Jump to content

வாழைக்காய் பஜ்ஜி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

26-25-banana-bajji.jpg

தேவையான பொருட்கள்: 
 
வாழைக்காய் - 1 (தோலுரித்து, நீளமாக வெட்டியது)
கடலை மாவு - 1 கப் 
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
சோடா உப்பு - 1 சிட்டிகை 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
ஓமம் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப் 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, ஓமம், மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். 
 
எண்ணெயானது சூடானதும், அதில் நீளமாக வெட்டி வைத்துள்ள வாழைக்காயை மாவில் பிரட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி!!! 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிளகாய் பஜ்ஜிதான் விருப்பம்...! நன்றி தமிழரசு ...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் போது... வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுள்ளேன்.
அதன் சுவை... இப்போதும் ஞாபகம் உள்ளது.
பின்பு இங்கு வந்து சமைக்க சந்தர்ப்பமோ... ஞாபகமோ... வரவில்லை.
இப்போது ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி தமிழரசு. :)

சோடா உப்பு என்பது... பேக்கிங் பவுடரா?

எனக்கு மிளகாய் பஜ்ஜிதான் விருப்பம்...! நன்றி தமிழரசு ...! :)

சுவி, கையோடை... மிளகாய் பஜ்ஜி செய் முறையையும் இணைத்து விடுங்கள்.
மிளகாய் பஜ்ஜிக்கு எந்த வகையான... மிளகாய் போடுவது மறக்காமல் எழுதுங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bo983.jpg

மிளகாய் பஜ்ஜி.

__  மிளகாயை  ஸ்டீமரில் சிறிது வேகவைக்கவும். ( 2 ஆவி போதும். பஜ்ஜிக்கு இந்த மிளகாய்தான் நல்லது.)

__  பற்றிஸ்சுக்கு செய்வதுபோல் உருளைக் கிழங்குப் பிரட்டல் கறி செய்யவும்  உள்ளுடனுக்கு. ( டின் மீன், அரைத்த இறைச்சி, றால் உங்களுக்குத் தேவையான மாதிரி)

__  கோதுமையும் கடலைமாவும் அளவாகக் கலந்து பெருங்காயம், உப்புப் போட்டு தோய்க்கப் பதமாய்க் கரைக்கவும். ( தனிக் கோதுமையிலும் செய்யலாம், பெருங்காயம் பிடிக்காவிட்டால் தவிர்க்கலாம்.

__   அவித்த மிளகாயை  நடுவில் கீறி அதில் உள்ள கொட்டைகளை அகற்றி விட்டு , அதனுள் கறியை  நிரப்பவும்.

__  பின் கரைசலில் தோய்த்து  அடுப்பை மெல்லிய சூட்டில் வைத்து  எண்ணையில்  ஜெனிலியா நிறத்தில்  பொரித்து எடுக்கவும். ( றஸ்க் தூளீலும் முட்டை சேர்த்து கரைத்தும் பொரித்து எடுக்கலாம். கருகவிடக் கூடாது. நிறம் முக்கியம்)

__  இதை தக்காளி ஹாட் சாஸுடன்  தொட்டுச் சாப்பிட அந்தமாதிரி இருக்கும். :rolleyes::)

:D  :D  நன்றி சுவி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.