Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவேக சிந்தாமணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் இலக்கியமான விவேக சிந்தாமணி அருமையான கவி வரிகளைக் கொண்டது, இந் நூல் தற்போது எம்மவரிடம் கைவசம் இருப்பதே அரிதிலும் அரிது.

ஆகவே இப் பாடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் சந்தோசம் அடைகின்றேன்.

இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் வாசியுங்கள், அத்துடன் கருத்துக்களையும் எழுதுங்கள், தற்காலத்தில் அதன் பயன்பாட்டை நோக்குவோம்.

(விவேக சிந்தாமணியை எனது பதிவான "தமிழ்" பகுதியில் முன்னர் பதிவு செய்திருந்தேன், ஆனால் "விவேக சிந்தாமணி"யை தனிப் பிரிவில் பதிவு செய்வதே சிறப்பாக இருக்குமென்பதால் தனித் தலைப்புக்கு மாற்றியுள்ளேன், சிரமத்துக்கு மன்னிக்கவும்)

விவேக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர்எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதற்கு ஆதாரம் போதியளவு இல்லாததால் ஆசிரியர் யாரென உறுதியாக அறிய முடியாமல் உள்ளது.

கடவுள் வாழ்த்து

அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லைபோம்; போகாத் துயரம்போம் - நல்ல

குணமதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்

தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே. 1.

பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்

கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்

தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்

உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார். 2.

தொடரும்...

தொடருங்கள், ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து

மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும் தான்

அக்குலம் வேறதாமோ அதனிடம் புனுகு உண்டாமோ

குக்கலே குக்கல் அல்லால் குலந்தனில் பெரியதாமோ? 3.

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி

உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் கும்

முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்

கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே. 4.

தொடரும்...

பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது. சொற்சுவையை அனுபவித்த எனக்கு பொருட்சுவையையும் பருகவேண்டும் என்ற ஆவல் பிறந்துவிட்டது. உங்களால் முடிந்தால் பாடல்களுக்கான விளக்கங்களையும் தரமுடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேக சிந்தாமணி தொடர்ச்சி...

கதிர்பெறு செந்நெல்வாடக் கார்க்குலம் கண்டு சென்று

கொதிநிரைக் கடலில் பெய்யும் கொள்கைபோல் குவலயத்தே

மதிதனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்

நிதிமிகப் படைத்தோர்க் கீவார் நிலை இலார்க்கு ஈயமாட்டார். 5.

ஆலிலே பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல்

சாலவே பட்சி எல்லாம் தன்குடி என்றே வாழும்

வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி

ஆலிலை ஆதிபோனால் அங்கு வந்திருப்பர் உண்டோ? 6.

தொடரும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேக சிந்தாமணி தொடர்ச்சி...

பொருட் பாலை விரும்புவார்கள் காமப்பால் இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி

அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்று இல்லார்

குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக் கோரார்

செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவார். 7.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்

வண்டோ கானத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்

பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்

கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே. 8.

தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன ஒன்னுமே புரிய மாட்டேன் என்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி நூல் இருப்பதை இப்போது தான் கேள்விப்படுகின்றேன். இணைப்புக்கு நன்றிகள் தேவேந்தி!

விளக்க உரையையும் சேர்த்து இணைத்தால் படிப்பவர்களுக்கு பொருள் விளங்கக் கூடியதாக இருக்கும். முடிந்தால் அதையும் சேர்த்து இணைக்கலாமே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறைந்து வரும் பண்டைய இலக்கியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தேவேந்திக்கும், யாழ் இணையத்துக்கும் நன்றிகள்.

இணைப்புக்கு நன்றிகள் தேவேந்தி! நல்ல முயற்சி தொடர்ந்து தாருங்கள்.

தொடரும் கவி வரிகள் தொடரட்டுமே................

மிகவும் நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.

பலரும் சொல்வது போல இதன் பொருளையும் தரமுடியுமானால் பலரும் பயன்பெறுவர் என்று நினைக்கிறேன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேக சிந்தாமணி தொடர்ச்சி...

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்

தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்

ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்

ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே! 9.

வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி

கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி வாயின் ஊறல்

கண்டு சர்க்கரையோ தேனோ கனியடு கலந்த பாகோ

அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே! 10.

தொடரும்...

நல்ல முயற்சி தேவேந்தி. தொடருங்கள்.

எனக்கு இவற்றின் பொருள் அறிய ஆவலாய் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவேந்திக்கு என் தமிழ் வணக்கங்கள்.

அருமை! அருமை! உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

பல நாட்களாக களத்திற்கு வரமுடியாமல் இருந்தது. இந்த அருமையான கவிகளைப் பார்த்தபின்னர் கருத்தெழுதாமலும் இருக்க முடியவில்லை.

நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேக சிந்தாமணி தொடர்ச்சி...

கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்

விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்

இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்

அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா. 11.

ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்

கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்

காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்

சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே! 12.

தொடரும்...

ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்

கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்

காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்

சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே! //

உந்த விசயத்தை எவ்வளத்துக்கு நம்பலாம்.... ஆர் சொன்னாலும் விசமத்தனமான விசயம் மாதிரி இல்லையோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேக சிந்தாமணி தொடர்ச்சி...

சங்கு வெண்தாமரைக்குத் தந்தை இரவி தண்ணீர்

அங்கதைக் கொய்து விட்டால் அழுகச் செய்து அந்நீர் கொல்லும்

துங்கவெண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்

தங்களின் நிலைமை கெட்டால் இப்படித் தயங்குவாரே. 13.

நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின் நற்றமிழை எழுத எழுத் தாணி ஆகுமோ?

பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப் பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீட தாமோ?

தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான்

ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான் எழுபிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே. 14.

தொடரும்...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ச்சியை எதிர்பார்க்கின்றோம்???????????

விவேக சிந்தாமணி தொடர்ச்சி...

ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்

கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்

காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்

சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே! 12.

தொடரும்...

ம்ம் அவரும் ஒரு ஆண் தானே.

தேவந்தி உங்கள் இணைப்பிற்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவித கவித...... :):lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேக சிந்தாமணி தொடர்ச்சி...

வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல் விழுந்தழுவாள் பொய்யே

தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே

அம்பிலும் கொடிய கண்ணாள் யிரம் சிந்தையாளை

நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடையாவாரே. 15.

கெற்ப்பத்தான் மங்கையருக்கு அழகு குன்றும்

. கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்

துற்ப்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்

. சொல் கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்

நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்

. நன்மை செய்யத் தீமை உடன் நயந்து செய்வார்

அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும்

. அரிய தவம் கோபத்தால் அழிந்து போமே! 16.

தொடரும்...

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

old01nw7.jpg

1905 ஆம் ஆண்டு தை மாதம் இந்தியாவில் வெளிவந்த விவேகசிந்தாமணி இதழின் முகத் தோற்றம்.

நன்றி www.thamizham.net

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேக சிந்தாமணி தொடர்ச்சி...

தன்னுடன் பிறவாத் தம்பி தனைப் பெறாத் தாயார் தந்தை

அன்னியர் இடத்துச் செல்வம் அரும்பொருள் வேசி ஆசை

மன்னிய ஏட்டின் கல்வி மறுமனையாட்டி வாழ்க்கை

இன்னவாம் கருமம் எட்டும் இடுக்கத்துக்கு உதவாதன்றே. 17.

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்

உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்

இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்

இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்

பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே

பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே

சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே

சகிக்க முடியாதினி என் சகியே மானே. 18.

தொடரும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.