைது

Featured Replies

இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை நேரம் இரவு 10.05ற்கு கைதான இவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை பிரவீன் தனியாக விசாரணைக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ருக்கி பெர்னாண்டோ  கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமைகள் ஆவண மையத்தின் (INFORM) மனித உரிமைகள் ஆலோசகராக கடமை ஆற்றுகிறார். (Human Rights adviser, INFORM, Human Rights Documentation Centre based in Colombo) அருட் தந்தை பிரவீன் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் (CPR) இயக்குணர்.(Director of the Centre for Peace and Reconciliation (CPR) based  in Jaffna) முனித உரிமைகள் பாதுகாவலர்.

இவர்கள் இருவரும் அண்மையில் கிளிநொச்சி தர்மபுரத்தில் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி அவரின் மகள் பூர்விகா ஆகியோருடைய கைது தடுத்து வைப்பு குறித்து கரிசைனை செலுத்தியதோடு அந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே இவர்கள் இரவுப் பொழுதில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104357/language/ta-IN/article.aspx

திரு பேர்ல் தேவநாய்கம் ஸ்ரீ லனாக Sri Lanka Guradian எழுதியது போல இன்னும் ஒரு வருசத்தில்ல இருக்கிற ஆதாரமும் போய்விடும்!!!. 

  • கருத்துக்கள உறவுகள்

11.jpg

 கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பங்குத் தந்தையும் தென்பகுதியைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஒரு வரும் தருமபுரம் பகுதியில் வைத்து நேற்றிரவு பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
அக்கராயன் அமைதிபுரம் பிரதேசபங்குத் தந்தையான பிரவீன் மகேசன் தென்பகுதியைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான ருக் ஷிபெர்னாண்டோ ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படுகிறது. 
 
தருமபுரம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை அவதானித்து மக்களிடம் கருத்தறிய முற்பட்டவேளை, இவர்களை தாம் கைது செய்ததாக பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் கிளிநொச்சியைச் சேர்ந்த வேறுசில பங்குத் தந்தைகளுக்கு தெரிவித்ததாக கூறப்பட்டது. 
 
சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டபோது அங்கு கடமையில் இருந்தவர்கள் தமிழ் தெரியாது என தகவல் தர மறுத்துவிட்டனர். 
 
இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரை தொடர்பு கொண்டு போதும் உடனடியாக கருத்துக்களை அவர்களிடம் இருந்து பெறமுடியவில்லை என்று தெரிவித்தார். 

 

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=426292747017129705

மதகுரு என்றவுடன் எங்கட ஐய்யரோ என்று பயந்து போனன்.

  • தொடங்கியவர்
"கைதான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்"

 

கிளிநொச்சியில் ஞாயிறன்று கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரும் கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி என்ற தாயாரும், அவருடைய 14 வயதுடைய மகளும் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாகவே மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாகிய ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

 
140317101114_ruki_fernando_sri_lanka_hum

கைதான இருவரில் ஒருவரான ருக்கி ஃபெர்னாண்டோ

 

கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற மனித உரிமைகள் ஆவண மையத்தின் ஆலோசகராகிய ருக்கி பெர்னாண்டோ, யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் பணிப்பாளராகிய அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகிய இருவரும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் ஆவர்.

ஜெயக்குமாரி கைதுசெய்யப்பட்டபோது தர்மபுரம் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இவர்கள் தகவல்களைத் திரட்டச் சென்றிருந்த வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கோரியிருக்கின்றது.

"காணாமல் போயுள்ளவர்களுக்காக அவர்களது உறவுகள் போராடினால் கடத்தப்படலாம் அல்லது கைதுசெய்யப்படலாம். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் செயற்பட்டாலும் அவர்களும் கைதுசெய்யப்படலாம் அல்லது காணாமல் போகச் செய்யப்படலாம் என்பதை வெளிப்படுத்துவதாகவே கிளிநொச்சியில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் அமைந்திருக்கின்றன.இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் கைது நடவடிக்கையானது, இலங்கை அரசியலமைப்பில் பொதுமக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நடமாடும் சுதந்திரத்தை மீறுவதாக அமைந்திருக்கின்றது என்று மனித உரிமைகளுக்கும் ஆய்வுக்குமான நிலையமும், நீதியும், நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பும் குற்றம் சுமத்தியிருக்கின்றன.

இந்த அமைப்புக்களின் பணிப்பாளராகிய கீர்த்தி தென்னக்கோன் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கையில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தன்னிச்சையாக ஒருவரைக் கைதுசெய்து தடுத்துவைக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும், வலிந்து வாக்குமூலங்களைப் பதவுசெய்யும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கவும், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் 48 மணித்தியாலங்கள் ஒருவரைத் தடுத்துவைக்கலாம் என்ற சட்டத்தின் பாரதூரமான விளைவுகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐநாவின் மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ள சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமான மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரைக் கைதுசெய்திருப்பதானது, இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டு நிலைமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று அவசியம் என்ற சர்வதேச அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே வழிகோலியுள்ளது என்றும் கீர்த்தி தென்னக்கோன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/03/140317_activistarrest.shtml

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.