Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டமனாறு கடல் நீரேரியில் ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்

Featured Replies

அதிகாரிகளின் கவனக்குறைவினால் பெரும் பாதிப்பு:-

thonndaman%20aru_CI.jpg

தொண்டமனாறு கடல் நீரேரிப்பகுதியில் ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்களினால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மோசமாக மாசடைந்துள்ளது. குறித்த கடல் நீரேரிப்பகுதியில் அமைந்துள்ள துருசினை நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் இழுத்து மூடியதையடுத்தே அண்மைய வரட்சியினால் மீன்கள் ஆயிரக்கணக்கினில் இறந்திருக்கலாமென நம்பப்படுகின்றது.

இப்பகுதியில் தண்ணீர் வேகமாக வற்றிவருவதால் நீரில் உப்பின் செறிவு அதிகரித்துள்ளதாகவும் அதனால் சுவாசிப்பதற்கான ஒட்சிசனின்றி மீன்கள் உயரிழந் திருக்கலாமென நம்பப்படுகின்றது.

எனினும் அதிகாரிகளது பொறுப்பற்ற தன்மையாலேயே மீன்கள் மற்றும் நீர்பாம்புகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக மீனவ அமைப்புக்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

குறித்த துருசை திறந்து விட கோரியதாகவும் எனினும் தொடர்புடைய அதிகாரிகள் அசட்டையீனமாக கவனத்தில் கொள்ளவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இக்கடல் நீரேரியினை நம்பி இருநூறிற்கும் அதிகமான மீனவ குடும்பங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரச்சினையினை அரசியல் மயப்படுத்த வேண்டாமென கேட்டுக் கொண்டதுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளதாக தெரிவித்தனர்.

 

பிரசித்தி வாய்ந்த சன்னிதி முருகன் ஆலய பின்புறமாக அமைந்ததே தொண்டமனாறு கடல் நீரேரி என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105784/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

 
DSC_0108%20copy.jpg

- ற.றஜீவன், எஸ்.கர்ணன்,எஸ்.கே.பிரசாத்  

யாழ். தொண்டமனாறு கடல் நீரேரிக்கும் பாலத்திற்கும் இடையிலான பகுதியில் வியாழக்கிழமை (17) மாலையிலிருந்து மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக கரவெட்டி பிரதேச செயலர் க.சிவஸ்ரீ தெரிவித்தார்.

இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கும்  மீன்களை சிலர் வியாபாரத்திற்காக எடுத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 

மீன்கள் இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்குவது ஏன் என்று அறியமுடியவில்லை. இருப்பினும், அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பாடாதவாறு  மீன்களை அழிக்கும் நடவடிக்கைகளை வல்வெட்டித்துறை நகரசபை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். 

இவ்வாறு மீன்கள் இறந்தமை தொடர்பில் பரிசோதிக்கப்படுமெனவும் அவர் கூறினார். 

photo%201%20copy(2).jpg

photo%203%20copy(2).jpg

photo%204%20copy(3).jpg

DSC_0086%20copy(2).jpg

DSC_0092%20copy(2).jpg

DSC_0095%20copy(2).jpg

DSC_0111%20copy.jpg

DSC_0157%20copy.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்க்கவே அரியண்டமாய் இருக்குது.அந்த மக்களுக்கு வருத்தம் வரப் போகுது

  • தொடங்கியவர்
யாழ். தொண்டைமானாறு பிரதான பாலத்துக்கும் சந்நிதி கோயிலின் தெற்குப் பக்கத்திலுள்ள வெளிக்கள நிலையத்துக்கும் இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியின் இரு மருங்கிலும்  இலட்சக்கணக்கான  மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில்கரையொதுங்கியுள்ளன.
image.jpeg
குறித்த  மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் ஆற்று நீரில் ஏற்பட்டுள்ள ஓட்சிசன் பற்றாக்குறைவே என்று வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
9%20%281%29_0.jpg
நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக தொண்டைமானாற்றுக் கடல் நீரேரி வழமைக்கு மாறாக அதிகம் வற்றியுள்ளது. எஞ்சியுள்ள குறைந்தளவு நீரில் எல்லா மீன்களுக்கும் போதுமான அளவு ஒட்சிசன் இல்லை. அதுமட்டும் அல்லாமல் உயர் வெப்பநிலை காரணமாக நீரில் ஒட்சிசனின் கரைதிறனும் குறைவாக உள்ளது. இந்த ஓட்சிசன் பற்றாக்குறைவே மீன்களின் சடுதியான இறப்புக்கான பிரதான காரணமாகும்
 
virakesari.lk

தொண்டைமான் ஆற்று மீன்களின் இறப்புக்கு ஓட்சிசன் பற்றாக்குறைவே காரணம் - பொ.ஐங்கரநேசன்:-
19 ஏப்ரல் 2014
 
lg-share-en.gif
 

3ஆம் இணைப்பு -

FISH%201_CI.jpg

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

தொண்டைமான் ஆற்றுக் கடல் நீரேரியில் பெரும் எண்ணிக்கையில் மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் ஆற்று நீரில் ஏற்பட்டுள்ள ஓட்சிசன் பற்றாக்குறைவே என்று வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தொண்டைமான் ஆற்றுக் கடல்நீரேரியில், செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.04.2014) இலட்சக்கணக்கான மீன்கள், குறிப்பாகத் திரளி வகை மீன்கள் இறந்து கரையொதுங்கின. இந்த அசாதாரண மீன் இறப்புத் தொடர்பான தொடர்நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இன்று சனிக்கிழமை (19.04.2014) அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அப்பகுதிக்குச் சென்றிருந்தார். அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற் குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக தொண்டைமானாற்றுக் கடல் நீரேரி வழமைக்கு மாறாக அதிகம் வற்றியுள்ளது. எஞ்சியுள்ள குறைந்தளவு நீரில் எல்லா மீன்களுக்கும் போதுமான அளவு ஒட்சிசன் இல்லை. அதுமட்டும் அல்லாமல் உயர் வெப்பநிலை காரணமாக நீரில் ஒட்சிசனின் கரைதிறனும் குறைவாக உள்ளது. இந்;த ஓட்சிசன் பற்றாக்குறைவே மீன்களின் சடுதியான இறப்புக்கான பிரதான காரணமாகும். 

ஒட்சிசன் பற்றாக்குறைவுக்குச் சகிப்புத் தன்மையைக் கொண்டிராத திரளி மீன்களே முதலில் அதிகளவில் இறக்க ஆரம்பித்துள்ளன. ஒட்சிசன் பற்றாக்குறைவுக்கு ஓரளவேனும் தாக்குப் பிடிக்கக்கூடிய கெளிறு மற்றும் விலாங்கு மீன்கள் நீரின் மேல்மட்டத்துக்கு வந்து சுவாசிக்க முயல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. நீர் ஆவியாகுவதால் ஏற்படும் உப்புச் செறிவு அதிகரிப்பும் இன்னுமொரு உபகாரணமாக இருக்கக் கூடும். மற்றப்படி, மீன்களின் இறப்புக்கு நஞ்சு காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்;.

அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன் மாகாண சபை உறுப்பினர்கள் க.சுகிர்தன், க.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ந.அனந்தராஜ், வல்வெட்டித்துறை நகர சபைச் செயலாளர் கிரிஜா வாசுதேவன், வலி கிழக்குப் பிரதேசசபை முன்னாள் தலைவர் அ.உதயகுமார், வடமாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.சுதாகரன், யாழ் மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் க.கருணாநிதி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன் ஜக்சீல் மற்றும் தொண்டைமானாறு கடற்றொழிலாளர் சங்கச் செயலாளர் ந.வர்ணகுலசிங்கம் ஆகியோரும் அப்பகுதிக்குச் சென்றிருந்தார்கள். 

இன்று சனிக்கிழமையும் (19.04.2014) அப்பகுதியில் கனிசமான அளவு மீன்கள் இறந்து கரையொதுங்கி இருந்ததனால் அவற்றை அகற்றிப் புதைக்கும் பணியில் வல்வெட்டித்துறை நகரசபை, கரவெட்டி பிரதேச சபை மற்றும் வலிகிழக்கு பிரதேச சபைகளைச் சேர்ந்த பணியாளர்களுடன் வடமாகாண சுற்றாடல் அமைச்சின் பணியாளர்களும் இணைந்து ஈடுபட்டிருந்தனர்

 

.http://globaltamilnews.net/

 

 

 

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.