Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் படை தளபதிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் படை தளபதிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சு!
ஏப் 6, 2014
 வலிகாமம் வடக்கில் பாடசாலைகள், ஆலங்கள், வீடுகள் என்பவை அழிக்கப்பட்ட சம்மபவங்கள் தொடர்பாக கூட்டமைப்பு இன்று யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதியைச் சந்தித்துப் பேசவுள்ளது.
 
வலி.வடக்கு மக்களுடைய மீள்குடியேற்றம் மற்றும் அப்பகுதிகளில் இருந்த பாடசாலைகள், ஆலங்கள், மக்களுடைய வீடுகள் என்பவை இடித்து அழிக்கப்பட்ட சம்மபவங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதியைச் சந்தித்துப் பேசவுள்ளது.
 
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் அமைந்துள்ள பலாலி படைத்தலமையகத்திலேயே மேற்படிச் சந்திப்பு நடைபெறவுள்ளது.இச் சந்திப்பில் யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதி உதயப்பேராராவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி சந்தித்துப் பேசவுள்ளார்.
 
இது தொடர்பில் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவிக்கையில்..
 
கடந்த 23 வருடமாக மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்காமல் இராணுவத்தினர் தமது உயர்பாதுகாப்பு வலையமாக வைத்துள்ள வலி.வடக்குப் பகுதியினை விடுவிக்கக் கோரியும், அப்பகுதிகளில் உள்ள மக்களுடைய வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள், பொது மண்டபங்கள் மற்றும் வியாபார நிலையங்கள் என்பவை இடித்தழிக்கப்படுவதை நிறுத்துமாறும் கோரி கடந்த பெப்ரவெரி மாதம் 24 ஆம் திகதி யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்திருந்தேன்.
 
மேலும் அக்கடிதத்தில் குறித்த நிலத்தில் வளங்கள, பெருமைகள் மற்றும் மக்களுடைய மீள்குடியேற்றத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும், இடம்பெயர்ந்து முகாங்களில் வாழும் மக்களுடைய அவல நிலை தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தேன்.
 
அக்கடிதத்திற்கு பதிலளிக்கும் முகமாக நேற்று முன்தினம் யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதியின் அலுவலகத்தில் இருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. அத்தொலைபேசியில் உரையாடிய இராணுவ அதிகாரி என்னால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் கட்டளைத்தளபதி பேசவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
 
அதனடிப்படையில் இன்று மாலை 2.30 மணிக்கு பலாலி படைத்தலமையகத்திற்கு வருகைதருமாறும் குறியுள்ளார்.இச் சந்திப்பில் வலி.வடக்கு மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பில் உறுதிபடி வலியுறுத்தவுள்ளேன் என்றும் அவர் மேலும் http://www.sankathi24.com/news/40157/64//d,fullart.aspxதெரிவித்துள்ளார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.