Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் உள்ளது - கேணல் ஹரிகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Colonel_R__Hariharan.jpg

நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாக இராணுவ ஆய்வாளரும், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரில் இந்தியப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்தது தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், 

“நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, அல்லது சில நெருக்கடியான நிலைமைகளின் போது படைகளை அனுப்பும் அதிகாரம் பிரதமருக்கு உள்ளது. 

1989ல் மாலைதீவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்ட போது, அந்த நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தியப்படைகள் அங்கு அனுப்பப்பட்டன. 

சிறிலங்காவைப் பொறுத்தவரையில், 2008, 2009இற்கு முன்னரே நெடுங்காலமாக நெருக்கமான பாதுகாப்பு உறவுகள், குறிப்பாக கடற்படையுடனான உறவுகள் இந்தியாவுக்கு இருந்து வந்துள்ளன. 

அதைவிட போரின் இறுதிக்கட்டத்தில், பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. 

அப்போது இந்தியாவிடம் ஆயுதங்களை சிறிலங்கா கோரியது. 

அதற்கு போருக்குப் பயன்படும் ஆயுஙதங்களை வழங்க முடியாது என்று இந்தியா கூறிவிட்டது. 

எனினும், விமானத் தாக்குதலில் இருந்து தடுப்பதற்கான சில ஆயுதங்களையும், ரேடர்களையும் இந்தியா வழங்கியது. 

அவை போருக்குப் பயன்படாத ஆயுதங்கள் என்று இந்தியா கூறியது. 

பயிற்சி, ஆயுத உதவிகள் தவிர்ந்த, இந்தியப் படைகள் அங்கு நேரடியாகப் போரில் பங்கேற்றதாக  நான் அறியவில்லை. 

ஆனால், இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, படைகளை அனுப்பும் அதிகாரம் இந்தியப் பிரதமருக்கு உள்ளது. 

எனினும் பின்னர் அதுபற்றி நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். 

இந்தியாவினது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வரும் போது, அது உள்நாட்டிலாக இருந்தாலும், வெளிநாட்டிலாக இருந்தாலும், அதற்கெதிராக நடவடிக்கையில் இறங்க முடியும். 

விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கையில் படைகளை ஈடுபடுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20140416110338

  • கருத்துக்கள உறவுகள்

இது யாழ்களத்தின் இறைவனுக்கு இந்திய ஏகாதிபத்தியம் கொடுத்திருக்கும் பதில்.. :D

சடையிறார் சக்கடத்தார்.

நோ பயர் சோன் படத்திற்கு தடை போட்டதற்கு காரணங்கள் வெளிவருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இது யாழ்களத்தின் இறைவனுக்கு இந்திய ஏகாதிபத்தியம் கொடுத்திருக்கும் பதில்.. :D

 

 

ஏன், இறைவன் அப்படி நடக்கவில்லை என்று கற்பூரத்தை அனைத்துச் சத்தியம் செய்திருந்தாரா??? நானும் அதை அவதானித்திருக்கிறேன். இறைவனின் மனதில் இந்தியாவுக்கு ஒரு மென்மையான இடம் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கிறது. நேற்றுக்கூட சர்வதேச விசாரணையை இந்தியா எதிர்க்கும் என்கிற தலைப்பில் வந்த செய்தியொன்றிற்கு "இந்தியா பயப்படுகிறதா?" என்று நக்கல்தொனியில் ஒரு கேள்வி இறைவனால் கேட்கப்பட்டிருந்ததுணெல்லாம் அவனுக்கே வெளிச்சம். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவே.... உரிஞ்சு போட்டு, நிக்குது.
எங்க‌டை ஆக்க‌ள், தான்... அதுக்கு, கோவ‌ண‌ம் க‌ட்ட‌ நிக்கின‌ம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சடையிறார் சக்கடத்தார்.

நோ பயர் சோன் படத்திற்கு தடை போட்டதற்கு காரணங்கள் வெளிவருகின்றன.

 

 

ஆனால் இந்த ஆள்சொன்ன முக்கியமான விடயம் ஒன்றிருக்கிறது. அதாவது 2009 இறுதி நாட்களில் மீதமிருந்த புலிகளின் தளபதிகளையும் பொதுமக்களில் காயப்பட்டவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அமெரிக்கக் கடற்படை முயற்சித்த விடயம் அது. இந்த முயற்சி பற்றி இந்தியாவின் கருத்தை அறிய அமெரிக்கா முயன்றபோது, தனது வெளிவிவகாரக் கொள்கைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால் என்று அதைக் கருதி ஒட்டுமொத்தமாகவே அந்த முயற்சியை இந்தியா தடுத்தி நிறுத்திவிட்டதாம். அன்று அப்படி நடந்துகொண்டபடியினால்த்தான் இன்றுவரை இலங்கையில் இந்தியாவின் பிடி தக்கவைக்கப் பட்டிருக்கிறதாம். இப்படி சொன்னவர்கூட இந்த ஆள்தான். இதே பாட்டைத்தான்  அண்மையில் ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கெதிரான தீர்மானத்தைலிருந்து விலகியிருந்தபோதும், இலங்கைக்கு ஆதரவாக பாக்கிஸ்த்தான் கொண்டுவந்த இரு பிரேரணைகளை ஆதரித்தபோதும் கூட இந்தியா பாடியிருந்தது நினவில் வருகிறது. அதாவது தான் இப்படி நடந்துகொண்டதன் மூலம் இலங்கை மீதான இந்தியாவின் பிடி காப்பாற்றப்பட்டிருக்கிறதென்பது. அப்படி என்னத்தைத்தான் பிடித்து வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை !!!!! :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.