Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனநோயாளிகள்

Featured Replies

மதுரையை கலக்கும் மறுஜென்ம விவகாரம்... "சாய்பாபாவை மணமுடிக்க காத்திருக்கிறேன்!"

சில மாதங்களுக்கு முன்பு லக்னோ வில் 'நான்தான் ராதையின் அவதாரம்' என்று சொல்லி ஏக பரபரப்பைக் கிளப்பினார், போலீஸ் ஐ.ஜி- -யான தேவேந்திரகுமார் பாண்டா. இப்போது பாண்டாவைப் போல் நம்மூர் மதுரை யில் வசந்தா என்ற பெண்மணி, 'நான்தான் ராதையின் மறுபிறப்பு. சாய்பாபாதான் கிருஷ்ண பகவானின் அவதாரம். இன்னும் பன்னிரண்டு வருடம் கழித்து சாய்பாபாவோடு நான் ஜோதியாகக் கலக்கப் போகிறேன்' என்று கிளம்பியிருக்கிறார்.

visar3gs5.jpg

மதுரை மாவட்டம் திருமங்கலத்துக்கு அருகே இருக்கிறது வடக்கம்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மதுரகவி ஆழ்வாருக்கும்-வேதவல்லிக்கும் அறுப தாண்டுகளுக்கு முன் மகளாகப் பிறந்தவர் தான் வசந்தா. தீவிர வைஷ்ணவ கு டும்பம் என்பதால், சிறுவயதிலிருந்தே வசந்தாவும் தீவிர கிருஷ்ண பக்தை. தற்போது தன்னை ராதையின் அவதாரமாக நம்பும் வசந்தா, சாய்பாபாவின் பெயரில் உள்ள சாய் என்பதைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டு 'வசந்தாசாய்' ஆகிவிட்டார். தற்போது திருமங்கலத்திலிருந்து விருது நகர் செல்லும் வழியில் உள்ள ராயப் பாளையம் கிராமத்தில் முக்தி நிலையம் ஒன்றை அமைத்து, அதில் பஜன் பாடிக் கொண்டிருக்கிறார்.

முக்தி நிலையத்தில் மஞ்சள் ஆடை, சாந்த முகம் என வசந்தசாய் அமர்ந்திருக்க... அவரைச் சுற்றி இருப் பவர்கள் மெல்லிய இசையுடன் சாய் பஜன்ஸ் பாடிக் கொண்டே இருக் கிறார்கள். பெரும்பாலும் எல்லாம் வெளி நாட்டு முகங்கள்தான். பஜன் முடிந்ததும், வசந்தசாய் முன்னே செல்ல... அத்தனை பேரும் அவரைப் பின்தொடர்ந்து ஒரு அறைக்குள் போகிறார்கள். உள்ளே புட்டபர்த்தி சாய்பாபாவின் ஆள் உயரப் படம் சுவறில் சாய்த்து வைக்கப் பட்டிருக்கிறது. அதன் கீழ் சின்னச்சின்ன சாமி சிலைகள், பூஜை பொருட்கள். வலது பக்கமாக, சாய்பாபா ஸ்டைல் இருக்கை. அதில் அவரது அங்கியைப் போட்டுவைத்து, பாபா அந்த அறைக்குள் இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். பாபா படத்துக்கு இடது பக்கத்தில் இன்னொரு பாபாவின் படமும் அதற்கு பக்கத்திலேயே வசந்தசாய் படமும் இருக்கிறது. இரண்டிலும் மலர் மாலை தொங்குகிறது. பஜன் முடிந்ததும் ஸ்வாமிக்குத் தானே தீபம் காட்டி சாய் பக்தர்களை பரவசப்படுத்துகிறார் வசந்தசாய்.

எல்லாம் முடிந்தபிறகு நம்மை அழைக்கிறார் 'ராதை!' அவரெதிரே அமர்ந்த நம்மிடம், "பொதுவா எனக்குப் பத்திரிகையில விளம்பரப்படுத்திக்கிறது பிடிக்காது' என்று பிகு பண்ணியபடியே பேசியவர், தன் 'அவதாரக் கதை'யை அவிழ்த்துவிட்டார்! "எனக்கு பன்னிரண்டு வயசிருக்கும் போதே என்னோட தாயார் இறந்துட் டாங்க. அதுக்கப்புறம் பாட்டி ஸ்ரீரங்க நாச்சியார்தான் என்னை வளர்த்தாங்க. சின்ன வயசுலயே பாட்டி எனக்கு கிருஷ்ணர் கதைகள சொல்லுவாங்க. அதைக் கேட்டு கிருஷ்ண பரமாத்மா மேல பைத்தியமாகிட்டேன். அப்போதிருந்தே 'மீராவை போல நாமும் கிருஷ்ண பகவானை திருமணம் செஞ்சுக்கணும்னு' நினைக்க ஆரம்பிச்சேன். என்னோட விருப்பத்த பாட்டிக்கிட்ட சொன்னப்ப 'அடி பைத்தியக்காரி'னு சிரிச்சவங்க, 'நாமெல்லாம் மனுஷப் பொறப்புடி... கடவுளையெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது'னு சொன்னாங்க.

இந்தப் பிறவியில நான்தான் ராதையின் அவதாரமா பிறந்திருக்கேன்னு புரிஞ்சுக்காம, பதினஞ்சு வயசுல எனக்குக் கல்யாணம் பேசுனாங்க. நான் மறுத்தேன். என்னைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அப்புறம் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டாலும் பகவானை அடையணும்கிற வைராக்கியத்த மாத்திக்கவே இல்லை. இருபத்தாறு வயசானப்ப ஒருநாள், பகவானை நெனைச்சுக்கிட்டு தியானத் தில் இருந்தேன். அப்ப எனக்குக் காட்சிகொடுத்த கிருஷ்ணபகவான், 'வசந்தா! இந்தப் பிறவியில நான் புட்டபர்த்தியில் சத்திய சாய்பாபாவாகப் பிறந்திருக்கிறேன். நீ அவரைப் போய்ப் பார்'னு சொல்லிட்டு மறைஞ்சுட்டாரு.

visar2jt5.jpg

பகவான் சொன்னபடி, புட்டபர்த்திக்குப் போனேன். அங்க போய் தியானத்தில் இருந் தப்ப சாய்பாபாவாகவும், கிருஷ்ணராகவும் மாறி மாறி எனக்குப் பகவான் காட்சி கொடுத்தார். இந்தப் பயணத்துக்குப் பின்னால அடிக்கடி தியானத்திலிருக்கும்போது என்னோடு பேச ஆரம்பித்தார் பாபா. அவர் என்னிடம் பேசுவதையெல்லாம் டைரி போட்டு குற்சிசி வச்சேன். அதையே நூலாக வெளியிடணும்னு பாபா எனக்கு உத்தரவு போட்டார். எனக்கு 'தமிழில் தெளிவா எழுதத் தெரியாதே'னு சொன்னப்ப, பாபாவே அடியெடுத்துக் கொடுத்து எழுத வெச்சார். அவரால் நான் எழுதிய முதல் நூலுக்கு 'இங்கே இப்பொழுதே முக்தி'னு பாபாவே தலைப்பெழுதிக் கொடுத்தார். அந்த நூலை படிச்சுட்டு, என்னைத் தேடி நிறையப் பேரு வந்தாங்க. அவங்களுக்கெல்லாம் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினார் பாபா. அவரோட உருவப்படத்துல இருந்து விபூதி, குங்குமம், சந்தனம்னு இருபத்து மூன்று விதமான பொருட்கள் வந்து விழுந்துச்சு' என்று சொல்லிவிட்டுப் புல்லரித்துப்போய் பேசுவதை சில நொடிகள் நிறுத்தியவர், மறுபடியும் தொடர்ந்தார்.

"என்னைப்பற்றி தெரிஞ்சுகிட்டு அனந்தபூர்ல இருந்து வந்த நாடி ஜோதிடர் ஒருத்தர், என்னோட கைவிரல் ரேகைய எடுத்துக்கிட்டு போய் நாடி ஜோதிடம் பார்த்துட்டு, 'அம்மா! நீங்க முன் பிறவியில ராதையா பொறந்துருக்கீங்க'னு சொன்னார். அதக்கேட்டு எனக்குப் பேரானந்தமாகிப் போச்சு. பழநி, வைத்தீஸ்வரன் கோயில்ல நாடி பார்த்தப்பவும் இதேதான் சொன்னாங்க. இதுக்கப்புறம் தியானத்துல பாபா என்கிட்ட பேசுனப்ப, 'ஆமாம், நீ என்னோட ராதைதான். ஆனா, இந்தப் பிறவியில நான் பிரம்மசரிய அவதாரம் எடுத்திருக்கிறேன். அதனால் நீயும் நானும் பிரிந்திருந்துதான் இந்த உலகத்தைக் காக்க வேண்டும்'னு சொன்னார். 'நாம ரெண்டு பேரும் ஒண்ணுசேர வழியே இல்லையா ஸ்வாமி?'னு கேட்டேன். அதுக்கு 'இன்னும் சரியா பன்னிரண்டு வருஷம் கழிச்சு தைப்பூசத்தன்னிக்கி என்னோட கலந்துவிடுவாய்'னு சொன்னார்' என்று பரவசத்துடன் கண்களை மூடிக்கொண்டார்.

"இந்த விஞ்ஞான யுகத்துல நீங்க சொல்றதெல்லாம் சாத்தியம்தானா?" என்றுகேட்டோம்.

"நான் சொன்னதை நம்பியவர்கள் பல அதிசயிக்கத்தக்க அனுபவங்களைக் கண்டிருக்கிறார்கள். இந்த முக்தி நிலையத்தின் முகப்பில் பாபா சொன்னபடி, 'முக்தி ஸ்தூபி' ஒன்றை நிர்மாணித்திருக்கிறோம். இதற்காக வாஸ்து யாகம் நடந்தப்ப, 'என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் ஸ்வாமி'னு யாகத்தீயில விழுந்துட்டேன். இங்கிருந்தவர்கள் என்னைத் தடுத்துட்டாங்க. பிறகு பூஜை அறைக்குள்ள பார்த்தா, பாபாவோட படத்துலயும் என்னோட படத்துலயும் கைகள்ல தீக்காயம் பட்டதுக்கான தழும்புகள் தெரிஞ்சுச்சு. இப்பக்கூட அது அப்படியே இருக்கு, பாருங்க(படங்களைக் காட்டுகிறார்).

visar1rf3.jpg

செப்டம்பர் 2-ம் தேதி அன்று ஸ்தூபிக்கு திறப்பு விழா. ஸ்தூபிக்கு அபிஷேகம் நடக்கிற நேரத்துல மலர்தூவி ஆசீர்வாதம் பண்ணுவேன்'னு பாபா எனக்கு வாக்கு குடுத்திருக்கிறார். அதோட அன்னைக்கி ராத்திரி இரண்டு மணிக்கு வானத்துல இன்னொரு அதிசயம் நடக்கப் போகுது. கிழக்குப் பகுதியில புதுசா ஒரு நட்சத்திரம் தோன்றும். அதைச் சுற்றி பிரகாசமான ஒளிவட்டம் ஒன்று தெரியும். இப்போது இருக்கின்ற நட்சத்திரங்கள் நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும். ஆனால், இந்த நட்சத்திரம் நல்லது மட்டுமே செய்யும். இந்த நட்சத்திரம்தான் 'வசந்தசாய் நட்சத்திரம்'.

இதையெல்லாம் எனக்கு எடுத்துச் சொன்ன பாபா, 'இஸ்ரேல், பாலஸ்தீனம், இலங்கை, காஷ்மீர்னு பரவிக் கிடக்கிற வன்முறை யுத்தத்துக்கு நீதான் முடிவு கட்டப் போறே. உன்னால்தான் இந்தப் பிரச்னைகள் எல்லாம் தீரப் போகுது. இந்தப் பிரச்னைகள் தீர்ந்த பிறகுதான் நீ என்னை வந்தடைய முடியும்'னும் சொல்லியிருக்காரு' என்றார்.

"பாபாவோட இவ்வளவு அந்நியோன்யமா இருக்கீங்க. அவரப் போய் நேருல பார்த்து, நம்ம ரெண்டு பேரும் இன்னின்னார்னு நீங்க சொல்லிக்கலையா?" என்று 'ராதை'யிடம் கேட்டோம் "இதுவரையும் நாங்க அப்படி நேருக்கு நேராய் அறிமுகமாகிக்கல. 'என்மீது உன் விரல் பட்டுவிட்டாலே, என்னுடன் நீ இணைந்து விடுவாய். அதன்பிறகு இந்த உலகத்தில் பாவங்களைப் போக்க வழியில்லாமல் போய்விடும். என்னை நினைத்து நீ விடும் கண்ணீரால், இந்த உலகத்தின் பாவம் கழுவப்படும். அதனால் நீயும் நானும் தனியாகத்தான் இருக்கணும்'னு ஸ்வாமி சொல்லி இருக்கிறார். அதனால நாங்க ரெண்டு பேரும் இதுவரை சந்திச்சுக்கல" என்றவர், "நாலு மாசத்துக்கு முந்தி பாபாவ பாக்க புட்டபர்த்திக்குப் போயிருந்தேன். போய்ட்டுத் திரும்பி வந்தப்ப, என்னோட அறையில இந்தப் படம் இருந்துச்சு!' என்று சொல்லி பி.யு. சின்னப்பா காலத்துக் கதாநாயகியின் உருவத்தை ஒத்த ஒரு படத்தை நம்மிடம் காட்டியவர், "இந்தப் படத்துக்குப் பின்னால 'பி'னு போட்டுருந்துச்சு. தியானத்துல உட்கார்ந்து ஸ்வாமிகிட்ட கேட்டப்ப, 'அடுத்த பிறவியில நான் பிரேம சாய்-ஆக பிறப்பேன். 2018-ல் நீ என்னுடன் ஜோதியாய் கலப்பாய். 2022-ல் நான் முக்தி அடைவேன். 2023-ல் நாம் இருவரும் கர்நாடக மாநிலத்திலுள்ள குணபர்த்தியில் மறுபிறப்பு எடுப்போம். அந்தப் பிறவியில் எனது பெயர் ராஜா, உனக்குப் பெயர் பிரேமா. நாமிருவரும் இப்பூவுலகில் பிறப்பதற்கு முன்பே நம்முடைய பெற்றோர்களால் நமக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிடும். அந்தப் பிறவியில் என்னை நீ அடைவாய்'னு என் ஸ்வாமி சொல்லிட்டாரு' என்றார்.

உலகில் மனிதனை விஞ்சிய ஏதோ ஒரு சக்தி இருப்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயமே. அந்த சக்தியை ஆத்திகம் பேசுபவர்கள் கடவுள் என்கிறார்கள். நாத்திகம் பேசுபவர்கள் விஞ்ஞானம் என்கிறார்கள். இரண்டுக்கும் நடுவில் இப்படியும் சில 'இரண்டுங்கெட்டான்கள்'! என்ன செய்வது? படித்துவிட்டு சிரித்துவைக்கலாம்!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நன்றி - விகடன்

உந்த மனுசியை யாராவது நல்ல மனநல வைத்தியரிடம் காட்டினால் சுகம் வரலாம். இப்படித்தான் டென்மார்க்கிலும் ஒரு மனுசி அம்மன்ர அவதாரம் எண்டு ஊரைப் பேக்காட்டுதமே. அதையும் மனநல வைத்தியரிட்ட போகச்சொல்லுங்க. சுகம் வரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இருக்கறதுவளுக்கு இப்படி பப்ளிசிட்டி தேடிக் கொடுத்தா அதுவள் ஆடுங்கள் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருக்கறதுவளுக்கு இப்படி பப்ளிசிட்டி தேடிக் கொடுத்தா அதுவள் ஆடுங்கள் தானே.

:lol:

இதையெல்லாம் எனக்கு எடுத்துச் சொன்ன பாபா, 'இஸ்ரேல், பாலஸ்தீனம், இலங்கை, காஷ்மீர்னு பரவிக் கிடக்கிற வன்முறை யுத்தத்துக்கு நீதான் முடிவு கட்டப் போறே. உன்னால்தான் இந்தப் பிரச்னைகள் எல்லாம் தீரப் போகுது. இந்தப் பிரச்னைகள் தீர்ந்த பிறகுதான் நீ என்னை வந்தடைய முடியும்'னும் சொல்லியிருக்காரு' என்றார்.

இது பெரிய சிரிப்பு ஜய்யோ ஜயோ :lol::o:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.