Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கிலும் புலம்பெயர்ந்தோர் விபரங்களை திரட்டும் பணியில் அரசு தீவிரம்: அரியநேந்திரன் எம்.பி குற்றஞ்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலும் புலம்பெயர்ந்தோர் விபரங்களை திரட்டும் பணியில் அரசு தீவிரம்: அரியநேந்திரன் எம்.பி குற்றஞ்சாட்டு 

[Thursday, 2014-04-10 10:48:11]
ariyaneththiran_mp_seithy.jpg

புலம் பெயர்ந்தோர் தொடர்பான விபரங்களை புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் அரியநேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,

வடகிழக்கிலிருந்து 1983ஆம் ஆண்டுக்குப் பின் புலம்பெயர்ந்தவர்கள் யார் என்ற விபரங்களைத் திரட்டி மீண்டுமொரு தடைப்பட்டியலை தயாரிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவகர்களின் ஊடாக புலம்பெயர்ந்தோரின் குடும்ப விபரங்கள் திரட்டும் பணியில் புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

  

கிராம சேவை உத்தியோகத்தர்கள் இது தொடர்பான விபரங்களை திரட்டுவது கடினமான காரியமென எடுத்துக்கூறிய போதும் புலனாய்வுப்பிரிவினர் வாக்காளர் இடாப்பை வைத்து தயாரித்துத் தரும்படி அறிவுறுத்தல் வழங்கியிருந்தனர்.

வாக்காளர் இடாப்பின் மூலமோ, குடும்ப அட்டையின் மூலமோ மேற்படி தகவல்களைப் பெறுவது கஷ்டமான காரியம் என அவர்கள் எடுத்துக் கூறியதற்கு அமைய புலனாய்வுப் பிரிவினரும் இராணுவமும் மேற்படி தகவல்களை நேரடியாகப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் இத்தகைய தகவல்களை திருகோணமலை பிரதேசத்தில் பெற்ற பின்பு ஏனைய பிரதேசங்களில் திரட்டி கடந்த வாரம் 16 அமைப்புகளையும் 424புலம் பெயர் சமூகத்தையும் தடை செய்தது போலவே ஒட்டுமொத்த புலம் பெயர் சமூகத்தையும் தடைசெய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.

இதற்கிடையில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பல்வேறு அமைப்புகளுக்கு சென்று மறுவாழ்வு அளிக்கப்பட்டவர்களையும் இயல்பு வாழ்க்கை வாழுகின்றவர்களையும் கணக்கெடுக்கும் முயற்சியிலும் பாதுகாப்புப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய நடவடிக்கை மூலம் மீண்டுமொரு குழப்ப நிலைமை வடகிழக்கில் உருவாக்கவே அரசாங்கம் பிரயத்தனம் செய்து வருகின்றது. மிக விரைவில் 1983ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கையை விட்டு வெளியேறிய புலம் பெயர் சமூகத்தின் தடைப்பட்டியல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=107280&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.