Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள் ஊடகங்களில் இருந்து

Featured Replies

தமிழ்நாடு அழுத்தங்களுக்கு பணியாத சிறந்த தலைவர் இந்தியாவில் இல்லை

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கிடைக்கும் யுத்த ஆயுதங்கள் உபகரணங்கள் கடத்தி வரப்படுவது இந்து சமுத்திரத்தின் ஊடாகவே ஆகும். இவ்வாறு புலிகள் இயக்கத்தினரும் அவர்களின் ஆயுத வர்த்தகர்களும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினூடாகப் புலிகளின் பிரதேசங்களுக்குக் கொண்டு வருவதைத் தடை செய்வது ஷ்ரீலங்கா பாதுகாப்புப் படையினருக்கும் தனியாகச் செய்ய இயலாத காரியம் அல்ல. ஆயினும் இவ்வாறு புலிகளின் ஆயுதக் கடத்தல்களைத் தடுப்பதற்கான கடற்பிராந்திய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தியாவின் கடற்பிராந்திய பாதுகாப்பு உதவிகளும் அவசியமாக உள்ளன.

ஆயினும், இவ்வாறு இந்தியாவின் கடற்பிராந்திய பாதுகாப்பு உதவி கிடைப்பதற்குத் தடையாக இந்தியாவிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் அமைந்து விட்டன. இவ்வகையில் மாநில அரசுகளின் ஆதரவில் தங்கியிருக்கும் இந்திய மத்திய அரசில் இவ்வாறு குறித்த மாநிலத்தில் நிலவும் அரசியல் ரீதியிலான அழுத்தங்களுக்கு எதிராகச் செயற்படக் கூடிய உறுதியான தலைவர் யாரும் தற்போது இல்லை. குறிப்பாக தற்போதைய இந்திய மத்திய அரசு தமிழ்நாடு மாநிலத்தின் அரசியல் நிலைப்பாட்டுக்குச் சார்பாக நடந்து கொள்ளும் முறையிலேயே எப்பொழுதும் செயற்பட முனைந்து வருகிறது.

- திவயின விமர்சனம் :03.09.2006 -

http://www.thinakkural.com/news/2006/9/8/s...s_page10324.htm

:lol::lol::lol::lol::D

  • Replies 62
  • Views 17.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வெருகலாறில் கருணா குழுவின் தாக்குதலில் எட்டு புலிகள் உயிரிழந்தனர்

மட்டக்களப்பு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இல்லாத வெருகலாறு பிரதேசத்தில் வைத்து வன்னிப் பிரிவு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீது கருணா குழுவினர் கடந்த 03 ஆம் திகதி விடியற்காலையில் கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகவும் இந்தத் தாக்குதலின் போது வன்னிப் புலிகள் இயக்கத்தினர் எட்டுப் பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணா குழுவினரின் இந்த கிளேமோர் குண்டுத் தாக்குதலில் சிக்குண்டு வெருகலாறு பகுதியைச் சேர்ந்த புலிகள் இயக்கப் பிரதேசத் தலைவர் தங்கன் உட்பட மற்றும் சில பிரபல வன்னிப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் உயிரிழந்து விட்டதாக கிழக்கு மாகாணப் பிரிவு பாதுகாப்புத்துறையின் புலனாய்வுப் பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு எட்டு வன்னிப் புலிகள் இயக்கத்தினர் கொல்லப்பட்ட மேற்படி கருணா குழுவினரின் தாக்குதல் பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப சம்பவதினம் குறித்த புலிகள் இயக்கத்தின் பிரதேசத் தலைவர் தங்கன் உட்பட புலிகள் இயக்க குழுவினர் வெருகலாறு ஆற்றையண்டிய பகுதியினூடாக வான் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அங்கு பொருத்தப்பட்டிருந்த கிளேமோர் குண்டை வெடிக்க வைத்து கருணா குழுவினர் கடும் தாக்குதலை மேற் கொண்டதாக பாதுகாப்புத்துறை புலனாய்வுப் பிரிவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தினமின: 04.09.2006 -

http://www.thinakkural.com/news/2006/9/8/s...s_page10323.htm

அடுத்த வெடி :lol::lol::lol:

  • தொடங்கியவர்

அமெரிக்க அழுத்தம் காரணமாகவே ஆயுத உதவிகளை பாக். நிறுத்தியதாக தகவல்

ஸ்ரீலங்கா அரசுக்கும் புலிகள் அமைப்புக்குமிடையே தீவிர யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வழமையாக யுத்த ஆயுதங்கள், உபகரணங்களை ஸ்ரீலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கிவந்தபோதும், ஸ்ரீலங்கா அரசாங்கம் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளைக் கைவிட்டு, யுத்தம் மூலமான தீர்வை மட்டுமே நாடி நிற்பது தவறான அணுகுமுறை என்ற நிலைப்பாட்டை அண்மையில் வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க அரசு மேற்படி யுத்த ஆயுத உதவிகளை ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்காதிருக்கும்படி பாகிஸ்தான் மீது இராஜதந்திர அழுத்தத்தை பிரயோகித்துள்ளது.

இவ்வாறு அமெரிக்க தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையிலும் அத்துடன் பாகிஸ்தான் அரசுக்கு யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை அமெரிக்க அரசாங்கமே நெடுங்காலமாக வழங்கிவரும் நிலையிலும் பாகிஸ்தான் அரசு ஏற்கனவே ஸ்ரீலங்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்பேரில் ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடுப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த பெருந்தொகையான யுத்த ஆயுதங்கள், உபகரணங்களைக் கூட அனுப்பாமல் இடைநிறுத்திக் கொண்டது. இது சம்பந்தமாக பாகிஸ்தான், ஸ்ரீலங்கா அரசுக்குத் தெரிவித்த விடயங்களுக்கேற்ப ஸ்ரீலங்கா அரசுக்கு ஆயுத உதவி வழங்குவதை பாகிஸ்தான் விரும்பியபோதும் அமெரிக்க அரசு பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பிடம் பிரயோகித்த இராஜதந்திர அழுத்தம் காரணமாகவே இவ்வாறு ஸ்ரீலங்காவுக்கான ஆயுத உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஸ்ரீலங்காவிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் வடக்கு, கிழக்கு பிரச்சினை சம்பந்தமாகத் தமக்கிடையே ஒற்றுமையான ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி இந்த பிரச்சினைக்காக பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வைக் காணும் வரையில் ஸ்ரீலங்காவுக்குப் பாகிஸ்தான் யுத்த ஆயுத உதவிகள் வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதி கிடைக்காது எனவும் பாகிஸ்தான், ஸ்ரீலங்கா அரசுக்கு அறிவித்துள்ளது. மேலும், இவ்வாறான தீர்மானத்தை அமெரிக்க அரசு எடுத்திருப்பது கடந்த சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்திருந்த அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஸ்ரீவின் பேன், வடக்கு, கிழக்கு பிரச்சினை சம்பந்தமாக இங்குள்ள நிலைமையை ஆராய்ந்து தயாரித்த தனது அறிக்கையை சிபாரிசுகளுடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்குச் சமர்ப்பித்த பின்னரே ஆகும். இந்தத் தகவலை அமெரிக்க தூதரக செய்தி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

-லங்காதீப விமர்சனம்:01.09.2006-

http://www.thinakkural.com/news/2006/9/4/s...ws_page9961.htm

  • தொடங்கியவர்

சங்கரியை வெளியுறவு அமைச்சராக்க வேண்டும்

ஸ்ரீலங்காவில் ஆட்சி செய்யும் அரசாங்கம் சிங்கள அரசாங்கம் அல்ல. அனைத்து ஸ்ரீலங்கா நாட்டினர்களினதும் அரசாங்கம் என்பதையும் தற்போது அரசாங்கம் தொடுத்திருக்கும் யுத்தம் புலிகள் அமைப்புக்கு எதிரானதே அன்றி தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்பதையும் இந்திய அரசாங்கத்துக்கும் தமிழ்நாடு மாநில அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஷ்ரீலங்கா அரசு தரப்பு நிரூபிக்க வேண்டியதே தற்போதுள்ள அவசரமான தேவையாகும். இதற்காக அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள நிலைப்பாட்டில் உடனடியானதும் முக்கியமானதுமான பல மாற்றங்களைச் செய்யவேண்டும். ஆளும் அரசுக்கு வெளியேயுள்ள சிறுபான்மை மக்களின் ஜனநாயக கட்சிகள், அமைப்புகளை கூடுதலாக அரசாங்கத்துடன் சேர்த்துக் கொள்வது மேற்குறிப்பிடப்பட்டதும் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியதுமான ஒரு செயற்பாடாகும். இந்த வகையில் இந்தியாவுடன் விசேட வம்சாவளி தொடர்புகளையுடைய மத்திய மலைநாட்டுத் தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியாகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை அண்மையில் ஆளும் அரசுடன் சேர்த்துக் கொண்டது மேற்குறிப்பிட்ட வகையில் மிக முக்கியமானதும் சாதகமானதுமான ஒரு அரசியல் நிகழ்வாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்திலுள்ளவர்கள் சிங்களப் பிரதிநிதிகளாக உள்ள சிங்களக் கட்சிகள் மட்டுமே என்ற இந்திய அரசாங்கத்தினதும் தமிழ்நாடு அரசு, அரசியற் கட்சிகள், தமிழ்நாடு மக்களின்றும் அபிப்பிராயத்தை மாற்றியமைத்து இந்திய மத்திய அரசு, தமிழ்நாடு மாநில அரசுடன் சுமுகமான உறவுகளை விருத்தி செய்து கொள்வதற்கும், விநோதமான அபிப்பிராயங்களை அகற்றுவதற்கும் மேற்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் அரசாங்கத்தில் சேர்த்துக் கொண்டது போன்ற செயற்பாடுகள் மிகவும் அவசியமாகும்.

ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் நிலைமையை உதாரணத்துக்காக எடுத்துக் கொண்டாலும் அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்களில் பெரும்பான்மையானோர் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது அமெரிக்காவின் "டிமோகிறாற்றிக்" அதாவது ஜனநாயகக் கட்சியே ஆகும். இந்தக் கட்சிக்கு எதிரான "றிபப்ளிகன்" அதாவது குடியரசுக் கட்சிக்கு கறுப்பின மக்களின் ஆதரவு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகும். இவ்வாறு இருப்பினும் தற்போது அமெரிக்காவில் ஆளும் கட்சியாகிய மேற்படி குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி தனது அரசாங்கத்தில் ராஜாங்கச் செயலாளராக கறுப்பினப் பெண்மணியையே நியமித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி குடியரசுக் கட்சிக்கும் தனக்கும் எதிராகவுள்ள கறுப்பின மக்களின் பொது அபிப்பிராயத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்கும் தனது கட்சியும் அரசாங்கமும் வெள்ளையினத்தவர்களுடையது மட்டுமல்ல கறுப்பின மக்களுடையதுமே என்பதை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுவதற்கும் ஏற்றமுறையில் செயற்பட்டுள்ளார். இந்த உதாரணத்தின் மூலம் ஸ்ரீலங்காவில் உள்ளூர் அரசியல் செயற்பாடுகளை நோக்கினால் முன்னர் லக்ஷ்மன் கதிர்காமர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்து சிறந்த முறையில் செயற்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். அவர் அமைச்சராக பதவி வகித்த முழுக்காலப்பகுதியிலும் புலிகள் இயக்கத்துக்கு எதிராக வெற்றிகரமான முறையில் செயற்பட்டுள்ளதற்குக் காரணம் அவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சராக இருந்து செயற்பட்டதேயாகும்.

எனவே, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் சிங்கள ஆளும் தரப்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராகிய வீ.ஆனந்தசங்கரியை மேற்படி வெளிவிவகார அமைச்சர் பதவியிலோ அல்லது குறைந்தபட்சம் காலியாகவுள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் பதவியிலோ நியமித்திருந்தால் அந்தச் செயற்பாடு மூலமாக ஷ்ரீலங்கா அரசு சிங்கள அரசு என்ற இந்திய மற்றும் சர்வதேச அபிப்பிராயம் தோன்றாமலிருந்திருக்க இடமுண்டு. இவ்வாறு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரியை முக்கிய அமைச்சுப் பதவி வழங்கி அவரை ஆளும் அரசுடன் இணைத்துக் கொள்வதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்பதை அரசு தெரிந்து கொண்டு உடனே செயற்படவேண்டும்.

-லங்காதீப விமர்சன: 30.08.2006-

http://www.thinakkural.com/news/2006/9/4/s...ws_page9960.htm

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முடியாது

கருணா அம்மானின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் ஈழம் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு எனப்படும் கட்சியின் தலைமை அலுவலகம் அண்மையில் கொழும்பில் திறந்துவைக்கப்பட்டது. அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளராகிய ரீ.தூயவனுடன் லங்காதீப ஞாயிறு பத்திரிகை சார்பில் நடத்தப்பட்ட நேர்காணல் நிகழ்வில் மேற்படி தூயவன் தெரிவித்திருக்கும் விடயங்களுக்கேற்ப, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாசிசவாதத்தினதும், ஏகாதிபத்தியவாதத்தினதும் மிலேச்சத்தனத்தினதும் ஒரு கலவையாக இருப்பவர் எனவும் அவர் ஒரு சர்வாதிகாரி எனவும் அவருடைய ஏகாதிபத்தியவாதத்தை ஏற்றுக்கொள்ளாத அனைத்து நபர்களையும் அவர் கொலை செய்துவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் ஈழம் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தூயவன் கூறியிருக்கும் கருத்துகளுக்கேற்ப புலிகள் இயக்கத் தலைவர் ஒரு ஜனநாயகவாதியல்ல எனவும் அவ்வாறு ஜனநாயகத்திற்கேற்ப மக்களை முன்னேற்ற வேண்டிய தேவையில்லை எனவும் அவருக்கு வேண்டியது தமிழ் மக்களை தனது இலாபங்களைப் பெறும்வகையில் தொடர்ந்து அடிமைகளாக வைத்திருப்பதே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொழும்பில் கருணாவின் அரசியல் அலுவலகத்தை திறப்பதன் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவானவர்களாக கொழும்பில் வாழும் வர்த்தகர்கள் உட்பட மற்றும் தமிழ் மக்ககளின் ஆதரவைப் பெறமுடியும் எனவும் விடுதலை என்ற பெயரால் பிரபாகரன் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொலை செய்துள்ளார் எனவும் இதனாலேயே பயங்கரவாதியும் சர்வாதிகாரியுமாகிய பிரபாகரனின் புலிகள் இயக்கத்தை கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்துடன் தலைவர் கருணாவும் குழுவினரும் இணைந்ததாகவும் இந்த யதார்த்த நிலையை மக்களுக்கு நாம் தெரியப்படுத்துவதால் மக்கள் நிச்சயமாக கருணா குழுவினரை ஆதரிப்பார்கள் எனவும் கருணா தலைமையிலான அரசியல் கட்சியின் ஊடகப் பேச்சாளர் தூயவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருணாவின் அரசியல் கட்சி சார்பில் தகவல் தெரிவித்த அவர் தலைவர் கருணா ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்தது சமாதான நடவடிக்கை மூலம் தமிழ் மக்களின் உரிமைகளைச் சட்டபூர்வமான முறையில் பெற்றுக்கொடுப்பதற்கே எனவும் இந்த அரசியல் கட்சி அரசாங்கத்தை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடாது எனவும் பிரபாகரன் செய்வதுபோல் பயங்கரவாத செயற்பாடுகளைச் செய்யப்போவதில்லை எனவும் எல்லோரும் இலங்கை மாதாவின் பிள்ளைகளே என்ற வகையில் ஒற்றுமையை நிலைநாட்ட தமது கட்சி பிரசாரம் செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போதைய நிலையில் பிரபாகரனின் குழுவினர் நடத்தும் தாக்குதல்களிலிருந்து அவருடைய யுத்த சக்தி பலவீனமடைந்துவிட்டது தெரிந்துள்ளதாகவும் யுத்தகளத்தில் பிரபாகரனின் குழுவினர் உயிரிழந்த தமது சகாக்களின் உடல்களையும் எடுத்துக்கொள்ளாமல் தப்பியோடிவிட்டதாகவும் இந்த நிலையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பிரபாகரனால் முடியாதெனவும் தூயவன் உரையாடலின் போது வலியுறுத்திக் கூறியுள்ளார்.

தலைவர் கருணாவின் அரசியல் கட்சி அமைக்கப்பட்டிருக்கும் அதேவேளை, தம்மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் முகம்கொடுக்கும் வகையில் மிகச்சிறந்த ஆயுதம் தரித்த குழுவினராகவும் கருணா குழுவினர் விளங்குவர் எனவும் இறுதியில் தமிழீழம் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு அரசியல் கட்சியின் பேச்சாளர் தூயவன் தெரிவித்துள்ளார்.

லங்காதீப:3.9.2006

http://www.thinakkural.com/news/2006/9/7/s...s_page10191.htm

  • தொடங்கியவர்

அரசியல் கட்சியின் பேச்சாளர் தூயவன்

ஓ இருக்கும் இருக்கும் :lol::lol::lol: :P :P :P

  • தொடங்கியவர்

கடல் மார்க்கத் தொடர்புகளை துண்டித்து யாழ்ப்பாணம் மீது தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்

மாவிலாறு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினர் கிழக்கு மாகாணத்தில் யுத்த நிலைமையைத் தோற்றுவித்திருப்பதற்குக் காரணம் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வரையில் இராணுவத்தினருக்கான ஆயுதங்கள், தளபாடங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளைக் கொண்டு செல்லும் வளங்கள் மற்றும் போக்குவரத்துத் தொடர்புகளைத் துண்டித்து யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் யுத்தத் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் திட்டமிட்டிருப்பதே என பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வடக்குப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கான அத்தியாவசிய வளங்களை எடுத்துச் செல்லும் கடற்படையினரின் கப்பல்கள் மீது சம்பூரிலிருந்து வடக்குப் பிரதேசங்கள் வரை அமைந்துள்ள புலிகள் இயக்கத்தினரின் முகாம்களிலிருந்து தாக்குதல்களை மேற்கொண்டு, வழங்கல் தொடர்புகளைத் துண்டிப்பதன் மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தினரின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துவதே புலிகள் அமைப்பின் உபாய மார்க்கமாகும் என மேலும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு வடக்குப் பிரதேசங்களிலுள்ள இராணுவத்தினருக்கான தரைமூல, கடல்மூல வழங்கல் தொடர்பு மார்க்கங்கள் துண்டிக்கப்படும்போது, அரசாங்கம் விமானங்கள் மூலமே படையினருக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்க வேண்டிய நிலை ஏற்படுமெனவும் அந்த சந்தர்ப்பங்களில் தற்போது அரச விமானப்படையினரிடமிருக்கும் விமானங்கள் மூலம் ஒரு தடவையில் 20 தொன் தொடக்கம் 30 தொன் வரையான நிறைகொண்ட பொருட்களை மட்டுமே வடக்குப் பிரதேசங்ககளுக்குக் கொண்டு செல்ல முடியுமெனவும் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், பண்டங்கள் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மூலம் ஒரே தடவையில், உணவுப் பொருட்கள், ஆயுத தளபாடங்கள், மருந்து வகைகள் உட்பட 1,500 தொன் வரை நிறையுள்ள அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லமுடியும். இந்த நிலையில் கடல் மார்க்கமான வழங்கல்களை தடை செய்து யாழ்ப்பாணப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள படையினரின் தாக்குதல் சக்தியை பலவீனப்படுத்திவிட்டு யாழ்ப்பாணம் மீது பெரிய எடுப்பிலான தாக்குதல்களைத் தொடுப்பதற்கே புலிகள் அமைப்பு இரகசிய திட்டம் வகுத்துள்ளதாக அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள புலனாய்வுத் தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இவ்வாறு வடக்குப் பிரதேசங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான புதிய திட்டங்கள் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதுடன், இது சம்பந்தமாக இந்திய கடற்படைத் தளபதியும் ஷ்ரீலங்கா கடற்படைத் தளபதி வசந்த கறண்ணகொட தொலைபேசி மூலமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் "லங்காதீப" வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. -லங்காதீப: 06.08.2006-

http://www.thinakkural.com/news/2006/8/8/s...ws_page7975.htm

  • தொடங்கியவர்

காஷ்மீர் அணுகுமுறையை இந்தியா இலங்கையில் கடைப்பிடிக்கவில்லை

ஜம்மு காஷ்மீரில் நிலவும் பிரச்சினையை பயங்கரவாதம் என்று காட்டுகின்ற இந்திய அரசு, ஷ்ரீ லங்காவில் வடக்கு, கிழக்கு பிரச்சினையை வேறு விதமாகக் காட்டுவது வேடிக்கையாகும். பாகிஸ்தானின் பாரம்பரியத் தலைவர் நவாபி அக்பார் புக்தி கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக குழப்பமடையும் இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நவ்சட் சர்மா மேற்படி நவாபி அக்பர் புக்தி கொல்லப்பட்டது. பாகிஸ்தானைப்போலவே பலசிஸ்தானுக்கும் பெரிய இழப்பு என்று கூறியுள்ளார். மேலும், அரசியல் பிரச்சினையை இராணுவ பலத்தை உபயோகித்துத் தீர்க்க முடியாதெனவும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயுள்ள பிரச்சினை உலகம் அறியாததல்ல. இன்று பலுசிஸ்தான் பிரச்சினையை இவ்வாறு நோக்கும் இந்திய அரசு ஷ்ரீ லங்காவைப் பொறுத்தவரை வேறு விதமாகப் பார்ப்பது இந்தியாவின் அரசியல் நேர்மைபற்றி சந்தேகத்தையே கிளப்பும்.

முக்கியமாக, புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் புலிகள் இயக்கத்தையும் ஒடுக்குவதற்காக ஷ்ரீ லங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கும் இராணுவ உதவி சம்பந்தமாக புதுடில்லி அரசு பெரும் குழப்பம் அடைந்திருப்பது பிரபல விடயமாகிவிட்டது. அத்துடன், விசேடமாக மேற்படி பாகிஸ்தானின் இராணுவ உதவி பற்றி இந்திய இராணுவ வல்லுனர்கள் மாறுபட்ட பிரசாரங்களைச் செய்து வருவதாகத் தெரிகிறது. கடந்த 26 ஆம் திகதி புதுடில்லியிலிருந்து வெளியிடப்பட்ட இந்திய அரசு அறிக்கையில் பாகிஸ்தான் விமானப் படை அதிகாரிகள் கொழும்புக்குச் சென்று ஷ்ரீ லங்கா படையினருடன் இணைந்து புலிகள் இயக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. " கச்டுடிண்?ச்ண ஞ்தடிஞீடிணஞ் குணூடி ஃச்ணடுச்'ண் ஙிச்ணூ " என்ற தலைப்பில் இந்திய அரசின் முதலாவது மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களுக்கேற்ப, 12 முதல் 15 க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான பாகிஸ்தான் இராணுவ உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் கொழும்புக்குச் சென்று பயங்கரவாதத் தடை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இந்திய "றோ" உளவு சேவைத் தலைவர் பீ.ராமன் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும், இந்த அறிக்கைக்கு ஷ்ரீ லங்கா பாதுகாப்புத்துறை தெளிவாக மறுப்புத் தெரிவித்திருந்தது. -திவயின:03.09.2006

]http://www.thinakkural.com/news/2006/9/11/...ge10462.htm

  • தொடங்கியவர்

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக அமைந்திருந்த பல முகாம்களை பெருந்தொகையான கருணா குழுவினர் கடந்த 6 ஆம் திகதி விடியற்காலையில் சுற்றி வளைத்து பல்வேறு முனைகளிலிருந்தும் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டதாக பாதுகாப்புத்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர். கருணா குழுவினர் பெருந் தாக்குதல்களைத் தொடுத்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே தீவிர தாக்குதல்கள் நடந்துள்ளன.

இவ்வாறு சுமார் 400 உறுப்பினர்கள் அடங்கிய கருணா குழுவினர் இரண்டு பிரிவுகளாகச் சென்று கஞ்சிக்குடிச்சாறிலுள்ள புலிகளின் பிரதான முகாம் தொடர்களை நடுநிசிக்குப் பிந்திய 1 மணி நேரமளவிலேயே சுற்றி வளைத்து விட்டதாகவும் இந்த முகாம் தொடர்களை அடைவதற்கு முன்னர் இடையில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாவற்குளம், ரூபஸ்குளம் ஆகிய பகுதிகளையும் அவர்கள் கடந்து வந்து விட்டதாகவும் இதற்காக கருணா குழுவினர் மேற்படி பாவற்குளம்,ரூபஸ்குளம் பகுதியிலிருந்து புலிகள் இயக்கத்தினரின் இரண்டு முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல்களை மேற்கொண்டு இரண்டு முகாம்களையுமே முற்று முழுதாக அழித்து விட்டதாகவும் அம்பாறை பிரிவு சிரேஷ்ட பாதுகாப்புப் படை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முகாம்களில் கருணா குழுவினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்குமிடையே கடுமையான துப்பாக்கிச் சமர் அன்று விடியற்காலை ஏழு மணியளவில் நடந்ததாகவும் தொடர்ந்து கருணா குழுவினர் வெற்றிகரமாகத் தாக்குதல்களை மேற்கொண்டு இரண்டு முகாம்களையுமே நாசப்படுத்தியதுடன் அங்கிருந்து பெருந்தொகையான துப்பாக்கிகள் கைக்குண்டுகளையும் கருணா குழுவினர் கைப்பற்றிக் கொண்டு வெளியேறியுள்ளனர்.

இதற்குப் பின்னரே கருணா குழுவினர் கஞ்சிகுடிச்சாறுப் பகுதியை நோக்கி முன்னேறிச் சென்று அங்கிருந்த புலிகள் இயக்கத்தினரின் பிரதான முகாம் தொடர்கள் மீது தாக்குதலைத் தொடுத்தனர். இத் தாக்குதல்களின் போது பெருந்தொகையான கருணா குழுவினர் இரண்டு பக்கங்களிலிருந்தும் முகாம் தொடருக்குள் ஊடுருவி மோட்டார் , ஆர்.பி.ஜி.மற்றும் தன்னியக்கத் துப்பாக்கிகளைக் கொண்டு கடுமையான தாக்குதல்களை நடத்தியதாகவும் பதிலுக்கு வன்னிப் புலிகள் இயக்கத்தினரும் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலின் போது கருணா குழுவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் உட்பட மூன்று பிரபல உறுப்பினர்கள் படுகாயங்களுக்குள்ளாகி அக்கரைப்பற்று மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவு

  • தொடங்கியவர்

பொட்டு அம்மானை கைது செய்து ஒப்படைக்குமாறு இலங்கை அரசை அமெரிக்கா கோரும் சாத்தியம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் இரகசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராகிய பொட்டு அம்மானுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவின் மத்திய இரகசிய புலனாய்வு சேவையாகிய எவ்.பி.ஐ. (F.B.I) அமைப்பு, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் எவ்.பி.ஐ. அமைப்பின் தலைமை அலுவலகம் இதற்கான சட்டரீதியான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அமெரிக்க இரகசிய புலனாய்வுச் சேவை தரப்பிலான நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

மேற்படி தகவல்களில் மேலும் தெரிவிக்கப்படும் விடயங்களுக்கேற்ப ஐக்கிய அமெரிக்காவில் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக நிதி சேகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டது மற்றும் அமெரிக்க இரகசிய புலனாய்வு சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரிலேயே புலிகள் இயக்கப் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் மீது அமெரிக்க எவ்.பி.ஐ. புலனாய்வு சேவை அலுவலகம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய புலனாய்வு சேவையினர் அமெரிக்காவில் இயங்கி வரும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீது ஏற்கனவே எடுத்திருக்கும் நடவடிக்கைகளின் போது அண்மையில் அமெரிக்க இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சதா அல்லது சரா சந்திரன் என்றழைக்கப்படும் புலிகள் இயக்க நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களில் புலிகள் இயக்கத்துக்காக ஆயுதங்கள் விலைக்கு வாங்குதல், அமெரிக்க இரகசிய புலனாய்வு சேவை உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுத்தல் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிவித்திருந்ததாகவும், இதற்கேற்ப ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது, இலஞ்சம் கொடுப்பதற்கான கட்டளைகளை புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவுத்தலைவர் பொட்டு அம்மானே மேற்படி கைது செய்யப்பட்ட நபருக்கும் சம்பந்தப்பட்ட ஏனைய நபர்களுக்கும் இட்டிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், இவ்வாறு சதா அல்லது சரா சந்திரன் என்றழைக்கப்படும் மேற்படி புலிகள் இயக்க நபரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களை அமெரிக்க இரகசிய புலனாய்வு சேவை அலுவலகம் ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்காக, மேற்படி நபர்களுக்கு நிதிசேகரிப்பு, ஆயுதக் கொள்வனவு, இலஞ்சம் கொடுத்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்யும் படியாகக் கட்டளையிட்டவர் என கைது செய்யப்பட்ட நபரால் தெரிவிக்கப்பட்ட வாக்குமூலங்களில் குறிப்பிட்டுள்ளவராகிய புலிகள் இயக்க புலனாய்வுக் தலைவர் பொட்டு அம்மானையும் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை அமெரிக்க இரகசிய புலனாய்வு சேவைப் பிரிவினருக்கு ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு அவரைக் கைது செய்யும்படியாக நீதிமன்றக் கட்டளை கிடைக்கும்போது உடனடியாக பொட்டு அம்மானைக் கைது செய்து அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கும் படி சர்வதேச சட்டவிதிகளுக்கேற்ப ஷ்ரீ லங்கா அரசை அமெரிக்க அரசு கோரக்கூடிய சாத்தியம் எழுந்துள்ளதாகவும் மேற்படி எவ்.பி.ஐ. தரப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. - லங்காதீப: 10.9.2006 -

http://www.thinakkural.com/news/2006/9/12/...s_page10541.htm

அப்படி கோரினாலும் உங்களால முடியுமோ :):) :P

  • தொடங்கியவர்

லண்டனில் காய்ச்சலுக்கு ஆயுர்வேத சிகிச்சை செய்த ஜனாதிபதி மகிந்த

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதன்முதலாகக் கடந்த 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு லண்டன் சென்றிருந்தார். அங்கு அவர் லண்டனில் பார்த்லேன் என்னும் வீதியிலுள்ள டோசெஸ்ரர் ஹோட்டலில் தங்கியிருந்தார். இவ்வாறு தனிப்பட்ட காரணங்களுக்கா செய்யப்பட்ட பயணம் என்று அறிவிக்கப்பட்டிருந்த அந்தப் பயணத்தின்போது கடந்த 31 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளையரின் இல்லத்துக்குச் சென்று அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும், இந்தப் பயணத்தின் போது ஜனாதிபதி சர்வதேச மன்னிப்பு சபையின் (அம்னெஸ்றி இன்ரல்நெஷனல்) பிரதிநிதிகளையும் சந்தித்து மனித உரிமை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

லண்டனுக்கு வந்த ஜனாதிபதிக்கு சுவாத்திய வேறுபாடு காரணமாகவோ என்னவோ 30 ஆம் திகதி புதன்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அன்று முழுவதும் அவர் ஓய்வு எடுத்தார். இவ்வேளை ஜனாதிபதி தமக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்காக ஆங்கில வைத்தியத்துக்குரிய மருத்துகளைப் பயன்படுத்தாமல் ஆயுர்வேத வைத்திய சிகிச்யையே செய்துள்ளார். இவ்வாறு லண்டன் பயணத்தின் போது ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக, வழமையாக ஊடகவியலாளர்கள் சந்திப்பை ஏற்படுத்தி அவர்களுடன் சுமுகமாக உரையாடும் ஜனாதிபதி இந்த லண்டன் பயணத்தின் போது ஊடகவியலாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டார். லங்காதீப,10.09.2006 -

http://www.thinakkural.com/news/2006/9/12/...s_page10539.htm

:):):):lol: :P :P

  • தொடங்கியவர்

லண்டனில் இரு வருடங்களாக மூடிக் கிடக்கும் இலங்கைத் தூதுவரின் இல்லம்

லண்டனிலுள்ள ஸ்ரீ லங்கா நாட்டின் உயர் ஸ்தானிகரின் இல்லம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக உயர் ஸ்தானிகரால் பயன்படுத்தப்படாத நிலையில் மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இல்லம் திருத்த வேலைகளுக்காகவே மூடப்பட்டிருந்தாலும் இதுவரையில் அதற்கான திருத்த வேலை செய்யப்படாத காரணத்தினாலேயே ஸ்ரீ லங்கா உயர்ஸ்தானிகர் அங்கு வசிப்பதில்லை.

அண்மையில் லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உடனடியாக மேற்படி உயர் ஸ்தானிகரின் இல்லத்தைத் திருத்தியமைக்கும் படி உத்தரவிட்டுள்ளதுடன் இவ்வாறு திருத்த வேலைகளை முடித்துக் கொண்டு குறித்த இல்லத்தை பயன்படுத்தும் படியும் ஸ்ரீ லங்கா உயர் ஸ்தானிகருக்கு கூறியுள்ளார்.

மேற்படி லண்டனிலுள்ள ஸ்ரீ லங்கா தூதுவரின் இல்லம் திருத்த வேலைகள் செய்யப்படாமல் மூடப்பட்டிருப்பதால் ஸ்ரீ லங்கா தூதுவர் நீண்ட காலமாக லண்டனில் வாடகை வீடு ஒன்றிலேயே குடியிருந்து வருவதாகவும் இதன் காரணமாக கடந்த சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இதற்காகப் பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் லண்டன் ஸ்ரீ லங்கா தூதரக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. -லங்காதீப: 10.09.2006-

]http://www.thinakkural.com/news/2006/9/12/...ge10537.htm

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நக்கலா?

என்ரை பெயரைக் கேவலப்படுத்த வேணும் என்றே திரிகின்றார்கள்! :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரியாருக்கு யுனிசெவ் விருது கொடுக்கப் போகினமாம். யுனிசெவ் குழந்தைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் என்ன செய்தவர் என்று விலாவாரியாகத் தெரிந்து தானம் விருது கொடுக்குது.

அதைச் சில மூடர், சமாதானத்துக்காக கொடுக்கினம் என்று பிழைபிழையாக்க கதை விட்டு சங்கரி ஜயாவின் மரியாதையைக் கெடுக்கப் பார்க்கினம்.

யுனிசெவ்வுக்கும், சமாதானத்துக்கும் சம்பந்தம் என்னவெண்டு கூடத் தெரியாத அளவு இருக்கினம்.

வாழ்த்துக்கள் சங்கரி!

குழந்தைகள் விடயத்தில் சாதித்துவீட்டீர்!

  • தொடங்கியவர்

:D:D:D:D
  • தொடங்கியவர்

அமெரிக்காவில் தாக்குதல் நடாத்த புலிகள் ஏனைய பயங்கரவாதிகளுடன் இணைவு

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்கிக் கொள்வதற்கான முயற்சியில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியது சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் அமெரிக்க இரகசியப் புலனாய்வு சேவைப் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் அண்மையில் கைது செய்யப்பட்டு பூர்வாங்க விசாரணைகளின் பின்னர் அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்கும் படி அமெரிக்க நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொருவரையும் ஐந்து இலட்சம் டொலர் தொகையிலான விசாரணையில் அதாவது ஷ்ரீ லங்கா பணப் பெறுமதிக் கேற்ப சுமார் ஐந்து கோடி ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவு வழங்கிய அமெரிக்க உயர் நீதிமன்றம் அவர்கள் நீதிமன்ற உத்தரவிட்டுள்ள அடுத்த தவணைக்கான திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறும் பட்சத்தில் குறித்த பிணைப் பணம் முழுவதும் அரச உடைமையாக்கப்படுமெனவும் அதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுவர் எனவும் அறிவித்துள்ளது. மேற்படி சந்தேக நபர்களின் கடவுச் சீட்டுகள் தற்போது அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் மேற்படி குற்றச்சாட்டுகளின் பெயரில் அமெரிக்க இரகசிய புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் அதிகாரிகளால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்த ஏனைய சந்தேக நபர்களைப் பிணையில் விடுவிக்க அமெரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. அமெரிக்க இரகசிய புலனாய்வு சேவையாகிய எவ்.பி.ஐ. இவ்வாறு கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க சந்தேக நபர்கள் பற்றித் தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப இவர்கள் வேறு சில பயங்கரவாத இயக்கத்தினரும் இணைந்து அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் இந்த சந்தேகத்தின் பேரில் அவர்களை இவ்வாறு வேறு பயங்கரவாதக் குழுக்களுடன் சேர்ந்து தாக்குதலை நடத்த ஏற்கனவே திட்டமிட்டுச் செயற்படுகிறார்களா என்பது பற்றிய விசாரணைகளையும் அமெரிக்க எவ்.பி.ஐ. இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி வழக்கு விசாரணைகளை நியூயோர்க் நகரத்தில் புரூக்லின் பகுதியிலுள்ள உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட புலிகள் இயக்கச் சந்தேக நபர்களின் சார்பில் அமெரிக்க நாட்டவர்களான சட்டத்தரணிகளும், தமிழர்களான சட்டத் தரணிகளும் ஆஜராகியிருந்தார்கள். இந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி மறிலன் டீகோ புலிகள் இயக்கச் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான மேற்படி சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கையில் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட இரகசிய புலனாய்வுச் சேவை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றங் சாட்டப்பட்டவர்களின் தொலைபேசித் தொடர்பு விபரப்பட்டியல்கள், ஒலி, ஒளி இறுவெட்டுகள், மின்னஞ்சல் தொடர்புகள் என்பவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னரே அவர்களைக் கைது செய்யும் படி எவ்.டீ.ஐ. இரகசிய புலனாய்வு சேவைக்கு உத்தரவுகளை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

இந்த புலிகள் இயக்க சந்தேக நபர்களுக்கு எதிராக எவ்.பி.ஐ. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் குறித்து நியூயோர்க் புரூக்லின் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளின் போது பார்வையாளர் பிரிவில் ஒரே ஒரு ஷ்ரீ லங்க நாட்டவர் மட்டுமே சமுகமளித்திருந்தார் எனவும் அவர் ஒரு ஊடகவியலாளர் எனவும் அவரே இந்த நீதி விசாரணைகளைப் பற்றிய தகவல்களை ஷ்ரீ லங்கா ஊடகத்துக்கு வழங்கிய கட்டுரையாளர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்.பி.ஐ. அமெரிக்க புலனாய்வுச் சேவையின் சார்பில் இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த லெஸ்லி ஏ.வயிஸர் அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் புலிகள் இயக்கச் சந்தேக நபர்களுக்கு எதிராகச் சமர்ப்பித்திருந்த முறைப்பாட்டு அறிக்கையின் மூலப்பிரதி மேற்படி ஊடகக் கட்டுரையாளருக்கும் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் இந்த முறைப்பாட்டு மூலப் பிரதியை மேலதிக பிரதிகளை அவரே சர்வதேச ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தார் எனவும் மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. -லங்காதீப: 10.09.2006-

http://www.thinakkural.com/news/2006/9/13/...s_page10627.htm

  • தொடங்கியவர்

படையினரால் புலிகளின் புலனாய்வு தலைவர்கள் சுட்டுக்கொலை

வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த கறுவாக்கேணி பகுதியில் வைத்து கடந்த 9 ஆம் திகதி இரவு 8 மணியளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு தலைவர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப, சம்பவதினமாகிய 9 ஆம் திகதி இரவு கறுவாக்கேணி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் அருகில் இராணுவத்தினர் வழமையான ரோந்து மற்றும் காவற்கடமையில் ஈடுபட்டிருந்ததாகவும் அவ்வேளை படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக மேற்படி புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர்கள் உட்பட புலிகள் இயக்கக் குழுவினர் அங்கு வந்ததாகவும் அந்தப் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் மீது இராணுவத்தினர் உடனடியாகத் தாக்குதல் நடத்தியதில் மேற்படி இரண்டு புலிகள் இயக்கப் புலனாய்வுத் தலைவர்களும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும் இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொல்லப்பட்ட இரண்டு நபர்களும் வாழைச்சேனைப் பிரதேசத்தில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கப் புலனாய்வுப் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களே என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இராணுவத்தினர் அப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல்களின்போது கொல்லப்பட்ட மேற்படி புலிகள் இயக்கப் புலனாய்வுத் தலைவர்களிடமிருந்து கைக்குண்டுகள், சயனைற் குப்பிகள், ரவைத்தொகுதி ஆகியவற்றை கண்டுபிடித்துக் கைப்பற்றியுள்ளனர். இந்தத் தாக்குதல்களின் போது இராணுவத்தினர் தரப்பில் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் இராணுவத் தரப்பில் குறிப்பிடப்பட்டது. -திவயின : 11.09.2006-

http://www.thinakkural.com/news/2006/9/13/...s_page10626.htm

  • தொடங்கியவர்

அமெரிக்க வைத்திய நிபுணரின் கணினிகளில் 400 புலிகளைப் பற்றிய தகவல்கள்

அவுஸ்திரேலிய அரச சார்பற்ற நிறுவனமாகவும் அங்கு தலைமை அலுவலகத்தைக் கொண்டதாகவும் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக ஆயுதக் கொள்வனவு, நிதி சேகரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டது பற்றி சர்ச்சைக்குள்ளாகியிருப்பது

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் ஜனாதிபதி மகிந்தவையும் சந்திரிகாவையும் சந்திக்கவைக்க ஏற்பாடு

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியாகிய சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனும் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் தற்போது சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வரும் பல்வேறு சமூகசேவை நடவடிக்கைகள் சம்பந்தமாகவே மேற்படி முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் கடிதத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.

இதுபற்றி மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் பதவியிலிருந்து விலகியதற்குப் பின்னர் சர்வதேச ரீதியிலான சமூகசேவை செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அவர் பல நாடுகளுக்கும் சென்று நிறைவேற்றி வரும் சமூகசேவை நடவடிக்கைகளுக்கு உதவியாக இருந்து பங்களிப்பு செய்வதற்கு ஷ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பில் கிளின்டனின் சர்வதேச சமூகசேவைச் செயற்பாடுகளில் பங்குபற்றுவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்தே சந்திரிகா குமாரதுங்க கிளின்டனுடன் கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளார்.

இது சம்பந்தமாக தற்போது லண்டனில் வசித்துவரும் சந்திரிகா குமாரதுங்க சில தினங்களில் லண்டனிலிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்று பில் கிளின்டனைச் சந்திக்கவிருப்பதாகவும், நியூயோர்க் நகரில் பில் கிளின்டன் தலைமையில் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுச் சேவை சம்பந்தப்பட்ட விழா நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவிருப்பதாகவும் அவர் அவ்வாறு அமெரிக்கா விஜயத்தின் போது நியூயோர்க் நகரில் தங்கியிருக்கும் வேளையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் பில் கிளின்டன் தலைமையிலான விழா நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் நகரில் தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும், சந்திரிகா குமாரதுங்கவும் நியூயோர்க் நகரிலேயே தங்கியிருக்கும் சமகாலத்தில் அவர்கள் இருவருக்குமிடையில் சந்திப்பை ஏற்படுத்தி தற்போது இருவருக்குமிடையே நிலவும் கருத்து வேறுபாடு விரிசல்களை நீக்குவதற்கான முயற்சியில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பிரபல உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

-லங்காதீப: 10.09.2006-

http://www.thinakkural.com/news/2006/9/14/...s_page10711.htm

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் புலிகளை கைது செய்ய இந்திய "றோ" வே காரணம்

அமெரிக்க இரகசியப் புலனாய்வு சேவையாகிய பெடரல் பீரோ ஒப் இன்வெஸ்கேர்சன் (FBI) அமைப்பைச் சேர்ந்த இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமெரிக்காவில் விடுதலைப்புலிகள் இயக்கம் சார்ந்தவர்களை ஆயுதக் கொள்வனவு, மற்றும் எவ்.பி.ஐ. இரகசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அண்மையில் கைது செய்தது சம்பந்தமாகச் சில பிரபல ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப, இவ்வாறு எவ்.பி.ஐ. பொலிஸ் அதிகாரிகள் புலிகள் இயக்க நபர்களைக் கைது செய்துள்ளதற்குக் காரணம் இந்திய உளவு நிறுவனமாகிய "றோ" அமைப்பே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமெரிக்காவிலுள்ள புலிகள் இயக்கம் சார்ந்த நபர்களை மேற்படி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யும்படியாக இந்திய "றோ" உளவு சேவை அதிகாரிகளே அமெரிக்க எவ்.பி.ஐ. இரகசியப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குச் சிபாரிசு செய்துள்ளதாகவும் "றோ" அமைப்பின் சிபாரிசின்படியே எவ்.பி.ஐ. இரகசியப் பொலிஸார் அமெரிக்காவில் தேடுதல்களை மேற்கொண்டு "றோ" அமைப்பால் குறிப்பிட்ட புலிகள் இயக்க நபர்களைக் கைது செய்ததாகவும் மேற்படி பிரபல ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்த ஊடகங்கள் அமெரிக்க எவ்.பி.ஐ. அமைப்பையும் இந்திய "றோ" உளவுசேவையையும் இணைத்து "றோ" அமைப்பின் சிபாரிசின் பேரிலேயே எவ்.பி.ஐ. இரகசிய சேவை செயற்பட்டுள்ளது என்ற வகையில் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கைகளை எவ்.பி.ஐ. புலனாய்வு சேவை அதிகாரிகள் முற்றாக மறுத்துள்ளனர்.

-லங்காதீப: 10.09.2006-

http://www.thinakkural.com/news/2006/9/14/...s_page10710.htm

  • தொடங்கியவர்

நிதித் தட்டுப்பாட்டை சமாளிக்க கொள்ளையை ஆரம்பித்திருக்கும் புலிகள் இயக்கம்

முகத்தை மூடி மறைத்தவர்களும் ஆயுதம் தரித்தவர்களுமான தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒரு சில குழுவினர் கடந்த 9 ஆம் திகதி வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த குருமன்காடு பகுதியிலுள்ள வீடுகளுக்குள் புகுந்து பெருந்தொகையான பணத்தையும் தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்படி முகமூடிக் கொள்ளையர்கள் கடந்த 9 ஆம் திகதி இரவு குறித்த குருமன்காடு பிரதேசத்திலுள்ள ஒன்பது வீடுகளில் புகுந்து சுமார் 35 இலட்சம் பெறுமதியான பணத்தையும் தங்க நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர். இந்தப் பெருங் கொள்ளைகளை ஒரு இரவு வேளையில் மட்டும் அதிலும் குறிப்பாக இரவு விடியற்காலை சுமார் 4 மணிவரையிலான 4 மணித்தியால நேரத்துக்குள் அந்தக் கொள்ளையர்கள் நடத்தி முடித்திருப்பதாகவும் இவை முற்று முழுதாக நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளைகளாகும் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்பது கொள்ளைச் சம்பவங்கள் பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் விபரங்களுக் கேற்ப குறித்த தினம் நடுநிசி நேரத்துக்குப் பின் மேற்படி ஆயுதம் தரித்த முக மூடிக் கொள்ளையர்கள் பலாத்காரமாக வீடுகளுக்குள் அத்துமீறிப் புகுந்து வீடுகளிலுள்ள தளபாடங்கள், பொருட்களை உடைத்துச் சேதப்படுத்திய பின்னர் வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு ஆயுதங்களைக் காட்டி கொலை அச்சுறுத்தல்களைவிடுத்துப் பயமுறுத்தி அங்கிருந்து பெருந்தொகையான தங்க ஆபரணங்களையும் பணத்தையும் அபகரித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலங்களில் பெரும் நிதித் தட்டுப்பாட்டுக்குள்ளாகியிர

  • தொடங்கியவர்

அல்-ஹைடா கைதிகள் அடைக்கப்படும் இரகசிய சிறைகளில் புலிகள்!

ஆயுத கொள்வனவு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கலிபோர்னியா, சியாடெல், வாஷிங்டன், கனக்றிகட், பவலோ போன்ற நகரங்களில் வைத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவில் அவர்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு விட்டதாகவும் மேலும் அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அமெரிக்க தரப்பில் விட்டுக் கொடுப்போ மன்னிப்போ கிடைக்க முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க இரகசிய புலனாய்வுச் சேவையாகிய எவ்.பி.ஐ. அமைப்பின் 20 இரகசிய புலனாய்வு அலுவலகங்களைச் சேர்ந்த 200 க்கு மேற்பட்ட இரகசியப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் மற்றும் தமிழர் புனர்வாழ்வு அமைப்பினதும் செயற்பாடுகள் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுவரை எவ்.பி.ஐ. பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து அமெரிக்காவின் பல்வேறு பிரதேசங்களிலும் புலிகள் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் வர்த்தக நிலையங்கள், சங்கங்கள், கோவில்கள், தேவாலயங்கள், சிறுவர் பாடசாலைகள் போன்ற பொது நிலையங்களைப் பற்றிய தகவல்களை எவ்.பி.ஐ. இரகசிய புலனாய்வுச் சேவை அறிந்துள்ளது.

பயங்கரவாத நடவடிக்கை சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் தீவிர பாதுகாப்புள்ள மத்திய இரகசிய சிறையில் தடுத்து வைக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் கடந்த 7 ஆம் திகதி அறிவித்துள்ளார். இந்த நிலையில் கியூபாவுக்கு அருகிலுள்ள தீவாகிய கோதாநாவோபே தீவிலுள்ள மேற்படி மத்திய இரகசிய சிறைகளிலேயே ஏற்கனவே அங்கு அடைத்து வைக்கப்பட்டிக்கும் அல்-ஹைடா அமைப்பின் பிரபல பயங்கரவாதிகளுடன் சேர்த்து புலிகள் இயக்கக் கைதிகளையும் அடைத்து வைப்பதற்காக அனுப்பப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-லங்காதீப: 10.09.2006-

http://www.thinakkural.com/news/2006/9/15/...s_page10852.htm

  • தொடங்கியவர்

இழப்பு காரணமாக புலிகள் மீண்டும் சிறுவயதினரை பிடிப்பது அதிகரிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பு கிழக்கு மாகாணப் பிரதேசங்களில் சிறுவர் சிறுமியரைப் பிடித்து இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தியிருப்பதாகவு

  • தொடங்கியவர்

பிரபாகரனின் யுத்தம் தோல்வி என்கிறார் சங்கரி

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அனுப்பிய கடிதத்திலிருந்து

சுமார் 23 வருடங்களுக்கு முன் நீங்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் அல்லது 1983 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு இருந்த அனைத்து உரிமைகளும் இப்பொழுது இல்லாது அழிந்து விட்டன. இன்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியைப் போலவே உங்களுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் அடிமைகளைப் போலவே உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமை உடனே மாற்றப்பட வேண்டும். தற்போது கட்டுப்படுத்த முடியாத வகையிலேயே தமிழர்களின் மேற்படி நிலைமைகள் உள்ளன.

வெற்றியளிக்காத உங்கள் முயற்சிகளுக்காக பெருந்தொகையான தமிழ் இளைஞர்கள் பலியிடப்பட்டு விட்டனர். எனவே, உங்களுடைய இந்த முயற்சி வெற்றியளிக்காது என்பதை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை மூலம் உடன்பாட்டுக்கு வரும் வகையில் செயற்படுவதற்கோ அல்லது உங்களுடைய இயக்கத்தினரை யுத்தத்தை தொடராது பணிந்து விடும்படி அறிவுறுத்தல் வழங்குவதற்கோ நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நீங்கள் செய்யும் பட்சத்தில் சரணடையும் உங்களுடைய இயக்க உறுப்பினர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்கான நடைமுறைகளைத் தயாரிக்க முடியும். அதுமட்டுமல்ல, தமிழ் மக்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதான ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதும் எனது நம்பிக்கையாகும். இவ்விடயத்தில் இந்தியாவின் தலைமையில் சர்வதேச சமூகத்தின் உதவிகளைப் பெற முடியும்.

உங்களுக்கு தற்போது ஆதரவு தருகின்ற வெளிநாட்டிலுள்ள சம்பந்தப்பட்ட தமிழர்கள் அவ்வாறு உதவியளிப்பது கபடமில்லாத நோக்கங்களுக்கு அல்ல. அவர்கள் எதிர்பார்ப்பது தமது தனிப்பட்ட இலாபங்களைப் பெற்றுக் கொள்வதையே. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற அளவிடப்பட முடியாத துன்பங்களுக்கு ஒரு முடிவு வேண்டும். அவர்கள் இதுவரை செய்த தியாகங்கள் சொல்லும் வகையில் கொஞ்சநஞ்சமல்ல. அவர்கள் சமாதானமாகவும் எந்தவிதப் பீதியுமின்றி வாழ்வதற்கு வழி வேண்டும். தமது தாய் மண்ணுக்கு திரும்பி வந்து இங்கு வாழ்ந்து தமது தாய் மண்ணிலேயே தமது இறுதி மூச்சை விட வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் வெளிநாடுகளில் இருக்கின்ற வயது முதிர்ந்த பரம்பரையினர் கொஞ்சமல்ல.

-திவயின: 11.09.2006-

http://www.thinakkural.com/news/2006/9/15/...s_page10850.htm

  • தொடங்கியவர்

புலிகள் கஞ்சா வியாபாரம்

புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்திலிருந்து அரசபடையினரின் கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள பிரதேசத்துக்கு கஞ்சா போதைவஸ்துப் பொருட்களை கடத்தும் நடவடிக்கைகளில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இவ்வாறு திருக்கோவில் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த காஞ்சிரன்குடா பிரதேசத்தில் பெருந்தொகையான கஞ்சாவுடன் பயணம் செய்து கொண்டிருந்த இரண்டு புலிகள் இயக்க உறுப்பினர்களை பொலிஸ் விசேட நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புலிகள் இயக்கத்தினர் கஞ்சா கடத்திய சம்பவம் பற்றி மேலும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப கைது செய்யப்பட்ட இரண்டு புலிகள் இயக்க உறுப்பினர்களும் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குக்கீழுள்ள கஞ்சிகுடிச்சாறு பகுதியிலிருந்து திருக்கோவில் பிரதேசத்துக்குக் கஞ்சாவைக் கடத்திச் சென்று கொண்டிருந்த போது விசேட நடவடிக்கை பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்டதாகவும், அவர்கள் இருவரும் மேற்படி கஞ்சாவை கை உழவு இயந்திரப் பெட்டியில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள் எனவும், இவ்வாறு சுமார் 95 கிலோ நிறையான கஞ்சாவை அவர்கள் கடத்த முயன்றுள்ளதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தினரிடம் தொடர்ந்து விசேட நடவடிக்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணைகளின்போது புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நெடுங்காலமாக விற்றுவந்துள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கை உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற கஞ்சாவை கல்முனை, அம்பாறை ஆகிய பிரதேசங்களுக்கு விநியோகிப்பதற்காக திருக்கோவில் பகுதிக்குக் கொண்டு சென்றதாகவும் சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மேற்படி இரண்டு புலிகள் இயக்க சந்தேக நபர்களையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் கடந்த 13 ஆம் திகதி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் காஞ்சிரன்குடா விசேட நடவடிக்கை பொலிஸ் பிரிவினர் ஒப்படைத்துள்ளதாக சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திவயினவிற்குத் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

- திவயின:15/9/2006 -

]http://www.thinakkural.com/news/2006/9/18/...ge11000.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.