Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடு வலயப் பாடசாலைகளில் புகைப்படம் எடுத்து விபரம் திரட்டிய இராணுவத்தைக் கண்டிக்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
மடு வலயப் பாடசாலைகளில் புகைப்படம் எடுத்து விபரம் திரட்டிய இராணுவத்தைக் கண்டிக்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்!
[sunday, 2014-04-27 08:41:17]
teachers-asso-270414-150.jpg

மன்னார் மடு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த இராணுவ புலனாய்வாளர்கள் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களை தனித்தனியாகவும், பாடசாலை மாணவர்களை வகுப்பறை ரீதியாக குழுவாகவும் புகைப்படம் எடுத்து விவரம் திரட்டியுள்ளதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுபற்றி கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், யுத்தம் முடிவடைந்த பின்னர், யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் அமைதி நிலவுகின்ற நேரத்தில் பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அச்சமடையச் செய்யும் வகையில் படையினர் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

  

மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகளுக்குச் சென்ற படையினர் அங்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் விபரங்களைச் சேகரித்துள்ளதுடன், அவர்களைப் புகைப்படங்கள் எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வலயன்கட்டு காக்கையன்குளம் உள்ளிட்ட பாடசாலைகளில் பாடசாலை நேரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் காரணமாக பாடசாலைச் சூழலில் பதற்ற நிலைமை உருவாகியிருப்பதாகவும் இதனால் அங்கு கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ''பாடசாலைகள் பற்றிய விபரங்கள் தேவைப்பட்டால், மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் பெற்றுக் கொள்வதே முறையாகும்.

அவ்வாறில்லாமல், பாடசாலைகள் நடைபெறும் நேரத்தில் படையினர் அங்கு சென்று இவ்வாறு நடந்து கொள்வது தவறான காரியமாகும்'' என்றும் அவர் கூறினார். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரியிருப்பதாகவும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும், குறிப்பாக வடமாகாண முதலமைச்சரும் உடனடியாக உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=108174&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.