Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாயமான மலேசிய விமானம் ; இந்து சமுத்திரத்தில் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியாக ஏன் இருக்கக்கூடாது? ஆம். அதற்கான சாத்தியங்களே அதிகம்.
 
மலேசிய விமானம் MH370 கடைசியாக மேற்கு ஆஸ்திரேலிய கடற்பகுதியில் பறந்திருப்பதும், எரிபொருள் தீர்ந்ததால், மேற்கொண்டு பறக்க இயலாமல், இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்றும் மலேசிய பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தத் தவல்கள் அனைத்தும், Inmarsat என்கிற தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனம் தொகுத்தளித்த ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அப்படி என்ன பிரம்மாதமான தகவல் வெளியிட்டிருக்கிறது இன்மார்சேட்?
மாயமான விமானத்தில் இருந்து, இப்போதுவரை சேட்டலைட் சிக்னல் வந்துகொண்டிருப்பதாகவும், ஆனால், அதனோடு ஜி.பி.எஸ் தொடர்புகள் இல்லாததால், இருப்பிடத்தை அறியமுடியவில்லை என்றும் இன்மார்சேட் கூறியிருக்கிறது.
ஒரு தகவலை மட்டும் உருப்படியாய் சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது, தரைப் பகுதியில் இருந்துதான் இந்த சிக்னல் வந்துகொண்டிருக்கிறதாம். இதன் வாயிலாக, விமானம் ஆகாயத்தில் இல்லை எனவும், ஏலியன்கள் கடத்தவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
 
அமெரிக்காவைச் சேர்ந்த விமானங்கள் பாதுகாப்பு நிபுனர் Keith Wolzinger, “இந்த 777 ரக போயிங் விமானம், இரண்டு என்ஜின்களுமே பழுதானாலும்கூட, கடலில் மீது 100 மைல்கள்வரை பயணிக்கும் திறன் கொண்டது” என கூறியிருக்கிறார்.
விமானம், வானத்தில் வெடித்துச் சிதறினால் மட்டுமே, கடலில் பாதுகாப்பாக இறங்க முடியாது. அப்படி வெடித்துச் சிதறியிருந்தால், விமானத்தின் பாகங்களும், மனித உடல்களும் பல கிலோமீட்டர்களுக்கு நீரில் மிதந்தபடி இருந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் மிதக்கவில்லை.
 
விமானத்தில் இருந்த உயிர்காப்பு உபகரனங்கள் என்னவானது? ஒருவர்கூடவா தப்பிக்க வழியில்லாமல் போனது?
கண்டறியப்பட்ட பாகங்கள் MH370யினுடையது என்பதற்கு என்ன ஆதாரம்? அதையெல்லாம் வெளியிடும் முன்பே, அனைவரும் செத்துவிட்டார்கள் என மலேசிய அரசு அறிக்கைவிடவேண்டிய அவசியம் என்ன?
 
சமீபத்தில், el salvador நாட்டைச் சேர்ந்த alvarenga என்பவர், 13 மாதங்கள் தன்னந்தனியாய் கடலில் தத்தளித்து கரை ஒதுங்கியிருக்கிறார். அப்படியிருக்க, அனைவரும் செத்துவிட்டார்கள் என்று அறிவிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இந்த விவகாரத்தில் நாசா ஏன் வாய் திறக்கவில்லை. நாசாவால் முடியாததை எல்லாம், இன்மாசேட் செய்துவிடும் வல்லமை படைத்ததா?
எல்லோரும் செத்துவிட்டார்கள் என்றால், தீவிரவாதிகள் கடத்தவில்லை என்பது உறுதியாகிவிட்டது என கூறலாமா?
அப்படியானால், ரேடியோ மற்றும் ACARS சிஸ்டத்தை யாரும் சுவிட்ச்டு ஆஃப் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
ஃபிளைட் சிமுலேட்டர் வைத்திருந்தார் என்பதற்காக, கேட்டன் ஷாவை ஏன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினீர்கள்? அதற்கு மன்னிப்பு கேட்பீர்களா?
கீழ்க்கண்ட செய்தித் தொகுப்பு, உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கலாம்.
 
What happened to Malaysia Airlines MH370
Exploded, Fall in the Sea, Hijacked or Deliberately Hidden?
 
 
ஒரு விமானம் காணாமல் போவதற்கு 3 முக்கியமான காரணங்கள் இருக்க வாய்ப்பு உண்டு. ஒன்று, நடுவானில் வெடித்துச் சிதறுவது. இரண்டாவது, கடலில் விழுவது, மூன்றாவது விமான கடத்தல். 
 
நடுவானில் வெடித்துச் சிதறுவதற்கு, வெடிபொருட்கள் மட்டுமே காரணமாக இருக்கவேண்டும் என்பதில்லை. கார்கோ எனப்படும் விமானத்தின் சரக்குப் பெட்டகத்தில் இருக்கும், லித்தியம் பேட்டரிகள், திடீரென தீப்பற்றினாலும், விமானம் வெடித்துச் சிதறவோ, அல்லது தீ பற்றி எரியவோ, வாய்ப்பு உண்டு. 
 
ஒருவேளை அப்படி நிகழ்ந்திருந்தால், விமானத்தின் பாகங்கள் மற்றும் எண்ணெய்ச் சிதறல்கள், தரையிலோ, கடலிலோ நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.
 
இப்போது, பின்வரும் வரலாற்றை ஒப்பீடு செய்து பாருங்கள்.
 
ஜப்பானை சேர்ந்த, ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான, ட்ரீம்லைனர் விமானம் ஒன்று, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஜப்பான் நாட்டின் யாமோச்சி நகரிலிருந்து, ஹனடோ நகருக்கு பறந்து கொண்டிருந்தது. 
 
அப்போது, விமானத்தின் பேட்டரியில் பழுது ஏற்பட்டு, புகை எழுந்தது. இதையடுத்து, டகாமேசே விமான நிலையத்தில், அவசர அவசரமாக, தரையிறக்கப்பட்டது. 
 
இதையடுத்து, ஜப்பான் ஏர்லைன்சுக்கு சொந்தமான, ஏழு ட்ரீம்லைனர் விமானங்கள், மற்றும் ஆல் நிப்பானுக்கு சொந்தமான, 17 ட்ரீம் லைனர் விமானங்கள் என, மொத்தம், 24 விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
 
இந்நிலையில், அமெரிக்க அரசின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான, பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 
 
உலகம் முழுவதும், ட்ரீம்லைனர் விமானங்களை இயக்கி வரும் நிறுவனங்கள், அந்த விமானங்களின் இயக்கத்தையும், சேவைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், விமானத்தின் பேட்டரிகள், பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்யும்படி, உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறிய ஃபெடரல் ஏவியேஷன் அமைப்பு, பேட்டரியை சரி செய்யும் பணிக்கு, கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறியிருந்தது.
 
2011-12-ம் ஆண்டு வாக்கில், விமான தயாரிப்புக்கென, 1 லட்சத்து 95 ஆயிரத்து 200 கோடி ரூபாய்களை, போயிங் நிறுவனம் செலவழித்திருந்த நிலையில், இந்த பேட்டரி பிரச்னை, மேலும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை, அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியது.
 
இப்போது மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை இதனோடு இணைத்துப் பார்ப்போம். மலேசிய நாட்டுக்குச் சொந்தமான மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த 40 வருடங்களாக இயங்கி வருகிறது. உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களுள், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஒன்று. 
 
இதுவரை விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் இல்லை. ஆனால், கடந்த 10 வருடங்களாக இயங்கி வரும் பட்ஜெட் விமானங்களின் வரவு, மலேசியா ஏர்லைன்ஸுக்கு, பெரும் சவாலாக விளங்கியது. 2013-ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் பலகோடி ரூபாய்கள், இழப்பைச் சந்தித்துள்ளது.
 
Last month, Malaysia Airlines (MAS) announced a 1.17 billion ringgit ($360 million) loss for the year to December 2013, exceeding analysts' expectations. 
 
The airline, which is 70 per cent owned by Khazanah Nasional, Malaysia's state investment arm, last posted a net profit -- 237 million ringgit -- in 2010. In 2011 and 2012, it reported consecutive losses of 2.5 billion ringgit and 433 million ringgit respectively.
 
 
இந்நிலையில், MH370 விமானம் மாயமான சம்பவம், மேலும் ஒரு மரண அடியை, மலேசியா ஏர்லைன்சுக்கு கொடுத்திருக்கிறது. பங்குச் சந்தையில், மலேசியா ஏர்லைன்ஸின் மதிப்பு, தற்போது பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. 
 
இந்நிலையில், ட்ரீம்லைனர் விமனத்தில் ஏற்பட்டதுபோல், தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு, விமானத்தை பத்திரமாக தரையிறக்க முடியாமல் போயிருந்தால், ட்ரீம் லைனர் விமானம் போலவே, போயிங் விமான சேவையும், உலகம் முழுவதும் நிறுத்தப்படலாம்.
 
டிரீம் லைனர் விமானத்தை தயாரித்து வழங்கிய நிறுவனம்தான், போயிங் விமானங்களையும் தயாரித்து வழங்குகிறது. ஏற்கெனவே, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போயிங் நிறுவனத்துக்கு, இது மரண அடியை கொடுத்துவிடும். அவர்களால், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இழப்பீடாக வழங்க முடியாது. 
 
 
உதாரணத்திற்கு, காணாமல் போன விமானம், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, விமானத்தில் இருந்தவர்கள் மயக்க நிலை அடைந்ததாக வைத்துக்கொள்வோம். அப்போது, விமானத்தின் ஆட்டோ பைலட் தொழில்நுட்பமானது, புரொக்ராம் செய்யப்பட்ட விமான நிலையத்திற்கு, பத்திரமாக வந்து தரையிறங்கிவிடும் என்கிறார்கள்.
 
ஒருவேளை, காணாமல் போன மலேசிய விமானத்தில், ஆட்டோ பைலட் தொழில்நுட்பம் செயல்படாமல் போயிருந்தால், அதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனமும், மலேசிய அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும். 
 
ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போயிங் நிறுவனமும், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனமும், இத்தகையை இழப்பீட்டில் இருந்து தப்பிக்க, உண்மையை மறைக்க முயல்வதாகவும், ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.
 
முன்னதாக, காணாமல் போன மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என, ஐக்கிய நாடுகள் சபையின் அணு திட்ட கண்காணிப்பு அமைப்பு, கடந்த 18-ம் தேதி, திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. 
 
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன், “விமானம் நிலத்திலோ, கடலிலோ விழுந்ததற்கான, உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார். 
 
அணு உலை விபத்துக்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை கொண்டு, விமான விபத்துகளையும் அறிந்துக்கொள்ள முடியும் எனக் கூறிய ஸ்டீபன், 
 
அக ஒலி கண்காணிப்பு என்ற அதி நவீன தொழில் நுட்பம் மூலம், நடுவானில் நிகழும் விமான விபத்து, எரிமலை வெடிப்பு ஆகியவற்றை, துல்லியமாக கண்டறிய முடியும் என்று கூறியுள்ளார்.
 
இதேபோல், கடந்த 19-ம் தேதி செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கார்னே, “காணாமல் போன மலேசிய விமானம் இந்திய கடல் பகுதியில் விழுந்திருக்க வாய்ப்பில்லை எனவும், விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில், மலேசிய அரசுடன் அமெரிக்க அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 
இதற்கு காரணம், இந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டிருக்கும் ராணுவ ரகசியங்கள் அடங்கிய Diego Garcia தீவு.
 
for more details 
 
 
Thanks Perazhagan Bala 
  • கருத்துக்கள உறவுகள்

எம்.எச்.370: மீண்டும் தேடலை தொடங்கியது ஆஸ்திரேலியா

இந்திய பெருங்கடலில் ஏற்பட்டிருக்கும் வானிலை மாற்றத்தை அடுத்து விமானத்தை தேடும் பணியை ஆஸ்திரேலியா இன்று மீண்டும் தொடங்கியது.

ஆஸ்திரேலியா முழு தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனுடன் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் விமானங்களும் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளன.

இந்திய பெருங்கடலில் வமானத்தின் பாகம் மிதப்பது போன்று கிடைத்த செயற்கைகோள் படத்தின் ஆதாரத்தை கொண்டு மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய கடற்படை தொடங்கியது.

இந்திய பெருங்கடலில் நிலவிய நோசமான வானிலை மற்றும் இருள் சூழல் காரணமாக நேற்று(செவ்வாய்கிழமை) அந்த தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கியது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் பாகங்களைத் தேடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. பெர்த் பகுதியில் இருந்து 2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தொலைவில் தேடும் பணியில் ரிமோட் மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக மாயமான எம்.எச்.370 மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் மூழ்கி அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டனர் என்று அந்த நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா கடல் நடுவில் அமைந்துள்ள கடற்பரப்பில் ஐந்து நாடுகளை சேர்ந்த விமானங்கள் தேடுதலை மேற்கொண்டது.

இந்திய பெருங்கடலில் விமானம் நொருங்கி விழுந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் விமானத்தின் பாகங்கள் இருக்கும் கடல்பறப்பை கண்டறிவதில் மிகுந்து சிரமம் ஏற்பட்டது.

நொருங்கி விழுந்த விமானத்தின் கருப்பு பெட்டி கடலில் மூழ்கி இருந்தால் அதிலிருந்து வெளிவரும் சிக்னல் உதவியுடன் கருப்பு பெட்டியை மீட்க முடியும் என்று அமெரிக்க கடற்படை உறுதியுடன் தெரிவித்திருந்தது.

கடலுக்கு அடியில் இருக்கும் கருப்பு பெட்டியின் பேட்டரி ஒரு மாததில் செயலிழந்து விடும். விமானம் கடந்த 8- ஆம் தேதி மாயமான நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் இந்த தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ப்ளுபின் - 21' என்ற, கடலுக்கடியில் தானாக இயங்கி, கருப்பு பெட்டியை கண்டறியும் கப்பல் இன்று ஆஸ்திரேலியாவுக்கு விரைகிறது. இந்த கப்பல், 14,700 அடி ஆழம் வரை சென்று, கறுப்பு பெட்டியை ஓரிரு நாளில் கண்டறியும் திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, சீன வெளியுறவு அமைச்சர், ஜி ஹாங்ஷெங் குறிப்பிடுகையில், ''விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான, செயற்கைக் கோள் தகவல்கள் அனைத்தையும், மலேசிய அரசு தர வேண்டும். விமானத்தை கண்டுபிடிக்கும் வரை, தேடுதல் பணியை நிறுத்தக் கூடாது. சீனாவின் சார்பில் ஆறு கப்பல்களும், இரண்டு விமானங்களும் தொடர்ந்து தேடும்'' என்றார்.

மலேசிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஸ்காமுதின் ஹூசைன் கூறுகையில், ‘‘சீன செயற்கைகோள் அனுப்பியுள்ள படத்தில் விமானத்தின் பாகம் உள்ளதாக ஒரு உத்தேசம் மட்டுமே ஏற்பட்டுள்ள நிலையில் தேடல் தொடங்கியது. எனினும் விமானத்தின் நிலை என்ன என்பதினை தீர்மானிக்கு பொருட்டு சர்வதேச செயற்கைக்கோள் மற்றும் விமானம் செயல்திறன் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது” என்றார்

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D370-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article5834538.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

Auto pilot விமான நிலையத்திற்கு அருகில் மட்டுமே கொண்டு செல்லும். அங்கிருந்து விமானிதான் கட்டுப்பாட்டை எடுத்து தரையிறக்க வேண்டும். அவ்வாறு எடுக்காதுபோனால் விமான நிலையத்துக்கு அருகாமையில் வானத்தில் வட்டமடிக்கும் வகையில் auto pilot இல் program செய்யப்பட்டிருக்கும்.

ஒருமுறை கிறீஸ் நாட்டின் விமானம் ஒன்றில் பிராணவாயு இழப்பு ஏற்பட்டபோது பயணிகளும் விமானிகளும் மயங்கிவிட்டார்கள். விமானம் தரையிறங்கவேண்டிய இடத்திற்கு வந்தவுடன் வானில் வட்டமிட ஆரம்பித்துவிட்டது. உஷாரான விமான நிலைய அதிகாரிகள் விமானப்படைக்கு அறிவித்தார்கள். அவர்கள் இரண்டு போர் விமானங்களில் சென்று விமானத்தை அவதானித்தபோது அனைவரும் சுயநினைவை இழந்திருப்பதைக் கண்டார்கள். ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை. எரிபொருள் தீர்ந்ததும் விமானம் விழுந்துவிட்டது. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.