Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகநூலில் ரசித்தவை

Featured Replies

  • தொடங்கியவர்

10446675_337736859711553_497445505649484


10441309_324811187667595_386428898446024

  • Replies 178
  • Views 29.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?v=207125246095156

  • தொடங்கியவர்
எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
 
 
thanjavur.jpg
   
   ராஜராஜேச்சரத்தின் நெடிதுயர்ந்த ஸ்ரீ விமானத்தைப் பார்க்க நேரும்போதெல்லாம் என்னுள் இந்தக் கேள்வி எழும்: எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
 
                   இந்தக் கேள்விக்கு ஒரே மாதிரியான பதில்தான் கிடைக்கிறது: ஸ்ரீ விமானத்தைச் சுற்றி மண் சாய்வுத்தளம் அமைக்கப்பட்டு, அதன் வழியாக யானைகள் துணையுடன் கற்கள் கொண்டுசெல்லப்பட்டு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தஞ்சாவூர்ப் பகுதியில் இது தொடர்பாக  சரளமாகப் புழங்கும் இரு கதைகள் உண்டு. ஒன்று, பெரிய கோயிலைச் சுற்றி குளங்கள் வெட்டப்பட்டு, அவற்றின் மூலம் பெறப்பட்ட மண்ணால் மண் சாரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த கதைக்குச் சாட்சியாக குளங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மற்றொன்று, தஞ்சாவூருக்கு வடகிழக்கேயுள்ள சாரப்பள்ளம் என்னும் ஊரிலிருந்து மண் சாய்வுதளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கதைக்கு சாட்சியாக சாரப்பள்ளம் ஊர் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், இந்த விளக்கங்கள் எப்போதுமே எனக்கு திருப்தி அளித்ததில்லை. நாம் நம் முன்னோரின் திறனைக் குறைத்து மதிப்பிடுகிறோமோ என்று தோன்றும். இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ராஜராஜேச்சரத்தில் ஸ்ரீ விமானத்தின் மையத்தில் இருக்கிறது பெருவுடையார் திருமேனி. இதிலிருந்து ஏறத்தாழ 191 அடி உயர இடைவெளிக்கு அப்பால் உச்சத்தில் இருக்கிறது ஸ்ரீ விமானத்தின் சிகரக் கலசம். பெருவுடையார் திருமேனியின் மையமும் சிகரக் கலசத்தின் மையமும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. இந்த நேர்க்கோட்டைக் கற்பனை செய்தவாறே சுற்றியுள்ள ஸ்ரீ விமானத்தைக் கற்பனை செய்யுங்கள். எப்பேர்ப்பட்ட மகத்துவமான கட்டமைப்பு இது?!
 
                   நவீனங்கள் எழுச்சிபெற்ற ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.  நாம் வசிக்கும் இந்தப் புவிக் கோளத்தின் எந்த ஒரு பகுதியையும் நினைத்த மாத்திரத்தில் அணுகவும் மாற்றியமைக்கவும் அழிக்கவுமான தொழில்நுட்பத்தை, சாதனங்களை, வல்லமையை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நாம் கொண்டிருக்கும் இந்த நவீன வசதிகள் அனைத்தையும் பயன்படுத்தி இப்படியொரு மகத்துவத்தை விஞ்சக்கூடிய ஒரு கோயிலை இதே துல்லியத்துடன் நம்மால் கட்டியெழுப்ப முடியுமா? சந்தேகம்தான். ஆனால், முடியும் என்று சாத்தியமாக்கிய நம் முன்னோரின் தொழில்நுட்பம் எத்தகையானதாக இருந்திருக்கும்? நிச்சயம் இப்படியோர் கட்டுமானத் திறன் ஒரேயொரு கட்டடத்தில் வெளிப்படக் கூடியதல்ல. நீண்ட கால மரபின் உச்சமாகவே இந்தப் படைப்பு முகிழ்ந்திருக்க வேண்டும். அப்படியென்றால், நம்முடைய முன்னோரின் மரபு எத்தகையதாக இருந்திருக்கும்?
 
                   நீண்ட காலமாக அழுத்திக்கொண்டிருந்த கேள்வி இது:  எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?  
 
                   அண்மையில் ஒரு தகவல் கிடைத்தது. ராஜராஜ சோழன் ஒரு நிலப்பகுதியை கீழ்முந்திரியாகப் பிரித்திருக்கிறான் என்ற தகவல் அது. கீழ்முந்திரி என்பது கீழ்கணக்கிலுள்ள ஓர் அளவு. ஒன்றைப் பங்கு போட கையாளப்பட்ட கணக்கே கீழ்கணக்கு. முக்கால் என்ற அளவில் தொடங்கும் அந்தக் கணக்கு அதிசாரம் என்ற அளவில் முடிகிறது. முக்கால் என்பது ஒரு ரொட்டியின் நான்கில் மூன்று பங்கை குறிக்கிறது (3/4) என்றால், அதிசாரம் என்பது ஒரு ரொட்டியின் பதினெட்டு லட்சத்து முப்பத்தியெட்டாயிரத்து நானூறில் ஒரு பங்கைக் குறிக்கிறது (1/18,38,400). இதில், கீழ்முந்திரி  என்பது ஒரு ரொட்டியின் லட்சத்து இரண்டாயிரத்து நானூறு (1/1,02,400) கூறுகளில் ஒரு பங்கைக் குறிக்கும்.
 
                   நவீனத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நமக்கு கீழ்கணக்கு தெரியாது. நமக்கு முந்தைய தலைமுறையினர் இந்தக் கணக்கை அறிந்திருக்கலாம். எனினும், அந்தக் கணக்கிலுள்ள பல்வேறு வகைமைகளில் எந்த அளவு வரை கையாண்டிருக்கக் கூடும் என்று தெரியவில்லை.  ஆனால், ராஜராஜன் தலைமுறையோ மிக நுட்பமான இந்தக் கீழ்கணக்கை முழுமையாக அறிந்திருக்கிறது. நுட்பமான கீழ்கணக்கை முழுமையாகக் கையாண்டிருக்கிறது.
 
                   எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
 
                   இந்தத் தலைமுறையின் அறிவிலிருந்து அந்தத் தலைமுறையின் அறிவை அறுதியிட முனைவது அறிவீனமாகத் தோன்றுகிறது.
 
எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
 
இந்தக் கேள்விக்கான பதில் இப்போது புலப்படுவதுபோல இருக்கிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்
கோழிக்கும் பூனைக்கும் இடையில் ஒரு சிறிய உடன்பாடு  :)
 
https://www.facebook.com/photo.php?v=735653593143461
  • தொடங்கியவர்

10574244_10154482599495173_7339396248126

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி புன்னகை ஆரம்பமானது!

'மூளை விஞ்ஞானத்தின் மார்கோ போலோ’ என்று அழைக்கப்படும் ராமச்சந்திரன், எப்படி புன்னகை ஆரம்பமானது என்பது குறித்து எழுதியிருக்கிறார். மனிதக் குரங்கினங்களில் எல்லைப் பகுதி எது என்கிற போட்டி வந்துவிட்டது. ஒரு மனிதக் குரங்கினம் வாழும் பகுதிகளில் மற்றொரு மனிதக் குரங்கினம் தப்பித் தவறி நுழைய நேர்ந்தால், அதைத் தொலைவில் பார்த்த உடனேயே அந்தப் பகுதியைச் சார்ந்த விலங்கு தன்னுடைய கோரைப் பற்களைக் காட்டி 'கடித்துவிடுவேன்’ என்று பயமுறுத்தும். உடனே அந்த எதிராளியும் 'எனக்கும் கோரைப் பற்கள் இருக்கிறது. ஜாக்கிரதை’ என்று பதிலுக்குப் பல்லைக் காட்டும். அருகில் வந்த பிறகு தன் குழுவைச் சார்ந்தது என்று தெரிந்ததும், அந்தப் பல்லைக் காட்டுவது புன்னகையாக மருவியது. இந்தப் பண்பை பரிணாம வளர்ச்சியில் மனிதன் தக்க வைத்துக்கொண்டான். 'நீ ஆபத்து இல்லாதவன். நானும் பல்லைக் காட்டுகிறேன்’ என்பதில்தான் ஒரு தற்காப்புக்காக புன்னகை தொடங்கியது. இப்போதும் நாம் மேலதிகாரியைப் பார்த்தால் புன்னகைப்பது ஒரு பாதுகாப்புக்காகத்தான்.

ஜூனியர் விகடனில் திரு.இறையன்பு எழுதும் மனிதன் மாறி விட்டான்! பகுதியில் இருந்து..

  • தொடங்கியவர்

விடுதலைக் குரல் வழிந்தோடும் சிம்பொனி...

 

அண்மையில் பின்லாந்து சும்மா சுற்றிப் பார்க்கப் போன போது,கொஞ்சம் சீரியஸ் ஆக பார்க்க நினைத்த ஒரு இடம் " பின்லான்டியா " என்ற ஒரு சிம்பொனி இசை வடிவத்தை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் என்ற பின்லாந்து நாட்டவரின் நினைவிடம்.  அந்த நாட்டின் தலை நகரம் ஹில்சின்கியில் உள்ள அவரின் வீட்டை. வார இறுதி விடுமுறை நாளில் போனதால் தற்சமயம் முயூசியம் ஆக்கப்பட்டுள்ள  அவரின் அந்த வீடு மூடி இருந்தது. " பின்லான்டியா " சிம்பொனி எவளவு அதிசயமோ, அவளவு அதிசயம் அதை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் இன் வாழ்க்கை, அதைவிட அதிசயம் அதை இசை அமைக்க அவர் பட்ட கஷ்டம். அதன்  பின்னால் உள்ள அடக்குமுறை சர்வாதிகார  பழிவாங்கல்கள். பிராந்திய வல்லரசுகளின் அட்டகாசம்.

 

 

பொதுவாக நாடுகள் சுற்றிப் பார்க்கப் போனால் அந்த நாடுகளின் பெண்டுகளை வேடிக்கை பார்பது தான் எப்பவும் முக்கியமா இருக்கும். கொஞ்சம் அங்கே இங்கே  படித்த உலக விசியங்களை நேரம் இருந்தால் ஆர்வக்கோளாரில நோண்டிப் பார்ப்பது." பின்லான்டியா "  என்ற பெயரில் ஒரு மயக்கும் வோட்கா குடிவகை உலகப் பிரசித்தம் என்று என்னைப் போன்ற கவுரவமான பெருங் குடிமக்களுக்கு நல்லாத் தெரியும்,ஆனால் அந்த " பின்லான்டியா " என்ற பெயரில் வோட்காவை விட மயக்கும்  ஒரு  உலகப் புகழ்  சிம்பொனி இருக்கு எண்டு பலருக்கு தெரியாது. அதுக்கு முக்கிய காரணம் அதை உருவாக்கியவர் வாழ்ந்த பின்லாந்து வடக்கு ஐரோப்பாவின் தொங்கலில் ,பால்டிக் கடல் விளிம்பில் உள்ள பின்லாந்து அதிகம் சென்ற நுற்றாண்டில்  மத்திய ஐரோப்பா கவனிக்கப்பட்ட அளவு கலை இலக்கிய வெளிச்சம் அதன் மீது விழாமல் இருந்தது எண்டு நினைக்கிறன். வெறும் எட்டு நிமிடம் மட்டும் இசைக்கப்படும் " பின்லான்டியா " மூலம் அந்த வெளிச்சத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் மீது தாராளமாகவே வீச வைத்தார் ஜோன் சிபிலிஸ்.

 

ஜோன் சிபில்ஸ் அவர் இசை அமைத்த " பின்லான்டியா " பற்றி கேள்விப்பட்டு,அதைக் கேட்டும் இருக்குறேன்,ஹெசின்கிக்கு நான் போன பகல் வேளை மழை வெளிய பெய்ய ஒரு பப்பில போய் இருந்து ஒரு பியரை வேண்டி உறிஞ்சிக் கொண்டு இருத்த நேரம் அந்த பப்பில சிபிலிஸ் இசை அமைத்த " லேக் சுவான் " என்ற இசை கோர்வையும்,வேறு சில கிளாசிகல் இசையும் மெதுவாக யாருக்கும் நோகாமல் ஒலிக்க விட்டு இருந்தார்கள்,அங்கே வேலை செய்த பெண்ணிடம் ஆங்கிலத்தில் சிபிலிஸ் பற்றியும் பின்லான்டியா பற்றியும் கேட்டேன்,அவள், கொஞ்சம் சொன்னாள், " சிபிலிஸ் இன் வீடு இங்கே அருகில தான் , கொஞ்சம் தள்ளி கொர்ர்ப்பி சதுக்கத்தின் முடிவில் வரும் நடைபாதையின் முடிவில் இருக்கு,ஒரு பத்து நிமிடம் நடந்தால் போய்ப் பார்க்கலாம் " எண்டு சொன்னாள், " பின்னிஷ் மக்கள் நேரம் காலம் இல்லாத தண்ணிச்  சாமிகள் எண்டுதான் கேள்விப்பட்டேன்,இப்படி உலகத்தரமான ஆட்கள் உன்னோட நாட்டில் இருந்து இருகுரார்களே,ஆச்சரியம் " என்றேன், அதுக்கு அவள் " அப்படி ஒரு வதந்தி பின்ட்லாண்டுக்கு வெளிய தான் உலாவுது " எண்டு முகத்தில அடிச்ச மாதிரி சொன்னாள் சிரித்துக்கொண்டே.

 

 

" பின்லான்டியா " ஒரு சுதந்திர விடுதலைக் குரல் வழிந்தோடும்  சிம்பொனி , பின்லாந்தை ரசியப் பேரரசு  மறைமுகமாக அடக்கி ஒடுக்கிக்கொண்டு இருந்த நேரம் இசை அமைக்கப்பட்ட இசை வடிவம்,அதால ரசியா அதை தடை செய்தது, பல பின்லாந்து கலாசார விளிமிய அடையாளங்கள் அங்கங்கே அள்ளித் தெளிக்கப்பட்ட " பின்லான்டியா " இசை அருவியை ஜோன் சிபிலிஸ் அதை முறிஞ்சு முறிஞ்சு எழுதியது மட்டும் தான் ,அதை மேடை ஏற்ற பின்லாந்தில் தடை இருந்தது. எப்படியோ அது வேறு பெயரில் பல ஐரோப்பிய நகரங்களுக்கு கசிய,அதன் பெறுமதி கொஞ்சம் கொஞ்சமா வியன்னா வரை  பிரபலம் பெற்று இருக்கு. அந்த இசையின் கோலங்கள் நாடுகள், எல்லைகள்,மொழிகள்  தாண்டி அமுத மழை பொழிந்து இருக்கு .

 

 

பின்லாண்டியாவை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் டாக்டர் வேலை செய்த பெற்றோருக்கு கொஞ்சம் வசதியான  குடும்பத்தில் பிறந்தவர், சின்ன வயசிலேயே இசை ஆர்வம் இருந்ததால் தேவாலயத்தில் இருந்த ஒரு பியானோவில் வாசித்து இசைக் குறிப்புகளை எழுதி எழுதி வீட்டுக்கு வந்து அதை மனத்தால இன்னும் மெருகு ஏற்றிக்கொண்டு அடுத்தமுறை தேவாலயம் போய் இன்னும் வாசித்து, இப்படிதான் பலவருடம் அதை உருவாக்கி இருக்குறார். சொந்தமாக ஒரு பியானோ வேண்டுவரை அப்படிதான் தேவாலய பியானோவில் இசை அமைத்து அதை நோட் வடிவில் எழுதி இருக்குறார்.

 

 

முதல் முதல் ஒரு பழைய பியானோ வேண்டி அந்த பியானோ வேண்டியபின், பல இசைக் கருவிகள் போட்டு ஒகேச்டிரா ஸ்டைலில் வாசிக்கும் முறையில் எழுதிய பின்லாண்டியாவை, அதன் பின் ஜோன் சிபிலிஸ் ஒரு பியானோவில் வாசிக்கும் ஒரு முறையில் ,முழு நேரமா பின்லான்டியா சிம்போனியை உருவாக்கி உள்ளார் .ஜோன்  சிபிலிஸ் ஏழு சிம்பொனிகள் இசை அமைத்து உள்ளார்,அதில் " பின்லான்டியா " தான் பின்லாந்தின் உயிரை அதில பிடிச்சு வைச்சு இருக்கு எண்டு சொல்லுறார்கள். அவரின் தேசிய சேவையைக் கவுரவிக்க பின்லாந்தின் காசில் அவர் படம் வந்து இருக்கு, ஆனால் பின்லாந்து காசு ஈய்ரோ என்ற ஐரோப்பிய யூனியன் காசாக மாறிவிட்டது சில வருடங்களில்.

 

 

பின்லாந்தின் ஆர்டிக் இயற்கை, குளிர் காலநிலை, சாமே கலாசாரம் , எல்லாத்தையும் இசை ஆக்கிய பின்லான்டியா சில வருடம் பின்லாந்தின் தேசிய கீதம் போல இருந்து இருக்கு. அதை உருவாக்கியா ஜோன் சிபிலிஸ் அதை மத்திய ஐரோப்பாவின் மிகச்சிறந்த ஒபேரா இசை அரங்குகளில் அது இசைக்கபடுவதை பார்க்க விரும்பினார், பல வருடம் ரசியா அதை தடை செய்து வைத்திருந்தது,வேறு சில தனிப்பட்ட காரனம்களால் அவரால் அதை பார்க்கவே முடியாமல் போக, தனிமையில் யாரையுமே சந்திக்காமல் வாழ்ந்து ,வயதாகி, பின்லாந்தின் ஒரு சிறிய நகரத்தில் ஒரு விண்டர் இரவு நேரம் அமைதியாக இறந்து, அவரின் இசைப் பயணம் முடிந்து போக, ஜோன் சிபிலிஸ்ன் சரஸ்வதிக் கைகளில் உருவான அவரின் " பின்லான்டியா " உயிர் பெற்று உலகம் முழுவதும் அதிசயிக்க வைக்கத் தொடங்கியது.....

 

 

நாவுக் அரசன் ஒஸ்லோ 01.08.14

 

10513373_10204058885573642_5415695208894

 

நன்றி நாவுக்கரசன்.(Naavuk Arasan)

10468095_10203985572140852_4111176859850

 

முகநூலிலிருந்து

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

பிலே ஒரு வுமனைசர்

 

10514575_10203832769240875_6199796071687

 

பிலே என்ற பெயர் ஹிபுரு மொழியில் அதிசயம் என்ற அர்த்தத்துக்கு கொஞ்சம் நெருக்கமான அர்த்தம் உள்ள இந்தப் பெயர்தான் இன்றுவரை புட் போல் என்ற கால்ப் பந்தாடத்தின் மிக முக்கிய அதிசயம். இந்த நுற்றாண்டின் சிறந்த புட்போலர் என்ற ஒரு நுற்றாண்டு பிரமிக்கும் இந்த எளிமையான மனிதர் பிரேசிலில் மிகவும் வறுமைப்பட்ட நகரமான சாவ் பாவ்லோ நகரில் மிகவும் வறுமைப்பட்ட ஒரு பெற்றோர்களுக்கு பிறந்து ,சின்ன வயசில் ,படிக்க வசதி இல்லாமல் தெருவோர தேத் தண்னிக்கடையில் சப்பிளையர் வேலை செய்து கால் பந்து வேண்ட காசில்லாமல் கடதாசிப் பேபரை சப்பாத்து சொக்ஸ் இக்குள் அடைந்து அதை புட் போல் போல விளையாடியவர். இன்று அவர் பெயர் இல்லாமல் ஒரு புட் போல் விளையாட்டே இல்லை.
 
நமது மாபெரும் பெருமை எப்பொழுதும் தோற்காமல் இருப்பதில் இல்லை; ஒவ்வொரு முறை வீழ்கிற பொழுதும் அயராது கம்பீரமாக எழுந்து நிற்பதில் தான் இருக்கிறது என்று தற்சமயம் எழுவத்தி மூன்று வயதிலும் உற்சாகமாக இருக்கும் பிலே பதினாலு வயதில் புட் போல் விளையாட ஆரம்பித்தார், பதினாறு வயதில் அவர் விளையாடிய முதல் வேல்ட் கப் மேட்ச்சிலையே சிறந்த இளம் அறிமுக வீரர் எண்டு சொல்லி விருது வேண்டியவர் . மூன்று முறை பிரேசில் வென்ற வேர்ல்ட் கப் இலும் அவர்தான் காரணம் பிரேசில் வெல்ல, வேர்ல்ட் கப் மட்சில் மட்டும் எழுவத்தி ஏழு கோல் அடித்து இருக்கிறார், இதற்கு மேல நிறைய லத்தின் அமரிக்கன் கப் மட்ச்கள்.அவர் விளையாடிய பிரேசிலின் முக்கிய கிளப் ஆன சாந்தோஸ் என்ற கிளப் க்கும் அதிக காலம் விளையாடிய வீரர் பிலே. 
 
பிலே பிரேசிலின் தேசிய சொத்து, அவர் அவளவு முக்கியம் பிரேசில் நாட்டு மக்களுக்கு . அதனால அவர் என்ன சொன்னாலும் அது கொஞ்சம் அதிகமாக கவனிப்பு பெற, சமூக ஏற்ற தாழ்வு அதிகம் உள்ள பிரேசிலில் அவர் சொன்ன அரசியல் சீர்திருத்த கருத்துக்கள் அரசியலில் குழப்பம் உண்டாக்க, இப்பொழுது கடைசியா பிரேசில் நாட்டு விளையாட்டு அமைச்சரா இருந்தது ஓய்வு பெற்று, நிறைய மனிதாபிமான உதவும் நிறுவனங்களில் கவுரவ அங்கத்தினரா இருக்குறார், இந்த வருடம் நடக்கும் பிரேசில் வேர்ல்ட் கப் கால்பந்தின் முக்கிய கோஷமான../////கால்ப் பந்து உலகத்தில் உள்ள எல்லாருக்கும்//// என்ற வாசகத்தையே பிலே தான் எழுதிக் கொடுத்ததா சொல்லுறார்கள்.
 
பிலே ஒரு வுமனைசர் , பெண்கள் அவர் காலுக்க நிண்டு பந்து போல சுழன்டார்கள். பிலே இன் தனிபட்ட வாழ்கை அவர் விளையாடிய புட் போலை விட சுவாரசியம், அவர் பல முறை சட்டப்படி திருமணம் செய்தார்,,சட்டத்துக்கு வெளியேயும் திருமணம் செய்தார், சட்டத்தை காலுக்க போட்டு மிதித்து கால் பந்து போல உதைந்தும் திருமணம் செய்யாமல் பிள்ளைகள் பிறந்த போது,அவரின் புகழின் வழி வந்த கோடிக்கணக்கான சொத்துக்கு பங்கு கேட்டு பல குழப்பம் அவரின் பிள்ளைகள் வடிவில் வந்து அவர் வாழ்க்கை வேர்ல்ட் கப் ரேஞ்சுக்கு பரபரப்பா இருந்தது சில வருடங்களின் முன்னர். வெளையாட்டு வீரன் இப்படி எல்லாம் விளையாடாமல் வேற யார் வெளையாடுறது. ஆனாலும் பிலே இன் தனிபட்ட வாழ்கை அவர் விளையாடிய புட் போலை விட அதிகமா அடி வேண்டி, அதிகமா உருண்டும் இருக்கு.
 
பிரேசிலில் போத்துகிஸ் மொழி பேசும் , ஆபிரிக்க கண்டத்தில் இருந்து கோப்பி பயிர்ச் செய்கைக்கு தென் அமரிக்க கண்டத்துக்கு வேட்டை ஆடி விலங்க்கு போட்டு கப்பல் ஏற்றி கொண்டு பிரேசிலுக்கு மிருகங்கள் போலக் கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகளின் மூதாதையர் வழி வந்த " கறுப்பு வைரம் " எண்டு இன்று உலகம் புகழும் பிலே , ஆபிரிக்க கண்டத்தில் இருக்கும் போது விடுதலை அடைந்த உணர்வுடன் இருப்பதாக சென்ற வேர்ல்ட் கப் மேட்ச் இன் போது தென்னாபிரிக்க கேப் டவுன் நகரில் இருந்து சொல்லி இருந்தார் , இந்தப் படம் தென் ஆபிரிக்காவில நடந்த வேர்ல்ட் கப் மேட்ச் பார்க்க பிலே போனபோது, அந்த நாட்டு கறுப்பின மக்களுடன் ,வேர்ல்ட் கப் தொடக்க நிகழ்வில் சந்தோசமா ஆடிப்பாடிய போது எடுக்கப்பட்டது , 
 
பிலே முதல் முதல் அமரிக்கா போய்,வெள்ளை மாளிகையில் ரோனல்ட் ரீகனை சந்தித்த போது இப்படிதான் அப்போதைய அமரிக்க அதிபர் ரீகன் சொன்னாராம், " My name is Ronald Reagan, I’m the President of the United States of America. But you don’t need to introduce yourself, because everyone knows who Pelé is." பொல்லுக் கட்டையால் புட் போல் விளையாடும் அமரிகர்களே அவரை ஒரு விளையாட்டின் அடையாளமா பார்ப்பது இன்னுமொரு அதிசயம். பில் கிளிங்க்டன் அமரிக்க அதிபரா இருந்த போது பிலேயை அழைத்து கவுரவித்து,வெள்ளை மாளிகைக்கு வெளியே புல் வெளியில் அவருடன் புட் போல் விளயாடி இருக்குறார். உங்களுக்கு பின்னும், உங்களுக்கு முன்னும் இருக்கும் எவையும் பெரிய விஷயங்களே இல்லை. உங்களுக்கு உள்ளிருக்கும் ஆற்றல்தான் உலகின் மிகப்பெரிய அற்புதம் எண்டு செய்து காட்டியவர் பிலே. 
 
புட் போல் ஒன்னும் பெரிய மாயம் இல்லை,எண்டும் அதை சிம்பிளா விளையாடலாம் எண்டு " You have to think really quickly because everyone is close to each other. Learning the game probably helped me think on my feet better. It was through that I first got my chance to play That gave me a lot of confidence. I knew then not to be afraid of whatever might come." எண்டு சிம்பிளா சொல்லுறார் இந்த நுற்றாண்டின் மிக சிறந்த புட் போல் விளையாட்டு வீரர் பிலே .
 
இந்த உலகத்தில் புட் போல் என்ற விளையாட்டு இருக்கும் வரை பிலே என்ற பெயரும் இருக்கும்,சில மனிதர்கள் தான் இந்த உலகத்தில் எல்லாரும் செல்லாத பாதையில் பயணிக்கிறார்கள் , கடைசியில் யாரும் பயணிக்காத அந்த பாதையில் பயணித்து அழிக்க முடியாத காலடிச் சுவடுகளை விட்டுச்செல்லுகிறார்கள் .........அவர்களில் ஒருவர் பிலே.
 
நன்றி
நாவுக் அரசன் 
முகநூலிலிருந்து
  • தொடங்கியவர்

மொழி அவமானமல்ல அடையாளம்....

 

யாழ்பாணத்தில எங்களின் வீட்டுக்கு அருகில், ஒரு மாஸ்டர் இருந்தார்,அவர் யாழ்பாணத்தில இருந்த முக்கிய அறிவு மையமான ஒரு பிரபல கல்லூரியில் இங்கிலீஷ் படிபித்தார்! பள்ளிக்கூடம் போகும்போது மட்டும் தான் வெள்ளைக்காரன் போல "லோங்க்ஸ்" போடுக்கொண்டு போவார், மற்றப்படி வேட்டி கட்டிக்கொண்டு, காலில செருப்பும் இல்லாமல் நல்லூர் கோவிலுக்குப்போய் ,கோவிலுக்கு முன்னால இருக்கிற அஞ்சு வேம்புக்குக் கீழ யாரோடும் கதைக்காமல் தனிய, செல்லப்பா சுவாமிகளுக்கு முன்னால இருந்த ,யோகர் சுவாமிகள் போல மவுனமாக இருப்பார். 

 

விக்டோரியன் கால ஆங்கிலத்தில், வில்லியம் சேக்ஸ்பியர்,பெர்னாட்ஷா ,மில்டன், பெர்சி செல்லி, ஹென்றி வோர்ட்ஸ் வோர்த், டி எச் லாரன்ஸ் , எல்லாரையும் சாம்பாரு போலக் கரைத்துக் குடித்த அவர் ஒருநாளும் இங்கிலிஸ் பேப்பர் படித்ததையோ,அல்லது யாரோடும் இங்கிலிசில் கதைதத்யோ,இங்கிலிஸ் நியூஸ் ரேடியோவில கேட்டதையோ நான் காணவில்லை!நெறைய வேற்று மொழி தெரித்தால் நிறைய அறிவு விசாலம் ஆகும்,அதுக்காக கர்வப்பட வேண்டிய அவசியம் இல்லை எண்டும் படித்தவர்கள் அமைதியா அடக்கமா இருப்பார்கள், அரை அவியல்கள் தான் அட்டகாசம் போடுவார்கள் என்பதும்  அந்த ஆங்கில ஆசிரியரின் அறிமுகம் எனக்கு தந்த  அனுபவம் ...

 

யாழ்பாணத்தில பள்ளிக்கூடதில படிப்பிக்கிற மாஸ்டர்,டிச்சர் மாரோட கதைகிறது கொஞ்சம் வில்லங்கம்,அவர்கள் எப்பவும் " எப்படிப் படிக்கிறாய்?,எத்தினையாம் பிள்ளை இந்த முறை,கணக்குக்கு எத்தினை மார்க்ஸ்? " எண்டு வயித்தில புளியைக் கரைகிற கேள்வி கேட்பதால்,அவர்களை கண்டால் முதல் வேலை நைசா நலுவுறது !

 

இந்த மாஸ்டர் அப்படி ஒண்டுமே கேட்கமாட்டார் ! அதால அவர்கள் வீடுக்குள்ள துணிந்து உள்ளிட்டு ,அவர் ஹோலில் இருந்த அலுமாரியில் சேகரித்து வைத்திருந்த பெரிய,மொத்தமான கவர் போட்ட ஆங்கிலப் புத்தகங்களின் தலைப்பையும்,அதுகளை எழுதியவர்களின் பெயர்களையும் மட்டும் வாசிப்பேன்.அந்த ஹோலில, இருந்த பழைய மர மேசையில ,அந்த இங்கிலிஸ் மாஸ்டர் குறுந்தொகை என்ற சங்க இலக்கிய செய்யுள் புத்தகத்துக்கு எளிமையான விளக்கம் எழுதிக்கொண்டு இருந்த பேப்பர்கள் ஒரு கட்டாக இருக்க, அலுமாரிக்கு மேல ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சர் படம் இருந்தது, வீட்டிலயும் மாஸ்டர்,அந்த ஹோலில இருந்த கட்டிலில் ,கால் இரண்டையும் சப்பாணி கட்டிக்கொண்டு, ராமகிருஷ்ண பரமஹம்சர் போலவே கைகளைக் கட்டிக்கொண்டு மவுனமாக இருப்பார் .

 

ஒருமுறை நான் அந்தப் பெரிய புத்தகங்களை ஆராய்வதைப் பார்த்து" என்ன தேடுகின்றீர், உமக்கு விளங்குரமாதிரி ,எளிமைப்படுத்தின ஆங்கிலப் புத்தகமும் இதுக்குள்ள இருக்குது ,படிக்கப் போறீரா ?" என்றார் ,நான் " நீங்களே எனக்கு ஒரு சிறிய, எளிமைப்படுத்திய கதைப் புத்தகம் எடுத்து தாருங்கள் " என்றேன்,அவர் எடுத்துத்தந்த புத்தகம்தான் " The Mayor of Casterbridge".அந்த புத்தகத்தின் பெரிய பதிப்பையும் ,எடுத்து தந்தார்,அதில அவர் நிறைய குறிப்புகள் பென்சிலால எழுதி இருந்தார்," தோமஸ் ஹார்டி எழுதின இந்தக் கதை ஏன் நீர் படிக்கவேண்டும் எண்டு தெரியுமோ?" எண்டு கேட்டார்,நான் " தெரியாது,நீங்களே சொல்லுங்கள்" என்றேன்,அவர் "நாங்கள் செய்யுற தில்லுமுல்லுகள் ஒரு நாள் எங்களுக்குக் கழுத்தில கயிறு போடவைக்கும் " எண்டு சொல்லாமல் சொல்லுது இந்த நாவல்" என்று எனக்கு சொல்லுறமாதிரி சொன்னார். 

 

எனக்கு கொஞ்சம் பயம் வந்திடுது,நான் இப்ப போலதான்,அப்பவும் ரெம்ப நல்லவன் போல வெளிய தெரிந்தாலும்,அந்த நாட்களில் நிழலாக சில தில்லுமுல்லுகள் செய்துகொண்டு இருந்தேன்,அது எப்படி இவருக்கு தெரியும் எண்டு ஜோசிக்க அதைவிடப் பயம் வந்திடுது, என்றாலும் இப்படியான புத்தக கதைகளில் நிறைய , நான் அந்த நாட்களில் எதிர் கொன்ட ,இசகு பிசகு சூழல் நிளகளைக் சமாளிக்கும் ஐடியா எப்பவுமே இருக்கும் என்பதால் அதை கொண்டுவந்து வீடில "டிக்சனரி" உதவியோடு வாசித்தேன் !

 

அந்த மாஸ்டர் "இதைவிட நல்ல கதை உள்ள புத்தகம் வேற ஒண்டு இருக்குது, அது இந்த நாவலின் ஒருவித தொடர்ச்சிபோல இருக்கும் அந்த நாவல் ,முதலில் இதைப் படியும் ,அதைப் பிறகு தாரன் " என்றார்! " The Mayor of Casterbridge". கிடத்தட்ட ஒரு வருடமா இழுபட்டு இழுபட்டுதான் படித்து முடிக்க முடிந்தது, அதை வாசித்து முடித்து ,மாஸ்டர் சொன்ன அந்த அடுத்த புத்தகம் அவரிடம் வேண்டமுதல்,அவர் குடும்பத்தோடகனடாவிற்க்கு புலம் பெயர்ந்து போயிட்டார்! 

 

" மேயர் ஒப் கச்ற்றப்பிறிச் " என்ற அந்தக் கதை, 18 நுற்றாண்டில் விக்டோரியன் சமுக அமைப்பு இங்கிலாந்தில் இருந்த போது எழுதப்பட்ட  கதை . ஒரு விசித்திர குணம் உள்ள இளம் மனிதன்,முன்னேற பணம் தேவைப்பட ,தன்னோட அழகான மனைவியையும்,பெண் குழந்தையும், காஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி , வருடக் கணகில கடலில் அலைந்த ஒரு "செயிலர்" என்ற கப்பலோடிக்கு விற்று, வித்து வந்த பணத்தில், பல விதங்களில் முயற்சித்து, ஒரு விதமாக முன்னேறி,பணக்காரன் ஆகி, Casterbridge என்ற நகரத்துக்குகே Mayor என்கின்ற நகர பிதாவாக, பிரபுக்கள் வகுப்பில் சேர்க்கப்பட்டு , தன்னோட பழைய ஆரம்ப வாழ்கையை ஏறக்குறைய திட்டமிட்டு மறைத்த நிலையில், 20 சொச்சம் வருடங்களின் பின், கப்பலோடிக்கு விற்ற மனைவியும், வளர்ந்து குமாரியான அவரின் பெண் குழந்தையும், Casterbridge நகரத்துக்கு மீண்டும் வர, நகர பிதாவாக, கவுரவமாக தற்போது இருக்கும் அந்த மனிதனின் ,உண்மை முகம் வெளியவர ,கதை சூடு பிடிக்கிறது !

 

தோமஸ் ஹார்டியியின் ," மேலஞ்சொளி ஹசர் ஒப் ஜெர்மன் லேயின் "  என்ற சிறுகதை முதலே படித்து இருந்தேன்,அந்த ஒரு சிறுகதை இன்றுவரை மண்டையைக் குடையும் கதை, அதில வரும் குதிரை,வயதான அம்மா, தோட்டம் செய்ய வந்த ஒரு அப்பாவி நாடோடி, இரண்டாம் உலக யுத்தம் , கல்லறையில் வைத்த ஒரு ரோசாப்பூ , வேலிக்கு மேலால வெடித்த துப்பாக்கியின் முதல்க் குண்டு.......,எல்லாம் நல்லா நினைவு இருக்கு, ஒரு சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்று சொல்லும் கதை அது,அதன் முடிவு தலை சுற்ற வைத்தது , அதால தோமஸ் ஹார்டியின் இந்த நாவல் வடிவில் இருந்த " மேயர் ஒப் கச்ற்றப்பிறிச் " என்ற அந்தக் கதைய கட்டாயம் படித்தே ஆக வேண்டும் என்று , சுருக்கிய எளிமையான பதிப்பில் படித்தபோது, கதை ஆதாரமாக விளங்கினாலும்,தோமஸ் ஹார்டி என்ற அந்த எழுத்தாளரின் எழுத்து நடையை ரசிப்பதுக்கு அதை என்றோ ஒருநாள் முழுமையான நாவலாக வரிக்கு வரி வாழ்க்கை சொல்லும் புத்தகமாகப் படிக்கவேண்டும் எண்டு நினைத்துக்கொண்டு இருந்தேன்....

 

சில வருடம் முன் ஒஸ்லோவில் உள்ள டொச்மான்ச்க தலைமை லைபிரேரியில் அந்தப் புத்தகத்தைப் மறுபடியும் பார்த்தபோதும்,படிக்க ஏனோ இண்டரெஸ்ட் வரவில்லை. அதை விட சில வருடங்களின் முன் அந்த இங்கிலிஸ் மாஸ்டர் கனடாவில இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன்! அவர் சொன்ன அந்த இரண்டாவது புத்தகம் என்னவாக இருக்கும் எண்டு பலமுறை ஜோசிப்பது. இப்படிதான் " இந்த நாவலின் ஒருவித தொடர்ச்சிபோல இருக்கும் அந்த நாவல் ," என்று மாஸ்டரே சொன்னமாதிரி வாழ்க்கையே ஒருவித தொடர்ச்சிபோல இருக்குது சிலநேரம்!.......

 

 

நாவுக் அரசன் ,ஒஸ்லோ .

10552472_10204095065678122_1060625211187

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

இன்றைய உலகத்தில் பெண்கள் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வது கடினம் போல இருக்கு,

 

இன்றைய உலகத்தில் பெண்கள் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வது கடினம் போல இருக்கு,

அதுக்கு காரணம் அவர்கள் புத்திசாலிகளா இருப்பது போலவும் இருக்கு.நான் வேலை செய்யும் ரேச்ற்றோறேண்டில் எப்பவும் கொஞ்சம் இடைவெளி கிடைக்கும் போது வெளியே படியில இருந்து கோப்பி குடித்துக்கொண்டு ரோட்டை விடுப்புப் பார்ப்பேன், அது பிடிகாததாலோ என்னனமோ தெரியலை என்னோடு முதலாளியின் மனைவி வந்து " படியில இருந்து கோப்பி குடிக்கவேண்டாம் " என்றாள் ,நான் " படியில இருந்து குடிக்காமல் உன்னோட மடியில இருந்து குடிக்க சொல்லுறியா " எண்டு கேட்டேன்,அவள் கிட்ட வந்து " இன்னொருதரம் இப்படி சொன்னி என்டால் கோழி பொரிக்கிற கொதி எண்ணயை முகத்தில ஊத்துவேன் " எண்டுறாள்.....

தனிய இருக்கும் இதய ராணிகளுக்கு எப்பவும் காலையில் மெயில் அனுப்பினா ,மரியாதையாகக் " காளை வணக்கம் " எண்டு தான் தொடக்குவேன்.....சூரிச்சில் தனிய இருக்கும் ஒரு இன்டர்நெட் இதயராணியின் சத்தத்தைக் காணலை எண்டு இரக்கப்பட்டு " காளை வணக்கம், சுகமா இருகுரின்களா " எண்டு மயில் அனுப்பினேன், " சுகமில்லாமல் இருக்கிறேன்,நீ வந்து என்ன வயித்தியம் செய்யப்போறியா " எண்டு கேட்டா, " ஐயோ ,நீங்க இன்னும் கலியாணமே கட்டவில்லை எண்டு எல்லோ கேள்விப்பட்டேன்,சுகமில்லாமல் இருகுரிங்க எண்டு குண்டைப் போடுறிங்களே " எண்டேன்,அதுக்கு அவா," டேய் ,வந்தன் எண்டால் வாயில போடுவேன்,எருமை மாடு " எண்டு சொல்லுறா.....

பிரெங் போர்டில இருக்கும் ஜெயதேவி அக்கா ஒரு கோழி ஒரு சின்ன வண்டிலில் முட்டைகளை அடுக்கி இழுத்துக்கொண்டு போற படம் போட்டு, " இதுக்கு வித்தியாசமா கொமன்ட் கொடுக்கிறவர்களுக்கு வித்தியாசமா பரிசு தருவேன் " எண்டு போட்டு இருந்தா,,வித்தியாசமா சிந்தித்து, " இந்த நேரம் பார்த்து சேவல் மிதிக்க வந்தா,கோழிக்கு என்ன நடக்கும்,முட்டைக்கு என்ன நடக்கும் அக்கோய் " எண்டு கொமென்ட் போட்டேன்,அந்த அக்கோய் " தம்பி அரசு நீர் பிரெங் போர்ட் வாரும் வித்தியாசமா நல்ல சாப்பாட்டுப் பரிசு தாறேன் " எண்டு சொன்னா, " அக்கோய் எனக்கு வித்தியாசமா நல்ல சாப்பாட்டு சாப்பிட விருப்பம் அக்கோய்,நீங்க மெசேச் போட்டு சொன்னால் கட்டாயம் வருவேன் " என்றேன், " பொறும் முதல் பொல்லுக்கட்டை எல்லாம் தேடி எடுத்து வைச்சுப் போட்டு மெசேச் போடுறேன் " எண்டுறா....

நல்லா கும்மி அடிச்சு கொண்டு இருந்த ஒரு நல்ல இதயம் " என்னோட ப்ரென்ட் சிப்பை தூக்கி எறிஞ்சு போட்டு போற உன்னோட இனி என்ன பிரண்ட்சிப் " எண்டு மெயில் அனுப்பி என்னை கேவலப்படிதிப்போட்டு போயிட்டா, அதுக்கு " ஐயோ...... உங்களைத் தூக்கி எறிய என்னால முடியாதுப்பா,,,நானே ஒரு பயித்தங்காய் போல இருக்குறேன் ,நீங்க குஸ்பு போல இருகுரிங்க எப்படி தூக்கி எறிய முடியும் சொல்லுங்க பார்ப்பம் " எண்டு உண்மையாகவே சொன்னேன்,,அவா சொன்ன பதிலை இங்கே எழுத முடியாது....

மலேசியவில இருக்கிற இன்னொரு இதயராணி " உன்னட்ட வைப்பர் இருக்கா " எண்டு கேட்டா, " ஐயோ என்னோட வீடில விஷப் பாம்ம்பு ஒண்டுமே வளர்ப்பது இல்லை " என்றேன், " அடே மூதேசி அது பிரி இன்டர்நெட் போன் டா, அதைவிடு வாட்ஸ் ஆப், தொங்கோ ஆவது இருக்கா அதைச் சொல்லு " என்றா, " என்னட்ட வட்டிலப்பம் ,தொதல் ஒண்டும் இல்லை அதுகள் எனக்கு சமைக்கவும் தெரியாது என்றேன், " அடே கட்டையில போறவனே அதுகளும் பிரி இன்டர்நெட் போன் டா செம்மறி " எண்டுறா.....

பூனைக்குக் கோபமா ஏதாவது சொன்னாலே சும்மா " மியாவ் மியாவ் போய் வேலையைப் பாரு " எண்டு அலட்சியமா சொல்லுது , நாய்க்கு திட்டினாலும் வாலை நன்றியோட வளைச்சு ஆட்டுது, அது ஏன்பா பெண்களுக்கு மட்டும் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா பொசுக் எண்டு மூக்கில கோபம் முட்டிக் கொண்டு வருகுது..... என்ன சீவியமடா இது......

 

நாவுக் அரசன் ,ஒஸ்லோ .

  • தொடங்கியவர்

இந்த ஜாதியில் மணமகன்/மகள் தேவையென விளம்பரம் தரும் எவர்க்கும் மருத்துவமனை சூழலில் அதே ஜாதியில் இரத்தம்தேவை என விளம்பரம் தர தைரியமிருப்பதில்லை.

 

#Karna

  • கருத்துக்கள உறவுகள்

10574244_10154482599495173_7339396248126

அமெரிக்க மக்களில் கணிசமானவர்கள் யூதர்களை வெறுப்பவர்களாக உள்ளனர். ஆனாலும் அவர்களது அரசாங்கம் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்து வருகிறது. இதற்கு மத்திய கிழக்கு அரசியல் காரணிகளை யூதர்கள் திறம்பட பயன்படுத்துகிறார்கள்.

  • தொடங்கியவர்

ஈழத்து மெல்லிசை மன்னர் ,ஈழத்து கலைஞர் திரு எம்.பி.பரமேஸ் ஐயா

 

யாழ்பானத்தில் ,உள்ள வடமராட்சி கிழக்கில் ஒரு சிறிய அதிகம் அறியப்படாத இடத்தில பிறந்து, பொப்பிசையை ஈழத்தில் உருவாக்கிய ”ஈழத்து மெல்லிசை மன்னர் ",ஈழத்து கலைஞர் திரு எம்.பி.பரமேஸ் ஐயா அவர்களை இன்றைய இசை உலகம் மறந்த பொழுதும், அவரின் சாதனைகளை தேடி கண்டடைந்து அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை, சென்ற வருடம் தமிழ் நாடிடில் ”கலகம்” என்ற அமைப்பு கொடுத்து எங்களை எல்லாம் பெருமிதமும் கொள்ள்ளவைதிருகிரார்கள்! எம்.பி.பரமேஸ் ஐயா சார்பாக பாவலேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியும்,வழக்குறைஞர் அங்கயற்கண்ணி அவர்கள் அதைப் பெற்று இருக்கிறார்கள் என்ற ஒரு பதிவில் படிக்க முடிந்தது !

எம்.பி.பரமேஸ் ஐயா அவர்கள் 1969 ம் ஆண்டு இலங்கையின் முதல் இசை தட்டில் வெளிவந்த " உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது, எனக்கு தெரியுமா நீ என்னை அழைப்பத" என்ற பாடலி இசை அமைத்து,எழுதிப் பாடி இசை தட்டு வடிவில் உருவாக்கி இருக்கிறார் ! அந்தப் பாடல் அப்போது அவர் காதலித்த அவரின் மனைவி சிவமாலினிக்காக எழுதியதாகவும் தகவல்கள் உள்ளது , அந்தப் படலை அந்த காலங்களில் காதலித்துக்கொண்டு இருந்த பலர் ஒரு " சிக்னல் " போல பயன்படுத்தி தங்களின் காதலில் வெற்றிபெற்றார்கள் எண்டும் சொல்லுறார்கள் !

அவரின் சகோதரர் எம்.பி கோனேஸ் உடன் சேர்ந்து அவர்கள் உருவாக்கிய " பரமேஸ்-கோனேஸ் " இசைக்குழுவை திருகோணமலையில் பலகாலம் நடத்தியுள்ளார்கள் ! மெல்லிசை என்பதை கிடத்தட்ட 40 இக்கு மேற்பட்ட இசைக்கருவிகளை ஒரு நேரத்தில "counter point "போல எல்லாம் இசைகோர்புக்கள் இணைத்து பாடல்கள் உருவாக்கி இருக்குறார்கள் ! சிங்கள இசை தட்டு வெளியிட்டவர்களையே திரும்பிப்பார்க்க வைத்து ,தமிழில் இசைத்தட்டு வெளியிடும் அளவுக்கு திறமையா இசை அமைத்திருகிறார்கள் !

"இலங்கை வானொலி " அவர்களின் இசை வாழ்விற்கு அடித்தளம் இட்டு இருக்கிறது , பிட் காலத்தில அவர்களின் பாடல்கள் ஒவ்வொரு நாளும் "இலங்கை வானொலி " இல் ஒலிபரப்பி இருக்குறார்கள் ! தமிழர்களும் ,சிங்களவர்களும் ஒன்றாக சந்தோசமா இருந்த அந்த காலத்தில் அவர் இசை அமைத்து பாடிய "மனமாளிகை ரோஜா " என்ற பாடலை , பிட்காலதில பிரபலமான விகடர் ரதினாயக்கா சிங்களத்தில் பாடி இருக்கிறார் ,"அளிக்கும் ஓசை கேட்கலையா " என்ற பாடலை மெல்றோய் தர்மரட்ன சிங்களத்தில் பாடி இருக்கிறார் , அவர்களின் சிங்களத்தில் வெளிவந்த பாடல்கள் இலங்கை முழுவதும் கலக்கி இருக்கிறது! எதோ காரணத்தால் அதன் பின் சகோதர்கள் இருவரும் பிரிந்துவிடார்கள் !

" இலங்கை வானொலி " தென் இந்திய இசை ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்கவைத்த காலத்தில், அவர்கள் இசை அமைத்த பாடல்கள் ஒரு வித்தியாசமாக இருந்தது உண்மை , ஆனால் இன்றைய காலத்தில் பலர் அவரின் சாதனைகளை அறியாமல் இருப்பது, எம்.பி.பரமேஸ் ஐயாவின் வாழ்நாள் சாதனையை யாரும் கண்டுகொள்ளமால் இருப்பது வேதனையாக இருந்தது, தற்சமயம் யேர்மனியில் வசிக்கும் அவருக்கு இந்த விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி!http://youtu.be/PIKDwR9rGYU?list=UUR7eTyBE5UQ89yuGRWANhlA

 

நாவுக் அரசன் ,ஒஸ்லோ .

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மெயில் வாகனத்தார், மிஸ்டர் அண்டு மிஸஸ் டாமோடிரன்

 

யாழ்பாணத்தில் இருந்து " சிரித்திரன்"  எண்டு  ஒரு நகைசுவை பத்திரிகை வந்தது பலருக்கு தெரியும் ,ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில், அதை இலங்கை தீவில் பல அறிவு சார்ந்த விசியன்களில் முன்னோடிகள் அதிகம் வசித்த வடமராசியின்   , கரவெட்டியில்  பிறந்த ,சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம் ,  " செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்' என்ற  சிந்தனைக் கொள்கையுடன் பல வருடம் வெளியிட்டார் .

 

!அறுபதுக்களில் ஆரம்பிக்கப்பட்ட "சிரித்திரன்" சஞ்சிகை திரு சி சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை சுமார் 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்திருக்கு என்கிறார்கள் , சிவஞானசுந்தரம் அவர்களின் தந்தை இலங்கையின் முதலாவது தபால் மாஅதிபர் திரு வி. கே. சிற்றம்பலம் என்கிறார்கள் . சுந்தரைக்  அவரின் தனத்தை இந்தியாவுக்கு ஆர்கிடெக்சர் என்ற  கட்டிடக்கலை படிக்க அனுப்ப , அவர் இந்தியாவின் ஹிந்து பத்திரிகையில் கார்டுநிஸ்ட் ஆக இருந் R K  லக்மனின் , கார்டுனில் மயங்கி , இந்தியாவில்  கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டுஇலங்கை  வந்தாராம் . 

 

அவர் முதலில் கொழும்பில் இருந்து வெளிவந்த   தினகரனில் கார்டுநிஸ்ட் ஆக இருந்து , அதில்  வெளிவந்துகொண்டிருந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றதால் , தானாகவே ஒரு பத்திரிகை ஆரம்பித்து இருக்கிறார்  . அவரது கார்ட்டூன் நாயகர்களனைவரும் சவாரித்தம்பர்,  சின்னக்குட்டி, மைனர் மச்சான், மெயில் வாகனத்தா ர் , எல்லாரும் அவர் பிறந்து வளர்ந்த சொந்தக்கிராமமான கரவெட்டியில் அவர் அன்றாடம் சந்திக்கும் உண்மைப்பாத்திரங்கள் என்று  சிரித்திரனில் எழுதியிருக்கிறார் ! 

 

அறுபதுக்களில் முதன் முதலில் கொழும்பில்  கொட்டாஞ்சேனையில் உ பல கஷ்டங்களுக்கு மத்தியில்  சிரித்திரனை வெளியிட ஆரம்பித்தார். அச்சடித்த சஞ்சிகைகளை தனியே வீதி வீதியாகக் கொண்டு சென்று கடைகள் தோறும் போடுவாராம்.  தமிழ்நாட்டு பத்திரிகைகள்  குமுதம், கல்கண்டு, விகடன் எல்லாம் வெளிவந்த காலத்தில் சிரித்திரன் கொஞ்சம் அவைகளுக்கு போட்டியாகவே உள்ளுரில்  வெளிவந்து  இருக்குது .  பல  வருடங்கள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டப்பட்டு " சிரித்திரன் " அதன் பின யாழ்ப்பான அடையாளத்துடன் வெளிவந்திருக்கு !

 

சிரித்திரனை அதன் பொருளாதார சிக்கல் நேரங்களில் கைகொடுத்தது  மில்க்வைற் சவுக்கரக் கொம்பனி  நிறுவனம்  நடத்திய  க கனகராசா அவர்கள் ! மில்க்வைற் கனகராசா   : "சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள் ஒரு நிறைமனிதன். தனது அறிவையோ ஆற்றலையோ அவர் குறிப்பிட்ட வட்டத்திற்குள் குறுக்கி விடவில்லை. அவர் நல்லவற்றைச் சிந்தித்தார். நல்லவற்றைச் செய்தார். நகைச்சுவை மூலம் நல்லவற்றை மக்கள் மனத்தில் ஆழப்பதிய வைத்தார். எமது பணிகளில் எம்முடன் இணைந்து வாழவைக்கும் வன்னிப் பிரதேசத்தில் பனம் விதைகளை விதைப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் கொண்ட பெருமிதமும் எமது நெஞ்சில் என்றுமே பசுமையாக நிறைந்து நிற்கும். இன்று நிமிர்ந்து நிற்கும் மரங்கள் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களையும் மறக்க மாட்டா."  என்று சொல்லியிருகுறார் ! 

 

சிரித்திரனில் ஆரம்பகால   எழுத்தாளர்கள்  தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்),அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப்  , யாழ் நங்கை,  காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த மாத்திரைக் கதைகள் அதில்வர குடாரப்பூர் சிவா "நடுநிசி" என்ற மர்மக்கதையை  எழுதியிருகுறார் . மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் .  மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" . செங்கை ஆழியானின்"  ஆச்சி பயணம் போகிறாள்" , " கொத்தியின் காதல்"  ,, எல்லாம் அதில வந்திருக்கு ,இலங்கையில் புதுக்கவிதையை அறிமுகப் படுத்தி  ஜனரஞ்சகப் படுத்திய பெருமை நிச்சயம் சிரித்திரனுக்குண்டு.

 

 ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் ,கவிதைகளுடன் அதற்கேற்ப சிறிய படங்களும் வரைந்து திக்குவல்லை கமால், ராதேயன், பூநகரி மரியதாஸ் (தனுஜா) இப்படிப் பலர் சிரித்திரனில் புதுக்கவிதைகள் எழுதியிருகுறார்கலாம்! சிரித்திரன் சுந்தரின் மனைவி தான் அவரோட முதல் வாசகி, ரசிகை , ஓர் ஆழமான ரசிகை. அவருடைய ஒத்துழைப்பும் பின்னணியும் சிரித்திரன் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகித்தது என்று சொல்லிருகுறார்  திக்குவல்லை கமால். அதிகம் பேசாது நிறையச் சாதித்தவர் சுந்தர். தனது சித்திரங்களை கார்ட்டூன் என்று அழைப்பதில்லை, அவற்றைக் கருத்தூண்கள் என்றே அழைத்தார். அவர் நல்லவற்றைச் செய்து அவற்றை நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் ஆழப்பதிய வைத்தார். 

 

சிரித்திரனில் வந்த பகிடிகள் எப்பவுமே யாழ்ப்பான மக்களின் பழக்க வழக்கங்களை கிண்டல் செய்வதாக இருந்தது ,உதாரணத்துக்கு .-  ஒரு கிடாய்  ஆட்டினைத் தீபாவளிக்காக வெட்டுவதற்குக் காவல் நிற்கிறார்கள். ஆடு சொல்கிறது: "எல்லோரும் இன்புற்று இருப்பதேயன்றி வேறொன்று அறியேன் பராபரமே" என்கின்றது. இன்னொரு பகிடியில்  பாம்புக்குட்டியொன்று தன் அம்மாவிடம் கேட்கிறது: "அம்மா! அப்பா எப்படி செத்துப் போனார்?", அதற்கு அம்மா பாம்பு இப்படிப் பதில் கூறுகிறது: "கள்ள பெட்டிஷன் எழுதுகிற ஒருவரைக் கொத்தி, உடம்பில் விஷம் ஏறி உன் அப்பா செத்துப் போனார்."ஒரு மத்தியதர வர்க்கத்தின் யாழ்ப்பான  படிச்சாதான் வாழ்கை மெண்டாலிடியை ,இப்படி ", ஒருத்தி மயக்க நிலையில் கிடக்கின்றாள். எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்த்தும் மயக்கம் தெளிந்த பாடில்லை. வேறொருத்தி வந்து காதில் ஏதோ சொல்கிறாள். உடனே மயக்கம் தெளிந்து விடுகின்றது. "அவள் காதில் என்ன சொன்னாள்? "உனது புருஷன் அக்கவுண்டன்ற் சோதனை பாஸ்".2 எண்டு கிண்டல் அடித்து இருக்குறார் !

 

சுந்தரின் மகுடியார் கேள்வி -பதிலில் எப்பவுமே நிறைய சிந்திக்கும் விசியம் இருக்கும் , அந்த கேள்விகளை சுந்தரே எழுதி பதிலையும் அவரே எழுதுவார் எண்டு அந்த நாடகளில் ஒரு செய்தி இருந்தது, எப்படியோ அவரின் ஒரு கேள்வியும் பதிலும் இப்பவும் எனக்கு நினைவு இருக்கு ! மகுடியாரிடம் ஒருவர் கேட்பார் " மனிதனின் அறிவு எதுக்குப் பயன்படுகுது எண்டு ? " அதுக்கு மகுடியார் சொல்லுவார் " மாட்டுகுக் குறி சுடப் பயன்படுகுது " எண்டு !

 

 சிரித்திரன் சுந்தர் உருவாகிய " மெயில்வாகனத்தார்"  வடமராட்சிப் பேச்சு வழக்கில் பல  விசியங்கள்  சொல்லுவார் ! அதில ஒன்று  "தாய் மூன்று மிளரும், தண்ணீருமாய் ஊரில் கந்தசஷ்டி பிடிக்க மகன் 304லும் தண்ணியுமாய் கொழும்பில் இருக்க".  எண்டு எழுதி இருப்பார் ,,,ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில்  சிறிமாவோ அம்மையார் காலத்தில் சீனிக்கு ரேஷன் இருந்த சமயத்தில் சுந்தர் வரைந்த கார்ட்டூன் ஒன்று. எறும்பு அணியொன்றுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த மைனர் மச்சான் சொல்கிறான், "எறும்புகளுக்குத்தான் சீனி இருக்குமிடம் தெரியும்." எண்டு ஒரு காமடி அதில் வந்தது !

 

 

"மிஸ்டர் அண்டு மிஸஸ் டாமோடிரன் , சிரித்திரன் சுந்தர் உருவாகியா யாழ்பாணத்தில் ஆங்கில மோகத்தில் இருந்த "நாகரீகக் கோமாளிகளின் " அனாவசிய பந்தாவை கிண்டல் அடிக்கும் பாத்திரம் , அவர்கள தங்களுக்கு இடையில் " டார்லிங் " எண்டு தான் ஒருவரை ஒருவர் அழைப்பார்கள் , ஒரு முறை  மிஸஸ் டாமோடிரன் " டார்லிங்  பணம்கிளங்கு   ஏன் டார்லிங் சாப்பிட தும்பூ தும்பா வருகுது  எண்டு கேட்பா ..அதுக்கு   மிஸ்டர்  டாமோடிரன் " பணம்கிளங்கு ......" எண்டு சொல்லுவார் !சிரித்திரன் சுந்தர்  ஏன் தன்னுடைய பத்திரிகைக்கு  "சிரித்திரன்" எண்டு பெயர் வைத்த காரணம் ஒருமுறை எழுதி இருந்தார் ! எல்லாரும் சிரித்து இருப்பார்கள் ,, நான் மட்டும் சிரித்து இரேன், எண்டு அர்த்தம் சொன்னார் சுந்தர் ஒரு கட்டுரையில் ! இந்த தகவல்கள்   இரண்டும் நேற்று   எழுத நினைத்தேன்,,நேற்று வேலைக்கு போற அவசரத்தில் எழுதவில்லை ,, இன்று இங்கே இணைத்துள்ளேன் !

 

ஒரு நாட்டின் அறிவு வீச்சு , அந்த நாட்டில் இருந்து வெளிவரும் நகைசுவைப் பத்திரிகைகளின் எண்ணிக்கையில் தங்கி உள்ளது என்கிறார்கள் அறிவாளிகள் !  ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் சிரித்திரன் ஒரு கலாசார அடையாமா இருந்தது ,  அது மறைந்த பின் ,சுந்தருக்குப் பிறகு யாருமே அப்படி ஒரு பத்திரிகை கொண்டுவரவில்லை எண்டு நினைகேறேன் ! ஒரு இழப்புதான் !

1514576_10202453937130934_1942713594_n.j

 

 


நாவுக் அரசன் ,ஒஸ்லோ .

  • கருத்துக்கள உறவுகள்

a24c2339cef766ba3a604f91cc58dd3d

  • தொடங்கியவர்

984186_685132294897878_76489372740066837

 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் ஆலயதின் . கொட்டடி மக்களின் தெற்ப உற்சவவும் இந்திர விழாவும்  

பருத்தித்துறை கொட்டடி கடல்கரையில் ..... 

மயில் ஆட்டம், குதிரை ஆட்டம், பெம்மை ஆட்டம் , ..

.20/ 07 / 2014 (.இரவு)

 
 
10423977_676097819134659_778909407169718
 
10557169_676097832467991_560669944672897
 
10483903_676097835801324_842336936748758
 
www.facebook.com/myjaffna
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்

நட்பு வட்டம்

எதிர் வீட்டில் வசிப்பவர் யாரென்று வருடங்களில் இன்னமும் தெரியாது

நண்பர்களாகச் சாப்பிடப் போன இடத்தில் அவரவர் தேநீருக்கு அவரவரே காசு தருகிறோம்

 

அப்பாவுக்கு ஆனதைப்போல ரயிலில் சந்தித்த நண்பரென்று

யாரும் திருமண அழைப்பிதழோடு வீட்டுக்கு வந்தது கிடையாது

நித்தம் பார்க்கிற மளிகைக்காரனிடம் ரெண்டு ரூபாய் சில்லறை மீதத்தை

நான்கு புளிப்பு மிட்டாய்களோடு முடித்துக்கொள்கிறோம் கவனமாக...

 

Facebook ல் மட்டும் என்னவோ Hiew hui tang உட்பட நான்கு நிலுவைகளையும் சேர்த்து

இருநூற்றி எழுபது நண்பர்கள்!

- ப.ராமச்சந்திரன்

 

  • தொடங்கியவர்

இன்னுமொரு கதை பிறந்தது...

 

சின்ன வயசில எங்கட வீடுக்கு கிட்ட கவிஞ்சர் கந்தப்பு எண்டு ஒரு கவிஞ்சர் இருந்தார், அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர், எப்பவும் எட்டு முழ வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு, மேல ஒரு பவுன் பொத்தான் வைத்து தைச்ச நசினல் போட்டுக்கொண்டு,கழுத்தைச் சுற்றி உத்தரியம் போல ஒரு பச்சைச் நிற குஞ்சரம் தொங்கும் சால்வை போட்டுக்கொண்டு,நெற்றியில் சடையப்ப வள்ளல் போல சந்தனப் பொட்டு, அதன் நடுவில் சின்ன குங்குமப் பொட்டு வைச்சுக்கொண்டு அவர் பார்க்கிறதுக்கு காளமேகப்புலவர் போல தான் இருப்பார். அவரை யாரவது கவிஞ்சர் எண்டு சொன்னால்க் கடுப்பாகி " நீவீர் அறியீர் என் புலமை,யான் ஒரு தமிழ்ப் பண்டிதர், பண்டிதர் பரீட்சை ஒரே தரத்தில்ச் சித்தி எய்தியவன்,அய்யன் பண்டிதமணி சி .கணபதிப்பிள்ளையின் மதிப்புக்கு உரிய மாணவன் " எண்டு சொல்லுவார்.

 

கவிஞ்சருக்கும் பண்டிதருக்கும் வித்தியாசம் தெரியாமல் தான் ஊருக்குள்ள அதிகம் பேர் இருந்ததால், அவர் ஒரு தமிழ் அறிஞ்சர் எண்டு மட்டும் எல்லாருக்கும் தெரியும்.நான் இனி சொல்லப் போறது அவர் எழுதிய " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்ற கொஞ்சம், அவர் புலமை சார்ந்த துறையில் இருந்து இறங்கி வந்து எழுதிய  வில்லங்கமான புத்தகம் பற்றியும்,கடைசீல அந்தப் புத்தகம் அவர் சொந்த இல்லற வாழ்க்கைக்கு ஆப்பு வைத்த சம்பவங்கள் உள்ள கதை.

 

அவர் எழுதிய அந்த புத்தகம்,காம சூத்திரா, கொக்கேகம், திருக்குறளின் காமத்துப்பாலின் அடிபடையில்,கஜுரோகோ கருங்கல் சிற்பங்களின் துணையுடன் செய்யுள்களுக்கு விளக்கமும்,கொஞ்சம் செயல் விளக்கமும் ,அதிகமா இல்லற வாழ்க்கைத்துணையின் சிறப்பும்,பெண்ணின் பெருமையும் " பெண்கள் நிமிர்ந்து நடந்தால் யாரையோ பார்க்கிறாள்! குனிந்து நடந்தால் எதையோ நினைக்கிறாள்! சிரித்து பேசினால் அவனோடு "எதோ" அவளுக்கு! சிரிக்காமல் பேசினால் துக்கை (விதவைக்கு சமானம்) " என்று பெண்களின் அங்க இலட்சணம்கள் அதில இருந்தாலும்,அந்த புத்தகத்தைக் கவிஞ்சர் கந்தப்பு தானா எழுத வேண்டும் என்றுதான் அது வெளிவந்த நேரம் எல்லாரும் கதைத்தார்கள்,குறிப்பாகப் பெண்கள் கதைத்தார்கள்,ஆனாலும் அதை ஒரு தமிழ் அறிஞ்சர் எழுதியதால் கட்டாயம் அதில விசயம் இருக்கும் எண்டு தான் சொன்னார்கள்,அதையே நான் எழுதி இருந்தால்,கட்டாயம் " இந்த விடுகாலி எழுதியதால்  அதில விஷம் தான் இருக்கு " எண்டு சொல்லியிருப்பார்கள்.எப்படியோ அந்த புத்தகத்துக்கு இருட்டினாப் பிறகு பல வீடுகளில் வெளிச்சம் கிடைத்தது என்பது உண்மை. 

 

அதுக்கு முதல், காமசூத்திராவின் எளிமையான விளக்கம் போல,அதுக்கு வாத்தியாயனரின் சித்தப்பு  போல இருந்த பண்டிதர் கந்தப்பு  " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்று  எழுதிய புத்தகம் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இங்கே இல்லாததால், முதலில் கவிஞ்சர் கந்தப்புவின் பெர்சனாலிட்டி ,அவரின் " காதலர்ப் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்துன் கூதிர் நின்றன்றால் " என்ற நெடுநல்வாடைத் தமிழ் அறிவின் வீச்சு, அவர் கழுத்துக்கு ,தனிப் பாடல்த் திரட்டாகி " கரையோட்ட மாக மரக்கலம் போட்டுனைக் காணவந்தாற் திரை போட்டிருந்தனை யேலேல சிங்க சிகாமணியே.." என்று அந்த சிங்கத்தின் பொஞ்சாதிக்கு, எங்கள் ஊரில இருந்த ஒரே ஒரு " பிரஸ் " என்ற அச்சுக்கூடம் வைத்து இருந்த பரமானந்தம் வலை வீசியது  பற்றி கொஞ்சம் சொன்னால்தான் உங்களுக்கு கதை விளங்கும்.

 

கவிஞ்சர் கந்தப்பு மரபுக் கவிதை தான் எழுதுவார்,அடி ,தளை,சீர் தட்டாமல்,வெண்பா எல்லாம் " வா வே தே கு ஆயிடைத் தமிழில் " அட்டகாசமாக எழுதுவார், யாரவது செத்துப்போனால் அவர்களின் முப்பத்தி ஓராம் நாள் திதிக்கு வெளியிடும் கல்வெட்டை அறுசீர் நெடிலடி வெண்பாவில் ,இறந்து போன அந்தக் குடும்ப தலைவன்,அல்லது குடும்பத் தலைவி பற்றி, அந்த குடும்பம், அதன் நல்விழுமியங்கள் எல்லாம் வைச்சு வாட்டு வாட்டு என்று புகழ்ந்து எழுதுவார். இறந்து போன மனிதர்கள் பற்றியதால் யாரும் அதன் உண்மைத்தன்மை பற்றி அலட்டிக்கொள்ளமாட்டார்கள். சிறாப்பர் குமாரசாமி ஐயா செத்து அவரின் கல்வெட்டில் அவரின் நாலு பெண் பிள்ளைகளைக் கட்டிய, ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல எண்டு குடியும் குடித்தனமுமா இருந்த நாலு தன்னிச்சாமி மருமகன்களையும் ,ஏதோ தாயுமான சுவாமி ரேஞ்சுக்கு புகழ்ந்து எழுதி இருந்தார்,எப்பவும் போல யாரும் அலட்டிக்கொள்ளவில்லை..

 

மலையகத்தைப் பற்றி கவிஞ்சர் கந்தப்பு ஒரு மரபுக் கவிதைத் தொகுப்பே எழுதி இருந்தார்,அதுக்கு காரணம் அவர் அங்கே தான் தமிழ் ஆசிரியரா கனகாலம் படிப்பித்து இருக்கிறார், " குறிஞ்சி முகடுகள் " என்ற அந்த தொக்குப்பில் நிறய , " மலை மகளின் எண்ணம்,எழிலாக அலை பாயும் வண்ணம், நதியோடு நாணல்கள் இசை பாடும்  வடிவம் நிழல் தந்த மலையகம் "  எண்டு விரிவாக மத்திய மலை நாடு,அதன் கம்பளம் விரித்த தேயிலைத் தோட்டங்கள், வழிந்தோடும்  ஆறுகள், ஹட்டன் சமவெளி, போகம்பறைக் குன்றுகள், நானு ஓயா விளிம்பில் நுவரெலியாவின் குளிர், டயகம,  திஸ்பன இல் தேயிலை பிடுங்கும் மக்களின் அவலம், ,மொனறாகலையின் மயில்கள் என்று நிறைய எழுதி இருந்தார்,மத்திய மலை நாடு பற்றி யாழ்பான மக்களுக்கு விளங்காததால் அதிகம் அதையும் கவனிக்கவில்லை " கந்தப்பு அங்கேயும் யாரும் ஒரு தோட்டக் காட்டுப் பொம்பிளையை வைச்சு இருந்து இருப்பார்,அதால உருகி உருகி எழுதுறார் போல " எண்டு நினைத்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை..

 

கந்தப்பு நிறைய தமிழ் மொழி தழைக்க வேண்டும் என்ற சமூக அக்கறை உள்ளவர்.தமிழ் நாட்டு முதல் அமைச்சர் எம்,யி ஆர் இறந்தபோது ,அவர் ஈழ விடுதலைக்கு ஆதரவா இருந்ததால்,யாழ்பாணத்தில அனுதாப அலை கொஞ்சம் "ஓவராக" அடித்தது !  இயக்க ஆதரவு மக்கள்  வாழை ,தோரணம் கட்ட,எங்கள் ஊர் மக்கள் திலகத்தின் அதிதீவிர ரசிகர்கள் , பெரிய தென்னை மரத்தையே புடுங்கிக்கொண்டு வந்து சந்தியில் நட்டுப்போட்டு,சந்தியில் இருந்த பாரதியார் சிலையை தூக்கிப் போட்டு அதில அவர்களின் "இதயக் கனி " சிலையை வைக்கப் போவதாகப் பயமுறுத்த நிலைமை கொஞ்சம் பொன்மனச் செம்மல்  படங்களில் வரும்  வாள்ச்  சண்டை, குஸ்தி , கைகலப்பு , சீலடி சிலம்படி  போல நடக்கப் போகுதுபோல இருந்தது. சவுகார் ஜானகி  வந்து காலில் விழுந்து,  கிளிசரின் வழிய அழுது ,குளறிக்  சண்டையை நிப்பாட்டுற மாதிரி  இல்லாமல் , அந்த நேரம் கவிஞ்சர் கந்தப்பு வெகுண்டு எழும்பி "சினிமா நடிகனுக்கு சிலை வைக்கும் ,சிற்றுனர்வுள்ள சிற் எறும்புகளை......" எண்டு கவிதை எழுதி,"மகா கவி பாரதி சிலையில் கை வைத்தால் ,சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தடுப்பேன் " எண்டு பீதியக்கிளப்ப ,அந்தக் களேபரம் அதோட அமுங்கிவிட்டது!.

 

கவிஞ்சர் கந்தப்புவின் முக்கியமான இன்னுமொரு ஆளுமை மேடை நாடகம், சங்கர சாஸ்திரிகளின் தமிழ் நாடகங்கள், தமிழில் மொழி பெயர்த்த சில ஆங்கில நாடகம் எல்லாம் பழக்கிப் போடுவார். " ஏழு பிள்ளளை நல்லதங்காள் " நாடகம் அடிக்கடி எங்கள் ஊர் வாசிக்க சாலையில் போடுவார், அம்மா அந்த நாடகம் தொடக்கம் மட்டும் விரும்பி பார்பா, நல்லதங்காளின் அண்ணிக்காரி நல்ல தங்காளைக் கொடுமைப் படுத்த தொடங்க, அவா " இனிக் கந்தப்பு பழையபடி அவளைப் போட்டுப் படுத்தாத பாடு எல்லாம் படுத்தப் போறான் " எண்டு வாயில முனு முணுக்கத்  தொடங்குவா . அப்படி அந்த நாடகத்தின் உண்மைக் கதையைக் கொஞ்சம் உணர்ச்சி ஆக்கி போடுவார். ஒவ்வொரு பிள்ளையா நல்லதங்காள் கிணற்றுக்க எறிய தொடங்க அம்மா அந்த நாடகம் அதுக்கு மேல பார்க்க மாட்டா,எழும்பி வந்து வீடில ஹோல் மூலையில் இருந்து அழுவா, " கந்தப்பு நெஞ்சில இரக்கம் இல்லாமல் அந்த சின்ன பால் குடிப் பாலகங்களை ஒவ்வொன்றா கிணத்துக்கு எறியுறானே " எண்டு என்னவோ ஏழு பிள்ளளை நல்லதங்காள் நாடகம் கந்தப்பு எழுதின சொந்த கதை போலவும் ,கந்தப்பு அந்த பிள்ளைகளைக் கிணத்துக்க தள்ளி விழுத்துற மாதிரியும் அவரைப் பேசுவா. உங்களுக்கே தெரியும் நல்லதங்காள் ஒவ்வொரு சின்ன பால்குடிப் பாலகங்களை ஒவ்வொன்றா கிணத்துக்கு எறியிறதுக்கு அந்த நாடகத்தின் கதையில் ஒரு லொஜிக் இருக்கு எண்டு .அதை என்னோட  அம்மாவுக்கு சொன்னா அவாவுக்கு விளங்காது.

 

வாசிகசாலையில், கந்தப்பு இயக்கி,அவரே அதில மார்க் அந்தோனி வேஷம் போட்டு நடித்த ஜுலிய சீசர் நாடகத்தில் ஒரே ஒரே முறை அம்மாவுக்கு தெரியாமல்,கிளியோபற்றா  என்ற சீசரின் மனைவியா நானும் நடித்து இருக்றேன், நான் பொம்பிளை வேஷம் போட வேண்டி வந்த இடக்கு முடக்கான சம்பவம், நாடகத்தில் சீசர் கொல்லப்பட நெஞ்சில அடிச்சு பதறி ஒப்பாரி வைக்க, மார்பு பெண்கள் போல இருக்க எண்டு கந்தப்பு கொண்டுவந்து தந்த பிறசியருக்க வைச்சு இருந்த சிரட்டை கழண்டு விழுந்தது, அந்த நாடகத்தின் இடையில் பொம்புளை வேஷத்துடன மேடையை விட்டு இறங்கி மூத்திரம் பெய்ய அம்மசியா குளக்கரைக்கு இருட்டில பதுங்கி பதுங்கிப் போக, என்னைப் பதுங்கி பதுங்கி பின் தொடர்ந்து வந்த ஒரு உள்ளூர் ரோமியோ என்னை இருட்டில கற்பழிக்க முயட்சிதது,அதில நான் கொஞ்சம் புத்திசாலிதனமாக தப்பியது,பொம்பிளை வேஷம் போட்டு அதில உணர்ச்சிப் பிளம்ப்பா நடித்தது அம்மாவுக்கு தெரியவர வீடில சண்டை தொடங்கியது,,,,அதை ஒரு தனிக் கதையா எழுதுறேன்,,இப்ப கந்தபுவின்  " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி புத்தகம் எப்படி குழப்பம் அவர் குடும்பத்தில் ஏட்படுத்தியது எண்டு சொல்லுறேன்....

 

வாக்குக் கண்ணால அங்க பார்த்துக்கொண்டு இங்க கதைக்கும் பரமானந்தம் வைத்து நடத்திய சில்லறைக்கடை  சைஸ் உள்ள ஒரு அறையில் இருந்த பிரசுக்கு அவரோட மனைவி பெயரில் " தனலக்ஸ்மி " பதிப்பகம் எண்டுதான் பெயர் இருந்தது. ஆனால் பரமானந்தம் தீவிர கொமின்ஸ்ட் கொள்கையில் இருப்பவர், எளிமையான, மெலிந்த மனிதர் வியட்நாமின் தந்தை ஹோசி மின் போல தாடி வைச்சுக்கொண்டு எப்பவும் பிரஸ் வாசலில் ஒரு கதிரையில் இருப்பார், சில நேரம் பிரிண்டிங் மிசினில காலால கோபமா அடிச்சு அமதிக்கொண்டு  ”நான் அடிக்கும் ஒவ்வொரு அடியும் லத்தீன் அமெரிக்காவையும் மூன்றாம் உலக நாடுகளையும் சுரண்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அடி.”எண்டு சொல்லுவார். அவரின் வளர்ந்த மகள்கள் இருவர் தான் உள்ளுக்க புரூப் பார்ப்பது, அவரின் மூத்த மகள் அகிலாண்டேஸ்வரி " பிரமிளா " என்ற பெயரில் புதுக் கவிதை எழுதி இருக்கிறா. மகள்கள்தான் அச்சுக் கூடத்தை இயங்க வைப்பதே ,எழுத்துகளைத் தேடி எடுத்து அச்சுக் கோர்த்த புரூப் பக்கங்களை ஒரு தட்டில இடை வெளிகளில் சின்ன சின்ன இரும்பு துண்டு வைச்சு சுத்தியலால் அடிச்சு,நிமித்தி ,சரியாக்கி , லிண்டன்பேர்க் காலால அமத்துற ஜெர்மன் பிரிண்டிங் மிசினில பிளேட் ஏத்தி கறுப்பு மை தடவி தடவி முக்கித் தக்கி பிரிண்டிங் பண்ணுவார்கள், முதல் பிரின்டைக் பரமானந்தம் கையில கொடுக்க அவர் அதை வடிவா அவரோட வாக்குக் கண்ணால பல கோணங்களில் பார்த்து திருத்தும் சொல்லுவார்.

 

கவிஞ்சர் கந்தப்பு அவர் வெண்பா எழுதித்  திதிக்கு வெளியிடும் கல்வெட்டுக்கள் பலது  தனலக்ஸ்மி  பதிப்பகதில் அச்சு ஆக்கி வெளியிட்ட பழக்கத்தில் ஒரு முறை  " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்ற புத்தகம் எழுதிக்கொண்டு இருப்பதா சொல்ல,பரமானந்தம் " அப்படியே சங்கதி,அட்ரா சக்கை எண்டானாம் , புலவர் எழுதும் புத்தகம் பொருள் பதிந்தது, அது என்ன விடயம் உள்ள புத்தகம் எண்டு ஆழம் பார்த்து அறிய வேண்டிய அவசியம் இல்லை , அதை நான் தான் வெளியிடுவேன் " எண்டு ஒற்றைக்காலில் நிக்க,கடைசியில் அவர்தான் வெளியிட்டார், அந்தத்  தொடக்கம் தான் கவிஞ்சர் கந்தப்புவின்  இல்லற வாழ்க்கைக்கு அலுப்புக் கொடுக்கத்  தொடங்கியது. 

 

 எப்படி எண்டு சொல்லுறேன், தமிழ் ஆசிரியரா வேலை செய்து, வயதாக முன்னரே நடு வகிட்டில் நரை தட்ட முதலே ஓய்வு பெற்ற கந்தப்பு அதிகம் அவரின் இலக்கிய நண்பர்களின் இலக்கிய விவாதம், கோவிலில் கந்தபுராண படனம் சொல்லுறது,நாடகம் போட ஒத்திகை பார்க்கிறது, திருத்தொண்டர் திருச்சபை எண்டு ஒன்று உருவாக்கி அதில வளரும் பிள்ளைகளுக்கு சைவ சமயத்தின் அறம் சார் உண்மைகளை வகுப்பு வைச்சு சொல்லிக்கொடுப்பது ,வீராளி அம்மன் கோவிலில் இருவத்தி அஞ்சுநாள் திருவிழா தலைமை தாங்கி நடத்துவது, எண்டு எப்பவும் நேரத்தைக் காலில கட்டிக்கொண்டு கலாச்சார சூழலையே சுவாசித்து ஓடித் திரிவார்.

 

அதனால புத்தகம் அடிச்சுக்கொண்டு இருந்த நேரம், வீட்டில பொம்பிளைகளின் பிளவுஸ் தைச்சுக் கொடுக்கும்  தையல் வேலை செய்துகொண்டு  இல்லத்தை இனிமை ஆக்கிக்கொண்டு இருந்த அவரின் மனைவியைத் தான் அந்த புத்தகம் எப்படி வருகுது எண்டு பார்க்க பரமானந்தத்தின் " தனலக்ஸ்மி " பதிப்பகதுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தார்,அந்த மனுசியும் அடிக்கடி போய் புத்தகம் எப்படி வருகுது எண்டதை ஆர்வம் இல்லாமலும், அங்கே வேலை செய்த பரமானந்தத்தின் பிள்ளைகளுடன் அதிகம் ஆர்வமாயும் எப்பவும் பழகிக்கொண்டு இருந்து இருக்கிறா.,,எப்படியோ அந்தப் புத்தகம் வெளிவந்து சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமா, பரமானந்தம் அந்த தையல் டிச்சருக்கு என்ன பரம ஆனந்தத்தைக் காட்டினாரோ தெரியாது ,அல்லது " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்ற புத்தகம் எழுதிய கந்தப்புக்கு தன் இல்லறத்தை இனிமை ஆக்க தெரியாமல் இருந்ததோ எண்டு எனக்கு தெரியாது.

 

ஒரு நாள்... 

 

வீராளி அம்மன் கோவிலில் வேட்டைத் திருவிழா நடந்து கொண்டு இருந்த அன்று பின்னேரம், அம்மன் ஆவேசமாக வேட்டை ஆடி முடிய, கோவிலில் நைவேத்தியம் வேண்டிக் கொண்டு வெளிய வந்த கவிஞ்சர் கந்தப்புக்கு, புண்ணியக் குஞ்சி கூப்பிட்டு வைச்சு சில விஷயம் சொல்ல...இன்னுமொரு கதை பிறந்தது...

 

 

நாவுக் அரசன் ஒஸ்லோ .

 

10583888_10204131323224538_9105819712869

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

"" குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ""

............பாடல் வரி : முத்துலிங்கம்...

எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை

இருந்தாலும் கூடாது மன வேதனை

எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை

இருந்தாலும் கூடாது மன வேதனை

வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்கை பாடமே

தோல்வி காட்டும் ஞானம் புது வேதம் ஆகுமே

எது வந்த போதும் அதை ஏற்றுகொள்வாய்

இருள் கூட ஒளி வீசும் துணிந்தே செல்வாய்

எதற்கும் ஓர் நாள் உண்டு

எல்லோர்க்கும் வாழ்வுண்டு

கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே

எரிகின்ற சுடர்போல எழவேண்டுமே

மண்ணில் மூடினாலும் விதை மாய்ந்து போகுமோ

வலை விண்ணில் வீசினாலும் வான்மீன்கள் வீழுமோ

உழைப்பார்க்கு என்றும் இழப்பேதும் இல்லை

இழந்தாலும் அதை மீண்டும் பெறுவார் கண்ணா

தளராது புயல்போலே

வரலாறு படைப்பாரே

மணிவண்ணா மலையப்பா

கோவிந்தா கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை

மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

 

  • தொடங்கியவர்

உலகத்த மாத்த நினைச்சா பேச்சிலரா இருக்கும்போதே மாத்த முயற்சி பண்ணுங்க...

கல்யாணம் ஆயிட்டா டிவி சேனல கூட மாத்த முடியாது...!

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

இதுக்கு மேல என்ன வேண்டும் இந்த நகரத்துக்கு..

 

ஐரோப்பாவின் மிகப் பழமையான கடலோடிகளின் வரலாற்றில் நிரந்தரமா முக்கியத்துவம்  சேர்த்த நகரம் ,வட துருவ நோர்வேயின் கலாச்சாரப்  ,பொருளாதாரத்  தலைநகர் , என்னைப்போல பல வந்தேறு குடிகள் ஆறு மாதம் குளிரைத் திட்டிக்கொண்டும் ,ஆறு மாதம் கொஞ்சம் மிதமான வெய்யிலில் சுகமான காற்றைச் சுவாசித்து  வருடக்கணக்கில் வசித்துக் கொண்டும்  இருக்கும் , பல வருட அயல் நாடுகளின் கழுத்தறுப்புக்களை , இரண்டாம் உலக யுத்த நாஸி  ஜெர்மனியின் அழிப்புக்களை மவுனமாகத் தாங்கிக்கொண்டு , ஒரு காலத்தில் வைக்கிங்குகள் என்ற கடல்க் கொள்ளைக் காரரின்  தற்காலிக தங்குமிடம் இருந்த, ஒரு பக்கம் கடலும் மற்றைய மூன்று பக்கமும் மலைகளும் சூழந்த,நீண்ட நோர்வேயின் தெற்கில் கடல் விளிம்பில் இருக்கும் ஒரு சின்ன விடிவெள்ளி நகரம் ஒஸ்லோ.

 

                                             " ஒஸ்லோ " என்று பெயர் வரக் காரணம், அந்தப் பெயரின் முதல் எழுத்தான  " ஒஸ் " என்பது பழைய நோர்வேயிய மொழியில் , வடக்கு கடலையும் அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கண்னுக்குள்ள  விரலை விட்டு ஆட்டிய வைகிங்குகளும், வடக்கு நோர்வேயில் வசித்த  லாபியர்கள் சகண்டிநேவியப் பழங்குடி மக்களும்  இயற்கையை வழிபட்ட காலத்தில், அவர்கள் வழிபட்ட ஒஸ் என்ற கடவுளின் பெயரையும் , அதன் பின்னய  அடியான " லோ "  என்பது மலைகள், காடுகள் ,கடல் சூழந்த மலைகள் உள்ள நிலப்பரப்பு என்று பழைய நோர்வேயிய மொழியில் உள்ள வார்த்தையையும் இணைத்து ஒஸ்லோ எண்டு பெயர் வந்தது எண்டும் சொன்னாலும், எல்லா வரலாறுக்குக்  குழப்பம் போல இந்தப் பெயர் வரவும்  வேறு சில விளக்கம்களும் இருக்கு எண்டும் சொல்லுறார்கள்.

 

                                          பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னமே, கடல் வழி வியாபாரத்தில் பொருளாதார ரீதியாகப்  புகழ் பெற்று , புழக்கத்தில் இருந்த ஒஸ்லோ என்ற பெயரை, 1624 இல்  நோர்வே, சுவிடனை ஆண்ட டன்மார்க் நாட்டு சக்கரவர்த்தி கிறிஸ்டியான் IV தன்னோட பெயரையும் ,அவர் அம்மாவின் பெயரையும் இணைத்து கிரிஸ்தானியா என்று மாற்றி இருக்குறார். 1905 இல் நோர்வே அந்த சக்கரவர்தியின் டேனிஷ் ஆக்கிரமிப்பில் இருந்து சுதந்திரம் பெற்றாலும் 1925 இல் தான் மறுபடியும் , ஆக்கிரமிப்பின் அடாவடித்தனத்தில் இழந்து போன ஒஸ்லோ என்ற பெயர் உத்தியோக பூர்வமாக இந்த நகரத்திக்கு மறுபடியும் கிடைத்து இருக்கு. இன்றும் ஒஸ்லோவில் கிரிஸ்தானியா என்ற பெயரில் பல பழைய ஹோட்டல்  கட்டிடங்கள், சதுக்கம் வளைக்கும் இடங்கள், சிற்பங்கள் நிறைந்த பூங்காக்கள் , பழைய கருங்கல்லுப் பதித்த வரலாற்று வாசம் வீசும் வீதிகள் இந்த நகரத்தில் வரலாற்றின் கறுத்தப் பக்கத்தின் சாட்சியாக இருக்கு. 

 

                           இன்றைய திகதியில் இந்த நகரத்தின் முக்கிய லேன்ட் மார்க் என்று சொல்லப்படும் ஒஸ்லோ ஒபேரா ஹவுஸ் இருக்கும் பியோர்விக்கா என்ற இடத்திலும்,அதற்கு வெளியே ஒஸ்லோ பியோர்ட் கழிமுகத்தில் உள்ள ஹுவாட் ஓயா என்ற சின்ன தீவிலும் ,ஒஸ்லோ பியோர்டில் உள்ள இன்னொமொரு பெரிய தீவான மால்ம்ம் ஓயாவிலும் ஆயிரம் வருடம் முன்னமே எலும்பை உறைய வைக்கும் விண்டர் கால உறை பனியைச்  சமாளிக்கும் வசதிகள் ஏதுமற்ற காலத்தில்  மக்கள் வசித்து இருக்கும் அடையாளங்களைத் தோண்டி எடுத்து அந்த இடங்களில் இப்பவும் அந்த ஐஸ் ஏச் கால வாழ்விடங்களின் அடையாளங்களைப் பார்க்க முடியும். 

 

                                               இந்த சின்ன நகரத்தில் அண்மையில் செய்த கணக்கெடுப்பின் படி ஆறு அரை லட்சம் மக்கள் சண்டை சச்சரவு இல்லாமல்  அருகருகே அண்ணன் தம்பி போல வாளுறார்கள் எண்டும் ,நகரத்தின் கால் வாசி சனத்தொகை நோர்வேயில் பிறக்காத வேற்று நாட்டு மக்கள் என்றும்  சொல்லுறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் இந்த நகரத்தில் கையைக் காலை நீட்டி வைச்சு ,நெருக்கம் இல்லாமல் ஆசுவாசமாய் வெறும் முப்பது ணாயிரம் மக்களே பரந்து வாழ்ந்த இடத்தில் பத்தொன்பதாம் நூ ற்றாண்டின் தொடக்கத்தில் சடார் எண்டு சனத்தொகை இரண்டு இலட்சத்தி இருவதாக உயர்ந்து உள்ளது எண்டும் புள்ளி விபரம் புள்ளி புள்ளியா சொல்லுது. அதுக்கு காரணம் நோர்வேயையும் சுவிடனையும் இணைத்து காலுக்க வைச்சு நெரிசுக்கொண்டு இருந்த குட்டி நாடான டென்மார் இந்த இரண்டு நாட்டுக்கும் போனாப் போகுது எண்டு சுதந்திரம் கொடுத்துப் போட்டுப் போனது எண்டு சொல்லுறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆனாலும் எவளவுதான் பல்லின மக்கள் வாழந்தாலும் இன்னும் இந்த சின்ன நகரம் மற்ற ஐரோப்பிய மெட்ரோபொலிட்டன்   ஆடம்பர அலங்காரத் தலை நகரங்களுடன் ஒப்பிடும் போது இன்னும் வயசுக்கு வராத பெண்ணின் அடையாளங்களுடன் தான் இருக்கு....

 

                                       ஹென்றிக் இப்சன் என்ற உலகப் புகழ் நாடக எழுத்தாளர் வசித்த, உலகம் வியக்கும் குஸ்தாவ் வியிலான்ட் என்ற சிற்பி கருங்கல்லில் சிலைகளுக்கு உயிர் கொடுத்த , உலகம் ரசிக்கும் எட்வார்ட் முன்ச்ச் என்ற ஓவியர் அபத்த நிறங்களில் வாழ்வின் அவலத்தை வரைந்த , மிகப் பழமையான பூங்காக்கள் , இயல் இசை நாடகக்  கலாச்சார  மையங்கள் இருக்கும்  ஒஸ்லோ ஐரோப்பாவின் குளிர்கால விளையாடுக்களின் தலை நகரம். இந்த நகரத்தில் இருந்து ஒரு இருபது நிமிடம் மெட்ரோ ட்ரெயினில் பிரயாணம் செய்தாலே உலகப் புகழ் பெற்ற ஹோல்மன் ஹொலன் குன்றுகளில், ஒலிம்பிக் நடத்தக் கூடிய முக்கிய விண்டர் பனி சறுக்கும் இடம் இருக்கு, ஐரோப்பாவில் வேறு எங்கேயும் இப்படி இல்லை என்கிறார்கள்.2020 இல் ஒஸ்லோ விண்டர் ஒலிம்பிக் நடத்தும் சாத்தியம் இருக்கு எண்டும் சொல்லுறார்கள், 

 

                                    உலகத்திலேயே அதிகம் காப்பி உறிஞ்சிக் குடிக்கும் மக்கள் வாழும்,கடவுளை விடக் குழந்தைகளை அதிகம் நேசிக்கும் இதயத்தில் ஈரம் உள்ள மனிதர்கள் வாழ்கையை அழகாக்கும் ஒஸ்லோ,  நோர்வேயிய இளம்  பெண்களின் இடுப்புப் போல சின்ன நகரம்,அதன் பிரகாசம் நோர்வேயியப் பெண்களின் கண்கள் போல எப்பவும் பணிவுடன் மின்னும், உதவும் குணம் உள்ள மக்கள் எப்பவும் இயல்பாக இந்த நகரத்தை இயங்க வைக்க , இந்த நகரத்தின் கவர்ச்சி கோடை காலத்தில் வானம் பாடிகள் நீல வானத்தில் எழுதிச் செல்லும் ஒரு புதுக் கவிதை, வெயில் கால அடர்ந்த இரவில் எண்ண முடியாத நட்சத்திரங்கள் அள்ளிக்கொட்ட,  மென்மையான,அதிர்ந்து பேசாத நோர்வேயிய மக்களின் மனம் போல விண்டர் உறை பனி வெள்ளைக் கம்பளம் விரிக்க, அமைதி அதன் அர்த்தத்தைத் உலகெல்லாம் தேடிக் கடைசியில் இங்கே கண்டு கொண்ட,

 

                                தெற்கில் நோர்டற ஆர்கிர்  சின்ன மலைகள் தாவணி கட்ட, பாதம் வரை மறைக்கும் குருறுட் டாலன் பள்ளத்தாக்குகள் பாவாடை கட்ட, இந்த சின்னப் பெண்ணின் இதயத்தை ஊடறுத்து ஆர்கிஸ் எல்வா ஆறு சலங்கை கட்டிச்  சதிராட,  காடெல்லாம் பேர்ச் மரங்கள்,  அதன் கரை எல்லாம் லில்லி மலர்கள், நாடெல்லாம்  நல்ல தண்ணி நளினம் காட்டும் ஏரிகள் ,  உயரத்தில் இருந்து விழியெல்லாம் மை பூசி ,  மொழி பேசி விரைந்தோடும் மேகங்கள்  விலாசம் சொல்லியே விரைந்தோடும் , கண்ணுக்கு எட்டிய வரை நீலக் கடல் அலைகள் நகரத்தின் தெற்கு  விளிம்பில்  " இதுக்கு மேலே சொர்க்கம் தான்.... " என்று நோர்வேயின் இசைப் பிதா எட்வார்ட் கிரிக் எழுதிய சிம்போனிகளை இசைக்க,    

 

 

                          இதுக்கு மேல என்ன வேண்டும் இந்த நகரத்துக்கு.

 

 

 

நாவுக் அரசன் ஒஸ்லோ 05.09.14

 

10514392_10204336655997729_6569101904664

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.