Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்

(1):

பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

சுருக்கம்

இக்கட்டுரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி மற்றும் சமூக விலக்குப்பற்றியதொரு ஆய்வுக் கற்கையாகும். இக்கற்கையின் முன்னைய பகுதி வரலாற்றுரீயாக இடம்பெற்ற இரண்டாம்தரத் தகவல்களிளன அடிப்படையாகக் கொண்டது. ஏனைய பகுதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களின் ஒரு பகுதியினரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளினைப் பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றன. உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களில் பஞ்சமர் என அழைக்கப்படும் மரபரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிரதிநிதித்துவம் அதிகமாக காணப்படுவது இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்ட மிக முக்கிய விடயமாகும். யுத்தம் சாதி, வகுப்பு வேறுபாடுகளின்றி அனைவரையும் பாதித்த போதிலும், நீண்டகால அடிப்படையில் உருவாகிய உள்ளுரில் இடம்பெயர்ந்தோர் வசிக்கும் அகதி முகாம்கள் யாழ்ப்பாணத்தில் எண்ணிக்கையில் அதிகமான வெள்ளாளர் சாதியினைரை தவிர்த்து, மரபுரீதீயாக சலுகை மறுக்கப்பட்ட சாதிக்குழுக்கிளின் பின்னணியில் உருவாகியதை அவதானிக்க முடிகின்றது.

இக்கற்கைக்காக தெரிவு செய்யப்பட்ட மல்லாகம் என்ற கிராமத்திலுள்ள அனைத்து இடம் பெயர்ந்தோர் முகாம்களும் நளவர், பள்ளர் சாதிகளின் பின்னணியில் உருவாகிமை குறிப்பிடத்தக்கது. உயர்ந்த சாதிகளின் ஆதிக்கத்திற்குள் இருக்கும் இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடாற்றுவதில் உள்ள பாரபட்சம், உயர்ந்த சாதிக்காரர்களுக்கு சொந்தமாக உள்ள கிணற்றுத் தண்ணீரை பெற்றுக் கொள்ளவதில் உள்ள சிரமங்கள், நிலச் சந்தையில் பஞ்சமர் சமூகத்தினைச் சேர்ந்தோர் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் யாழ்ப்பாணச் சமூகத்தில் இன்றுவரையுள்ள சாதிப் பாகுபாட்டுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். சாதியானது பலவிடயங்களில் வெளிப்படையாக அங்கீகரிக்கப்படாத போதிலும் சாதியின் முக்கியத்துவம் பற்றி பலரினாலும் குறிப்பாக கல்விகற்ற மத்திய தரவர்க்கத்தினால் பொதுவானதொரு மறுப்புநிலையே காணப்படுகின்றது.

சாதிதொடர்பான உண்மையான சமூக நடைமுறைகள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாகவும் பல்வேறு விசாரணைகளுக்கு இடம்கொடுப்பதாகக் காணப்படும் அதேநேரம் பயங்கரவாதம், தேசியவாதம், விடுதலைப் போராட்டம் முதலிய பாரிய எடுத்துரைப்புக்களைக் (Meta-narratives) குறைப்பதற்கு ஆர்வம் காட்டிவரும் அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் மேலெழுந்தவாரியான அதிகாரப+ர்வமான உண்மைகளுக்கும் அப்பால் புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்று என்பதை வலியுறுத்துகின்றன.

பின்னணி

இலங்கையில் 1960 பது, 1970 பதுகளில் சமூகவியல் மற்றும் மானிடவியல் கற்கைகளில் சாதி ஒரு முக்கிய ஆய்வுப் பொருளாக இருந்தது. பொரும்பாலான இக்கற்கைகள் சாதியினை சமூகத்தை ஒழுங்குபடுத்தும் சமூக முறைமையாக பகுப்பாய்வு செய்ததோடு, சமூக ஊடாட்டம், சமூக ஒழுங்கு என்பவற்றை முறைமைப்படுத்துமொரு சமூக நிறுவனமாக ஆராய்ந்தன (Banks 1957, 1960; Leach 1960, 1961; Yaman 1967, Ryan 1993; Silva 1982; David 1973, 1974a, 1974b; Arumainayagam, 1979; Pfaffenerger 1982). சாதி என்ற சமூக நிறுவனத்திற்குள் இடம்பெறும் சமூக விலக்குகளையோ சமூகப் பாகுபாடுகளையோ ஆராய்வதற்கு இக்கற்கைகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இவ்வாறு சமூகத்தினை செயற்பாட்டுவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆய்வுக் கற்கைகள், ஒரு சமூகத்தின் மக்களிடையே காணப்படும் பிரிவினைகள், பாகுபாடுகள் என்பவற்றை சமூக, பொருளாதார, கலாசார செயற்பாங்கில் தவிர்க்கமுடியாததொரு விடயமாகவே புரிந்துகொள்கின்றது.

இச்செயற்பாடுகள் ஒரு சமூகத்தின் குழு அடையாளத்தினை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதனை நடைமுறைப்படுத்தி நிற்கின்றது. எவ்வாறாயினும், இத்தகைய சமூக, பொருளாதார, கலாசார நடைமுறைகளால் ஒரு குழு சமூகத்தின் இன்னொரு குழுவிடமிருந்து வேறுபடுவதென்பது தவிர்க்க முடியாது. யாழ்ப்பாணச் சமூகம் யுத்தம், வன்முறை என்பவற்றை எதிர்கொள்வதற்கு ஐக்கியம் ஆகும் அதேநேரம் சாதி மற்றும் சமூக வேறுபாடுகளான பால்நிலை, மதம், பிரதேசம் என்பவற்றின் அடிப்படையில் உள்வாரியாக வேறுபாடுகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. உண்மையில் பாரம்பரிய நடைமுறைகளால் தோன்றிய சில சமூக விலக்குகள் அல்லது பாகுபாடுகள் தற்கால வன்முறைச் சமூகத்தில் தேவையற்றதொன்றாக மாற்றம் கண்டுவரும் அதேநேரம், அவை அத்தகையதொரு நிலையில் (மீள்)உற்பத்திசெய்யப்பட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

இக்கற்கை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களிடம் தொடர்புபடும் சாதி அடிப்படையிலான சமூக வேறுபாட்டினை ஆராய்வதில் ஆர்வம் காட்டுகின்றது. மேலும், இக்கற்கை முன்னைய, தற்கால யாழ்ப்பாணச் சமூகத்தில் இடம்பெற்ற, இடம்பெறும் சாதி விலக்கு, பாகுபாடு வடிவங்களை அடையாளம் காண்பதற்கு முயற்சிக்கின்றது.

யாழ்ப்பாணச் சமூகம் தொடர்பாக அறியப்பட்ட வரலாறு பூராகவும் சாதி ஒரு பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைக்கூறாக இருந்து வருகின்றது. யாழ்ப்பாணச் சாதி முறைமையானது சிங்களச் சாதி முறைமையின் பல இயல்புகளுடன் ஒத்த நிலைகளைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பாரிய நிலத்திற்குச் சொந்தக்காராகவுள்ள ஆதிக்க சாதியான வெள்ளாளர், சிங்களச் சமூகத்தில் கொய்கம சாதிக்குப் பல வழிகளில் இணையான இயல்புகளைக் கொண்டுள்ளனர். சாதி அடுக்கமைவில் இடைப்பட்ட நிலையிலுள்ளோராகக் கருதப்படும் கரையார் சிங்களச் சமூகத்தில் கராவ சாதியினையொத்த பல கண்புகளைக் கொண்டுள்ளனர். பிறப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதாகக் கருதப்படும் கடைமைகளைச் செய்யும் குறிப்பிட் சில சாதிக் குழுக்கள் ஆதிக்க சாதிக்கு சேவகம் செய்பவர்கள் என எதிர்பார்க்கப்பட்டனர். எனினும், உயாழ்ப்பாணச் சாதிமுறைமை சிங்களச் சாதி முறைமையிலிருந்து சில வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. முறைமையிலிருந்து சில வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணச் சாதி முறைமையில் சடங்குசார் தூய்மை என்ற கருத்து நிலை நாளாந்த இந்து நடைமுறையில் மிக முக்கியமானதொன்றாகவுள்ளது.

அதிகமான இந்துச் சடங்கு முறைகள், யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட சடங்குரீதியாகத் தூய்மையற்றதாக் கருதப்படும் ஊழியம் செய்யும் சாதிக் குழுக்களைச் சமூக, பொருளாதாரப் படிநிலைகளில் நிலபுலன்களை ஆளும் வெள்ளாளர் தமது தலைமையின் கீழ் கட்டுப்படுத்திக் கொண்டனர். மரபுரீதியாக விவசாயம், பொருளாதாரம் மற்றும் சடங்கு ஒழுங்கு போன்ற விடயங்களால் வெள்ளாளச் சாதியினர் சமூகத்தில் ஒரு வலுமிக்க இடத்தினைப் பெற்றிருந்தனர். ஆனால் இம்முறைமைகள் தங்கி வாழும் ‘கீழ்ச்’ சாதியினருக்குப் பல வழிகளில் பாதிப்புக்களைக் கொடுத்ததுடன் அடிமை நிலைக்கும் அவர்களை இட்டுச்சென்றன. ஏலவே சலுகையளிக்கப்பட்ட வெள்ளாளக் குடும்பங்கள் காலனித்துவ காலங்களில் முன்னேற்றததிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட

புதிய வாய்ப்புக்களை (கல்வி, வியாபாரம், வர்த்தக விவசாயம் மற்றும் அரச உத்தியோகம் முதலானவை) தமதாக்கிக் கொண்டனர். இவ்விடயம் சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை மேலும் மெருகூட்டவும் சாதி முறைமையினை இறுக்கப்படுத்தவும் துணையோயின (Pfaffenberger 1982, 1990). வெள்ளாள அல்லது ஐரோப்பிய எழுத்தாளர்களால் யாழ்ப்பாணச் சமூகம் பற்றி எழுதப்பட்ட காலனித்துவ கால இலக்கியங்கள் வெள்ளாளரது கருத்துக்களை அதிகம் உள்ளடக்கியிருப்பதோடு இவ்வெழுத்துக்கள் பெரும்பாலும் தீண்டத்தகாதவர் எனக்கருதப்பட்ட சாதிக் குழுக்களின் நிலை தொடர்பாக மௌனத்தினையே கடைப்பிடித்தன.

யாழ்ப்பாணச் சாதி முறைமைக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி 1920களில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியினாலும் அதன் முகவர்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக உரிமை மறுக்கப்பட்ட சாதிக் குழுக்கள் பல கிளர்ச்சி நடவடிக்கைகளைத் தாடர்ச்சியாக மேற்கொண்டனர். இவ்வத்தியாயத்தின் பிற்பகுதியில் விபரிக்கப்படுவது போல, இக்கிளர்ச்சி நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களை எடுத்ததுடன் நீண்டகாலமாகப் பல அமைப்புக்களாலும் (சடங்கு, அரசியல் மற்றும் பொது சமுதாய அமைப்புகள்) தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. ஒடுக்கப்பட்ட சாதிக் குழுக்களின் இக்கிளர்ச்சி நடவடிக்கைகளை அடக்குவதற்காக வன்முறைகள் உட்பட பல்வேறு திட்டங்களை வெள்ளாளர் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டனர்.

கீழ்ச் சாதி எனக்கருதப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்குச் சில சலுகைகள் அளிக்கப்பட்டன. ஆனால் இறுதியாக எழுச்சிபெற்ற தமிழ்த் தேசியவாதம் (Tamil Nationalism) தமிழ்ச் சமூகத்திலிருந்த வித்தியாசங்களை சீர்செய்ய முனைந்தது. 1960கள் வரை அதிகரித்துவந்த சாதி தொடர்பான சிக்கல்கள் ஒப்பீட்டுரீதியில் அலட்சியத்திற்குள்ளாகின. இந்நிலைக்கு சிங்கள ஆதிக்க அரசியலில் தமிழர்கள் தமது பொது மனக்குறைகளை மையப்படுத்தி ஒரு ஒழுங்கு நிலைக்குள்ளாகி இயங்குநிலை பெற்றமை குறிப்பிடத்தக்க முக்கிய காரணமாகும். ஃபாபன்பேகர் (1990) இவ் விடயத்தினை ‘தற்பாதுகாப்புத் தமிழ்த் தேசியவாதம் (Defensive Tamil Nationalism) என அடையாளப்படுத்துகின்றார். இந்நிலை தாழ்த்தப்பட்ட சாதிக்காரர்களின் சாதி எதிர்ப்புப் போராட்டங்களைப் படிப்படியாக நிலைகுலையச் செய்ததோடு மறுபக்கத்தில் இத்தகைய போராட்டங்கள் தமிழர்களால் சிங்கள ஆதிக்க அரசுக்கு எதிரானதொரு பாரிய போராட்டமாக நகர்த்தப்பட்டன. ஆரம்பத்தில் தற்பாதுகாப்புத் தமிழ்த் தேசிய வாதம் பாராளுமன்ற அரசியல் வரையறைக்குள் இயங்கும் வெள்ளாள அரசியற் தலைவர்களாலேயே கையாளப்பட்டும் இயற்குநிலைக்கு உட்படுத்தப்பட்டும் வந்தது.

இக்காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தில் செயல்நிலையிலிருந்த சாதிக்கெதிரான போராட்டம் பலவழிகளிலும் மாற்றத்திற்குள்ளாகி வந்தது. எவ்வாறாயினும், தமிழ்த் தேசியவாதத்தினை முன்னிலைப்படுத்தித் தோற்றம் பெற்ற தமிழ் ஆயுதக் குழுக்களில் வலிமை பெற்ற LTTE யினது வளர்ச்சியோடு இந்நிலைமை மாற்றத்திற்குள்ளாகின்றது. இப்போக்கு பல்வேறு நிலைகளிலும் யாழ்ப்பாணச் சமூகத்தில் வெள்ளாளரது ஆதிக்கத்தினைக் குறைவடையச் செய்தது. ஆனால் இத்தகைய விடயங்களால் தமிழச் சமூகத்திலுள்ள உரிமைகள் குறைக்கப்பட்ட சாதிக்குழுக்களின் மனக்குறைகளுக்குப் பதிலளிக்கப்பட்டதா என்பது இன்னமும் கேள்விக்குரிதொரு விடயமாகவே உள்ளது. LTTE அனைத்து தமிழர்களையும் சாதியற்றதொரு நிலையிலேயே அடையாளம் காணவிளைகின்றது. அத்துடன் சாதி அடிப்படையில் பிரிவு காணப்படும் ஒரு சமூகத்தில் LTTE அமைப்பின் வெள்ளாளர் அல்லாத தலைமைத்துவத்தால் சாதி தொடர்பான மனக்குறைகளுக்கு வெளிப்படையானதொரு நடவடிக்கைளும் எடுக்கப்படுவதில்லை.

பதிலாக இச்சாதி உணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. பதிலாக இச்சாதி உணர்வு நிலைகளை இணைத்து அதனை ஒரு பொதுத் தேசிய இயக்கத்தினை நோக்கி நகர்த்துவதே அவர்களது வெளிப்படையானதொரு முயற்சியாக பதிலாக இச்சாதி உணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. பதிலாக இச்சாதி உணர்வு நிலைகளை இணைத்து அதனை ஒரு பொதுத் தேசிய இயக்கத்தினை நோக்கி நகர்த்துவதே அவர்களது வெளிப்படையானதொரு முயற்சியாகவுள்ளது. இத்தகைய நோக்கம் கருதிய உபாயங்கள் சாதி பற்றிய உண்மையானதொரு நிலைமையினையும் தொடர்ச்சியாக வெளித் தெரியும் சாதிச் சமத்துவமின்மையையும் மறைத்துள்ளது. இன்னொரு பக்கத்தில், யாழ்ப்பாணச் சமூகத்தில் என்றாவது சமாதானம் உருவாகி, ஆட்சி யார் கையில் இருப்பினும், அரசியல், சமூகச் செயற்பாடுகளில் சாதி மீள உருவாக்கம் பெறும்நிலையே காணப்படுகின்றது.

இத்தகையதொரு சிக்கலான சூழ்நிலையில் யாழ்ப்பாண சமூகத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் போக்கு மற்றும் பண்பு என்பவற்றை அடையாளம் காண்பதாகவும் மதிப்பீடு செய்வதாகவும் இக்கற்கையுள்ளது. இவ்வத்தியாயம் யாழ்ப்பாணத்தின் சாதி தொடர்பான தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதுடன் ஆரம்பமாகி, இடப்பெயர்வு மற்றும் யுத்த சூழ்நிலைகளில அடக்கப்பட்ட சாதிக் குழுக்களின் நிலைமைகளைப் பரீட்சிக்கின்றது. மேலும் இக்கற்கை வடக்கிலங்கைத் தமிழ்ச் சனத்தொகை மீதான LTTEயின் வலுப்பிரயோகப் போக்கினையும் பரிசீலிக்கின்றது. தற்கால யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாடு தொடர்பான விவகாரங்களை எடுத்துரைப்பதற்கு எம்மிடையே தகவலற்றதொரு நிலைமை காணப்படுகின்றது. தற்கால பாதுகாப்புச் சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட சனத்தொகை தொடர்பாக எத்தகையதொரு காத்திரமான இனவரைவியல் ஆய்வினையும் மேற்கொள்ள முடியாததொரு நிலையே இந்நிலைமைக்கான முக்கிய காரணமாகும். துரிதமாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்விலிருந்து பெறப்பட்ட முதற்தரத் தகவல்களைக் கொண்டு சாதி அடிப்படையிலான பாகுபாடு பற்றியதொரு விளக்கத்தினைக் கொடுப்பதற்கான முயற்சியே இங்கு மேற்கொள்ளப்பட்டது.

தொடரும்….

http://inioru.com/?p=39874

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி

யாழ்ப்பாணச் சாதியமைப்பில் தனித்துவமான பல விடயங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் முதன்மையாக, தென்னிந்தியச் சாதி முறைமையுடன் ஒப்பிடும் போது, யாழ்ப்பாணச் சாதி முறைமை அதன் அடுக்கமைவு மற்றும் வேறுபல முக்கிய அம்சங்களில் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டிய விடயமாகும். தென்னிந்தியச் சாதி அடுக்கமைவில் பிராமணர் உயர்ந்த அந்தஸ்தினைப் பெறும் அதேவேளை, யாழ்ப்பாணச்சாதி அமைப்பில் வெள்ளாளர் உயர் நிலையிலுள்ளோராகக் கணிப்பிடப்பட்டனர்.

வெள்ளாளர் தமது இந்துக் கோயில்களில் சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலிருந்து பிராமணர்களை வரவழைத்தனர். வெள்ளாளர் தமது கோயில்களில் பிராமணர்களை வேலைக்கு அமர்த்தியமையாலும் பிராமணர்கள் வெள்ளாள நிலச் சுவாந்தர்களுக்கு ஊழியம் செய்தமையாலும் யாழ்ப்பாணத்தில் பிராமணர்கள் வெள்ளாளரைவிடக் குறைந்த அந்தஸ்தினைக் கொண்டவராகக் கணிப்பிடப்பட்டனர் (Pfaffenberger 1982).

யாழ்ப்பாணச் சமூகத்தில் ‘சாதிக்குள் சாதி’ பார்க்கப்படுவது மரபுரீதியாக இருந்தது. இன்னொரு வகையில் கூறுவதாயின் ஒரு தனிப்பட்ட சாதிக் குழுவில் வேறுபட்ட சமூக அடுக்கமைவைக் கொண்ட சாதிகள் காணப்பட்டன. அதாவது ஒவ்வொரு சாதிக் குழுவும் சிறு அடுக்கமைவு அடிப்படையிலான பிரிவுகளைத் தன்னுள் உள்ளடக்கியிருந்தது.

உதாரணமாக வெள்ளாளர் சாதியினரிடத்தே காணப்பட்ட சமூக அந்தஸ்தின் அடிப்படையில் அகம்படியார், மடைப்பள்ளி, தனங்காரர், உள்ளுர்ச் செட்டியார், சிறு விவசாயி மற்றும் செம்பு எடா வெள்ளாளர் போன்ற குழுக்கள் அடையாளம் காணப்பட்டனர். அதே போன்று திமிலர், முக்குவார், போன்றோர் கரையார் சாதியிலும் மரமேறிகள், செருப்புக்கட்டிகள் மற்றும் வேர்க்குத்திப் பள்ளர் போன்றோர் பள்ளர் சாதியிலும் அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறான உப பிரிவுகளை உள்வாங்கி இலங்கைத் தமிழர் சாதிகளைக் கணிப்பிடுகையில், சாதிகளின் எண்ணிக்கை மிகப் பெரிதாக இருந்தது. சைமன் காசிச்செட்டி (1934) இலங்கைத் தமிழர்களிடையே அறுபத்தைந்திற்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதென ‘சாதிகள், வழக்கங்கள், நடத்தைகள் மற்றும் தமிழ் இலக்கியம்’ எனத் தலைப்பிடப்பட்ட தனது நூலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய சாதிக் குழுக்கள் பெரும் சாதிக் குழுமத் தோற்றத்தோடு (Formation of Mega Caste Groups) எண்ணிக்கையில் குறைந்து செல்கின்றது (Sivathamby, 2005). டேவிட் (1974அ, 1974ஆ) மற்றும் ஃபாபன்பேகர் (1982) ஆகியோரது கற்கைகள் யாழ்ப்பாணச் சமூகத்தில் இருபது, பெரும் சாதிக் குழுக்கள் இருப்பதாக அடையாளம் காண்கின்றன.

வெள்ளாளர், பிராமணர், சைவக் குருக்கள், பண்டாரி, சிப்பாச்சாரி, கோவியர், தட்டார், கரையார், தச்சர், கொல்லர், நட்டுவர், கைக்குழார், சாண்டார், குயவர், முக்குவர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ஆகியோரே இவ்விருபது சாதிக்குழுக்களுமாகும். இச்சாதிக் குழுக்களின் மரபுரீதியான தொழில்கள் மற்றும் அவர்களது அடிமை, குடிமை அந்தஸ்து ஆகியன அட்டவணை-1 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடரும்..

முழுமையான ஆய்வு (ஆங்கிலத்தில்)

http://archive.cmb.ac.lk:8080/research/bitstream/70130/1102/1/P%20Thanges_Caste%20and%20Social%20Exclusion%20of%20IDPs%20in%20Jaffna%20Socie.pdf

http://inioru.com/?p=40138

மல்லாகத்திலிருந்து டீனேஜ் முடிய விலகிவிட்டேன். அதன் பின்னர் 1977லிலும், 1983லும் போனவை மட்டும்தான் ஞாபகம். இருந்தாலும் சாதியைப் பற்றி ஆராய மல்லாகத்தை தெரிந்தமையின் காரணத்தை விளங்கிக்கொள்வது ஒன்றும் கடினமானதல்ல.

 

சிறியதொரு பஞ்சரத்தினமான கிராமம். வடக்கில் தெல்லிப்பளையும், தெற்கில் சுன்னாகமும், கிழக்கில் ஏழாலையும், மேற்கில் மல்லாகத்தின்  பரந்து விரிந்த வயல் வெளிகளும் புடை சூழ்ந்திருக்கும்.  எல்லா யாழ்ப்பாணத்துக் கிராமங்களும் போலவே படித்தவர்களும் அரச உத்தியோகத்தவர்களும், ஏழைத் தோட்டக்காரர்களும், சாதித் தொழிலில் ஈடுபட்டிருந்த குடிமக்களும் நிறைந்த அமைதியான முழுமையான கிராமம். முழுமையானதான கிராமம் என்று சொல்ல வந்ததின் காரணம், அங்கு முழுமையான அடிமை குடிமை முறை இருந்தாகவும், குடிமக்கள் அதற்கேற்ப குடியமர்த்தப் பட்டிருப்பதாகவும் பேசிக்கொள்வார்கள். பேச்சு வாக்கில்,  நான் சிறுவனாக இருந்த போது,  நளம், பள்ளு,பறை என பதினெட்டு சாதியும் வாழும் இடம் என்று பேசிக்கொள்வார்கள்.

 

மல்லாகத்தின் பெருமை அதன் பஸ் கொம்பனி. அது வாமதேவனின் உறவினர்களுடையது. கம்பனியை அரசாங்கம் பொதுவுடையாக்கிய பின்னர் குடும்பம் கஸ்டப்பட நேர்ந்தது.    வாமதேவன் சிறு வயதிலேயே படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டான் .வாமதேவனின் தந்தை இரண்டாம் தாரமாகிய பின்னர் கொல்லங்கலட்டியாகியிருந்தார். இது மல்லாகத்தின் தோட்ட குடும்பங்களின் இயல்பு. திருமணத்தொடர்புகள் பல கிராமங்களுடன் இருந்தது.   தோட்ட குடும்பங்கள் மற்ற தோட்டமற்ற குடும்பங்களுடன் கலக்க விரும்புவதில்லை. படித்த அரச உத்தியோக குடுபங்களிடம் கூட சமரசம் செய்துகொள்ளமுடியாமை காணப்பட்டது. இதனால் எல்லா குடும்பங்களுக்கும்  தூர இடத்து கிராமங்களின் தோட்ட உறவுகளுடன் திருமண உறவிருந்தது. கிராமத்து தோட்ட உறவுகளிடம் கலப்பு இருக்க சந்தர்ப்பம் இல்லை என்று நம்பியதால்  இலகுவில் வெளியே ஒரு கிராமத்துக்கு சென்று வரன் தேடுவதும், பெண் எடுப்பதும் மல்லாகத்தில் இயல்பு. அடர்த்தியான கிராமமாக இருந்தாலும், தோட்ட குடும்பங்கள் தங்களின் திருமண தேவையை நிவிர்த்திசெய்ய கூடிய குடும்ப நெருகங்கள் இருக்கவில்லை. (அதாவது மல்லாகம் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர், அல்லது போத்துக்கீசருக்கு முன்னர் அடிமை குடிமை வாழ்விற்க்கு ஏற்ப குடிமக்கள் தேடி குடியமர்த்தப்படிருந்திருக்கலாம்.) இது செவி மொழிக் கேள்வி என்பதால் நிறுவ சரித்திர ஆராச்சி தேவை. எனவே தோட்டத்தில் ஈடுபட்ட குடுபங்களுக்கு அதன் வளர்த்தியுடன் திருமண பந்தம் சமனாகவில்லை. அதே போலவே திருமணமாகி வெளியே போன மற்ற தொழில் குடி மக்களும் உண்டு. அவர்களுக்கு குடுபங்கள் பெருகும் போது தொழில் போட்டி ஏற்பட்டத்தால் திருமணத்தொடு வெளியே செல்வது இயல்பாக இருந்தது. எனவே எனது காலத்திற்கு சிறு காலம் முதல் வரை இந்த குடியமைப்பு மிகவும் நிதானமானதாக(stabilized) இருந்தது.  

 

தொழில் உறவு மிகவும் இறுக்கமாக பூட்டப்படிருந்தது. அதாவது சின்னவன் என்ற ஒரு தொழிலாளியுடன் உங்கள் குடுபம் தொழில் எடுத்ததாக இருந்திருந்தால் அது பரம்பரை பரம்பரையாக இருந்திருக்கும். அதே நேரம் பெரியவனும் அதே தொழிலை செய்து வருகிறான் என்றும் பெரியவன் காசின் அடிப்படையிலோ அல்லது தொழிலில் தரத்தின் அடிப்படையிலோ அல்லது உங்களுக்கு கூப்பிடு தூரத்திலோ என்றதற்காக நீங்கள் சின்னவுடன் வைத்திருந்த தொழில் உறவு முறையை பெரியவனுக்கு மாற்றுவது இல்லை. நான் இங்கே உறவு முறை என்று குறிப்பிடுவதின் காரணம், உண்மையான உறவு ஒன்று அங்கிருந்தது. அதாவ்து ஒரு குடும்பம் தொழில் இல்லை என்று சாப்பிடாமலும் இருக்க முடியாது, அதே நேரம் ஒரு குடும்பம் பணம் இல்லை என்று தொழில் பெறாமலும் இருக்க முடியாது. எனது தாயாரின் பாட்டனாரின் காலத்தில் தோட்டத்தின் வருவாயின் ஒரு பகுதி விளைவு நேரம் தொழில் உறவுகளுக்கு என்று ஒதுக்கப்படும், அதை அவர்கள் விளை நிலத்திற்கு சென்று விளைவுகளுடன் ஒப்பிட்டு பெற்றுக்கொள்ள முடியும். அதே போல தவணை முறையில் வந்து அவர்களும் தொழில் புரியும் வழக்கமும் இருந்தது. இது பண்டமாற்று அல்ல. இது தொழில் உறவு முறை.  இதைதான் அவர்கள் அடிமை குடிமை என்று அழைத்து வந்தார்கள். அதாவது அந்த வட்டாரம் முழுவதும் ஒருவருக்கொருவர் பொறுப்பு. திருமண பந்ததில்தான் விலக்காக இருந்தார்களே தவிர வாழ்க்கை வசதிகளில் உறவுகளாக, தன்னிறைவாக இருந்தார்கள். 

 

சுன்னாகம் போன்றவற்றில் இந்த முறை இருக்கவில்லை. அவர்கள் நான் அறியும் போது சட்டங்களை பின்பற்றுவதில் முன்னால் சென்றிருந்தார்கள். மல்லாகத்தவர்கள் திருமண உறவு வைத்த பல கிராமங்கள் இந்த முழுமையை அடைந்திருக்கவில்லை. சில கிராமங்கள் தனிய தோட்ட குடும்பங்களாக இருந்தது. இதனால் திருமண் பந்ததிற்கு அந்த கிராகங்கள் தூயனவாக கருதப்பட்டாலும், மல்லாகத்தின் செளிப்பை உணந்தவர்கள் அங்கு குடியேற விரும்புவதில்லை. மேலும் இந்த தொழில் உறவு முறை கடினமான சாதியாக மாற்றபட்டது மேற்கு நாட்டவரின் சட்டங்களினால். சட்டங்கள் உறவை துண்டித்து பொறுப்புக்களை நீக்கியமையால், ஏற்றத்தாழ்வுகள் முதல் முறையாக குடுபங்களில் வலியை கொண்டுவரத்தொடங்கின. பல குடும்பங்களை புதிய பரிவர்த்தனை முறைகளால் தொழிலுக்கு அமர்த்தமுடியாமல் சீரழிந்தன. பல குடும்பங்கள் தொழில் புரிந்து வந்த குடும்பங்களின் உறவுகள் அறுந்ததால் பட்டினியால் வாடின. சில கையேடுகளில் சுட்டிக்காட்டப்படுவது போல அவர்கள் குடிநீருக்கு கூட அல்லல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. மல்லாகம் நிதானமாக குடியமர்த்தப்படிருந்தாலும் சகலக குடிமக்களும் வாழ்ந்தாலும், சாதி சுமூகமும் தொழில் உறவும் இறிதிவரை நின்று பிடித்தது. 

 

மல்லாகம் மேற்கு நாகரிகம் முதலில் காலூன்றிய கிராமங்களில் ஒன்று. அங்கு போத்துக்கீசர் காலத்து சார்ச் இன்னமும் இருக்கிறது. மல்லாகத்தின் சில முதன்மைகளால் மல்லாகம் English School 1902 ம் ஆண்டில் மகாத்மா காந்தி இலங்கை வந்து யாழ்ப்பாணம் சென்ற போது விஜயம் செய்த இரண்டு கல்லூரிகளில் ஒன்று.  அங்கு ஆங்கிலத்தில் பேசாமல் தமிழில் பேசும் பிள்ளைகளுக்கு தண்டபணம் வசூலிக்கப்பட்டது. மிக அருந்தலாக கிறீஸ்த்தவத்திலும் இந்துவிலும் ஆதிகாலம் தொடக்கம் பாடங்கள் புகட்ப்பட்ட கிராம பாடசாலைகளில் ஒன்று. எனது தாயாரின் அறிவுக்கு எட்டியவரை அந்த பள்ளிகளில் எதுவிலும் சில மாணவர்கள் மேலேயும், சிலர் கீழேயும் இருந்து படிக்க வேண்டும் என்ற சட்டங்கள் இருந்தது இல்லை. ஆனால் படிப்பு சில குடும்பங்களுக்கானதாக மட்டும் இருந்தது உண்மை. தோட்டக்குடும்பங்களும் தொழில் குடும்பங்களும் படிப்பில் அக்கறை காட்டவில்லை. 

 

குடும்ப அமைப்புக்கள் நவீனத்துவ படுத்தப்படும் போது அதை இயல்பான முறையில் வளர ஊக்குவித்தால் குடும்பங்கள் திடுதிடு மாற்றத்தால் அவஸ்த்தைகள் பட்டிருக்க மாட்டர்கள். சட்டம் 500 வருடங்களாக தமிழர் கையில் இருக்கவில்லை. அடிபட்டு போகும் ஆற்று வெள்ளத்தோடு இழுபட்டு போகும் வாழ்க்கையாக தான் தமிழர் இருந்தது. LTTE காலத்தில் சில ஆண்டுகள், சில இடங்களில் தமிழரின் ஆட்சி முறை இருந்தது. இதனால் கட்டுரை குறிப்பிடுவது போல, LTTE யால் சாதிப்பிரசனையை சட்டிக்குள் மூட மட்டும் முடிந்தது. அதை ஆராய்ந்து விடைகாண முடியவில்லை. அதிகாரமில்லாத வடமாகாணம் இதை பற்றி கவனிக்கும் நிலையிலும் இல்லை. 

 

 

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
கேவலங்களால் யாழ் நிறைந்து கொண்டு இருக்கிறது .............
எதை எழுதினாலும் தூக்குகிறார்கள். எதை எழுதுவது என்றே புரியவில்லை.
 
...................... எதுவுமே இல்லாத இடமாக ஓரிடம் இருக்காது.
எதுவும் அற்று மக்கள் இருந்ததனால் சாதி இருப்பு கொண்டு விட்டது.
அவர்களிடம் சாமோதியமாக அறிவை கொடுத்துவிட்டால்  சாதியை விட்டு விடுவார்கள்.
சாதியை மட்டுமே வைத்திருப்பவனிடம் அதை கீழே போட சொன்னால்...... அவனுக்கு அது வன்முறை போல தெரியும். 
ஏதாவது ஒன்றை பதிலுக்கு கொடுத்தால்தான் அதை அவன் கீழே போட முன்வருவான்.
சாய்பாபா விற்கு சங்கம் வைத்தால் கூட்டம் கூடும் இடத்தில் ............. சாதி இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
 
 
வெளிநாடு வந்தவுடன் வெள்ளைக்காரன் பணத்தை கொடுக்கிறான். உடனேயே சாதியை கீழே போட்டுவிட்டு 
சாமர்த்தியமாக கழுவி துடைக்கிறார்கள். நாங்கள் வேளாண்மைதான் செய்வோம் என்று யாரும் அடம் பிடிக்கவில்லை. ஓவர்டைம் வேண்டும் என்றுதான் சிலர் அடம் பிடிக்கிறார்கள்.
பணம் அறிவற்றவர்கள் கையில் நிற்காது ஓடிவிடும் .......... அதனால் சாதியை கீழே போடுவதும் எடுப்பதும் என்று பாசாங்கு செய்து கொண்டு இருக்கிறார்கள். 
 
ஓடிவிடாத அறிவை கொடுத்துவிட்டால் .......
சாதியை பாரம் என்று கீழே போட்டுவிடுவார்கள். 
போலி நாகரீகத்தில் வாழ்க்கை நடாத்த இந்த களத்திலேயே எத்தனையோ பேர் துடிக்கும்போது. யாழ்பாணத்தில்  சாதியை ஒழிப்பது வெறும் வெட்டி பேச்சாகத்தான் இருக்கும்.
 
தங்கையை வட்புனர்தவனுக்கு நாகரீகமாக திருமணம் செய்து வைக்கலாம் என்றுதான் யாழ் நிர்வாகமும்  நினைக்கிறது. இப்போதைக்கு திருமணம் என்ற சொல்லின் அர்த்தத்தை மறந்து விடுவதுதான் சிறப்பானது.
இனத்தை விற்று பிழைத்தவனுக்கு நாகரீகமாக அஞ்சலி செய்துகொண்டு ...... அந்த அயோக்கியனால் காவு கொள்ளபடவர்களை  மறந்து விடுங்கள் என்று மறைமுகமாக கேட்கிறார்கள்.
உண்மைகளை மறைப்பதுதான் சிறப்பானது என்றால் ..............? தாழ்ந்த சாதி கார்கள் யார் ? என்ற விடையில்லாத  வினா மட்டுமே எஞ்சும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.