Jump to content

அரசின் தடை அறிவிப்பு: குறிதவறாமல் காய்களை வீழ்த்துமா- அல்லது திரும்பிச் சென்று எறிந்தவரையே தாக்குமா?


Recommended Posts

nedi%20und%20kp%20%281%29.jpg
அரசின் தடை அறிவிப்பு இலக்கைத் தாக்குமா?

  • விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை தீவிரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடும் அரசாங்கத்தின் அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தடைஅறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒருவித பயம் தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்த தடையின் காரணமாக, அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அரசாங்கம் எடுத்து வைத்துள்ள அடி அத்தகையது. என்கின்றார் இன்போ தமிழின் இரானுவ ஆய்வாளரான சுபத்திரா அவர்கள்.
இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்துவதற்காக என்பதை தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது. முதலாவதாக, இதற்கு முன்னர் அரசாங்கம் தனிநபர்களைத் தடைசெய்யும் ஆணை எதையும் பிறப்பித்திருக்கவில்லை. பொதுவாக, புலிகள் இயக்கம் உள்ளிட்ட இயக்கங்ளின் மீது தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், தனிநபர்களை குறிவைத்து எந்த காய்களும் நகர்த்தப்படவில்லை. ஆனால், இம்முறை மிகத் தெளிவான முறையில், தனிநபர்கள் குறிவைத்து அடிக்கப்பட்டுள்ளார்கள். ஒருவரது தனிப்பட்ட தகவல்களைப் பகிரங்கப்படுத்துவது ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயலாகவே மேற்குலக நாடுகளால் பார்க்கப்படும் என்று, அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். அதேவேளை, மேற்குலக நாடுகளைக் குறிவைத்து, இலங்கை அரசங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள போதிலும், அவற்றிடம் இருந்து எந்தக் கருத்தும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் வெளியாகவில்லை.  என குறிப்பிடும் அவர்,
 
  • ஒரு வகையில் இது மேற்குலக நாடுகளால் விரும்பத்தகாத ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.  மனிதஉரிமைகளை அதிகம் மதிக்கும் மேற்குலக நாடுகள், தனிநபர் ஒருவர் பற்றிய, தனிப்பட்ட தகவல்கள் இவ்வாறு பகிரங்கப்படுத்தப்படுவதை விரும்பாது என்றே தெரியவந்துள்ளது. ஒருவர் தேடப்படுபவராக இருந்தால், அவரது பெயர், மற்றும் குறிப்பிட்ட விபரங்கள் இரசியமாகப் அரசாங்கங்களுக்கு இடையில் பகிரப்படுவது வேறு. ஆனால், இலங்கை அரசு அதை மீறி எல்லா விபரங்களையும் பகிரங்கப்படுத்தியுள்ளது. இதனால், குறிப்பிட்ட நபரின் உறவினர்கள் கூட பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.  ஒருவரது தனிப்பட்ட தகவல்களைப் பகிரங்கப்படுத்துவது ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயலாகவே மேற்குலக நாடுகளால் பார்க்கப்படும் என்று, அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். அதேவேளை, மேற்குலக நாடுகளைக் குறிவைத்து, இலங்கை அரசங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள போதிலும், அவற்றிடம் இருந்து எந்தக் கருத்தும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் வெளியாகவில்லை. 

    இந்தத் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசாங்கம், இதனை ஐ.நா பிரகடனத்துக்கு அமைவாக, ஏனைய நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது. எனினும், மேற்கு நாடுகள் இதற்குச் சாதகமான வகையில், பதிலளிக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால், இலங்கை அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட ஒன்று என்பதை அந்த நாடுகள் புரிந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அதைவிட, இந்த தடையை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா அறிமுகப்படுத்திய போது, பின்லேடன் போன்ற அல்கெய்டாவின் வலையமைப்பை உடைப்பதற்கான ஆதரவை உறுதிப்படுத்துவதே அதன் இலக்காக இருந்தது. 

    அல்கெய்டா மீது அப்போது தெளிவான குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் அத்தகைய தெளிவான குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. அதாவது தனிப்பட்ட நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஏதும் அரசாங்க அறிவிப்பில் கூறப்படவில்லை. பின்லேடனை தேடிய போது, அவரே அல்கெய்டாவின் தாக்குதல்களுக்கு சூத்திரதாரி என்று நிரூபிக்க அமெரிக்காவிடம் போதிய ஆதாரங்கள் இருந்தன. அதுமட்டுமன்றி அமெரிக்காவும் தோழமை நாடுகளும் தேடிய அல்கெய்டாவினர் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தவர்கள். ஆனால், இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பட்டியலில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிப்படையாகவே இயங்கி வருபவர்கள். தலைமறைவு வாழ்க்கையை அவர்கள் நடத்தவில்லை. தலைமறைவு வாழ்க்கை நடத்தாத- எந்தவொரு நாட்டினது சட்டம் ஒழுங்கு பிரிவினராலும் இலகுவில் அடையத்தக்கவர்களாக உள்ளவர்களை பயங்கரவாத சந்தேகநபர்களாக பட்டியலிடுவது, அவர்களைத் தலைமறைவு வாழ்வு நோக்கித் தள்ளிச் செல்லும் என்றே மேற்கு நாடுகள் கருதுவதாகத் தெரிகிறது. அதாவது ஒரு தடையை விதித்து விட்டு ஒருவரைத் தேடுவது இருட்டுக்குள் தேடுதல் நடத்துவதற்குச் சமமானது. அதையே. தடையை விதிக்காமல் எப்போதும் அவரைக் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது தான் புத்திசாதுரியமான பாதுகாப்புத் திட்டமாக இருக்கும். 

    இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ள அமைப்புகள் தனிநபர்களில் சிலர் குறித்து, மேற்குலக நாடுகள் உன்னிப்பான பார்வையை வைத்திருக்க்க் கூடும். அவர்களைத் தடை செய்து தம்மீதான சுமையை ஏற்றிக் கொள்ள அந்த நாடுகள் தயாராக இருக்கவில்லை. ஆனால் இலங்கை அரசின் தடை அறிவிப்பினால், அவர்கள் தலைமறைவாகத் தொடங்கி விடுவார்களோ என்ற அச்சம் குறித்த நாடுகளுக்கு வரலாம். அவ்வாறு தலைமறைவானால், அவர்களின் இருப்பிடத்தைத் தேடுவதற்கும், கண்காணிப்பதற்கும் அதிகளவில் ஆளணியையும், வளங்களையும் ஒதுக்க வேண்டியிருக்கும். அதைவிட தலைமறைவாக அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியாமல் போய் விடும். எப்போதும் தமது கண்களுக்குள் இருப்பவர்களை, தொலைவுக்குத் தள்ளிவிடும் இலங்கை அரசாங்கத்தின் நகர்வை மேற்கு நாடுகள் வெறுப்புடனேயே பார்க்கப் போகின்றன. 

    அதைவிட, தடைசெய்யப்பட்டுள்ளவர்களில் பலர் முற்றிலும் ஜனநாயக ரீதியாகச் செயற்பட்டவர்கள் என்பதையும் வெளிநாடுகள் நன்கறியும். 


    உதாரணத்துக்கு,

    அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் போன்றோர், எந்தவகையிலும் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் அல்ல என்பதை எல்லா நாடுகளுமே அறியும். 
    ஏனென்றால், பல ஆண்டுளாகவே அவர் போன்றவர்களை, அவர்கள் தங்கியுள்ள நாடுகள் அவதானித்து வருகின்றன. அப்படிப்பட்ட நிலையில், இலங்கை அரசின் தடைஅறிவிப்புக்கு அந்த நாடுகள் எந்தவகையிலும் மதிப்பளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில்,தாம் வாழும் நாடுகளில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நிலை அதிகம் ஏற்படாது போனாலும், இலங்கை அரசினால் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை. 

    இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு ஒரு விதமான சிக்கல் என்றால் இடம்பெறாதவர்களுக்கு இன்னொரு விதமான சிக்கல் உள்ளது. 

    அரசாங்கத்தின் தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களைப் பொறுத்தவரையில் தம்மால் இலங்கைக்குத் திரும்ப முடியாதோ- வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை வருமோ- வெளிநாட்டுப் பயணங்களின் போது விமான நிலையங்களில் சோதனைக் கெடுபிடிகளுக்குள்ளாக நேரிடுமோ- இலங்கையில் உள்ள தமது சொத்துகள் பறிமுதலாகுமோ- இலங்கையில் உள்ள தமது உறவுகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ள முடியாத நிலை வருமோ- அவர்களுக்கு உதவமுடியாத நிலை ஏற்படுமோ என்றெல்லாம் பல கவலைகள் தொற்றியுள்ளன. இதன் விளைவாக எதிர்காலத்தில் இலங்கை அரசுக்கு எதிரான - தமிழ்மக்களின் உரிமை கோரும் போராட்டங்களில் பங்கேற்கும் புலம்பெயர் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் மத்தியில் இரண்டு பிரிவினர் உள்ளனர். 

    ஒருதரப்பு

    கடும்போக்காளர்கள்,

    இன்னொரு தரப்பு

    மென்போக்கு அணுகுமுறையாளர்கள். 


    அதாவது, புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பின்னர், அவர்கள் மத்தியில் பல பிரிவுகள் உருவாகின என்பது வெளிப்படை. அவற்றில் ஒரு தரப்பை, கே.பியை பயன்படுத்தி தன்பக்கம் இழுக்க முனைந்தது அரசாங்கம்.  இந்தநிலையில், கடும்போக்காளர்களாக இல்லாத - அதேவேளை இலங்கை அரசுடன் சமரசம் செய்து கொள்ள விரும்பாத தரப்பினரை, கடும் போக்காளர்கள் எப்போதுமே, கடுமையாக விமர்சித்து வந்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் தடைப்பட்டிலில் இடம்பெற்றதற்காக வருந்தவில்லை.

    பட்டியலில் இடம்பெறாதவர்கள் மத்தியில், தம்மை கடும்போக்கு பிரிவினர், இலங்கை அரசுடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப் போகின்றனரே என்ற கவலையும் எழுந்துள்ளது. 

    நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் பிபிசி பேட்டி ஒன்றில், தனது பெயர் உள்ளடக்கப்பட்டதற்காக வருந்தவில்லை என்றும், அவ்வாறு சேர்க்கப்படாதிருந்தால் தான் கவலைப்பட்டிருப்பேன் என்று கூறியதன் பொருள் இதுவாகத் தான் இருக்கும். அதேவேளை, தடைப்பட்டியலில் இடம்பெறாதவர்களைப் பொறுத்தவரையில், தாம் எங்கேயும் போராட்டங்களில் முகம்காட்டப் போனால் சிக்கலாகி விடுமோ என்று ஒதுங்கவே முனைவர். இது ஒருவகையில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை முடக்கிவிடும் நிலைக்குத் தள்ளினாலும் ஆச்சரியமில்லை.ஆனால், மேற்குலக நாடுகள் புலம்பெயர் தமிழர்களின் கட்டமைப்புகள் சீர்குலைந்து போவதை விரும்புமா என்பது கேள்விக்குரிய விடயம். ஏனென்றால், பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில், தமிழ்ச் சமூகம், அந்த நாட்டு அரசியலில், தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளன. இந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலுவிழந்து போனால், அல்லது அந்தக் கட்டமைப்புகள் சீர்குலைந்து போனால், தமிழர்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பது அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு கடினமானதாகும். அதைவிட, புலம்பெயர் தமிழர்களின் ஊடாக, இலங்கையில் தமிழர்களின் ஜனநாயக அரசியல் தளத்தைப் பலப்படுத்தவே மேற்கு நாடுகள் முனையும். அந்த இணைப்பு அறுந்து போவதையும் மேற்குலகம் விரும்பாது.ஏனென்றால், அது இலங்கையில் தமிழர்களின் அரசியலைப் பலவீனப்படுத்தும் என்று கருதவு வாய்ப்புகள் அதிகம். 

    தமிழர்களுக்கு நலன்களைப் பற்றி மேற்குலகம் சிந்திக்குமா இல்லையா என்பதை விட, தமது நலன்களை அடைவதற்கு தமிழர்களைப் பயன்படுத்தவே மேற்குலகம் விரும்பும். எனவே, இந்த தடையின் மூலம் அந்த வழிகள் அடைக்கப்படுவதை அந்த நாடுகள் விரும்புமா என்பது சந்தேகம் தான். எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்த தடையின் மூலம் பலதரப்புகளை நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்பது மட்டும் உண்மை. 

    பல காய்களை ஒன்றாக அடிப்பதற்காக கல்லையும் வீசிவிட்டது. அந்தக் கல் குறிதவறாமல் காய்களை வீழ்த்துமா- அல்லது திரும்பிச் சென்று எறிந்தவரையே தாக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

நன்றி தாய்நாடு .

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் தடையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை- கனடிய அரசும் எதிர்க்கட்சிகளும் அறிவிப்பு

 

Liberal-Party-FAAE-Committee-Vice-Chair-அண்மையில் சிறிலங்கா அரசு புலம்பெயர் தமிழரைக் குறிவைத்து செயற்படுவது பற்றி கனடிய அரசையும் முக்கிய கட்சிகள் மற்றும் சட்டத்துறை காவற் துறை அதிகாரிகளையும் கனடியத் தமிழர் பேரவை சந்தித்து இதற்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் ஐநாவின் மனிதவுரிமைக் கூட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் பல நாடுகள் கொண்டு வந்த சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாகக் கனடியத் தமிழர் பேரவையும் மற்றும் பல அமைப்புகளும் மும்முரமாகச் செயற்பட்டன, இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாகப் புலம்பெயர் நாடுகளில் அந்நாட்டுச் சட்டங்களுக்கு அமையச் செயற்படும் தமிழர் அமைப்புகளையும், தனிப்பட்ட நபர்களையும் சிறி லங்கா அரசு தடை செய்துள்ளது.

சிறி லங்கா அரசின் இத் தன்னிச்சையான முடிவு மற்றும் அதன் சனநாயக விரோதப் போக்குத் தொடர்பாகவும் புலம்பெயர் நாடுகளில் தமிழரின் குரலை ஒடுக்கு முகமாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை ஏற்றுப் பன்னாட்டு விசாரணைக்குத் தாம் ஒத்துழைக்கப் போவதில்லை என்ற அறிவிப்புத் தொடர்பாகவும் பல சந்திப்புகளை நேற்று ஒட்டாவாவில் கனடாவின் முக்கிய கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் கனடியத் தமிழர் பேரவை மேற்கொண்டது.

ஒட்டாவாவில் நேற்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் ஆகியவற்றுடன் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் இராச் தவரட்ணசிங்கம், செயலாளர் வாணி செல்வராசா, நிறைவேற்று இயக்குனர் டன்ரன் துரைராசா மற்றும் தேசியப் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் இச் சந்திப்புகளிற் பங்கேற்றனர்.

இச் சந்திப்பின்போது, கனடாவில் சனநாயகரீதியாகச் செயற்படும் பொது அமைப்புகளையும் தனிப்பட்டோரையும் சிறி லங்கா தடை செய்தமையைத் தாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இவ்விடயம் தொடர்பில் சகல கட்சிகளும் கலந்து ஆலோசனை செய்தபின்னர் தமது காத்திரமான முடிவை அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்,

கனடிய வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கனடியத் தமிழர் பேரவையினர் இவ்விடயம் தொடர்பாக உரையாடினர். இது தொடர்பாக தாம் ஆழ்ந்த கவனம் செலுத்துவதாகவும் கனடிய சட்டங்களுக்கு உட்பட்டுச் செயற்படும் அமைப்புகள் மற்றும் தனிப்பட்டோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சனநாயக முறையிற் தமது பணிகளைத் தொடரலாம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர், இதேவேளை சிறி லங்கா அரசு விதித்த தடையானது அது அந்த நாட்டுக்கு வெளியே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் மேலும் தெரிவித்துள்ளனர். தாம் இதற்கு எத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.http://www.thinakkathir.com/?p=57790

NDP-Party-FAAE-Committe-Vice-Chair.jpgLiberal-Party-FAAE-Committee-Vice-Chair.Conservative-Party-FAAE-Committee-Chair.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.