Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா வழங்கிய 500 டிராக்டர்கள் எங்கே? - விபரம் தர மத்திய அரசு மறுப்பதாக அமைச்சர் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா வழங்கிய 500 டிராக்டர்கள் எங்கே? - விபரம் தர மத்திய அரசு மறுப்பதாக அமைச்சர் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு. 
[Wednesday, 2014-04-23 09:47:04]
ingaranesan-230414-150.jpg
வடமாகாணத்தின் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்திய அரசால் வழங்கப்பட்ட டிராக்ரர்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் பல இடங்களில் வெய்யிலிலும் மழையிலும் கிடந்து பழுதடைந்து கொண்டிருப்பதாக, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம்சாட்டியுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தபோதே, அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்தை முடக்குகின்ற வகையிலேயே மத்திய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. கமநலசேவைகள் திணைக்களம் பொருளாதார அமைச்சின் கீழ் தற்போது உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தத் திணைக்களம் மாகாண விவசாயத் திணைக்களத்துடன் ஒத்திசைந்து செயற்பட மறுக்கிறது.
  
கமநலசேவைகள் திணைக்களத்தின் கீழ் வருகின்ற விவசாய சம்மேளனங்கள் பல இடங்களில் பல வருடங்களாகத் தேர்தல் நடாத்தப்படாமல் செயற்திறன் குன்றியவையாக உள்ளன. இந்திய அரசாங்கம் வடமாகாணத்துக்கென வழங்கிய 500 டிராக்டர்களும் கமநலசேவைகள் திணைக்களத்தினூடாகவே விநியோகிக்கப்பட்டன. இந்த டிராக்டர்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இவற்றுக்கு உழவுப் பெட்டிகளை வழங்குவது பொருத்தமானது என்று கருதினோம். அதற்காக டிராக்டர்கள் தற்போது எங்கே? எவரது பராமரிப்பில் உள்ளன? அவற்றின் பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளது? - போன்ற விவரங்களைத் தந்து உதவுமாறு எனது அமைச்சின் செயலாளர் மூலம் கமநலசேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பியிருந்தோம்.
 
பல மாதங்கள் ஆகியும் உரிய பதில் கிடைக்கவில்லை. மத்திய பொருளாதார அமைச்சிடம் இருந்து மாகாண விவசாய அமைச்சுக்கு இந்தத் தகவல்களை வழங்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதேபோன்றே, மாவட்டச் செயலகத்தில் உள்ள மத்திய அரசின் மாவட்ட விவசாயப் பணிப்பாளரும் மாகாண விவசாய அமைச்சுடன் இணைந்து எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாரில்லை. பார்த்தீனியம் ஒழிப்பை மாகாண விவசாய அமைச்சு மேற்கொண்டு வரும் நிலையில், மாவட்ட விவசாயப்பணிப்பாளர் எங்களுடன் எந்தவித ஆலோசனையும் இல்லாமல் தனியாகச் செயற்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
 
முதலில் இராணுவத்தைப் பயன்படுத்திப் பார்த்தீனியத்தை ஒழிக்கப் போவதாகக் கூறினார். சிவில் நடவடிக்கைளில் இராணுவத்தை வலிந்து இழுக்காதீர்கள் என்று நான் கண்டித்தேன். இப்போது செயல் இழந்து போயிருக்கும் விவசாய சம்மேளனத்தின் மூலம் செயற்படுத்தப் போகிறார் எனத் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு அதிகாரிகள் மாகாணசபையின் செயற்பாடுகளை முடக்குவது அல்லது பின்தள்ளுவது போன்ற நடவடிக்கைளில் ஈடுபடாது எங்களுடன் சேர்ந்து ஒத்துழைக்குமாறு கோருகிறேன். அப்போதுதான், நாங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பயன் மக்களை முழுமையாகச் சென்றடையும் என்று தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உழவு யந்திரங்களை... விவசாயிகளுக்கு வழங்குவதாக, யாழ் பொதுசன நூலகத்தின் முன் உள்ள வீதியில்...  விழா ஒன்றை நடத்தினார்கள். அதில் டக்ளஸ் தேவானந்தாவும், பசில் ராஜபக்சவும் கலந்து கொண்ட படம் ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு பார்த்தேன்.

 

நிச்சயம்... அந்த உழவு யந்திரங்கள், தமிழரின் ஆக்கிரமிக்கப் பட்ட பூமியில்... இராணுவத்தின் தோட்டத்தில் உழுது கொண்டிருக்கும்.


இந்தியா எதைச் செய்தாலும், ஒழுங்காக செய்வதில்லை.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.