Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடன்படாத சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டு வல்லுறவு! - தமிழ் பெண் சிப்பாய்களது நிலை இப்படி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
உடன்படாத சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டு வல்லுறவு! - தமிழ் பெண் சிப்பாய்களது நிலை இப்படி! 
[Tuesday, 2014-03-18 19:56:08]
Tamil-sl-army--womens-150.jpg

சிங்கள இராணுவத்தில் சேர்ந்த பின் 10ற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவப் படை அதிகாரிகளாலும் சாதாரன கோப்றல் தர ராணுவத்தாலும் தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் 23 வயதான இளம் தமிழ் இராணுவப் பெண். தான் இராணுவத்தில் சேர்ந்த பின் தன்னையும் தன்னைப் போன்ற மற்றைய தமிழ்ப் பெண்களையும் தவணை முறை வைத்து இரவில் உயரதிகாரிகளின் பாலியல் தேவைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  

தாங்கள் அதற்கு உடன்படாத சந்தர்ப்பங்களில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் தங்களில் சிலர் கருத்தரித்து பின்னர் அது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு கலைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் அங்கு சிங்களப் பெண் இராணுவச் சிப்பாய்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன்­ ஒரு பெண் தமிழ்ச் சிப்பாய் இராணுவத்தில் இருந்து விலகி ஓடிய போது அவர் பின்னர் பிடிக்கப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105960&category=TamilNews&language=tamil

என்ன கொடுமையப்பா!

எமது ஊடகத்தினர் ஏன் ஆசை காட்டி தமிழ் பெண்களை சேர்கிறார்கள் என்பதற்கு வேறு பல வியாக்கியானங்கள் கொடுக்கிறார்கள்.

எமது பாடசாலைகளில் முதலில் ஒற்றுமை, குழு செயல்பாடுகள் பற்றி படிப்பிக்கவேண்டும்.

Edited by விவசாயி விக்

http://www.youtube.com/watch?v=GohUnkH0neQ

சிங்களவரோ தமிழரோ இராணுவம் என்றால் இப்படியான பயிற்சிகள்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் 29 தமிழ்ப் பெண்களே இராணுவத்தில் இணைந்தனர்! நேற்றுமுன்தினம் தொடங்கியது பயிற்சி.  :( 

 

 

tamil-army-190314-150.jpg

இலங்கை இராணுவத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 29 தமிழ்ப் பெண்களுக்கான இராணுவப் பயிற்சிகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இந்த இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்து வைத்துள்ளார். இராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட்ட இந்த பெண்களுக்கு 16 வாரப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்தில், 109 தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைத்துக் கொண்டது போல் முல்லைத்தீவிலும் அதிகளவான பெண்களை இணைக்க இராணுவம் திட்டமிட்டது.

  

எனினும் இராணுவத்தின் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை, வன்னியில் நிலவும் தொழில் வாய்ப்பின்மையை பயன்படுத்தி இராணுவ அங்குள்ள பெண்களை இராணுவத்தில் இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே யாழ்ப்பாணத்திலும் பெண்களை இராணுவத்தில் இணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 

tamil-army-190314-600.jpg

 

 

tamil-army1-190314-600.jpg
 
 

 


http://www.seithy.com/breifNews.php?newsID=106020&category=TamilNews&language=tamil

ஒரு இனத்தை அடிமை போல் நடாத்துவதை நிறுத்த ஒருவரும் இல்லை.

 

நாங்கள் ஓர்  பாவப்பட்ட  இனம்

உண்மையான தமிழ்காவலர்களை அழிய விட்டு போலித்தமிழ் தலைமைகள்(வாக்கு கேட்கும்போது தமிழர்களை பாதுகாக்கும் வேசம் போடும்) இருக்கும் இந்த அடிமை நிலை தொடரும்.. இவற்றை எல்லாம் தட்டி கேட்கமாட்டார்கள்.. அரசிடம் இருந்து இன்னும் எதாவது கிடைக்குமா? தந்தை செல்வா சொன்னமாதிரி இனி எம்மக்களை காக்க கடவுளாலும் முடியாது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.