Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பகுதிகளில் இராணுவக் குவிப்பு, நில அபகரிப்புக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் அரசிலிருந்து விலகத் தயாரா ? சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. கேள்வி

Featured Replies

பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் கலந்து கொள்ள வேண்டுமென விடுக்கப்படும் அழைப்பு போலியானதென அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.   தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக  கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் பங்குபற்ற வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்திருந்த அழைப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் ;   போர் நடைபெற்றபோது இதே அமைச்சர் போர் நிறைவடைந்தால் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக  கூறினார். ஆனால் போர் நிறைவடைந்து  5 வருடங்களாகின்றபோதும் அவர் அரசியலில் தொடர்ந்தும் இருக்கின்றார். இந்நிலையில் இவருடைய வாக்குறுதியை நம்பி எந்தவொரு விடயத்திலும் இறங்க முடியாது.   மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் எதற்காக பங்குபற்றவில்லை என்பதனை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கின்றது. எனவே நாம் பங்குபற்ற வேண்டுமென நினைத்தால் அரசாங்கத்திற்கும் எமக்குமிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். பேச்சுக்களில் சாதகமான விளைவுகள் பெறப்பட்டால் மட்டுமே தெரிவுக்குழுவில் நாம் பங்குபற்ற முடியும்.  அதனை விடுத்து  31 பேர் உள்ள தெரிவுக் குழுவில்  3 பேர் கூட்டமைப்பினராக இருந்து கொண்டு எதனையும் சாதிக்க முடியாது. இவற்றை விட தமிழ் பேசும்  மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே நோக்கம் என்றால் அல்லது தமிழ் மக்களின் நலன்களில்  இந்த அமைச்சர் அக்கறை கொண்டிருந்தால் தமிழர் தாயகத்தில் போரின் பின்னால் நடந்து கொண்டிருக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்டிருக்க வேண்டும் .தற்போது    கூட சுற்றி வளைப்புகள் கைதுகள் , நிலப்பறிப்புகள்,  படைக்குவிப்புகள்   எனத்  தமிழ் இனத்தின் மீதான அநீதி, திணிப்புகள் நடைபெற்றுக் கொண்டே தானிருக்கின்றன. எனவே  குறித்த அமைச்சர் இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் முதலில் பேச வேண்டும். அதில் அரசாங்கம் கரிசனையற்றிருந்தால் அப்போது  பதவி விலகட்டும் நாங்கள் நம்புகின்றோம். அவ்வாறு செய்யாமல் நிலப்பறிப்பு , படைக்குவிப்பு, சுற்றிவளைப்பு போன்றனவற்றுக்கெல்லாம் அரசாங்கம் கூறும் போலியான நியாயங்களை அப்படியே  ஆமோதிக்கும் இந்த அமைச்சர் தமிழ் பேசும்  மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக கூட்டமைப்பு தெரிவுக் குழுவிற்கு வரவேண்டும் என அழைப்பு விடுப்பது நகைப்பிற்குரியது.   மேலும் மங்கள முனசிங்க காலத்தில் உருவாக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவில் நான் உறுப்பினராக இருந்தேன்.  அந்தத் தெரிவுக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு என்ன நடந்தது ? இன்று வரையில் அந்த அறிக்கை பாராளுமன்றில் வீசப்பட்டுக் கிடக்கின்றது. அதேபோன்றே காலத்தை வீணடிக்கவும் தமிழ் மக்களை தொடர்ந்து  ஏமாற்றவுமே இந்த நாடகங்கள்.   இந்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் ஒன்றுமில்லை என்பது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரியாமல் இல்லை. அவருக்கு நன்றாக தெரியும். ஆனாலும் அரசங்கத்தின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கின்றார். அதற்காகவே எமக்கான இந்த அழைப்பினை அவர் விடுத்திருக்கின்றார்.  எனவே அவருடைய அழைப்பினை நாம் நிராகரிக்கிறோம். உண்மையில் அவர் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டிருந்தால் மக்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வினைக் காண வேண்டும். அதனை விடுத்து அரசின் ஊதுகுழலாக இருந்து கொண்டு தெரிவுக் குழுவில் பங்கேற்க எமக்கு அழைப்பு விடக் கூடாது என்றார். - See more at: http://www.thinakkural.lk/article.php?local/y3bukaqlxs14888a146f1a3d6336ndlena4700cbf03cdc55e2daae6atyna#sthash.3j2aZvmI.dpuf

செய்யாத நாயகம் ஒரு போதும் தனது நாளைக்கு மில்லியன் டொலர் பார்க்கும் பதவியை விடமாட்டார்.

இந்திய, வெளிநாடு பக்கமும் போகமுடியாது.

ஈழ தமிழரின் முதுகு தான் குத்து வாங்கபோகுது .

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் ஆயுத வழியைக் கைவிட்டால் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக 7-8 வருடங்களுக்கு முதல் சொன்னதை அவர் மறந்தாரோ இல்லையோ, நாங்கள் மறக்கவில்லை. இப்படி வாய்ச்சவடால் விடும்போது, இப்படி நிலை வரும் என்று அவர் நினைத்தும் இருந்திருக்க மாட்டார். ஆனால் இப்போது அதைப் பற்றிப் பேசாமல் பம்மிக் கொண்டு இருக்கின்றார்... அப்படிப்பட்ட கொள்கையாளரிடம் போய்ப் பதவி விலகு என்று கேட்டால் எப்படி??

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஞாபகம் இருக்குது. சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் பின்.. சிங்களப் படைகளின் அட்டூழியங்களுக்கு யாழ்ப்பாணத்தின் முடிசூடா மன்னனாக்கப்பட்ட இவர்... சிறீதர் தியேட்டரில்.. ஆம் கட் உள்ளாடையோடு இருந்து.. தொலைக்காட்சிக்கு பேட்டி வழங்கும் போது.. பிரபாகரன்.. போராட்டத்தை கைவிட்டாலோ.. இறந்தாலோ.. நான் அரசியல் இருக்கமாட்டேன்.. என்று பேசினார்.

 

இவருக்கு அடுத்த படியாக.. மிஸ்டர் அஸ்ரப்.. புலிப் பாசிசவாதிகள்.. பயங்கரவாதத்தை கைவிட்டால்.. எனக்கு முஸ்லீம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை நடத்த வேண்டிய தேவை இல்லை.. நான் தமிழ் விடுதலைக் கூட்டணி வளர்த்த மகன்.. என்று.. ITN இல் முழக்கமிட்டார்.

 

அவர்.. ஹெலியோட.. அல்லாவை தஞ்சம் அடைஞ்சிட்டார். ஆனால் இவர்..??????????????????! கறுத்த தாடி.. வெள்ளையாகியும்.. செயலாளர் நாயகமாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.