Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதில்கள் இன்னும் தெளிவாகவில்லை

Featured Replies

பதில்கள் இன்னும் தெளிவாகவில்லை ஆனால் வினாக்கள் மிகத் தெளிவாகின்றன! (பீஷ்மர்)

[10 - September - 2006] [Font Size - A - A - A]

அநுரா பண்டாரநாயக்க நிதானத்துக்கு பேர் போனவர். இல்லையென்றாலும் நல்ல பேச்சாளர், நல்ல விவாத திறமை உள்ளவர். இந்திய ஸ்தானிகர் பற்றி அவர் கூற்றுக்கு பாராளுமன்றத்தில் உடனடியாக எவரும் பதில் குறிப்பாக மறுமொழி எதுவும் சொல்லவில்லை. ஆனால், புதுடில்லியோ அதனை ஒரு பாரதூரமான விடயமாகவே கொண்டது. கொண்டு, ராஜரீக நிலையில் `கடுமையானது' என்று குறிப்பிடத்தக்க ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அப்பொழுதுதான் கொழும்பின் அரசாங்கத்திற்கு நிலைமையின் பாரதூர தன்மை புலனாயிற்று. பதிலாக வெள்ளியன்று மாலை வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர, அநுரா பண்டாரநாயக்காவின் கூற்று அரசாங்கத்தின் அபிப்பிராயம் அல்ல என்றும் இப்பிராந்தியத்தில் உள்ள இந்திய பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நல்லுறவையும் நல்ல ஊடாட்டத்தையும் பேணிக் கொள்வதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

ஆனால், இந்த பதிற்குறியிற் கூட புதுடில்லியின் சந்தேகங்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, அகற்றப்படவில்லையென கூறவேண்டும். ஏனெனில் இந்தியாவுடனான உறவையும் பாகிஸ்தானுடனான உறவையும் ஒரு சீரான சமநிலையில் வைத்து பார்ப்பதாக வெளிநாட்டு அமைச்சர் கூறியுள்ளார்.

அண்மைக் காலத்தில் இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் கொழும்பில் நடந்த சம்பவத்தை இந்தியாவின் `றோ' வினுடைய செயலே என்று இஸ்லாமாபாத்தில் வைத்து கூறியிருந்தார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள பரஸ்பர சந்தேகங்களை தென்னாசியாவிலுள்ள இன்னொரு நாட்டின் எல்லைக்குள்ளேயே கொண்டு சென்றது இதுதான் முதல் தடவை. பாகிஸ்தான் அத்துடன் நிறுத்திக் கொள்ளவும் இல்லை. இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்டு வெளிவந்த சில செய்திகளை பாகிஸ்தான் இலங்கை அரசாங்கத்திடம் மேலதிக ஆயுத உதவிகள் செய்வதாகவும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் கூறியுள்ளது. இந்த முறுகல் நிலை ஏறத்தாழ இரு வாரங்களுக்கு முன்னரே ஏற்பட்டுவிட்டது. முன்னாள் இந்திய வெளிவிகார செயலாளர் சியாம் சரண் வந்ததே அதற்காகத்தான்.

சனப்பித்தம் சனவாதம் என்ற ஈடாட்ட நிலை இலங்கை அரசின் இயல்புகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், இந்தியாவை பொறுத்த வரையில் குறிப்பாக அதன் வெளிநாட்டு உறவுகளில் இப்படியான ஈடாட்டங்களுக்கு இடம் கிடையாது. அங்கு அமைச்சர்களின் சுய விருப்பு வெறுப்புகளுக்கு கூட இடம் கிடையாது. அப்படியான ஒரு நிறுவனத்துடன் உள்ள தொடர்புகளில் இலங்கை கவனமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், இலங்கையின் இன்றைய நிலை அதுவல்ல. தாங்கள் விரும்பியவற்றுக்கெல்லாம் இந்தியாவை தலையாட்ட வைக்கமுடியாது என்பதை ஜே.வி.பி., ஹெல உறுமயவுக்கு இப்போது நன்கு தெளிவாகிவிட்டது. நோர்வேயை எதிர்ப்பது போன்று வெளிப்படையாக எதிர்க்கவில்லை எனினும், இந்திய எண்ணெய் கம்பனியின் வருகை போன்ற விடயத்தில் ஜே.வி.பி. கடும் சினத்துடனேயே உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா இப்போது இனகுடும்ப பிரச்சினை தீர்வுக்கான முன்மொழிவுகளை வைக்குமாறு அரசாங்கத்தை கேட்க தொடங்கிவிட்டது. ஆனால், அரசாங்கம் கிழக்கைப் பிரித்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜே.வி.பி. பலமாகவே முன்வைத்துள்ளது. ஏழு முஸ்லிம் அமைச்சர்கள் அதற்கு அரசாங்கத்தின் மூதூர் பிரச்சினையும் கூட எதிர்ப்பில்லையோ என்ற ஐயப்பாடு வந்துவிட்டது. முஸ்லிம் காங்கிரஸ் கூட தனது வழமையான நிதானப் போக்கைக்கூட கடைப்பிடிக்க முடியாதுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் கிழக்கை பிரிப்பதாக சகல நடவடிக்கைகளும் (நீதிமன்ற நடவடிக்கை மூலமாகவும்) மேற்கொள்ளப்பட தொடங்கியுள்ளது. இந்த பின்புலத்திலேயே யு.என்.பி. க்கான அழைப்பினை ஜனாதிபதி விடுத்தார். தென்னிலங்கை அரசியலை பொறுத்தவரையில் இதுவொரு பாரதூரமான விஷயம். ஜனாதிபதி ஜே.வி.பி., ஹெல உறுமயவை கைவிட்டு யு.என்.பி. உடன் இணையப் போகிறதா? அல்லது ஜே.வி.பி., ஹெல உறுமயவின் இணக்கத்தோடு தமிழ் பிரச்சினையையும், பொருளாதார பிரச்சினையையும் தீர்ப்பதற்கு யு.என்.பி. யையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறதா? என்பதிலேயே தெளிவு கிடையாது. ஏற்கனவே, ஜனாதிபதியின் அலுவலகத்தில் சில கண்டிப்புகளுக்கு உள்ளான அநுரா பண்டாரநாயக்க அந்த கூற்றைக் கூறியது ஜனாதிபதிக்கு மேலும் இக்கட்டை அதிகரிப்பதற்கா, என்ற வினாவே இப்போது மேற்கிளம்பியுள்ளது. இப்படி பாரதூரமான ஓர் விடயத்தை பேசிவிட்டார் என்பதற்காக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவும் முடியாது. ஏனெனில் சுதந்திர கட்சியின் தலைமையிலிருந்து பண்டாரநாயக்காக்களை அகற்றுவது சம்பந்தமாக ஏற்கனவே பிரச்சினையுள்ளது. இந்தநிலையில் அநுரா பண்டாரநாயக்காவை விலக்குவது என்பது ஜனாதிபதிக்கு மேலும் தொல்லைகளையே கொடுக்கும்.

தென்னிலங்கையில் இன்றுள்ள ஆழமான அரசியல் முரண்பாடுகளின் வெளிப்பாடே இந்தியா பற்றிய கசப்புணர்வுகள் தொடங்கியுள்ளமைக்கான காரணம் என்பது இப்போது புலனாகிறது.

இலங்கையின் வடக்கிலே நடைபெறுகின்றவற்றை சொல்லாமல் விடுவதையும் திரிபுபடுத்தி சொல்வதையும் தமது இருப்பின் பணியாக கொண்டுள்ள பிரதான சிங்கள நிலைப்பட்ட ஊடகங்கள் இந்த விடயத்தை அதற்குரிய முக்கியத்துவத்துடன் பிரசுரிக்கவே இல்லை. துரதிர்ஷ்டவசமாக ஜனாதிபதி தனியார் பஸ் கம்பனிகளின் சந்திப்பு வெற்றியீட்டாமல் போயுள்ளமையும், பெற்றோல் மண்ணெண்ணெய் விலைகள் மேலும் அதிகரித்துள்ளமையும் மிக சாதாரண சிங்கள மக்களை பொறுத்த வரையில் அவசர பிரச்சினையாகிப் போயுள்ளன.

இதனால், கடந்த வாரம் முழுவதும் மிகச் சிறப்பாக தென்னிலங்கை ஊடகங்களிலே பெரிதாக மிகமிகப் பெரிதாகப் பேசப்பட்ட சம்பூர் வெற்றிக் கோஷத்தை யு.என்.பி. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பதில் சற்று அடக்கிவிட்டது போலே தெரிகிறது. அதற்கு வருவதற்கு முன்னர் சம்பூர் வெற்றிக் கொண்டாட்டம் பற்றிய குறிப்புரை அவசியமாகிறது.

சோழர் வரலாற்றில் ராஜேந்திரனை கங்கை கொண்ட சோழன் என்று சொல்வதைப் போல் சென்றவாரம் முழுவதும் ராஜபக்ஷ அவர்கள் `சம்பூர் கொண்ட' வீரராகவே போற்றப்பட்டார். திறமையை மாத்திரம் உரைகளாகக் கொண்டு செய்த நியமனமே இன்று அந்த வெற்றியை ஈட்டியிருப்பதாக சுதந்திரமா கட்சியிலே ஜனாதிபதி கூறினார். ஜே.வி.பி., ஹெல உறுமயவும் சம்பூர் வெற்றியின் திருப்புமுனை முக்கியத்துவத்தினை ஏற்றுக் கொண்டுள்ளனர். சம்பூர் வெற்றியுடன் கிழக்கிலங்கையில் விடுதலைப் புலிகளின் இராணுவ ஆதிக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக எடுத்துக் கூறப்படுகிறது. ஜனாதிபதிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது கொண்டாடப்படுகிறது. அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பத்திரிகை நிருபர்கள் சம்பூருக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு விடுதலைப் புலிகள் விட்டுச் சென்ற முகாம்கள் அந்த முகாம்P-?? C??u ??m-P? Az-P-?US P?m-h?-?m-h-?-??. A?-??-??-?? ?k-u? ??-P? ??? ][P? {?-?mh ?z-v-??P E?-Q?-S??? Bz-v-?[-P? ?u?? b-u-u?P ]? ??-v-P? P]-Q?-??. B???, C???? K??-??S K?? Pm-k-?-u?P A?-x??x ?u]? A?-?[-P? A?-?x ?u?-?-?[?P Tmk A?-?[-P? G?? P?-x-?P???-S?.

ஜனாதிபதி யு.என்.பி. யுடன் சேர்ந்து தங்களை ஓரங்கட்டி விடுவாரோ என்ற நிலைமை காரணமாக ஜே.வி.பி., ஹெல உறுமய ஜனாதிபதியுடனான தமது உறவுகளை பலவீனப்படுத்த விரும்பவில்லை என்பது தெரிகின்றது. ஆனால், யு.என்.பி. யோ மிகுந்த நிதானத்துடன் நிலைமைகளை கையாளப் பார்க்கின்றது. யு.என்.பி. யின் 60 ஆண்டு பூர்த்தி வைபவத்தின்போது மூன்று மாதங்களுக்குள் யு.என்.பி. யின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளார். அதாவது ரணில் விக்கிரமசிங்க தான் பிரதம மந்திரியாவேன் என்று சொல்லியுள்ளாரா? ராஜபக்ஷவின் ஜனாதிபதியின் பதவியை ஏற்றுக்கொண்டு ஜே.வி.பி., ஹெல உறுயவை அகற்றிவிட்டு ஒரு யு.என்.பி. சுதந்திரக் கட்சி இணக்க ஆட்சியை ஏற்படுத்த ரணில் விக்கிரமசிங்க தொடங்கிவிட்டார் என்று சில அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். சிரிக்கத் தெரியாதவர்களாக இருந்தாலும் நிலைமைக்கேற்ப சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்று தெரிகிறது. ஜனாதிபதிக்கும் யு.என்.பி.யை நிறைய தேவைப்படுகிறது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்தியப் பயணம் நிலைமைகளிலேயே கணிசமான மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்பதை காட்டுகிறது. தமிழ் எம்.பி.க்களின் தூதுக்குழுவை மன்மோகன் சிங் சந்திக்கப் போகிறார் என்ற செய்தி சிங்கள பத்திரிகைகளில் ஒரு வியப்புத் தொனியுடன் வெளிவரத் தொடங்கியுள்ளது. தென்னிலங்கை அரசியலில் இந்த முயற்சி கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. ஏனெனில் புதுடில்லி இலங்கை தமிழர்களைத் திறந்த மனதுடன் ஆதரிக்கவில்லை என்கின்ற அபிப்பிராயம் சிங்கள பத்திரிகைகளில் உண்டு.

ஆனால், இந்தியா சென்றுள்ள தமிழ் எம்.பி.க்களின் தூதுக்குழுவுக்கு நிறைந்த சாதுரியமும் அதற்கு மேலான பொறுமை உணர்வும் வேண்டும். தமிழகத்தின் அரசியல் சுழியோட்டங்களுக்குள் மாட்டிக் கொள்ளாது ஆனால், அவற்றை மனதில் கொண்டு தமிழகத்தில் நடந்து கொள்கின்ற தன்மையை புதுடில்லி கதவுகள் எத்துணை அகலமாக திறக்கப்படும் என்பதை தீர்மானிக்கப் போகிறது. வைகோ முக்கியம் அவரைவிட கலைஞர் முக்கியம். ஆனால், இவர்கள் எல்லோரிலும் முக்கியம் தமிழ் நாட்டின் முற்போக்கு சக்திகளும், சாதாரண தமிழ் மக்களுமே. உண்மையில் இந்த உரையாடல் தமிழகத்திலே தொடங்க வேண்டும். எனினும், தமிழகத்துடன் நின்று விடக்கூடாது. அது முழு இந்தியாவிலும் கேட்கப்பட வேண்டும். மலையாளம் முதல் மராட்டி வரை, தெலுங்கு முதல் காஷ்மீர் வரை கன்னடம் முதல் வங்காளி வரை தமிழ் முதல் இந்தி வரை எல்லா மொழிகளிலும் எல்லா இந்திய மக்களுக்கும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். சம்பந்தன் அவர்கள் தன் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பது இலங்கைத் தமிழ் விருப்பம்.

http://www.thinakkural.com/news/2006/9/10/...s_page10447.htm

அண்ணா பீஷ்மர் பேராசிரியர் சிவத்தம்பி. ஞானமுள்ள நல்ல கதாசிரியர். கற்பனைத்திறனுடன் யதார்த்தத்தை பிசைந்து பஞ்சாமிருதம்போல் தருவதில் வல்லவர். இக்கட்டுரையில் ஏனோ யதார்த்தத்தை கோட்டைவிட்டுள்ளார். பிரதமரோ மாநில அமைச்சரோ சந்திக்காதவிடத்து முன்னேற்பாடு எதுவுமில்லாமல் எப்படி? கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு? இந்தியாவுக்கு? எதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

ஓம், பீஸ்மர் தான், சிவத்தம்பி எண்டு நினைச்சு, தங்களின் குப்பைத் தளங்களில் கொலை மிரட்டல் விட்டவங்களையும் பார்த்தனாங்கள். பின்னச் சும்மாவோ! தமிழீழம் விடுபட்டு, இப்ப அனைத்திலங்கை லெவலில் பெயரை மாட்டுமல்ல, கொலையையும் செய்ய வெளிக்கிடும்போது, இப்படி ஓரிரண்டு மிரட்டல் தேவை தானே!

பிரதமரோ, முதலமைச்சாரோ, சாந்திக்காத விடத்து, போயிருக்கினம் எண்டால் , ஏதோ நடக்கது என்று உமக்கு மட்டுமல்ல, மகிந்தாவிற்கும் டவுட்டாம். வேணுமெண்டால் பாரும். இவை வந்து ஒண்டு இரண்டு கிழமைக்குள்ள தன்னுடைய ஆளை அனுப்பி வைப்பார்.

  • தொடங்கியவர்

இதுவரை கூட்டமைப்பு எம்பிக்கள் இந்தியா செல்வதற்கான விசாவையே வழங்காத இந்தியா இப்போது ஏன் வழங்கியது?தமிழ் எம்பிக்கள் இந்தியா சென்றால் இங்கிருக்கும் மதிக்கு ஏன் திக்குத் திக்கு என்கிறது? அடிச்சுக் கலைச்சாலும் வாலைச்சுருடிக் கொண்டு இங்க திருப்பித் திருப்பி ஏன் ?

அநுரா நிதானமுள்ளவராக இருக்கலாம் நல்ல பேச்சாளர் என்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இவரது இந்திய எதிர்ப்புப் பேச்சு மகிந்தனை மகிழ்விப்பதற்காக கூறப்பட்டதே. அல்லாமல் இந்த முட்டாள் அமைச்சருக்கு அதற்கு மேல் எதுவும் தெரியாது தோன்றாது. தனக்கு சு.க வின் 55வது விழாவில் அழைப்பனுப்பியதற்கு நன்றிக் கடனே இந்தப் பேச்சு. அத்துடன் இந்தியா சென்றுள்ள தமிழ் பா.உ க்கள் தமது தனிப்பட்ட பயணம் என்று சொல்லிக் கொள்ளாமல் உருப்படியாக ஏதாவது செய்து விட்டு வந்தால் நல்லது. செய்வார்களா? ஏதாவது ஏடகூடமாகச் செய்து விட்டு கட்டுநாயக்காவில் இறங்கமுடியுமா?

ஈழத்திலிருந்து

ஐhனா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.